சிவய.திருக்கூட்டம்
sivaya.org
Please set your language preference by clicking language links.
Search this site internally
Or with Google

This page in Tamil   Hindi/Sanskrit   Telugu   Malayalam   Bengali   Kannada   English   ITRANS    Marati  Gujarathi   Oriya   Singala   Tibetian   Thai   Japanese   Urdu   Cyrillic/Russian   Spanish   Hebrew   Korean  
Selected thirumurai      thirumurai Thalangal      All thirumurai Songs     

Thirumurai   1   2   3   4   5   6   7   8   9   10   11   12

Pathigam first Letter :                                          
Paadal first letter:         (  .                                                
Search: Filter By: Order By:
திருமுறை 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12 இருந்து பாடல் சொல் பூசு
பூசுரர்     பூசு     பூசுர     பூசுரர்சூ     பூசும்     பூசுவதும்    
1.127   1 st/nd Thirumurai   Song # 6   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
பூசுரர் சேர்ந் தராயவன் பொன்னடி
பூசுரர் சேர்ந் தராயவன் பொன்னடி
பூசுரர் சேர்ந் தராயவன் பொன்னடி
பூசுரர் சேர்ந் தராயவன் பொன்னடி.

2.117   2 st/nd Thirumurai   Song # 5   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
பூசும் மாசு இல் பொடியான், விடையான், பொருப்பன்மகள்
கூச ஆனை உரித்த பெருமான், குறைவெண்மதி
ஈசன், எங்கள்(ள்) இறைவன், இடம்போல் இரும்பைதனுள்,
மாசு இலோர் கள்மலர்கொண்டு அணிகின்ற மாகாளமே.

3.005   3 st/nd Thirumurai   Song # 4   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
பூசுரர் தொழுது ஏத்திய பூந்தராய்
ஈசன் சேவடி ஏத்தி இறைஞ்சிட,
சிந்தை நோய் அவை தீர நல்கிடும்
இந்து வார்சடை எம் இறையே.

8.112   8 st/nd Thirumurai   Song # 1   மாணிக்க வாசகர்    திருவாசகம்  
பூசுவதும் வெள் நீறு, பூண்பதுவும் பொங்கு அரவம்,
பேசுவதும் திருவாயால் மறை போலும்? காண், ஏடீ!
பூசுவதும், பேசுவதும், பூண்பதுவும், கொண்டு என்னை?
ஈசன் அவன் எவ் உயிர்க்கும் இயல்பு ஆனான்; சாழலோ!

10.319   10 st/nd Thirumurai   Song # 1   திருமூலர்   திருமந்திரம்  
பூசு வனஎல்லாம் பூசிப் புலர்த்திய
வாச நறுங்குழல் மாலையுஞ் சாத்திய
காசக் குழலி கலவி யொடுங்கலந்
தூசித் துளையுறத் தூங்காது போகமே. 

12.650   12 st/nd Thirumurai   Song # 13   சேக்கிழார்   மன்னிய சீர்ச் சருக்கம்  
பூசுர ரெல்லாம் வந்து
புரவலன் தன்னைக் காண
மாசிலாப் பூச லார்தாம்
ஆரென மறையோ ரெல்லாம்
ஆசில்வே தியன்இவ் வூரான்
என்றவ ரழைக்க வொட்டா
தீசனார் அன்பர் தம்பால்
எய்தினான் வெய்ய வேலான்.
12.660   12 st/nd Thirumurai   Song # 2   சேக்கிழார்   மன்னிய சீர்ச் சருக்கம்  
பூசுரர்சூ ளாமணியாம் புகலி வேந்தர்
போனகஞா னம்பொழிந்த புனித வாக்கால்
தேசுடைய பாடல்பெறும் தவத்தி னாரைச்
செப்புவதியாம் என்னறிந்து தென்னர் கோமான்
மாசில்புகழ் நெடுமாறன் தனக்குச் சைவ
வழித்துணையாய் நெடுங்காலம் மன்னிப் பின்னை
     
send corrections and suggestions to admin-at-sivaya.org
This page was last modified on Tue, 27 Jan 2026 00:59:47 +0000