சிவய.திருக்கூட்டம்
sivaya.org
Please set your language preference by clicking language links.
Search this site internally
Or with Google

This page in Tamil   Hindi/Sanskrit   Telugu   Malayalam   Bengali   Kannada   English   ITRANS    Marati  Gujarathi   Oriya   Singala   Tibetian   Thai   Japanese   Urdu   Cyrillic/Russian   Spanish   Hebrew   Korean  
Selected thirumurai      thirumurai Thalangal      All thirumurai Songs     

Thirumurai   1   2   3   4   5   6   7   8   9   10   11   12

Pathigam first Letter :                                          
Paadal first letter:       (  .                                                
Search: Filter By: Order By:
திருமுறை 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12 இருந்து பாடல் சொல் பைம்
பைம்     பைம்பொனே!    
1.042   1 st/nd Thirumurai   Song # 1   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
பைம் மா நாகம், பல்மலர்க் கொன்றை, பன்றி வெண் கொம்பு ஒன்று, பூண்டு,
செம்மாந்து, ஐயம் பெய்க! என்று சொல்லி, செய் தொழில் பேணியோர்; செல்வர்;
அம் மான் நோக்கு இயல், அம் தளிர்மேனி, அரிவை ஓர்பாகம் அமர்ந்த
பெம்மான்; நல்கிய தொல்புகழாளர் பேணு பெருந்துறையாரே.

3.064   3 st/nd Thirumurai   Song # 11   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
பைம் பொன் சீர் மணி வாரி பலவும் சேர் கனி உந்தி,
அம் பொன் செய் மடவரலார் அணி மல்கு பெருவேளூர்
நம்பன் தன் கழல் பரவி, நவில்கின்ற மறை ஞான-
சம்பந்தன் தமிழ் வல்லார்க்கு, அருவினை நோய் சாராவே.

4.063   4 st/nd Thirumurai   Song # 4   திருநாவுக்கரசர்   தேவாரம்  
பைம்பொனே! பவளக்குன்றே! பரமனே! பால் வெண் நீற்றாய்!
செம்பொனே! மலர் செய் பாதா! சீர் தரு மணியே! மிக்க
அம் பொனே! கொழித்து வீழும் அணி அணாமலை உளானே!
என் பொனே! உன்னை அல்லால் யாதும் நான் நினைவு இலேனே.

4.084   4 st/nd Thirumurai   Song # 10   திருநாவுக்கரசர்   தேவாரம்  
பைம் மாண் அரவு அல்குல் பங்கயச் சீறடியாள் வெருவக்
கைம்மா, வரிசிலைக் காமனை, அட்ட கடவுள்; முக்கண்
எம்மான் இவன் என்று இருவரும் ஏத்த எரி நிமிர்ந்த
அம்மான்; அடி நிழல் கீழது அன்றோ, என் தன் ஆர் உயிரே!

5.096   5 st/nd Thirumurai   Song # 6   திருநாவுக்கரசர்   தேவாரம்  
பைம் மாலும்(ம்) அரவா! பரமா! பசு-
மைம் மால் கண்ணியோடு-ஏறும் மைந்தா! எனும்
அம் மால் அல்லது மற்று அடி நாயினேன்
எம்மாலும்(ம்) இலன் எந்தைபிரானிரே!

8.107   8 st/nd Thirumurai   Song # 13   மாணிக்க வாசகர்    திருவாசகம்  
பைம் குவளைக் கார் மலரால், செம் கமலப் பைம் போதால்,
அங்கம் குருகு இனத்தால், பின்னும் அரவத்தால்,
தம்கண் மலம் கழுவுவார் வந்து சார்தலினால்,
எங்கள் பிராட்டியும், எம் கோனும், போன்று இசைந்த
பொங்கு மடுவில், புகப் பாய்ந்து, பாய்ந்து, நம்
சங்கம் சிலம்ப; சிலம்பு கலந்து ஆர்ப்ப;
கொங்கைகள் பொங்க; குடையும் புனல் பொங்க;
பங்கயப் பூம் புனல் பாய்ந்து ஆடு' ஏல் ஓர் எம்பாவாய்!

     
send corrections and suggestions to admin-at-sivaya.org
This page was last modified on Tue, 27 Jan 2026 00:59:47 +0000