சிவய.திருக்கூட்டம்
sivaya.org
Please set your language preference by clicking language links.
Search this site internally
Or with Google

This page in Tamil   Hindi/Sanskrit   Telugu   Malayalam   Bengali   Kannada   English   ITRANS    Marati  Gujarathi   Oriya   Singala   Tibetian   Thai   Japanese   Urdu   Cyrillic/Russian   Spanish   Hebrew   Korean  
Selected thirumurai      thirumurai Thalangal      All thirumurai Songs     

Thirumurai   1   2   3   4   5   6   7   8   9   10   11   12

Pathigam first Letter :                                          
Paadal first letter:         (  .                                                
Search: Filter By: Order By:
திருமுறை 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12 இருந்து பாடல் சொல் பைங்
பைங்கோட்டு     பைங்கணது     பைங்     பைங்கண்     பைங்கால்-தவளை    
3.063   3 st/nd Thirumurai   Song # 1   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
பைங்கோட்டு மலர்ப் புன்னைப் பறவைகாள்! பயப்பு ஊர,
சங்கு ஆட்டம் தவிர்த்து, என்னைத் தவிரா நோய் தந்தானே
செங்காட்டங்குடி மேய சிறுத்தொண்டன் பணி செய்ய,
வெங்காட்டுள் அனல் ஏந்தி விளையாடும் பெருமானே.

3.085   3 st/nd Thirumurai   Song # 5   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
பைங்கணது ஒரு பெரு மழலை வெள் ஏற்றினர்; பலி எனா
எங்கணும் உழிதர்வர்; இமையவர் தொழுது எழும் இயல்பினர்;
அங்கணர்; அமரர்கள் அடி இணை தொழுது எழ, ஆரமா
வெங் கண அரவினர்; உறைதரு பதி விழிமிழலையே.

3.092   3 st/nd Thirumurai   Song # 9   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
பைங் கண்வாள் அரவு அணையவனொடு பனி மலரோனும் காணாது
அங்கணா! அருள்! என அவர் அவர் முறைமுறை இறைஞ்ச நின்றார்
சங்க நால்மறையவர் நிறைதர, அரிவையர் ஆடல் பேண,
திங்கள் நாள் விழ மல்கு திரு நெல்வேலி உறை செல்வர் தாமே.

3.112   3 st/nd Thirumurai   Song # 7   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
பைங்கண் ஏற்றினர், திங்கள் சூடுவர், பட்டினத்து உறை
பல்லவனீச்சுரத்து
எங்கும் ஆய் இருப்பார், இவர் தன்மை அறிவார் ஆர்?

4.104   4 st/nd Thirumurai   Song # 2   திருநாவுக்கரசர்   தேவாரம்  
பைங்கால்-தவளை பறை கொட்ட, பாசிலை நீர்ப் படுகர்
அம் கால் குவளை மெல் ஆவி உயிர்ப்ப, அருகு உலவும்
செங்கால் குருகு இவை சேரும் செறி கெடிலக் கரைத்தே-
வெங் கால் குரு சிலை வீரன் அருள் வைத்த வீரட்டமே.

     
send corrections and suggestions to admin-at-sivaya.org
This page was last modified on Tue, 27 Jan 2026 00:59:47 +0000