சிவய.திருக்கூட்டம்
sivaya.org
Please set your language preference
by clicking below languages link
Search this site with
words in any language e.g. पोऱ्‌ऱि
song/pathigam/paasuram numbers: e.g. 7.039

This page in Tamil   Hindi/Sanskrit   Telugu   Malayalam   Bengali   Kannada   English   ITRANS    Marati  Gujarathi   Oriya   Singala   Tibetian   Thai   Japanese   Urdu   Cyrillic/Russian   Spanish   Hebrew  
Selected thirumurai      thirumurai Thalangal      All thirumurai Songs     

Thirumurai   1   2   3   4   5   6   7   8   9   10   11   12

Pathigam first Letter :                                          
Paadal first letter:     (  .                                                
Search: Filter By: Order By:
திருமுறை 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12 இருந்து பாடல் சொல் பொய்
பொய்யா     பொய்க்குழி     பொய்த்தவம்     பொய்வேடம்     பொய்யிலன்     பொய்யான     பொய்யால்     பொய்நீர்     பொய்வரு     பொய்யைக்     பொய்மை     பொய்கடிந்     பொய்தருமால்     பொய்வாய்மை     பொய்கைசூழ்     பொய்தவ     பொய்யிலியா     பொய்     பொய்து     பொய்கையின்     பொய்யினைத்     பொய்யினால்     பொய்ம்     பொய்ம்மையாலே     பொய்யர்     பொய்த்     பொய்யவன்     பொய்யாத     பொய்யே     பொய்யவனேனைப்     பொய்யனேன்     பொய்யுடை    
1.064   1 st/nd Thirumurai   Song # 9   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
பொய்யா வேத நாவினானும், மகள் காதலனும்,
கையால் தொழுது கழல்கள் போற்ற, கனல் எரி ஆனவன் ஊர்
மை ஆர் பொழிலின் வண்டு பாட, வைகை மணி கொழித்து,
செய் ஆர் கமலம் தேன் அரும்பும் தென்திருப்பூவணமே.

1.067   1 st/nd Thirumurai   Song # 6   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
பொய்யா மொழியார் முறையால் ஏத்திப் புகழ்வார்; திருமேனி
செய்யார்; கரிய மிடற்றார்; வெண் நூல் சேர்ந்த அகலத்தார்;
கை ஆடலினார்; புனலால் மல்கு சடைமேல் பிறையோடும்
பை ஆடு அரவம் உடனே வைத்தார் பழன நகராரே.

2.097   2 st/nd Thirumurai   Song # 8   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
பொய் மிகுத்த வாயராய்ப் பொறாமையோடு செல்லும் நீர்
ஐ மிகுத்த கண்டராய் அடுத்து இரைப்பதன் முனம்
மை மிகுத்த மேனி வாள் அரக்கனை நெரித்தவன்,
பை மிகுத்த பாம்பு அரைப் பரமர், காழி சேர்மினே!

2.116   2 st/nd Thirumurai   Song # 7   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
பொய்து வாழ்வு ஆர் மனம் பாழ்படுக்கும் மலர்ப் பூசனை
செய்து வாழ்வார், சிவன் சேவடிக்கே செலும் சிந்தையார்,
எய்த வாழ்வார்; எழில் நக்கர்; எம்மாற்கு இடம் ஆவது
கைதல் வேலி கழி சூழ் கடல் நாகைக்காரோணமே.

3.032   3 st/nd Thirumurai   Song # 6   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
பொய்கையின் பொழில் உறு புதுமலர்த் தென்றல் ஆர்
வைகையின் வடகரை மருவிய ஏடகத்து
ஐயனை அடி பணிந்து, அரற்றுமின்! அடர்தரும்
வெய்ய வன்பிணி கெட, வீடு எளிது ஆகுமே.

4.023   4 st/nd Thirumurai   Song # 8   திருநாவுக்கரசர்   தேவாரம்  
பொய்யினைத் தவிர விட்டுப் புறம் அலா அடிமை செய்ய,
ஐய! நீ அருளிச் செய்யாய்! ஆதியே! ஆதிமூர்த்தி!
வையகம் தன்னில் மிக்க மல்கு சிற்றம்பலத்தே
பைய நின் ஆடல் காண்பான், பரம! நான் வந்த ஆறே!

