சிவய.திருக்கூட்டம்
sivaya.org
Please set your language preference
by clicking below languages link
Search this site with
words in any language e.g. पोऱ्‌ऱि
song/pathigam/paasuram numbers: e.g. 7.039

This page in Tamil   Hindi/Sanskrit   Telugu   Malayalam   Bengali   Kannada   English   ITRANS    Marati  Gujarathi   Oriya   Singala   Tibetian   Thai   Japanese   Urdu   Cyrillic/Russian   Spanish   Hebrew  
Selected thirumurai      thirumurai Thalangal      All thirumurai Songs     

Thirumurai   1   2   3   4   5   6   7   8   9   10   11   12

Pathigam first Letter :                                          
Paadal first letter:     (  .                                                
Search: Filter By: Order By:
திருமுறை 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12 இருந்து பாடல் சொல் புண்ணிய
புண்ணியர்,     புண்ணியன்     புண்ணிய     புண்ணியம்     புண்ணியங்கள்     புண்ணியனார்     புண்ணியர்     புண்ணியமும்    
1.008   1 st/nd Thirumurai   Song # 1   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
புண்ணியர், பூதியர், பூத நாதர், புடைபடுவார் தம் மனத்தார், திங்கள்
கண்ணியர்! என்று என்று காதலாளர் கைதொழுது ஏத்த, இருந்த ஊர் ஆம்
விண் உயர் மாளிகை மாட வீதி விரை கமழ் சோலை சுலாவி, எங்கும்
பண் இயல் பாடல் அறாத ஆவூர்ப் பசுபதியீச்சுரம் பாடு, நாவே!

3.003   3 st/nd Thirumurai   Song # 11   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
புண்ணியர் தொழுது எழு புகலி(ந்) நகர்,
விண்ணவர் அடி தொழ விளங்கினானை,
நண்ணிய ஞானசம்பந்தன் வாய்மை
பண்ணிய அருந்தமிழ் பத்தும் வல்லார்,
நடலை அவை இன்றிப் போய் நண்ணுவர், சிவன் உலகம்;
இடர் ஆயின இன்றித் தாம் எய்துவர், தவநெறியே.

3.020   3 st/nd Thirumurai   Song # 11   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
புண்ணியர் தொழுது எழு பூவணத்து உறை
அண்ணலை அடி தொழுது, அம் தண் காழியுள
நண்ணிய அருமறை ஞானசம்பந்தன்
பண்ணிய தமிழ் சொல, பறையும், பாவமே.

6.031   6 st/nd Thirumurai   Song # 4   திருநாவுக்கரசர்   தேவாரம்  
புண்ணியமும் நன்நெறியும் ஆவது எல்லாம் நெஞ்சமே! இது கண்டாய்; பொருந்தக் கேள், நீ:
நுண்ணிய வெண் நூல் கிடந்த மார்பா! என்றும், நுந்தாத ஒண்சுடரே! என்றும், நாளும்
விண் இயங்கு தேவர்களும் வேதம் நான்கும் விரை மலர் மேல் நான்முகனும் மாலும் கூடி
எண்ண (அ)ரிய திருநாமம் உடையாய்! என்றும், எழில் ஆரூரா! என்றே ஏத்தா நில்லே!.

10.209   10 st/nd Thirumurai   Song # 7   திருமூலர்   திருமந்திரம்  
புண்ணியன் நந்தி பொருந்தி உலகெங்கும்
தண்ணிய மானை வளர்த்திடும் சத்தியுங்
கண்ணியல் பாகக் கலவி முழுதுமாய்
மண்ணியல் பாக மலர்ந்தெழும் பூவிலே.

10.402   10 st/nd Thirumurai   Song # 80   திருமூலர்   திருமந்திரம்  
புண்ணிய வானவர் பூமழை தூவிநின்
றெண்ணுவர் அண்ணல் இணையடி மந்திரம்
நண்ணுவர் நண்ணி நமஎன்னும் நாமத்தைக்
கண்ணென உன்னிக் கலந்துநின் றாரே.

