சிவய.திருக்கூட்டம்
sivaya.org
Please set your language preference
by clicking below languages link
Search this site with
words in any language e.g. पोऱ्‌ऱि
song/pathigam/paasuram numbers: e.g. 7.039

This page in Tamil   Hindi/Sanskrit   Telugu   Malayalam   Bengali   Kannada   English   ITRANS    Marati  Gujarathi   Oriya   Singala   Tibetian   Thai   Japanese   Urdu   Cyrillic/Russian   Spanish   Hebrew  
Selected thirumurai      thirumurai Thalangal      All thirumurai Songs     

Thirumurai   1   2   3   4   5   6   7   8   9   10   11   12

Pathigam first Letter :                                          
Paadal first letter:     (  .                                                
Search: Filter By: Order By:
திருமுறை 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12 இருந்து பாடல் சொல் பொங்கு
பொங்கு     பொங்கும்     பொங்குகடல்     பொங்குவிடந்     பொங்குபுனற்     பொங்குபெரு     பொங்குதமிழ்ப்     பொங்குதிருத்    
1.044   1 st/nd Thirumurai   Song # 7   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
பொங்கு இள நாகம், ஓர் ஏகவடத்தோடு, ஆமை, வெண்நூல், புனை கொன்றை,
கொங்கு இள மாலை, புனைந்து அழகு ஆய குழகர்கொல் ஆம் இவர் என்ன,
அங்கு இளமங்கை ஓர் பங்கினர்; பாச்சிலாச்சிராமத்து உறைகின்ற
சங்கு ஒளி வண்ணரோ, தாழ்குழல் வாடச் சதிர் செய்வதோ இவர் சார்வே?

1.071   1 st/nd Thirumurai   Song # 2   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
பொங்கு ஆர் சடையர்; புனலர்; அனலர் பூதம் பாடவே,
தம் காதலியும் தாமும் உடன் ஆய்த் தனி ஓர் விடை ஏறி,
கொங்கு ஆர் கொன்றை வன்னி மத்தம் சூடி, குளிர்பொய்கைச்
செங்கால் அனமும் பெடையும் சேரும் சித்தீச்சுரத்தாரே.

1.136   1 st/nd Thirumurai   Song # 2   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
பொங்கும் நடைப் புகல் இல் விடை ஆம் அவர் ஊர்தி,
வெண்பொடி அணி தடம் கொள் மார்பு ணநூல் புரள,
மங்குல் இடைத் தவழும் மதி சூடுவர், ஆடுவர்,
வளம் கிளர்புனல் அரவம் வைகிய சடையர்
சங்கு கடல்-திரையால் உதையுண்டு, சரிந்து இரிந்து,
ஒசிந்து அசைந்து, இசைந்து சேரும் வெண்மணல் குவைமேல்
தங்கு கதிர் மணி நித்திலம் மெல் இருள் ஒல்க நின்று,
இலங்கு ஒளி நலங்கு எழில்-தருமபுரம் பதியே.

2.056   2 st/nd Thirumurai   Song # 1   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
பொங்கு நூல் மார்பினீர்! பூதப்படையினீர்! பூங் கங்கை
தங்கு செஞ்சடையினீர்! சாமவேதம் ஓதினீர்!
எங்கும் எழில் ஆர் மறையோர்கள் முறையால் ஏத்த,
இடைமருதில்,
மங்குல் தோய் கோயிலே கோயில் ஆக மகிழ்ந்தீரே.

2.060   2 st/nd Thirumurai   Song # 4   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
பொங்கு ஆடு அரவும் புனலும் சடைமேல் பொலிவு எய்த,
கொங்கு ஆர் கொன்றை சூடி, என் உள்ளம் குளிர்வித்தார்,
தம் காதலியும் தாமும் வாழும் ஊர்போலும்
பைங்கால் முல்லை பல் அரும்பு ஈனும் பாசூரே.

2.082   2 st/nd Thirumurai   Song # 6   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
பொங்கு பூண் முலைப் புரிகுழல் வரிவளைப் பொருப்பின்
மங்கை பங்கினன், கங்கையை வளர்சடை வைத்தான்,
திங்கள் சூடிய தீ நிறக் கடவுள், தென் தேவூர்
அங்கணன் தனை அடைந்தனம்; அல்லல் ஒன்று இலமே.

