சிவய.திருக்கூட்டம்
sivaya.org
Please set your language preference by clicking language links.
Search this site internally
Or with Google

This page in Tamil   Hindi/Sanskrit   Telugu   Malayalam   Bengali   Kannada   English   ITRANS    Marati  Gujarathi   Oriya   Singala   Tibetian   Thai   Japanese   Urdu   Cyrillic/Russian   Spanish   Hebrew   Korean  
Selected thirumurai      thirumurai Thalangal      All thirumurai Songs     

Thirumurai   1   2   3   4   5   6   7   8   9   10   11   12

Pathigam first Letter :                                          
Paadal first letter:       (  .                                                
Search: Filter By: Order By:
திருமுறை 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12 இருந்து பாடல் சொல் புயல
புயல்காட்டுங்     புயல     புயல்     புயல்வள     புயலன்     புயலோங்    
2.059   2 st/nd Thirumurai   Song # 7   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
புயல் ஆர் பூமி நாமம் ஓதி, புகழ் மல்க,
கயல் ஆர் கண்ணார் பண் ஆர் ஒலிசெய் கலிக் காழிப்
பயில்வான் தன்னைப் பத்தி ஆரத் தொழுது ஏத்த
முயல்வார் தம்மேல், வெம்மைக் கூற்றம் முடுகாதே.

8.213   8 st/nd Thirumurai   Song # 2   மாணிக்க வாசகர்    திருச்சிற்றம்பலக் கோவையார்  
புயல்வள ரூசல்முன் ஆடிப்பொன்
னேபின்னைப் போய்ப்பொலியும்
அயல்வளர் குன்றில்நின் றேற்றும்
அருவி திருவுருவிற்
கயல்வளர் வாட்கண்ணி போதரு
காதரந் தீர்த்தருளுந்
தயல்வளர் மேனிய னம்பலத்
தான்வரைத் தண்புனத்தே.

8.216   8 st/nd Thirumurai   Song # 47   மாணிக்க வாசகர்    திருச்சிற்றம்பலக் கோவையார்  
புயலன் றலர்சடை ஏற்றவன்
   தில்லைப் பொருப்பரசி
பயலன் றனைப்பணி யாதவர்
   போல்மிகு பாவஞ்செய்தேற்
கயலன் தமியன்அஞ் சொற்றுணை
   வெஞ்சுரம் மாதர்சென்றால்
இயலன் றெனக்கிற் றிலைமற்று
   வாழி எழிற்புறவே.

8.223   8 st/nd Thirumurai   Song # 12   மாணிக்க வாசகர்    திருச்சிற்றம்பலக் கோவையார்  
புயலோங் கலர்சடை ஏற்றவன்
   சிற்றம் பலம்புகழும்
மயலோங் கிருங்களி யானை
   வரகுணன் வெற்பின்வைத்த
கயலோங் கிருஞ்சிலை கொண்டுமன்
   கோபமுங் காட்டிவருஞ்
செயலோங் கெயிலெரி செய்தபின்
   இன்றோர் திருமுகமே.

12.120   12 st/nd Thirumurai   Song # 3   சேக்கிழார்   இலை மலிந்த சருக்கம்  
புயல்காட்டுங் கூந்தல்சிறு
புறங்காட்டப் புனமயிலின்
இயல்காட்டி இடைஒதுங்க
இனங்காட்டும் உழத்தியர்கண்
முயல்காட்டும் மதிதோற்கும்
முகங்காட்டக் கண்மூரிக்
கயல்காட்டுந் தடங்கள்பல
கதிர்காட்டுந் தடம்பணைகள்.
12.430   12 st/nd Thirumurai   Song # 6   சேக்கிழார்   பொய்யடிமை யில்லாத புலவர் சருக்கம்  
புயல ளப்பில வெனவலை
புறம்பணை குரம்பை
அயல ளப்பன மீன்விலைப்
பசும்பொனி னடுக்கல்
வியல ளக்கரில் விடுந்திமில்
வாழ்நர்கள் கொணர்ந்த
கயல ளப்பன பரத்தியர்
கருநெடுங் கண்கள்.
     
send corrections and suggestions to admin-at-sivaya.org
This page was last modified on Tue, 27 Jan 2026 00:59:47 +0000