10.406   10 st/nd Thirumurai   Song # 4   திருமூலர்   திருமந்திரம்  
புண்ணிய நந்தி புனிதன் திருவாகும்
எண்ணிய நாட்கள் இருபத்தேழ் சூழ்மதி
பண்ணிய வன்னி பகலோன் மதியீறு
திண்ணிய சிந்தையன் தென்னனு மாமே.

10.413   10 st/nd Thirumurai   Song # 25   திருமூலர்   திருமந்திரம்  
புண்ணிய னாகிப் பொருந்தி உலகெங்கும்
கண்ணிய னாகிக் கலந்தங் கிருந்திடும்
தண்ணிய னாகித் தரணி முழுதுக்கும்
அண்ணிய னாகி அமர்ந்திருந் தானே.

10.607   10 st/nd Thirumurai   Song # 3   திருமூலர்   திருமந்திரம்  
புண்ணியம் பாவம் இரண்டுள பூமியில்
நண்ணும் பொழுதறி வார்சில ஞானிகள்
எண்ணி இரண்டையும் வேரறுத் தப்புறத்
தண்ணல் இருந்திடம் ஆய்துகொள் ளீரே.

10.607   10 st/nd Thirumurai   Song # 6   திருமூலர்   திருமந்திரம்  
புண்ணியன் எந்தை புனிதன் இணையடி
நண்ணி விளக்கென ஞானம் விளைந்தது
மண்ணவ ராவதும் வானவ ராவதும்
அண்ணல் இறைவன் அருள்பெற்ற போதே.

10.711   10 st/nd Thirumurai   Song # 6   திருமூலர்   திருமந்திரம்  
புண்ணியம் செய்வார்க்குப் பூவுண்டு நீருண்டு
அண்ணல் அதுகண் டருள்புரி யாநிற்கும்
எண்ணிலி பாவிகள் எம்மிறை ஈசனை
நண்ணறி யாமல் நழுவுகின் றார்களே

10.719   10 st/nd Thirumurai   Song # 3   திருமூலர்   திருமந்திரம்  
புண்ணிய மாம்அவர் தம்மைப் புதைப்பது
நண்ணி அனல்கோக்கில் நாட்டில் அழிவாகும்
மண்ணி லழியில் மலங்காரப் பஞ்சமாம்
மண்ணுல கெல்லா மயங்குமனல் மண்டியே.

11.003   11 st/nd Thirumurai   Song # 16   காரைக்கால் அம்மையார்    திரு இரட்டை மணிமாலை  
புண்ணியங்கள் செய்தனவும் பொய்ந்நெறிக்கட் சாராமே
எண்ணியோ ரைந்தும் இசைந்தனவால் - திண்ணிய
கைம்மாவின் ஈருரிவை மூவுருவும் போர்த்துகந்த
அம்மானுக் காட்பட்ட அன்பு.

11.006   11 st/nd Thirumurai   Song # 30   சேரமான் பெருமாள் நாயனார்   பொன்வண்ணத்தந்தாதி  
புண்ணியன் புண்ணியல் வேலையன்
வேலைய நஞ்சனங்கக்
கண்ணியன் கண்ணியல் நெற்றியன்
காரணன் காரியங்கும்
விண்ணியன் விண்ணியல் பாணியன்
பாணி கொளவுமையாள்
பண்ணியன் பண்ணியல் பாடல
நாடற் பசுபதியே.

