சிவய.திருக்கூட்டம்
sivaya.org
Please set your language preference by clicking language links.
Search this site internally
Or with Google

This page in Tamil   Hindi/Sanskrit   Telugu   Malayalam   Bengali   Kannada   English   ITRANS    Marati  Gujarathi   Oriya   Singala   Tibetian   Thai   Japanese   Urdu   Cyrillic/Russian   Spanish   Hebrew   Korean  
Selected thirumurai      thirumurai Thalangal      All thirumurai Songs     

Thirumurai   1   2   3   4   5   6   7   8   9   10   11   12

Pathigam first Letter :                                          
Paadal first letter:       (  .                                                
Search: Filter By: Order By:
திருமுறை 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12 இருந்து பாடல் சொல் பிள்ளை
பிள்ளையார்     பிள்ளைமைப்     பிள்ளை     பிள்ளையாரும்     பிள்ளைப்பிறையும்     பிள்ளையின்    
2.061   2 st/nd Thirumurai   Song # 5   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
பிள்ளைப்பிறையும் புனலும் சூடும் பெம்மான் என்று
உள்ளத்து உள்ளித் தொழுவார் தங்கள் உறு நோய்கள்
தள்ளிப் போக அருளும் தலைவன் ஊர்போலும்
வெள்ளைச்சுரி சங்கு உலவித் திரியும் வெண்காடே.

4.095   4 st/nd Thirumurai   Song # 9   திருநாவுக்கரசர்   தேவாரம்  
பிள்ளையின் பட்ட பிறைமுடியீர்! மறை ஓத வல்லீர்
வெள்ளையில் பட்டது ஓர் நீற்றீர்! விரிநீர் மிழலை உள்ள
நள்ளையில் பட்டு ஐவர் நக்கு அரைப்பிக்க நமன் தமர்தம்
கொள்ளையில் பட்டு மறக்கினும், என்னைக் குறிக்கொண்மினே!