4.026   4 st/nd Thirumurai   Song # 2   திருநாவுக்கரசர்   தேவாரம்  
பொய்யினால் மிடைந்த போர்வை புரைபுரை அழுகி வீழ
மெய்யனாய் வாழமாட்டேன்; வேண்டிற்று ஒன்று ஐவர் வேண்டார்
செய்யதாமரைகள் அன்ன சேவடி இரண்டும் காண்பான்,
ஐய! நான் அலந்துபோனேன் அதிகைவீரட்டனீரே!

4.041   4 st/nd Thirumurai   Song # 1   திருநாவுக்கரசர்   தேவாரம்  
பொய் விராம் மேனி தன்னைப் பொருள் எனக் காலம் போக்கி
மெய் விராம் மனத்தன் அல்லேன்; வேதியா! வேத நாவா!
ஐவரால் அலைக்கப்பட்ட ஆக்கை கொண்டு அயர்த்துப் போனேன்
செய் வரால் உகளும் செம்மைத் திருச் சோற்றுத் துறையனாரே!

4.067   4 st/nd Thirumurai   Song # 8   திருநாவுக்கரசர்   தேவாரம்  
பொய்ம் மறித்து இயற்றி வைத்து, புலால் கமழ் பண்டம் பெய்து
பைம் மறித்து இயற்றியன்ன பாங்கு இலாக் குரம்பை நின்று
கைம் மறித்தனைய ஆவி கழியும் போது அறிய மாட்டேன்;
செந்நெறிச் செலவு காணேன்திருக்கொண்டீச்சுரத்து உளானே!

5.019   5 st/nd Thirumurai   Song # 3   திருநாவுக்கரசர்   தேவாரம்  
பொய் தொழாது, புலி உரியோன் பணி
செய்து எழா எழுவார் பணி செய்து எழா,
வைது எழாது எழுவார் அவர் எள்க, நீர்
கைதொழா எழுமின், கரக்கோயிலே!

5.048   5 st/nd Thirumurai   Song # 9   திருநாவுக்கரசர்   தேவாரம்  
பொய் அனைத்தையும் விட்டவர் புந்தியுள்
மெய்யனை, சுடர் வெண்மழு ஏந்திய
கையனை, கச்சி ஏகம்பம் மேவிய
ஐயனை, தொழுவார்க்கு இல்லை, அல்லலே.

5.080   5 st/nd Thirumurai   Song # 9   திருநாவுக்கரசர்   தேவாரம்  
பொய் எலாம் உரைக்கும் சமண்சாக்கியக்-
கையன்மார் உரை கேளாது எழுமினோ!
ஐயன், எம்பிரான், அன்பில் ஆலந்துறை
மெய்யன், சேவடி ஏத்துவார் மெய்யரே.

6.027   6 st/nd Thirumurai   Song # 1   திருநாவுக்கரசர்   தேவாரம்  
பொய்ம் மாயப்பெருங்கடலில் புலம்பாநின்ற   புண்ணியங்காள்! தீவினைகாள்! திருவே! நீங்கள்
இம் மாயப்பெருங்கடலை அரித்துத் தின்பீர்க்கு இல்லையே, கிடந்ததுதான்; யானேல், வானோர்
தம்மானை, தலைமகனை, தண் நல் ஆரூர்த்  தடங்கடலை, தொடர்ந்தோரை அடங்கச் செய்யும்
எம்மான் தன் அடித் தொடர்வான் உழிதர்கின்றேன்;
இடையிலேன்; கெடுவீர்காள்! இடறேன்மி(ன்)னே!.

6.063   6 st/nd Thirumurai   Song # 5   திருநாவுக்கரசர்   தேவாரம்  
பொய் ஏதும் இல்லாத மெய்யன் தன்னை, புண்ணியனை, நண்ணாதார் புரம் நீறு ஆக
எய்தானை, செய் தவத்தின் மிக்கான் தன்னை, ஏறு அமரும் பெருமானை, இடம் மான் ஏந்து
கையானை, கங்காள வேடத்தானை, கட்டங்கக் கொடியானை, கனல் போல் மேனிச்
செய்யானை, திரு ஆனைக்கா உளானை, செழுநீர்த்திரளை, சென்று ஆடினேனே.

6.093   6 st/nd Thirumurai   Song # 3   திருநாவுக்கரசர்   தேவாரம்  
பொய் ஆறா ஆறே புனைந்து பேசி, புலர்ந்து எழுந்த காலைப் பொருளே தேடி,
கையாறாக் கரணம் உடையோம் என்று களித்த மனத்தராய், கருதி வாழ்வீர்!
நெய் ஆறா ஆடிய நீலகண்டர், நிமிர் புன்சடை நெற்றிக்கண்ணர், மேய
ஐயாறே ஐயாறே என்பீர் ஆகில், அல்லல் தீர்ந்து அமருலகம் ஆளல் ஆமே.