11.028   11 st/nd Thirumurai   Song # 19   பட்டினத்துப் பிள்ளையார்   திருவிடைமருதூர் மும்மணிக்கோவை  
புண்ணிய புராதன புதுப்பூங் கொன்றைக்
கண்ணி வேய்ந்த ஆயிலை நாயக
காள கண்ட கந்தனைப் பயந்த
வாளரி நெடுங்கண் மலையாள் கொழுந
பூத நாத பொருவிடைப் பாக

வேத கீத விண்ணோர் தலைவ
முத்தி நாயக மூவா முதல்வ
பத்தியாகிப் பணைத்தமெய் யன்பொடு
நொச்சி யாயினுங் கரந்தை யாயினும்
பச்சிலை இட்டுப் பரவுந் தொண்டர்

கருவிடைப் புகாமற் காத்தருள் புரியும்
திருவிடை மருத திரிபு ராந்தக
மலர்தலை உலகத்துப் பலபல மாக்கள்
மக்களை மனைவியை ஒக்கலை ஒரீஇ
மனையும் பிறவும் துறந்து நினைவரும்

காடும் மலையும் புக்குக் கோடையில்
கைம்மேல் நிமிர்த்துக் காலொன்று முடக்கி
ஐவகை நெருப்பின் அழுவத்து நின்று
மாரி நாளிலும் வார்பனி நாளிலும்
நீரிடை மூழ்கி நெடிது கிடந்தும்

சடையைப் புனைந்துந் தலையைப் பறித்தும்
உடையைத் துறந்தும் உண்ணா துழன்றும்
காயுங் கிழங்குங் காற்றுதிர் சருகும்
வாயுவும் நீரும் வந்தன அருந்தியுங்
களரிலுங் கல்லிலுங் கண்படை கொண்டும்
தளர்வுறும் யாக்கையைத் தளர்வித்
தாங்கவர்
அம்மை முத்தி அடைவதற் காகத்
தம்மைத் தாமே சாலவும் ஒறுப்பர்
ஈங்கிவை செய்யாது யாங்கள் எல்லாம்

பழுதின் றுயர்ந்த எழுநிலை மாடத்துஞ்
செழுந்தா துதிர்ந்த நந்தன வனத்துந்
தென்றல் இயங்கும் முன்றில் அகத்துந்
தண்டாச் சித்திர மண்டப மருங்கிலும்
பூவிரி தரங்க வாரிக் கரையிலும்

மயிற்பெடை ஆலக் குயிற்றிய குன்றிலும்
வேண்டுழி வேண்டுழி ஆண்டாண் டிட்ட
மருப்பின் இயன்ற வாளரி சுமந்த
விருப்புறு கட்டில் மீமிசைப் படுத்த
ஐவகை அமளி அணைமேல் பொங்கத்

தண்மலர் கமழும் வெண்மடி விரித்துப்
பட்டின்உட் பெய்த பதநுண் பஞ்சின்
நெட்டணை யருகாக் கொட்டைகள் பரப்பிப்
பாயல் மீமிசைப் பரிபுரம் மிழற்றச்
சாயல் அன்னத்தின் தளர்நடை பயிற்றிப்
பொற்றோ ரணத்தைச் சுற்றிய துகிலென
அம்மென் குறங்கின் நொம்மென் கலிங்கம்
கண்ணும் மனமுங் கவற்றப் பண்வர
இரங்குமணி மேகலை மருங்கில் கிடப்ப
ஆடர வல்குல் அரும்பெறல் நுசுப்பு
வாட வீங்கிய வனமுலை கதிர்ப்ப
அணியியல் கமுகை அலங்கரித் ததுபோல்
மணியியல் ஆரங் கதிர்விரித் தொளிர்தர
மணிவளை தாங்கும் அணிகெழு மென்தோள்
வரித்த சாந்தின்மிசை விரித்துமீ திட்ட
உத்தரீ யப்பட் டொருபால் ஒளிர்தர
வள்ளை வாட்டிய ஒள்ளிரு காதொடு
பவளத் தருகாத் தரளம் நிரைத்தாங்
கொழுகி நீண்ட குமிழொன்று பதித்துக்
காலன் வேலும் காம பாணமும்