12.000   12 st/nd Thirumurai   Song # 245   சேக்கிழார்   திருமலைச் சருக்கம்  
பிள்ளையார் திருவவதா 
ரஞ்செய்த பெரும்புகலி
உள்ளுநான் மிதியேனென் 
றூரெல்லைப் புறம்வணங்கி
வள்ளலார் வலமாக
வரும்பொழுதின் மங்கையிடங்
கொள்ளுமால் விடையானும்
எதிர்காட்சி கொடுத்தருள.
12.000   12 st/nd Thirumurai   Song # 269   சேக்கிழார்   திருமலைச் சருக்கம்  
பிள்ளைமைப் பருவ மீதாம்
பேதைமைப் பருவ நீங்கி
அள்ளுதற் கமைந்த பொற்பால்
அநங்கன்மெய்த் தனங்க ளீட்டங்
கொள்ளமிக் குயர்வ போன்ற
கொங்கைகோங் கரும்பை வீழ்ப்ப
உள்ளமெய்த் தன்மை முன்னை
உண்மையுந் தோன்ற வுய்ப்பார்.
12.190   12 st/nd Thirumurai   Song # 22   சேக்கிழார்   மும்மையால் உலகாண்ட சருக்கம்  
பிள்ளை தைவரப் பெருகுபால் சொரிமுலைத் தாய்போல்
மள்ளர் வேனிலின் மணல்திடர் பிசைந்துகை வருட
வெள்ள நீரிரு மருங்குகால் வழிமிதந் தேறிப்
பள்ள நீள்வயல் பருமடை உடைப்பது பாலி.
12.210   12 st/nd Thirumurai   Song # 184   சேக்கிழார்   திருநின்ற சருக்கம்  
பிள்ளையார் கழல்வணங்கப் பெற்றேன்என்
றரசுவப்பப் பெருகு ஞான
வள்ளலார் வாகீசர் தமைவணங்கப்
பெற்றதற்கு மகிழ்ச்சி பொங்க
உள்ளநிறை காதலினால் ஒருவர்ஒரு
வரிற்கலந்த உண்மை யோடும்
வெள்ளநீர்த் திருத்தோணி வீற்றிருந்தார்
கழல் வணங்கும் விருப்பின் மிக்கார்.
12.210   12 st/nd Thirumurai   Song # 242   சேக்கிழார்   திருநின்ற சருக்கம்  
பிள்ளையார் எழுந்தருளப்
பெருவிருப்பால் வாகீசர்
உள்ளம்மகிழ்ந் தெதிர்கொண்டங்
குடனுறையு நாளின்கண்
வள்ளலார் சிறுத்தொண்டர்
மற்றவர்பால் எழுந்தருள
எள்ளருஞ்சீர் நீலநக்கர்
தாமும்எழுந் தருளினார்.
12.210   12 st/nd Thirumurai   Song # 397   சேக்கிழார்   திருநின்ற சருக்கம்  
பிள்ளையார் அதுகேளாப்
பெருகுவிரை வுடன்இழிந்தே
உள்ளமிகு பதைப்பெய்தி
உடையஅர சினைவணங்க
வள்ளலார் வாகீசர்
அவர்வணங்கா முன்வணங்கத்
துள்ளுமான் மறிக்கரத்தார்
தொண்டரெலாந் தொழுதார்த்தார்.
12.260   12 st/nd Thirumurai   Song # 27   சேக்கிழார்   திருநின்ற சருக்கம்  
பிள்ளை யாரெழுந் தருளிய
பெருமைக்குத் தக்க
வெள்ள மாகிய அடியவர்
கூட்டமும் விரும்ப
உள்ளம் ஆதர வோங்கிட
ஓங்குசீர்க் காழி
வள்ள லாரைத்தம் மனையிடை
அமுதுசெய் வித்தார்.
12.260   12 st/nd Thirumurai   Song # 34   சேக்கிழார்   திருநின்ற சருக்கம்  
பிள்ளை யார்எழுந் தருளஅத்
தொண்டர்தாம் பின்பு
தள்ளும் அன்புடன் கேண்மையும்
தவிர்ப்பில எனினும்
வள்ள லார்திரு வருளினை
வலியமாட் டாமை
உள்ளம் அங்குடன் போக்கிமீண்
டொருவகை இருந்தார்.
12.280   12 st/nd Thirumurai   Song # 59   சேக்கிழார்   வம்பறா வரிவண்டுச் சருக்கம்  
பிள்ளையார் தமைக்கரையில்
வைத்துத்தாம் பிரிவஞ்சித்
தெள்ளுநீர்ப் புகமாட்டார்
தேவியொடுந் திருத்தோணி
வள்ளலார் இருந்தாரை
எதிர்வணங்கி மணிவாவி
உள்ளிழிந்து புனல்புக்கார்
உலகுய்ய மகப்பெற்றார்.
12.280   12 st/nd Thirumurai   Song # 138   சேக்கிழார்   வம்பறா வரிவண்டுச் சருக்கம்  
பிள்ளையார் அருள்பெற்ற
பெரும்பாணர் பிறையணிந்த
வெள்ளநீர்ச் சடையாரை
அவர்மொழிந்த மெய்ப்பதிகம்
உள்ளபடி கேட்டலுமே
யுருகுபெரு மகிழ்ச்சியராய்த்
தெள்ளமிர்தம் அருந்தினர்போற்
சிந்தைகளிப் புறத்தொழுதார்.
12.280   12 st/nd Thirumurai   Song # 143   சேக்கிழார்   வம்பறா வரிவண்டுச் சருக்கம்  
பிள்ளையார் அருள்செய்யப்
பெருந்தவத்தாற் பெற்றெடுத்த
வள்ளலார் தாமும்உடன்
செல்வதற்கு மனங்களிப்ப
வெள்ளிமால் வரையென்னத்
திருத்தோணி வீற்றிருந்த
புள்ளிமா னுரியாரைத்
தொழுதருளாற் புறப்பட்டார்.
12.280   12 st/nd Thirumurai   Song # 257   சேக்கிழார்   வம்பறா வரிவண்டுச் சருக்கம்  
பிள்ளையார் எழுந்தருளக் கேட்ட செல்வப்
பிரமபுரத் தருமறையோர் பெருகு காதல்
உள்ளமகிழ் சிறந்தோங்கத் தோணி மேவும்