7.005   7 st/nd Thirumurai   Song # 7   சுந்தரமூர்த்தி சுவாமிகள்   திருப்பாட்டு  
பொய்ம்மையாலே போது போக்கிப் புறத்தும் இல்லை; அகத்தும் இல்லை;
மெய்ம்மை சொல்லி ஆளமாட்டீர்; மேலை நாள் ஒன்று இடவும் கில்லீர்;
எம்மைப் பெற்றால் ஏதும் வேண்டீர்; ஏதும் தாரீர்; ஏதும் ஓதீர்;
உம்மை அன்றே, எம்பெருமான்? ஓணகாந்தன் தளி உளீரே!

7.007   7 st/nd Thirumurai   Song # 6   சுந்தரமூர்த்தி சுவாமிகள்   திருப்பாட்டு  
பொய்யர் கண்டீர், வாழ்க்கையாளர்; பொத்து அடைப்பான் பொருட்டால்
மையல் கொண்டீர்; எம்மோடு ஆடி நீரும், மனத்தீரே!
நைய வேண்டா; இம்மை ஏத்த, அம்மை நமக்கு அருளும்
ஐயர் கோயில் எதிர்கொள்பாடி என்பது அடைவோமே .

7.008   7 st/nd Thirumurai   Song # 9   சுந்தரமூர்த்தி சுவாமிகள்   திருப்பாட்டு  
பொய்த் தன்மைத்து ஆய மாயப்போர்வையை, மெய் என்று எண்ணும்
வித்தகத்து ஆய வாழ்வு வேண்டி, நான் விரும்பகில்லேன்;
முத்தினைத் தொழுது, நாளும் முடிகளால் வணங்குவார்க்கு(வ்)
அத் தன்மைத்து ஆகும் ஆரூர் அப்பனே! அஞ்சினேனே .

7.023   7 st/nd Thirumurai   Song # 9   சுந்தரமூர்த்தி சுவாமிகள்   திருப்பாட்டு  
பொய்யா நா அதனால் புகழ்வார்கள் மனத்தினுள்ளே
மெய்யே நின்று எரியும் விளக்கே ஒத்த தேவர் பிரான்,
செய்யானும் கரிய நிறத்தானும் தெரிவு அரியான்,
மை ஆர் கண்ணியொடு மகிழ்வான், கழிப்பாலை அதே .

7.026   7 st/nd Thirumurai   Song # 6   சுந்தரமூர்த்தி சுவாமிகள்   திருப்பாட்டு  
பொய்யவன் நாய் அடியேன் புகவே நெறி ஒன்று அறியேன்;
செய்யவன் ஆகி வந்து இங்கு இடர் ஆனவை தீர்த்தவனே!
மெய்யவனே! திருவே! விளங்கும் திருக்காளத்தி என்
ஐய! நுன் தன்னை அல்லால் அறிந்து ஏத்த மாட்டேனே .

7.030   7 st/nd Thirumurai   Song # 6   சுந்தரமூர்த்தி சுவாமிகள்   திருப்பாட்டு  
பொய்யாத வாய்மையால், பொடி பூசிப் போற்று இசைத்து, பூசை செய்து,
கையினால் எரி ஓம்பி மறை வளர்க்கும் அந்தணர் தம் கருப்பறியலூர்
கொய் உலாம் மலர்ச் சோலைக் குயில் கூவ மயில் ஆலும் கொகுடிக் கோயில்
ஐயனை என் மனத்தினால் நினைந்த போது அவர் நமக்கு இனிய ஆறே!.

7.039   7 st/nd Thirumurai   Song # 7   சுந்தரமூர்த்தி சுவாமிகள்   திருப்பாட்டு  
பொய் அடிமை இல்லாத புலவர்க்கும் அடியேன்;
பொழில் கருவூர்த் துஞ்சிய  புகழ்ச்சோழற்கு அடியேன்;
மெய் அடியான்-நரசிங்க முனையரையற்கு அடியேன்;
விரி திரை சூழ் கடல் நாகை  அதிபத்தற்கு அடியேன்;
கை தடிந்த வரிசிலையான்-கலிக் கம்பன், கலியன்,
கழல் சத்தி-வரிஞ்சையர்கோன்,-  அடியார்க்கும் அடியேன்;
ஐயடிகள் காடவர் கோன் அடியார்க்கும் அடியேன்;
ஆரூரன் ஆரூரில் அம்மானுக்கு  ஆளே .

