சிவய.திருக்கூட்டம்
sivaya.org
Please set your language preference by clicking language links.
Search this site internally
Or with Google

This page in Tamil   Hindi/Sanskrit   Telugu   Malayalam   Bengali   Kannada   English   ITRANS    Marati  Gujarathi   Oriya   Singala   Tibetian   Thai   Japanese   Urdu   Cyrillic/Russian   Spanish   Hebrew   Korean  
Selected thirumurai      thirumurai Thalangal      All thirumurai Songs     

Thirumurai   1   2   3   4   5   6   7   8   9   10   11   12

Pathigam first Letter :                                          
Paadal first letter:         (  .                                                
Search: Filter By: Order By:
திருமுறை 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12 இருந்து பாடல் சொல் பாறு
பாறு    
1.114   1 st/nd Thirumurai   Song # 2   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
பாறு அணி வெண்தலை கையில் ஏந்தி,
வேறு அணி பலி கொளும் வேட்கையனாய்,
நீறு அணிந்து, உமை ஒருபாகம் வைத்த
மாறு இலி வள நகர் மாற்பேறே.

2.082   2 st/nd Thirumurai   Song # 10   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
பாறு புத்தரும், தவம் அணி சமணரும், பலநாள
கூறி வைத்தது ஒர் குறியினைப் பிழை எனக் கொண்டு
தேறி, மிக்க நம் செஞ்சடைக் கடவுள் தென் தேவூர்
ஆறு சூடியை அடைந்தனம்; அல்லல் ஒன்று இலமே.

5.008   5 st/nd Thirumurai   Song # 1   திருநாவுக்கரசர்   தேவாரம்  
பாறு அலைத்த படுவெண் தலையினன்;
நீறு அலைத்த செம்மேனியன் நேரிழை
கூறு அலைத்த மெய், கோள் அரவு ஆட்டிய,
ஆறு அலைத்த சடை, அன்னியூரனே.

7.033   7 st/nd Thirumurai   Song # 1   சுந்தரமூர்த்தி சுவாமிகள்   திருப்பாட்டு  
பாறு தாங்கிய காடரோ? படுதலையரோ? மலைப் பாவை ஓர்-
கூறு தாங்கிய குழகரோ? குழைக் காதரோ? குறுங் கோட்டு இள
ஏறு தாங்கிய கொடியரோ? சுடு பொடியரோ? இலங்கும் பிறை
ஆறு தாங்கிய சடையரோ? நமக்கு அடிகள் ஆகிய அடிகளே.

7.072   7 st/nd Thirumurai   Song # 8   சுந்தரமூர்த்தி சுவாமிகள்   திருப்பாட்டு  
பாறு அணி முடைதலை கலன் என மருவிய,
நீறு அணி, நிமிர்சடை முடியினன்; நிலவிய
மாறு அணி வரு திரை வயல் அணி பொழிலது,
ஏறு உடை அடிகள் தம் இடம் வலம்புரமே.

     
send corrections and suggestions to admin-at-sivaya.org
This page was last modified on Tue, 27 Jan 2026 00:59:47 +0000