உமைபாகர் கழல்வணங்கி உவகை கூர
வெள்ளமறை ஒலிபெருகு மறுகு தோறும்
மிடைமகர தோரணங்கள் கதலி பூகம்
தெள்ளுபுனல் நிறைகுடங்கள் தீப தூபம்
செழுங்கொடிகள் நிறைத்தெதிர்கொள் சிறப்பிற் செல்வார்.
12.280   12 st/nd Thirumurai   Song # 315   சேக்கிழார்   வம்பறா வரிவண்டுச் சருக்கம்  
பிள்ளையார் எழுந்தருளப் பெற்றேனென்
றானந்தம் பெருகு காதல்
வெள்ளநீர் கண்பொழியத் திருமுத்தின்
சிவிகை யின்முன் வீழ்ந்தபோது
வள்ளலார் எழுகவென மலர்வித்த
திருவாக்கால் மலர்க்கை சென்னி
கொள்ளமகிழ்ந் துடன்சென்று குலப்பதியின்
மணிவீதி கொண்டு புக்கான்.
12.280   12 st/nd Thirumurai   Song # 458   சேக்கிழார்   வம்பறா வரிவண்டுச் சருக்கம்  
பிள்ளையார் திருத்தாளங் கொடுபாடப்
பின்புபெரும் பாண னார்தாம்
தெள்ளமுத இன்னிசையின் தேம்பொழிதந்
திரியாழைச் சிறக்க வீக்கிக்
கொள்ளஇடும் பொழுதின்கண் குவலயத்தோர்
களிகூரக் குலவு சண்பை
வள்ளலார் திருவுள்ளம் மகிழ்ந்துதிருத்
தொண்டருடன் மருவுங் காலை.
12.280   12 st/nd Thirumurai   Song # 669   சேக்கிழார்   வம்பறா வரிவண்டுச் சருக்கம்  
பிள்ளையார் எழுந் தருளிமுன்
புகுதும்அப் பொழுது
வெள்ள நீர்பொதி வேணியார்
தமைத்தொழும் விருப்பால்
உள்ள ணைந்திட எதிர்செலா
தொருமருங் கொதுங்கும்
தெள்ளு நீர்விழித் தெரிவையார்
சென்றுமுன் பெய்த.
12.280   12 st/nd Thirumurai   Song # 755   சேக்கிழார்   வம்பறா வரிவண்டுச் சருக்கம்  
பிள்ளையார் செம்பொன்மணிப்
பீடத்தில் இருந்தபொழு
துள்ளநிறை பொறாமையினால்
உழையிருந்த காரமணர்
கொள்ளுமனத் திடையச்சம்
மறைத்துமுகங் கோபத்தீத்
துள்ளியெழும் அனற்கண்கள்
சிவந்துபல சொல்லுவார்.
12.280   12 st/nd Thirumurai   Song # 757   சேக்கிழார்   வம்பறா வரிவண்டுச் சருக்கம்  
பிள்ளையார் அதுகேளாப்
பேசுகநும் பொருளெல்லை
உள்ளவா றென்றருள
ஊத்தைவாய்ப் பறிதலையர்
துள்ளிஎழுந் தநேகராய்ச்
சூழ்ந்துபத றிக்கதற
ஒள்ளிழையார் அதுகண்டு
பொறாராகி உள்நடுங்கி.
12.280   12 st/nd Thirumurai   Song # 775   சேக்கிழார்   வம்பறா வரிவண்டுச் சருக்கம்  
பிள்ளையாரும் உங்கள்வாய்மை
பேசுமின்கள் என்றலும்
தள்ளுநீர்மை யார்கள்வேறு
தர்க்கவாதி னுத்தரம்
கொள்ளும் வென்றிஅன்றியே
குறித்தகொள்கை உண்மைதான்
உள்ளவாறு கட்புலத்தில்
உய்ப்பதென்ன ஒட்டினார்.
12.280   12 st/nd Thirumurai   Song # 800   சேக்கிழார்   வம்பறா வரிவண்டுச் சருக்கம்  
பிள்ளையார் முன்னம் பைம்பொற்
பீடத்தின் இழிந்து போந்து
தெள்ளுநீர்த் தரளப் பத்திச்
சிவிகைமே லேறிச் சென்றார்
வள்ளலார் அவர்தம் பின்பு
மன்னன்மா ஏறிச் சென்றான்
உள்ளவாறு உணர்கி லாதார்
உணர்வுமால் ஏறிச் சென்றார்.
12.280   12 st/nd Thirumurai   Song # 943   சேக்கிழார்   வம்பறா வரிவண்டுச் சருக்கம்  
பிள்ளையார் தாமும்அவர்
முன்தொழுது பேரன்பின்
வெள்ள மனையபுகழ்
மானியார் மேன்மையையும்
கொள்ளும் பெருமைக்
குலச்சிறையார் தொண்டினையும்
உள்ள பரிசெல்லாம்
மொழிந்தங் குவந்திருந்தார்.
12.280   12 st/nd Thirumurai   Song # 983   சேக்கிழார்   வம்பறா வரிவண்டுச் சருக்கம்  
பிள்ளை யார்தந் திருவாக்கில்
பிறத்தலால்அத் தாலம்முன்
புள்ள பாசம் விட்டகல
ஒழியாப் பிறவி தனையொழித்துக்
கொள்ளு நீர்மைக் காலங்கள்
கழித்துச் சிவமே கூடினவால்
வள்ள லார்மற் றவரருளின்
வாய்மை கூறின் வரம்பென்னாம்.
12.280   12 st/nd Thirumurai   Song # 1253   சேக்கிழார்   வம்பறா வரிவண்டுச் சருக்கம்  
பிள்ளையார் எழுந்தருளிப்
புக்கதற்பின் பெருங்கூத்தர்
கொள்ளநீ டியசோதிக்
குறிநிலைஅவ் வழிகரப்ப
வள்ளலார் தம்பழய
மணக்கோயில் தோன்றுதலும்
தெள்ளுநீ ருலகத்துப்
பேறில்லார் தெருமந்தார்.
     
send corrections and suggestions to admin-at-sivaya.org
This page was last modified on Tue, 27 Jan 2026 00:59:47 +0000