சிவய.திருக்கூட்டம்
sivaya.org
Please set your language preference
by clicking below languages link
Search this site with
words in any language e.g. पोऱ्‌ऱि
song/pathigam/paasuram numbers: e.g. 7.039

This page in Tamil   Hindi/Sanskrit   Telugu   Malayalam   Bengali   Kannada   English   ITRANS    Marati  Gujarathi   Oriya   Singala   Tibetian   Thai   Japanese   Urdu   Cyrillic/Russian   Spanish   Hebrew  
Selected thirumurai      thirumurai Thalangal      All thirumurai Songs     

Thirumurai   1   2   3   4   5   6   7   8   9   10   11   12

Pathigam first Letter :                                          
Paadal first letter:     (  .                                                
Search: Filter By: Order By:
திருமுறை 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12 இருந்து பாடல் சொல் மறை
மறை     மறையின்     மறையான்,     மறையவன்,     மறையும்     மறையோ     மறையவன்     மறையவர்     மறைத்துலகம்     மறைமுழங்     மறைபயில்வார்     மறையவர்க்     மறைகளா     மறையவ     மறைமுனி     மறைத்தவன்     மறையவர்கள்     மறைக     மறையோர்     மறைமுனிவர்     மறைகள்     மறைவளர்     மறைய     மறைமு     மறைவாழ     மறைக்குல     மறையொலி     மறையாளர்     மறையானை,     மறைத்தான்,     மறையினான்     மறையினார்,     மறைகளால்     மறைவலாரொடு     மறையர்,     மறையோன்,     மறையன்,     மறையினார்     மறையனார்,     மறையினானொடு     மறைக்காட்டார்;     மறையவன்(ன்)     மறைந்திட     மறைகளும்    
1.001   1 st/nd Thirumurai   Song # 6   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
மறை கலந்த ஒலிபாடலொடு ஆடலர் ஆகி, மழு ஏந்தி,
இறை கலந்த இனவெள்வளை சோர, என் உள்ளம் கவர் கள்வன்-
கறை கலந்த கடி ஆர் பொழில், நீடு உயர் சோலை, கதிர் சிந்தப்
பிறை கலந்த, பிரமாபுரம் மேவிய, பெம்மான்-இவன் அன்றே!

1.052   1 st/nd Thirumurai   Song # 1   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
மறை உடையாய்! தோல் உடையாய்! வார்சடை மேல் வளரும்
பிறை உடையாய்! பிஞ்ஞகனே! என்று உனைப் பேசின் அல்லால்,
குறை உடையார் குற்றம் ஓராய்! கொள்கையினால் உயர்ந்த
நிறை உடையார் இடர் களையாய் நெடுங்களம் மேயவனே!

1.070   1 st/nd Thirumurai   Song # 4   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
மறையின் இசையார், நெறிமென் கூந்தல் மலையான் மகளோடும்,
குறை வெண்பிறையும் புனலும் நிலவும் குளிர்புன்சடை தாழ,
பறையும் குழலும் கழலும் ஆர்ப்ப, படு காட்டு எரி ஆடும்
இறைவர் சிறை வண்டு அறை பூஞ்சாரல் ஈங்கோய்மலையாரே.

1.089   1 st/nd Thirumurai   Song # 8   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
மறையான், நெடுமால், காண்பு அரியான்! மழு ஏந்தி!
நிறையா மதி சூடி! நிகழ் முத்தின் தொத்து ஏய்
இறையான்! எருக்கத்தம்புலியூர் இடம் கொண்ட
கறை ஆர் மிடற்றானைக் கருத, கெடும், வினையே.

1.111   1 st/nd Thirumurai   Song # 5   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
மறை அவன், உலகு அவன், மாயம் அவன்,
பிறையவன், புனல் அவன், அனலும் அவன்,
இறையவன் என உலகு ஏத்தும் கண்டம்-
கறையவன் வள நகர் கடைமுடியே.