7.041   7 st/nd Thirumurai   Song # 7   சுந்தரமூர்த்தி சுவாமிகள்   திருப்பாட்டு  
பொய்யே உன்னைப் புகழ்வார் புகழ்ந்தால் அதுவும் பொருளாக் கொள்வோனே!
மெய்யே! எங்கள் பெருமான்! உன்னை நினைவார் அவரை நினை கண்டாய்!
மை ஆர் தடங்கண் மங்கை பங்கா! கங்கு ஆர் மதியம் சடை வைத்த
ஐயா! செய்யாய்! வெளியாய்! கச்சூர் ஆலக்கோயில் அம்மானே! .

7.052   7 st/nd Thirumurai   Song # 2   சுந்தரமூர்த்தி சுவாமிகள்   திருப்பாட்டு  
பொய்யே செய்து புறம் புறமே திரிவேன் தன்னைப் போகாமே,
மெய்யே வந்து இங்கு எனை ஆண்ட மெய்யா! மெய்யர் மெய்ப்பொருளே!
பை ஆடு அரவம் அரைக்கு அசைத்த பரமா! பழையனூர் மேய
ஐயா! ஆலங்காடா! உன் அடியார்க்கு அடியேன் ஆவேனே.

8.106   8 st/nd Thirumurai   Song # 7   மாணிக்க வாசகர்    திருவாசகம்  
பொய்யவனேனைப் பொருள் என ஆண்டு, ஒன்று பொத்திக்கொண்ட
மெய்யவனே, விட்டிடுதி கண்டாய்? விடம் உண் மிடற்று
மையவனே, மன்னும் உத்தரகோசமங்கைக்கு அரசே,
செய்யவனே, சிவனே, சிறியேன் பவம் தீர்ப்பவனே.

8.110   8 st/nd Thirumurai   Song # 17   மாணிக்க வாசகர்    திருவாசகம்  
பொய் ஆய செல்வத்தே புக்கு, அழுந்தி, நாள்தோறும்
மெய்யாக் கருதிக் கிடந்தேனை, ஆட்கொண்ட
ஐயா! என் ஆர் உயிரே! அம்பலவா! என்று, அவன் தன்
செய் ஆர் மலர் அடிக்கே சென்று ஊதாய்; கோத்தும்பீ!

8.123   8 st/nd Thirumurai   Song # 1   மாணிக்க வாசகர்    திருவாசகம்  
பொய்யனேன் அகம் நெகப் புகுந்து, அமுது ஊறும், புது மலர்க் கழல் இணை அடிபிரிந்தும்,
கையனேன், இன்னும் செத்திலேன்; அந்தோ! விழித்திருந்து உள்ளக் கருத்தினை இழந்தேன்.
ஐயனே! அரசே! அருள் பெரும் கடலே! அத்தனே! அயன், மாற்கு, அறி ஒண்ணாச்
செய்ய மேனியனே! செய்வகை அறியேன்; திருப்பெருந்துறை மேவிய சிவனே!

8.151   8 st/nd Thirumurai   Song # 3   மாணிக்க வாசகர்    திருவாசகம்  
பொய் எல்லாம் மெய் என்று, புணர் முலையார் போகத்தே
மையல் உறக் கடவேனை, மாளாமே, காத்தருளி,
தையல் இடம் கொண்ட பிரான், தன் கழலே சேரும்வண்ணம்,
ஐயன், எனக்கு அருளிய ஆறு, ஆர் பெறுவார்? அச்சோவே!

8.202   8 st/nd Thirumurai   Song # 30   மாணிக்க வாசகர்    திருச்சிற்றம்பலக் கோவையார்  
பொய்யுடை யார்க்கரன் போலக
   லும்மகன் றாற்புணரின்
மெய்யுடை யார்க்கவன் அம்பலம்
   போல மிகநணுகும்
மையுடை வாட்கண் மணியுடைப்
   பூண்முலை வாணுதல்வான்
பையுடை வாளர வத்தல்குல்
   காக்கும்பைம் பூம்புனமே.

9.006   9 st/nd Thirumurai   Song # 1   சேந்தனார்   திருவிசைப்பா  
பொய்யாத வேதியர் சாந்தைமெய்ப்
   புகழாள ராயிரம் பூசுரர்
மெய்யே திருப்பணி செய்சீர்
   மிகுகா விரிக்கரை மேய
ஐயா திருவா வடுதுறை
   யமுதேயென் றுன்னை யழைத்தக்கால்
மையார் தடங்கண் மடந்தைக்கொன்
   றருளா தொழிவது மாதிமையே.