2.091   2 st/nd Thirumurai   Song # 1   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
பொங்கு வெண்மணல் கானல் பொருகடல் திரை தவழ்
முத்தம்
கங்குல் ஆர் இருள் போழும் கலி மறைக்காடு அமர்ந்தார்
தாம்
திங்கள் சூடினரேனும், திரிபுரம் எரித்தனரேனும்,
எங்கும் எங்கள் பிரானார் புகழ் அலது, இகழ் பழி இலரே.

2.092   2 st/nd Thirumurai   Song # 11   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
பொங்கு தண்புனல் சூழ்ந்து போது அணி பொழில்
புகலூரில்,
மங்குல் மா மதி தவழும் வர்த்தமானீச்சுரத்தாரை,
தங்கு சீர் திகழ் ஞானசம்பந்தன் தண் தமிழ்பத்தும்
எங்கும் ஏத்த வல்லார்கள், எய்துவர், இமையவர் உலகே.

2.096   2 st/nd Thirumurai   Song # 1   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
பொங்கு வெண்புரி வளரும் பொற்பு உடை மார்பன்,
எம்பெருமான்,
செங்கண் ஆடு அரவு ஆட்டும் செல்வன், எம் சிவன்,
உறை கோயில்
பங்கம் இல் பலமறைகள் வல்லவர், பத்தர்கள், பரவும்
தங்கு வெண்திரைக் கானல் தண்வயல் காழி நன் நகரே.

2.104   2 st/nd Thirumurai   Song # 3   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
பொங்கு நன் கரி உரி அது போர்ப்பது, புலி அதள் உடை,
நாகம்
தங்க மங்கையைப் பாகம் அது உடையவர், தழல் புரை
திருமேனிக்
கங்கை சேர்தரு சடையினர், கடிக்குளத்து உறைதரு
கற்பகத்தை,
எங்கும் ஏத்தி நின்று இன்பு உறும் அடியரை இடும்பை
வந்து அடையாவே.

2.117   2 st/nd Thirumurai   Song # 7   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
பொங்கு செங்கண்(ண்) அரவும் மதியும் புரிபுன்சடைத்
தங்கவைத்த பெருமான் என நின்றவர் தாழ்வு இடம்
எங்கும் இச்சை அமர்ந்தான் இடம்போல் இரும்பைதனுள்,
மங்குல் தோயும் பொழில் சூழ்ந்து அழகு ஆய மாகாளமே.

3.083   3 st/nd Thirumurai   Song # 7   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
பொங்கு அரவர், அங்கம் உடல்மேல் அணிவர்; ஞாலம் இடு பிச்சை,
தம் கரவம் ஆக உழிதந்து, மெய் துலங்கிய வெண் நீற்றர்;
கங்கை, அரவம், விரவு திங்கள், சடை அடிகள்; இடம் வினவில்
செங்கயல் வதிக் குதிகொளும் புனல் அது ஆர் திரு நலூரே.

3.102   3 st/nd Thirumurai   Song # 5   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
பொங்கு இளங் கொன்றையினார், கடலில் விடம் உண்டு
இமையோர்கள்
தங்களை ஆர் இடர் தீர நின்ற தலைவர், சடைமேல் ஓர்
திங்களை வைத்து அனல் ஆடலினார், திரு நாரையூர் மேய
வெங்கனல் வெண் நீறு அணிய வல்லார் அவரே விழுமியரே.

4.012   4 st/nd Thirumurai   Song # 6   திருநாவுக்கரசர்   தேவாரம்  
பொங்கு ஓதமால் கடலில் புறம் புறம் போய் இரை தேரும்
செங்கால் வெண் மட நாராய்! செயல் படுவது அறியேன், நான்!
அம் கோல வளை கவர்ந்தான், அணி பொழில் சூழ் பழனத்தான்,
தம் கோல நறுங்கொன்றைத்தார் அருளா தொழி வானோ?

5.035   5 st/nd Thirumurai   Song # 10   திருநாவுக்கரசர்   தேவாரம்  
பொங்கு மாகடல் சூழ் இலங்கைக்கு இறை
அங்கம் ஆன இறுத்து அருள் செய்தவன்,
பங்கன், என்றும் பழனன், உமையொடும்
தங்கன், தாள் அடியேன் உடை உச்சியே.