1.121   1 st/nd Thirumurai   Song # 8   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
மறை அவன், உலகு அவன், மதியவன், மதி புல்கு
துறையவன் என வல அடியவர் துயர் இலர்;
கறையவன் மிடறு அது, கனல் செய்த கமழ் சடை
இறையவன், உறைதரும் இடம் இடைமருதே.

1.125   1 st/nd Thirumurai   Song # 5   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
மறையவன், மதியவன், மலையவன், நிலையவன்,
நிறையவன், உமையவள் மகிழ் நடம் நவில்பவன்,
இறையவன்-இமையவர் பணிகொடு சிவபுரம்
உறைவு என உடையவன், எமை உடையவனே.

1.135   1 st/nd Thirumurai   Song # 6   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
மறையும் ஓதுவர்; மான்மறிக் கையினர்;
கறை கொள் கண்டம் உடையவர்
பறையும் சங்கும் ஒலிசெய் பராய்த்துறை
அறைய நின்ற அடிகளே.

2.012   2 st/nd Thirumurai   Song # 1   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
மறையானை, மாசு இலாப் புன்சடை மல்கு வெண்
பிறையானை, பெண்ணொடு ஆண் ஆகிய பெம்மானை,
இறையானை, ஏர் கொள் கச்சித் திரு ஏகம்பத்து
உறைவானை, அல்லது உள்காது, எனது உள்ளமே.

2.019   2 st/nd Thirumurai   Song # 8   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
மறைத்தான், பிணி மாது ஒருபாகம்தன்னை;
மிறைத்தான், வரையால், அரக்கன் மிகையைக்
குறைத்தான், சடைமேல் குளிர் கோல்வளையை
நிறைத்தான் நெல்லிக்காவுள் நிலாயவனே.

2.025   2 st/nd Thirumurai   Song # 6   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
மறையினான் ஒலி மல்கு வீணையன்,
நிறையின் ஆர் நிமிர்புன்சடையன், எம்
பொறையினான், உறையும் புகலியை
நிறையினால் தொழ, நேசம் ஆகுமே.

2.026   2 st/nd Thirumurai   Song # 4   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
மறையினார், மழுவாளினார், மல்கு
பிறையினார், பிறையோடு இலங்கிய
நிறையினார் அ நெல்வாயிலார்; தொழும்
இறைவனார், எமது உச்சியாரே.

2.056   2 st/nd Thirumurai   Song # 9   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
மறை மல்கு நான்முகனும், மாலும் அறியா வண்ணத்தீர்!
கறை மல்கு கண்டத்தீர்! கபாலம் ஏந்தும் கையினீர்!
அறை மல்கு வண்டு இனங்கள் ஆலும் சோலை
இடைமருதில்,
நிறை மல்கு கோயிலே கோயில் ஆக நிகழ்ந்தீரே.

2.067   2 st/nd Thirumurai   Song # 7   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
மறை உடையார், ஒலிபாடல்; மா மலர்ச்சேவடி சேர்வார்,
குறை உடையார், குறை தீர்ப்பார்; குழகர், அழகர்; நம்
செல்வர்;
கறை உடையார், திகழ் கண்டம்; கங்கை சடையில்
கரந்தார்;
பிறை உடையார், சென்னிதன்மேல்; பெரும் புலியூர்
பிரியாரே.

2.082   2 st/nd Thirumurai   Song # 3   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
மறைகளால் மிக வழிபடு மாணியைக் கொல்வான்
கறுவு கொண்ட அக் காலனைக் காய்ந்த எம் கடவுள
செறுவில் வாளைகள் சேல் அவை பொரு வயல் தேவூர்
அறவன்; சேவடி அடைந்தனம், அல்லல் ஒன்று இலமே.

2.112   2 st/nd Thirumurai   Song # 9   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
மறைவலாரொடு வானவர் தொழு
அறையும் தண்புனல் ஆடானை
உறையும் ஈசனை ஏத்த, தீவினை
பறையும்; நல்வினை பற்றுமே.

