சிவய.திருக்கூட்டம்
sivaya.org
Please set your language preference by clicking language links.
Search this site internally
Or with Google

This page in Tamil   Hindi/Sanskrit   Telugu   Malayalam   Bengali   Kannada   English   ITRANS    Marati  Gujarathi   Oriya   Singala   Tibetian   Thai   Japanese   Urdu   Cyrillic/Russian   Spanish   Hebrew   Korean  
Selected thirumurai      thirumurai Thalangal      All thirumurai Songs     

Thirumurai   1   2   3   4   5   6   7   8   9   10   11   12

Pathigam first Letter :                                          
Paadal first letter:       (  .                                                
Search: Filter By: Order By:
திருமுறை 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12 இருந்து பாடல் சொல் பிழை
பிழைப்புவாய்ப்     பிழையா     பிழையுளன     பிழைத்த     பிழைகள்     பிழை     பிழைகொண்    
7.077   7 st/nd Thirumurai   Song # 5   சுந்தரமூர்த்தி சுவாமிகள்   திருப்பாட்டு  
பிழைத்த பிழை ஒன்று அறியேன், நான்; பிழையைத் தீரப் பணியாயே!
மழைக் கண் நல்லார் குடைந்து ஆட, மலையும் நிலனும் கொள்ளாமை
கழைக் கொள் பிரசம் கலந்து, எங்கும் கழனி மண்டி, கை ஏறி,
அழைக்கும் திரைக் காவிரிக் கோட்டத்து ஐயாறு உடைய அடிகளோ!

7.081   7 st/nd Thirumurai   Song # 9   சுந்தரமூர்த்தி சுவாமிகள்   திருப்பாட்டு  
பிழைகள் தீரத் தொழுமின்பின் சடைப் பிஞ்ஞகன்,
குழை கொள் காதன், குழகன், தான் உறையும்(ம்) இடம்-
மழைகள் சாலக் கலித்து நீடு உயர் வேய் அவை
கழை கொள் முத்தம் சொரியும் தண் கழுக்குன்றமே!

7.089   7 st/nd Thirumurai   Song # 1   சுந்தரமூர்த்தி சுவாமிகள்   திருப்பாட்டு  
பிழை உளன பொறுத்திடுவர் என்று அடியேன் பிழைத்தக்கால்
பழி அதனைப் பாராதே, படலம் என் கண் மறைப்பித்தாய்;
குழை விரவு வடி காதா! கோயில் உளாயே! என்ன,
உழை உடையான் உள் இருந்து, உளோம்; போகீர்! என்றானே!

8.207   8 st/nd Thirumurai   Song # 3   மாணிக்க வாசகர்    திருச்சிற்றம்பலக் கோவையார்  
பிழைகொண் டொருவிக் கெடாதன்பு
   செய்யிற் பிறவியென்னும்
முழைகொண் டொருவன்செல் லாமைநின்
   றம்பலத் தாடுமுன்னோன்
உழைகொண் டொருங்கிரு நோக்கம்
   பயின்றஎம் மொண்ணுதல்மாந்
தழைகொண் டொருவனென் னாமுன்ன
   முள்ளந் தழைத்திடுமே.

11.009   11 st/nd Thirumurai   Song # 98   நக்கீரதேவ நாயனார்   கயிலைபாதி காளத்திபாதி அந்தாதி  
பிழைப்புவாய்ப் பொன்றறியேன் பித்தேறி னாற்போல்
அழைப்பதே கண்டாய் அடியேன் - அழைத்தாலும்
என்னா தரவேகொண் டின்பொழில்சூழ் காளத்தி
மன்னா தருவாய் வரம்.

11.032   11 st/nd Thirumurai   Song # 34   நம்பியாண்டார் நம்பி   கோயில் திருப்பண்ணியர் விருத்தம்  
பிழையா யினவே பெருக்கிநின்
பெய்கழற் கன்புதன்னில்
நுழையாத சிந்தையி னேனையும்
மந்தா கினித்துவலை
முழையார் தருதலை மாலை
முடித்த முழுமுதலே
புழையார் கரியுரித் தோய் தில்லை
நாத பொறுத்தருளே.

12.290   12 st/nd Thirumurai   Song # 280   சேக்கிழார்   வம்பறா வரிவண்டுச் சருக்கம்  
பிழையுளன பொறுத்திடுவர்
என்றெடுத்துப் பெண்பாகம்
விழைவடிவிற் பெருமானை
வெண்பாக்கம் மகிழ்ந்தானை
இழையெனமா சுணமணிந்த
விறையானைப் பாடினார்
மழை தவழு நெடும்புரிசை
நாவலூர் மன்னவனார்.

     
send corrections and suggestions to admin-at-sivaya.org
This page was last modified on Tue, 27 Jan 2026 00:59:47 +0000