6.027   6 st/nd Thirumurai   Song # 6   திருநாவுக்கரசர்   தேவாரம்  
பொங்கு மதமானமே! ஆர்வச் செற்றக்-குரோதமே!   உலோபமே! பொறையே! நீங்கள்
உங்கள் பெரு மா நிலத்தின் எல்லை எல்லாம்
உழறும் இது குறை முடிப்பீர்க்கு அரிதே? யானேல்,
அம் கமலத்து அயனொடு மால் ஆகி, மற்றும் அதற்கு அப்பால் ஒன்று ஆகி, அறிய ஒண்ணாச்
செங்கனகத் தனிக் குன்றை, சிவனை, ஆரூர்ச்
செல்வனை, சேர்வேன்; நும்மால் செலுத்துணேனே!.

6.058   6 st/nd Thirumurai   Song # 9   திருநாவுக்கரசர்   தேவாரம்  
பொங்கு ஆடு அரவு ஒன்று கையில் கொண்டு, போர்   வெண்மழு ஏந்தி, போகா நிற்பர்;
தங்கார் ஒரு இடத்தும், தம்மேல் ஆர்வம் தவிர்த்து அருளார்; தத்துவத்தே நின்றேன் என்பர்;
எங்கே இவர் செய்கை? ஒன்று ஒன்று ஒவ்வா; என் கண்ணில் நின்று அகலா வேடம் காட்டி,
மங்குல் மதி தவழும் மாட வீதி வலம்புரமே புக்கு, அங்கே மன்னினாரே.

6.075   6 st/nd Thirumurai   Song # 9   திருநாவுக்கரசர்   தேவாரம்  
பொங்கு அரவர்; புலித்தோலர்; புராணர்; மார்பில் பொறி கிளர் வெண்பூண நூல் புனிதர் போலும்;
சங்கு அரவக் கடல் முகடு தட்டவிட்டு, சதுர நடம் ஆட்டு உகந்த சைவர் போலும்;
அங்கு அரவத் திருவடிக்கு ஆட்பிழைப்ப, தந்தை- அந்தணனை அற எறிந்தார்க்கு, அருள் அப்போதே
கொங்கு அரவச் சடைக் கொன்றை கொடுத்தார்
போலும் குடந்தைக் கீழ்க்கோட்டத்து எம் கூத்தனாரே.