3.019   3 st/nd Thirumurai   Song # 3   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
மறை புனை பாடலர், சுடர் கை மல்க, ஓர்
பிறை புனை சடைமுடி பெயர, ஆடுவர்
அறை புனல் நிறை வயல் அம்பர் மா நகர்
இறை புனை எழில் வளர் இடம் அது என்பரே.

3.030   3 st/nd Thirumurai   Song # 5   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
மறையர், வாயின் மொழி; மானொடு, வெண்மழு,
கறைகொள் சூலம்(ம்), உடைக் கையர்; கார் ஆர்தரும்
நறை கொள் கொன்றை நயந்து ஆர்தரும் சென்னிமேல்
பிறையர்; கோயில்(ல்) அரதைப் பெரும்பாழியே.

3.041   3 st/nd Thirumurai   Song # 9   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
மறையோன், அரியும், அறியா அனலன்
நெறி ஏகம்பம் குறியால் தொழுமே!

3.045   3 st/nd Thirumurai   Song # 3   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
மறையன், மா முனிவன், மருவார் புரம்
இறையின் மாத்திரையில்(ல்) எரியூட்டினான்,
சிறைவண்டு ஆர் பொழில் சூழ் திரு ஆரூர் எம்
இறைவன்தான், எனை ஏன்றுகொளும் கொலோ?

3.058   3 st/nd Thirumurai   Song # 11   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
மறையினார் மல்கு காழித் தமிழ் ஞானசம்பந்தன், மன்னும்
நிறையின் ஆர் நீலநக்கன் நெடு மா நகர் என்று தொண்டர்
அறையும் ஊர் சாத்தமங்கை அயவந்திமேல் ஆய்ந்த பத்தும்,
முறைமையால் ஏத்த வல்லார், இமையோரிலும் முந்துவரே.

3.073   3 st/nd Thirumurai   Song # 6   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
மறையின் ஒலி கீதமொடு பாடுவன பூதம் அடி மருவி, விரவு ஆர்
பறையின் ஒலி பெருக நிகழ் நட்டம் அமர் பட்டிசுரம் மேய பனி கூர்
பிறையினொடு, மருவியது ஒர் சடையின் இடை, ஏற்ற புனல், தோற்றம் நிலை ஆம்-
இறைவன் அடி முறை முறையின் ஏத்துமவர் தீத்தொழில்கள் இல்லர், மிகவே.

3.089   3 st/nd Thirumurai   Song # 5   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
மறை கொளும் திறலினார் ஆகுதிப் புகைகள் வான் அண்ட மிண்டி
சிறை கொளும் புனல் அணி செழு மதி திகழ் மதில் கொச்சை தன்பால்,
உறைவு இடம் என மனம் அது கொளும், பிரமனார் சிரம் அறுத்த,
இறைவனது அடி இணை இறைஞ்சி வாழ், நெஞ்சமே!
அஞ்சல், நீயே!

3.108   3 st/nd Thirumurai   Song # 3   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
மறை வழக்கம் இலாத மா பாவிகள்
பறி தலைக் கையர், பாய் உடுப்பார்களை
முறிய, வாதுசெயத் திரு உள்ளமே?
மறி உலாம் கையில் மா மழுவாளனே!
ஞாலம் நின் புகழே மிக வேண்டும், தென்-
ஆலவாயில் உறையும் எம் ஆதியே!

4.022   4 st/nd Thirumurai   Song # 8   திருநாவுக்கரசர்   தேவாரம்  
மறையனார், மழு ஒன்று ஏந்தி, மணி நிலா எறிக்கும் சென்னி
இறைவனார், எம்பிரானார், ஏத்துவார் இடர்கள் தீர்ப்பார்
சிறை கொள் நீர்த் தில்லை தன்னுள்-திகழ்ந்த சிற்றம்பலத்தே
அறைகழல் ஆர்க்க நின்று அனல்-எரி ஆடும் ஆறே!

