சிவய.திருக்கூட்டம்
sivaya.org
Please set your language preference by clicking language links.
Search this site internally
Or with Google

This page in Tamil   Hindi/Sanskrit   Telugu   Malayalam   Bengali   Kannada   English   ITRANS    Marati  Gujarathi   Oriya   Singala   Tibetian   Thai   Japanese   Urdu   Cyrillic/Russian   Spanish   Hebrew   Korean  
Selected thirumurai      thirumurai Thalangal      All thirumurai Songs     

Thirumurai   1   2   3   4   5   6   7   8   9   10   11   12

Pathigam first Letter :                                          
Paadal first letter:       (  .                                                
Search: Filter By: Order By:
திருமுறை 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12 இருந்து பாடல் சொல் பூத்த
பூத்த     பூத்தன,     பூத்து     பூத்திரள்    
4.044   4 st/nd Thirumurai   Song # 4   திருநாவுக்கரசர்   தேவாரம்  
பூத்த பொன் கொன்றமாலை புரி சடைக்கு அணிந்த செல்வர்
தீர்த்தம் ஆம் கங்கையாளைத் திருமுடி திகழ வைத்து(வ்)
ஏத்துவார் ஏத்த நின்ற ஏகம்பம் மேவினாரை,
வாழ்த்தும் ஆறு அறியமாட்டேன்; மால்கொடு மயங்கினேனே!

4.081   4 st/nd Thirumurai   Song # 6   திருநாவுக்கரசர்   தேவாரம்  
பூத்தன, பொன்சடை பொன் போல் மிளிர; புரி கணங்கள்
ஆர்த்தன, கொட்டி; அரித்தன, பல் குறள் பூதக்கணம்;
தேத்தென என்று இசை வண்டுகள் பாடு சிற்றம்பலத்துக்
கூத்தனின் கூத்து வல்லார் உளரோ, என் தன் கோல்வளைக்கே?

5.022   5 st/nd Thirumurai   Song # 2   திருநாவுக்கரசர்   தேவாரம்  
பூத்து ஆடிக் கழியாதே நீர், பூமியீர்,
தீத்து ஆடி(த்) திறம் சிந்தையுள் வைம்மினோ!-
வேர்த்து ஆடும் காளிதன் விசை தீர்க! என்று
கூத்து ஆடி(ய்) உறையும் குடமூக்கிலே.

5.096   5 st/nd Thirumurai   Song # 5   திருநாவுக்கரசர்   தேவாரம்  
பூத்து ஆர் கொன்றையினாய்! புலியின்(ன்) அதள்
ஆர்த்தாய், ஆடு அரவோடு! அனல் ஆடிய
கூத்தா! நின் குரை ஆர் கழலே அலது
ஏத்தா, நா எனக்கு; எந்தைபிரானிரே!

8.115   8 st/nd Thirumurai   Song # 1   மாணிக்க வாசகர்    திருவாசகம்  
பூத்து ஆரும் பொய்கைப் புனல் இதுவே, எனக் கருதி,
பேய்த்தேர் முகக்க உறும் பேதை குணம் ஆகாமே,
தீர்த்தாய்; திகழ் தில்லை அம்பலத்தே திரு நடம் செய்
கூத்தா! உன் சேவடி கூடும்வண்ணம் தோள் நோக்கம்!

9.008   9 st/nd Thirumurai   Song # 7   கருவூர்த் தேவர்   திருவிசைப்பா  
பூத்திரள் உருவம் செங்கதிர் விரியாப்
    புந்தியில் வந்தமால் விடையோன்
தூத்திரள் பளிங்கில் தோன்றிய தோற்றம்
    தோன்றநின் றவன்வளர் கோயில்
நாத்திரள் மறையோர்ந்(து) ஓமகுண் டத்து
    நறுநெயால் மறையவர் வளர்த்த
தீத்திரள் அரும்பும் பெரும்பற்றப் புலியூர்த்
    திருவளர் திருச்சிற்றம் பலமே.
11.037   11 st/nd Thirumurai   Song # 103   நம்பியாண்டார் நம்பி   ஆளுடையபிள்ளையார் திருவுலாமாலை  
பூத்த கடதடத்துப் போகம் மிகபொலிந்த
காத்திரத்த தாகிக் கலித்தெங்கும் கோத்த

12.260   12 st/nd Thirumurai   Song # 1   சேக்கிழார்   திருநின்ற சருக்கம்  
பூத்த பங்கயப் பொகுட்டின்மேற்
பொருகயல் உகளும்
காய்த்த செந்நெலின் காடுசூழ்
காவிரி நாட்டுச்
சாத்த மங்கைஎன் றுலகெலாம்
புகழ்வுறுந் தகைத்தால்
வாய்த்த மங்கல மறையவர்
முதற்பதி வனப்பு.
     
send corrections and suggestions to admin-at-sivaya.org
This page was last modified on Tue, 27 Jan 2026 00:59:47 +0000