12.070   12 st/nd Thirumurai   Song # 21   சேக்கிழார்   தில்லை வாழ் அந்தணர் சருக்கம்  
பொங்கு வெண்கிழிக் கோவணம் போயின நெறிமேல்
சங்கை யின்றியே தப்பின தென்றுதஞ் சரக்கில்
எங்கும் நாடியும் கண்டிலர் என்செய்வார் நின்றார்
அங்கண் வேதியர் பெருந்தொடக் கினில்அகப் பட்டார்.
12.210   12 st/nd Thirumurai   Song # 301   சேக்கிழார்   திருநின்ற சருக்கம்  
பொங்கு புனலார் பொன்னியினில்
இரண்டு கரையும் பொருவிடையார்
தங்கும் இடங்கள் புக்கிறைஞ்சித்
தமிழ்மா லைகளுஞ் சாத்திப்போய்
எங்கும் நிறைந்த புகழாளர்
ஈறில் தொண்டர் எதிர்கொள்ளச்
செங்கண் விடையார் திருவானைக்
காவின் மருங்கு சென்றணைந்தார்.
12.250   12 st/nd Thirumurai   Song # 15   சேக்கிழார்   திருநின்ற சருக்கம்  
பொங்குகடல் கல்மிதப்பில்
போந்தேறும் அவர்பெருமை
அங்கணர்தம் புவனத்தில்
அறியாதார் யாருளரே
மங்கலமாந் திருவேடத்
துடன்நின்றிவ் வகைமொழிந்தீர்
எங்குறைவீர் நீர்தாம்யார்
இயம்பும்என இயம்பினார்.
12.280   12 st/nd Thirumurai   Song # 154   சேக்கிழார்   வம்பறா வரிவண்டுச் சருக்கம்  
பொங்கு கொங்கையிற் கறந்தமெய்ஞ்
ஞானமாம் போனகம் பொற்குன்ற
மங்கை செங்கையா லூட்டவுண்
டருளிய மதலையார் வந்தார்என்
றங்கண்வாழ் பெருந்திருத் தில்லை
அந்தண ரன்பர்களுடன் ஈண்டி
எங்கும்மங்கல அணிமிக அலங்கரித்
தெதிர் கொள அணைவார்கள்.
12.280   12 st/nd Thirumurai   Song # 177   சேக்கிழார்   வம்பறா வரிவண்டுச் சருக்கம்  
பொங்கு தெண்திரைப் புனிதநீர்
நிவாக்கரைக் குடதிசை மிசைப்போந்து
தங்கு தந்தையா ருடன்பரி
சனங்களும் தவமுனி வருஞ்செல்லச்
செங்கை யாழ்திரு நீலகண்
டப்பெரும் பாணனா ருடன்சேர
மங்கை யார்புகழ் மதங்கசூ
ளாமணி யார்உடன் வரவந்தார்.
12.280   12 st/nd Thirumurai   Song # 376   சேக்கிழார்   வம்பறா வரிவண்டுச் சருக்கம்  
பொங்கு காதலிற் போற்றிஅங்
கருளுடன் போந்து
பங்க யத்தடம் பணைப்பதி
பலவுமுன் பணிந்தே
எங்கும் அன்பர்கள் ஏத்தொலி
எடுக்கவந் தணைந்தார்
அங்க ணர்க்கிட மாகிய
பழம்பதி ஆவூர்.
12.280   12 st/nd Thirumurai   Song # 483   சேக்கிழார்   வம்பறா வரிவண்டுச் சருக்கம்  
பொங்குவிடந் தீர்ந்தெழுந்து நின்றான் சூழ்ந்த
பொருவில்திருத் தொண்டர்குழாம் பொலிய ஆர்ப்ப
அங்கையினை யுச்சியின்மேற் குவித்துக் கொண்டங்
கருட்காழிப் பிள்ளையார் அடியில் வீழ்ந்த
நங்கையவள் தனைநயந்த நம்பி யோடு
நானிலத்தில் இன்புற்று வாழும் வண்ணம்
மங்குல்தவழ் சோலைமலிபுகலி வேந்தர்
மணம்புணரும் பெருவாழ்வு வகுத்து விட்டார்.
12.280   12 st/nd Thirumurai   Song # 894   சேக்கிழார்   வம்பறா வரிவண்டுச் சருக்கம்  
பொங்குபுனற் காவிரிநா டதனின் மீண்டு
போதுதற்குத் திருவுள்ள மாகப் பெற்று
மங்கையருக் கரசியார் தாமும் தென்னர்
மன்னவனும் மந்திரியார் தாமுங் கூட
அங்கவர்தந் திருப்பாதம் பிரிய லாற்றா
துடன்போக ஒருப்படும்அவ் வளவுநோக்கி
இங்குநான் மொழிந்ததனுக் கிசைந்தீ ராகில்
ஈசர்சிவ நெறிபோற்றி இருப்பீ ரென்று.
12.290   12 st/nd Thirumurai   Song # 126   சேக்கிழார்   வம்பறா வரிவண்டுச் சருக்கம்  
பொங்குபெரு விருப்பினொடு
புரிகுழலார் பலர்போற்றப்
பங்கயக்கண் செங்கனிவாய்ப்
பரவையார் அடிவணங்கி
எங்களையும் நினைந்தருளிற்
றெனஇயம்ப இனிதளித்து
மங்கைநல்லா ரவரோடும்
மகிழ்ந்துறைந்து வைகுநாள்.
12.290   12 st/nd Thirumurai   Song # 270   சேக்கிழார்   வம்பறா வரிவண்டுச் சருக்கம்  
பொங்குதமிழ்ப் பொதியமலைப்
பிறந்துபூஞ் சந்தனத்தின்
கொங்கணைந்து குளிர்சாரல்
இடைவளர்ந்த கொழுந்தென்றல்
அங்கணையத் திருவாரூர்
அணிவீதி அழகரவர்
மங்கலநாள் வசந்தமெதிர்
கொண்டருளும் வகைநினைந்தார்.
12.290   12 st/nd Thirumurai   Song # 303   சேக்கிழார்   வம்பறா வரிவண்டுச் சருக்கம்  
பொங்குதிருத் தொண்டருடன்
உள்ளணைந்து புக்கிறைஞ்சி
துங்கவிசைத் திருப்பதிகம்
தூவாயா என்றெடுத்தே
இங்கெமது துயர்களைந்து
கண்காணக் காட்டாயென்
றங்கணர்தம் முன்னின்று
பாடியருந் தமிழ்புனைந்தார்.

This page was last modified on Thu, 09 May 2024 05:33:06 +0000
          send corrections and suggestions to admin-at-sivaya.org

thirumurai all list