4.043   4 st/nd Thirumurai   Song # 1   திருநாவுக்கரசர்   தேவாரம்  
மறை அது பாடிப் பிச்சைக்கு என்று அகம் திரிந்து வாழ்வார்
பிறை அது, சடைமுடி(ம்)மேல்; பெய்வளையாள் தன்னோடும்
கறை அது கண்டம் கொண்டார்; காஞ்சி மா நகர் தன்னுள்ளால்
இறையவர்-பாடல் ஆடல் இலங்கு மேற்றளியனாரே.

4.060   4 st/nd Thirumurai   Song # 1   திருநாவுக்கரசர்   தேவாரம்  
மறை அணி நாவினானை, மறப்பு இலார் மனத்து உளானை,
கறை அணி கண்டன் தன்னை, கனல்-எரி ஆடினானை,
பிறை அணி சடையினானை, பெருவேளூர் பேணினானை,
நறை அணி மலர்கள் தூவி நாள்தொறும் வணங்குவேனே.

4.064   4 st/nd Thirumurai   Song # 5   திருநாவுக்கரசர்   தேவாரம்  
மறை இடைப் பொருளர்; மொட்டின் மலர் வழி வாசத் தேனர்
கறவு இடைப் பாலின் நெய்யர்; கரும்பினில் கட்டியாளா
பிறை இடைப் பாம்பு கொன்றைப் பிணையல் சேர் சடையுள் நீரர்
விறகு இடைத் தீயர்-வீழிமிழலையுள் விகிர்தனாரே.

5.005   5 st/nd Thirumurai   Song # 10   திருநாவுக்கரசர்   தேவாரம்  
மறையினானொடு மாலவன் காண்கிலா
நிறையும் நீர்மையுள் நின்று அருள்செய்தவன்
உறையும் மாண்பின் அண்ணாமலை கைதொழப்
பறையும், நாம் செய்த பாவங்கள் ஆனவே.

5.014   5 st/nd Thirumurai   Song # 2   திருநாவுக்கரசர்   தேவாரம்  
மறையின் நாள்மலர் கொண்டு அடி வானவர்-
முறையினால் முனிகள் வழிபாடு செய்
இறைவன், எம்பெருமான், இடைமருதினில்
உறையும் ஈசனை, உள்கும், என் உள்ளமே.

5.016   5 st/nd Thirumurai   Song # 1   திருநாவுக்கரசர்   தேவாரம்  
மறையும் ஓதுவர்; மான்மறிக் கையினர்;
கறை கொள் கண்டம் உடைய கபாலியார்;
துறையும் போகுவர்; தூய வெண் நீற்றினர்;
பிறையும் சூடுவர்-பேரெயிலாளரே.

5.018   5 st/nd Thirumurai   Song # 5   திருநாவுக்கரசர்   தேவாரம்  
மறை கொண்ட(ம்) மனத்தானை மனத்துளே
நிறை கொண்ட(ந்) நெஞ்சின் உள் உற வைம்மினோ!
கறைகண்டன்(ன்) உறையும் கடம்பந்துறை
சிறைகொண்ட(வ்) வினை தீரத் தொழுமினே!

5.096   5 st/nd Thirumurai   Song # 4   திருநாவுக்கரசர்   தேவாரம்  
மறையும் பாடுதிர்; மா தவர் மாலினுக்கு
உறையும் ஆயினை; கோள் அரவோடு ஒரு
பிறையும் சூடினை; என்பது அலால், பிறிது
இறையும் சொல் இலை-எந்தைபிரானிரே!

6.051   6 st/nd Thirumurai   Song # 7   திருநாவுக்கரசர்   தேவாரம்  
மறைக்காட்டார்; வலிவலத்தார்; வாய்மூர் மேயார்; வாழ்கொளி புத்தூரார்; மாகாளத்தார்;
கறை(க்)க்காட்டும் கண்டனார்; காபாலி(ய்)யார்; கற்குடியார்; விற்குடியார்; கானப்பேரார்;
பறை(க்)க்காட்டும் குழிவிழிகண் பல்பேய் சூழப் பழையனூர் ஆலங்காட்டு அடிகள் பண்டு ஓர்
மிறை(க்)க்காட்டும் கொடுங் காலன் வீடப் பாய்ந்தார் வீழிமிழலையே மேவினாரே.