ஆல காலமும் அனைத்தும்இட் டமைத்த
இரண்டு நாட்டமும் புரண்டுகடை மிளிர்தர
மதியென மாசறு வதனம் விளங்கப்
புதுவிரை அலங்கல் குழன்மிசைப் பொலியும்
அஞ்சொல் மடந்தையர் ஆகந் தோய்ந்துஞ்

சின்னம் பரப்பிய பொன்னின் கலத்தில்
அறுசுவை அடிசில் வறிதினி தருந்தா
தாடினர்க் கென்றும் பாடினர்க் கென்றும்
வாடினர்க் கென்றும் வரையாது கொடுத்தும்
பூசுவன பூசியும் புனைவன புனைந்தும்

தூசின் நல்லன தொடையிற் சேர்த்தியும்
ஐந்து புலன்களும் ஆர ஆர்ந்தும்
மைந்தரும் ஒக்கலும் மனமகிழ்ந் தோங்கி
இவ்வகை இருந்தோம் ஆயினும் அவ்வகை
மந்திர எழுத்தைந்தும் வாயிடை மறவாது

சிந்தை நின்வழி செலுத்தலின் அந்த
முத்தியும் இழந்திலம் முதல்வ அத்திறம்
நின்னது பெருமை அன்றோ என்னெனின்
வல்லான் ஒருவன் கைம்முயன்று எறியினும்
மாட்டா ஒருவன் வாளா எறியினும்

நிலத்தின் வழாஅக் கல்லேபோல்
நலத்தின் வழார்நின் நாமம்நவின் றோரே.

11.032   11 st/nd Thirumurai   Song # 38   நம்பியாண்டார் நம்பி   கோயில் திருப்பண்ணியர் விருத்தம்  
புண்ணிய னேயென்று போற்றி
செயாது புலன்வழியே
நண்ணிய னேற்கினி யாதுகொ லாம்புகல்
என்னுள் வந்திட்
டண்ணிய னேதில்லை யம்பல வாஅலர்
திங்கள் வைத்த
கண்ணிய னேசெய்ய காமன்
வெளுப்பக் கறுத்தவனே.

11.034   11 st/nd Thirumurai   Song # 50   நம்பியாண்டார் நம்பி   ஆளுடையபிள்ளையார் திருவந்தாதி  
புண்ணிய நாடு புகுவதற்
காகக் புலனடக்கி,
எண்ணிய செய்தொழில் நிற்ப(து)எல்
லாருமின் றியானெனக்கு
நண்ணிய செய்தொழில் ஞானசம்
பந்தனை நந்தமர்நீர்க்
கண்ணியன் மாடக் கழுமலத்
தானைக் கருதுவதே.

12.280   12 st/nd Thirumurai   Song # 93   சேக்கிழார்   வம்பறா வரிவண்டுச் சருக்கம்  
புண்ணிய முதலே புனைமணி
அரைஞா ணொடுபோதும்
கண்ணிறை கதிரே கலைவளர்
மதியே கவின்மேவும்
பண்ணியல் கதியே பருவம
தொருமூ வருடத்தே
எண்ணிய பொருளாய் நின்றவர்
அருள்பெற் றனையென்பார்.
12.280   12 st/nd Thirumurai   Song # 887   சேக்கிழார்   வம்பறா வரிவண்டுச் சருக்கம்  
புண்ணியனார் நெல்வேலி பணிந்து போற்றிப்
புரிசடையார் திருப்பதிகள் பிறவும் சென்று
நண்ணியினி தமர்ந்தங்கு நயந்துபாடி
நற்றொண்ட ருடன்நாளும் போற்றிச் செல்வார்
விண்ணவரைச் செற்றுகந்தான் இலங்கை செற்ற
மிக்கபெரும் பாதகத்தை நீக்க வேண்டித்
திண்ணியபொற் சிலைத்தடக்கை இராமன் செய்த
திருவிரா மேச்சரத்தைச் சென்று சேர்ந்தார்.

This page was last modified on Thu, 09 May 2024 05:33:06 +0000
          send corrections and suggestions to admin-at-sivaya.org

thirumurai all list