10.113   10 st/nd Thirumurai   Song # 2   திருமூலர்   திருமந்திரம்  
பொய்க்குழி தூர்ப்பான் புலரி புலருதென்
றக்குழி தூர்க்கும் அரும்பண்டந் தேடுவீர்
எக்குழி தூர்த்தும் இறைவனை ஏத்துமின்
அக்குழி தூரும் அழுக்கற்ற போதே.

10.608   10 st/nd Thirumurai   Song # 5   திருமூலர்   திருமந்திரம்  
பொய்த்தவம் செய்வார் புகுவர் நரகத்துப்
பொய்த்தவம் செய்தவர் புண்ணிய ராகாரேல்
பொய்த்தவம் மெய்த்தவம் போகஉண் போக்கியம்
சத்திய ஞானத்தால் தங்கும் தவங்களே.

10.608   10 st/nd Thirumurai   Song # 6   திருமூலர்   திருமந்திரம்  
பொய்வேடம் பூண்பர் பொசித்தல் பயனாக
மெய்வேடம் பூண்போர் மிகுபிச்சை கைக்கொள்வர்
பொய்வேடம் மெய்வேடம் போலவே பூணினும்
உய்வேட மாகும் உணர்ந்தறிந் தார்க்கே. 9,

10.725   10 st/nd Thirumurai   Song # 4   திருமூலர்   திருமந்திரம்  
பொய்யிலன் மெய்யன் புவனா பதிஎந்தை
மையிருள் நீக்கும் மதி அங்கி ஞாயிறு
செய்யிருள் நீக்கும் திருவுடை நந்திஎன்
கையிருள் நீக்கக் கலந்தெழுந் தானே.

10.807   10 st/nd Thirumurai   Song # 9   திருமூலர்   திருமந்திரம்  
பொய்யான போதாந்தம் ஆறாறும்விட்டகன்(று)
எய்யாமை நீங்கவே எய்யவன் தானாகி
மெய்யாஞ் சராசர மாய்வெளி தன்னுட்புக்(கு)
எய்தாமல் எய்தும் சுத் தாவத்தை என்பதே.

11.006   11 st/nd Thirumurai   Song # 98   சேரமான் பெருமாள் நாயனார்   பொன்வண்ணத்தந்தாதி  
பொய்யா நரகம் புகினுந்
துறக்கம் புகினும்புக்கிங்
குய்யா உடம்பினோ டூர்வ
நடப்ப பறப்பவென்று
நையா விளியினும் நானிலம்
ஆளினும் நான்மறைசேர்
மையார் மிடற்றான் அடிமற
வாவரம் வேண்டுவனே.

11.007   11 st/nd Thirumurai   Song # 21   சேரமான் பெருமாள் நாயனார்   திருவாரூர் மும்மணிக்கோவை  
பொய்யால் தொழவும் அருளும்
இறைகண்டம் போல்இருண்ட
மையார் தடங்கண் மடந்தையர்
கேட்கிற்பொல் லாதுவந்துன்
கையால் அடிதொடல் செல்வனில்
புல்லல் கலையளையல்
ஐயா இவைநன்கு கற்றாய்
பெரிதும் அழகியவே.

11.024   11 st/nd Thirumurai   Song # 30   இளம்பெருமான் அடிகள்   சிவபெருமான் திருமும்மணிக்கோவை  
பொய்நீர் உரைசெய்தீர் பொய்யோம் பலியெனப் போனபின்னை
இந்நீள் கடைக்கென்று வந்தறி யீரினிச்
செய்வதென்னே செந்நீர் வளர்சடைத் திங்கட் பிளவொடு கங்கைவைத்த
முந்நீர்ப் பவளத் திரட்செக்கர் ஒக்கும் முதலவனே.

11.029   11 st/nd Thirumurai   Song # 97   பட்டினத்துப் பிள்ளையார்   திருஏகம்பமுடையார் திருவந்தாதி  
பொய்வரு நெஞ்சினர் வஞ்சனை
யாரையும் போகவிடா
மெய்வரும் பேரருள் ஏகம்பர்
கச்சி விரையினவாய்க்
கைவரும் புள்ளொடு சங்கினம்
ஆர்ப்பநம் சேர்ப்பர்திண்தேர்
அவ்வரு தாமங் களினம்வந்
தார்ப்ப அணைகின்றதே.