6.066   6 st/nd Thirumurai   Song # 7   திருநாவுக்கரசர்   தேவாரம்  
மறையானை, மால் விடை ஒன்று ஊர்தியானை, மால்கடல் நஞ்சு உண்டானை, வானோர் தங்கள்-
இறையானை, என் பிறவித்துயர் தீர்ப்பானை,   இன்னமுதை, மன்னிய சீர் ஏகம்பத்தில்
உறைவானை, ஒருவரும் ஈங்கு அறியா வண்ணம் என் உள்ளத்துள்ளே ஒளித்து வைத்த
சிறையானை, திரு நாகேச்சுரத்து உளானை, சேராதார் நன்நெறிக்கண் சேராதாரே.

7.027   7 st/nd Thirumurai   Song # 2   சுந்தரமூர்த்தி சுவாமிகள்   திருப்பாட்டு  
மறையோர் வானவரும் தொழுது ஏத்தி வணங்க நின்ற
இறைவா! எம்பெருமான்! எனக்கு இன் அமுது ஆயவனே!
கறை ஆர் சோலைகள் சூழ் திருக்கற்குடி மன்னி நின்ற
அறவா! அங்கணனே! அடியேனையும், அஞ்சல்! என்னே!.

7.058   7 st/nd Thirumurai   Song # 9   சுந்தரமூர்த்தி சுவாமிகள்   திருப்பாட்டு  
மறை இடைத் துணிந்தவர் மனை இடை இருப்ப, வஞ்சனை செய்தவர் பொய்கையும் மாய,
துறை உறக் குளித்து உளது ஆக வைத்து உய்த்த உண்மை எனும் தக வின்மையை ஓரேன்;
பிறை உடைச் சடையனை, எங்கள் பிரானை, பேர் அருளாளனை, கார் இருள் போன்ற
கறை அணி மிடறு உடை அடிகளை, அடியேன் கழுமல வள நகர்க் கண்டு கொண்டேனே .

7.066   7 st/nd Thirumurai   Song # 1   சுந்தரமூர்த்தி சுவாமிகள்   திருப்பாட்டு  
மறையவன்(ன்) ஒரு மாணி வந்து அடைய, வாரம் ஆய், அவன் ஆர் உயிர் நிறுத்தக்
கறை கொள் வேல் உடைக் காலனைக் காலால் கடந்த காரணம் கண்டு கண்டு, அடியேன்,
இறைவன், எம்பெருமான் என்று எப்போதும் ஏத்தி ஏத்தி நின்று அஞ்சலி செய்து, உன்
அறை கொள் சேவடிக்கு அன்பொடும் அடைந்தேன்-ஆவடுதுறை ஆதி எம்மானே! .

7.075   7 st/nd Thirumurai   Song # 1   சுந்தரமூர்த்தி சுவாமிகள்   திருப்பாட்டு  
மறைகள் ஆயின நான்கும், மற்று உள பொருள்களும், எல்லாத்-
துறையும், தோத்திரத்து இறையும், தொன்மையும், நன்மையும், ஆய
அறையும் பூம்புனல் ஆனைக்கா உடை ஆதியை, நாளும்,
இறைவன் என்று அடி சேர்வார் எம்மையும் ஆள் உடையாரே.

7.085   7 st/nd Thirumurai   Song # 8   சுந்தரமூர்த்தி சுவாமிகள்   திருப்பாட்டு  
மறை முதல் வானவரும், மால், அயன், இந்திரனும்,
பிறை நுதல் மங்கையொடும், பேய்க்கணமும், சூழ,
குறள்படை அதனோடும், கூடலையாற்றூரில்
அறவன் இவ் வழி போந்த அதிசயம் அறியேனே!