11.033   11 st/nd Thirumurai   Song # 54   நம்பியாண்டார் நம்பி   திருத்தொண்டர் திருவந்தாதி  
பொய்யைக் கடிந்துநம் புண்ணியர்க்
காட்பட்டுத் தன்னடியான்
சைவத் திருவுரு வாய்வரத்
தானவன் தாள்கழுவ
வையத் தவர்முன்பு வெள்கிநீர்
வாரா விடமனைவி
கையைத் தடிந்தவன் பெண்ணா
கடத்துக் கலிக்கம்பனே.

11.037   11 st/nd Thirumurai   Song # 38   நம்பியாண்டார் நம்பி   ஆளுடையபிள்ளையார் திருவுலாமாலை  
பொய்மை கடிந்து புகழ்புரிந்து பூதலத்து
மெய்ம்மை தலைசிறந்து மேதக்கும் உண்மை

12.020   12 st/nd Thirumurai   Song # 2   சேக்கிழார்   தில்லை வாழ் அந்தணர் சருக்கம்  
பொய்கடிந் தறத்தின் வாழ்வார்
புனற்சடை முடியார்க் கன்பர்
மெய்யடி யார்கட் கான
பணிசெயும் விருப்பில் நின்றார்
வையகம் போற்றுஞ் செய்கை
மனையறம் புரிந்து வாழ்வார்
சைவமெய்த் திருவின் சார்வே
பொருளெனச் சாரு நீரார்.
12.210   12 st/nd Thirumurai   Song # 61   சேக்கிழார்   திருநின்ற சருக்கம்  
பொய்தருமால் உள்ளத்துப்
புன்சமணர் இடங்கழிந்து
மெய்தருவான் நெறியடைவார்
வெண்புடைவை மெய்சூழ்ந்து
கைதருவார் தமையூன்றிக்
காணாமே இரவின்கண்
செய்தவமா தவர்வாழுந்
திருவதிகை சென்றடைவார்.
12.210   12 st/nd Thirumurai   Song # 73   சேக்கிழார்   திருநின்ற சருக்கம்  
பொய்வாய்மை பெருக்கிய புன்சமயப்
பொறியில்சமண் நீசர் புறத்துறையாம்
அவ்வாழ்குழி யின்கண் விழுந்தெழுமா
றறியாது மயங்கி அவம்புரிவேன்
மைவாச நறுங்குழல் மாமலையாள்
மணவாளன் மலர்க்கழல் வந்தடையும்
இவ்வாழ்வு பெறத்தரு சூலையினுக்
கெதிர்செய்குறை யென்கொல் எனத்தொழுதார்.
12.210   12 st/nd Thirumurai   Song # 413   சேக்கிழார்   திருநின்ற சருக்கம்  
பொய்கைசூழ் பூம்புகலூர்ப்
புனிதர்மலர்த் தாள்வணங்கி
நையுமனப் பரிவோடு
நாள்தோறுந் திருமுன்றில்
கைகலந்த திருத்தொண்டு
செய்துபெருங் காதலுடன்
வைகுநாள் எண்ணிறந்த
வண்டமிழ்மா லைகள்மொழிவார்.
12.280   12 st/nd Thirumurai   Song # 749   சேக்கிழார்   வம்பறா வரிவண்டுச் சருக்கம்  
பொய்தவ மாகக் கொண்ட
புன்தலைச் சமணர் கூறச்
செய்தவப் பயன்வந் தெய்தும்
செவ்விமுன் னுறுத லாலே
எய்திய தெய்வச் சார்வால்
இருதிறத் தீருந் தீரும்
கைதவம் பேச மாட்டேன்
என்றுகை தவனுஞ் சொன்னான்.
12.280   12 st/nd Thirumurai   Song # 940   சேக்கிழார்   வம்பறா வரிவண்டுச் சருக்கம்  
பொய்யிலியா ரைப்பணிந்து
போற்றியே புறத்தணைவார்
செய்யசடை யார்கோயில்
திருவாயில் முன்னாக
மையறுசீர்த் தொண்டர்குழாம்
வந்துபுடை சூழஉல
குய்யவரு வார்தங்க
ளுடன்மகிழ்ந்தங் கினிதிருந்தார்.

This page was last modified on Thu, 09 May 2024 05:33:06 +0000
          send corrections and suggestions to admin-at-sivaya.org

thirumurai all list