7.101   7 st/nd Thirumurai   Song # 10   சுந்தரமூர்த்தி சுவாமிகள்   திருப்பாட்டு  
மறை அன்று ஆலின் கீழ் நால்வர்க்கு அளித்தீர்; களித்தார் மதில் மூன்றும்
இறையில் எரித்தீர்; ஏழ் உலகும் உடையார் இரந்து ஊண் இனிதேதான்?-
திறை கொண்டு அமரர் சிறந்து இறைஞ்சித் திருக்கோபுரத்து நெருக்க, மலர்ச்
சிறைவண்டு அறையும் தென்நாகைத் திருக்காரோணத்து இருப்பீரே!

8.101   8 st/nd Thirumurai   Song # 11   மாணிக்க வாசகர்    திருவாசகம்  
மறைந்திட மூடிய மாய இருளை,
அறம், பாவம், என்னும் அரும் கயிற்றால் கட்டி,
புறம் தோல் போர்த்து, எங்கும் புழு அழுக்கு மூடி,
மலம் சோரும் ஒன்பது வாயில் குடிலை
மலங்க, புலன் ஐந்தும் வஞ்சனையைச் செய்ய,

9.001   9 st/nd Thirumurai   Song # 11   திருமாளிகைத் தேவர்   திருவிசைப்பா  
மறைகளும் அமரர் கூட்டமும் மாட்டா
   தயன்திரு மாலொடு மயங்கி
முறைமுறை முறையிட் டோர்வரி யாயை
   மூர்க்கனேன் மொழிந்தபுன் மொழிகள்
அறைகழல் அரன்சீர் அறிவிலா வெறுமைச்
   சிறுமையிற் பொறுக்கும்அம் பலத்துள்
நிறைதரு கருணா நிலயமே உன்னைத்
   தொண்டனேன் நினையுமா நினையே.?

10.115   10 st/nd Thirumurai   Song # 10   திருமூலர்   திருமந்திரம்  
மறையோ ரவரே மறையவ ரானால்
மறையோர்தம் வேதாந்த வாய்மையில் தூய்மை
குறையோர்தல் மற்றுள்ள கோலா கலமென்
றறிவார் மறைதெரிந் தந்தண ராமே. 

10.402   10 st/nd Thirumurai   Song # 27   திருமூலர்   திருமந்திரம்  
மறையவன் ஆக மதித்த பிறவி
மறையவன் ஆக மதித்திடக் காண்பர்
மறையவன் அஞ்செழுத் துள்நிற்கப் பெற்ற
மறையவன் அஞ்செழுத் தாம்அவர் தாமே.

10.702   10 st/nd Thirumurai   Song # 10   திருமூலர்   திருமந்திரம்  
மறையவர் அற்சனை வண்படி கந்தான்
இறையவர் அற்சனை ஏய்பொன் னாகும்
குறைவில் வசியர்க்குக் கோமள மாகும்
துறையுடைச் சூத்திரர் சொல்வாண லிங்கமே.

11.004   11 st/nd Thirumurai   Song # 97   காரைக்கால் அம்மையார்    அற்புதத் திருவந்தாதி  
மறைத்துலகம் ஏழினிலும் வைத்தாயோ அன்றேல்
உறைப்போடும் உன்கைக்கொண் டாயோ - நிறைத்திட்
டுளைந்தெழுந்து நீயெரிப்ப மூவுலகும் உள்புக்
களைந்தெழுந்த செந்தீ யழல்.

11.034   11 st/nd Thirumurai   Song # 52   நம்பியாண்டார் நம்பி   ஆளுடையபிள்ளையார் திருவந்தாதி  
மறைமுழங் குங்குழ லார்கலி
காட்ட, வயற்கடைஞர்
பறைமுழங் கும்புக லித்தமி
ழாகரன் பற்றலர்போல
துறைமுழங் குங்கரி சீறி,
மடங்கள் சுடர்ப்பளிங்கின்
அறைமுழங் கும்வழி நீவரிற்
சால வரும்பழியே.

11.037   11 st/nd Thirumurai   Song # 39   நம்பியாண்டார் நம்பி   ஆளுடையபிள்ளையார் திருவுலாமாலை  
மறைபயில்வார் மன்னும் வியாகரணக் கேள்வித்
துறைபயில்வார் தொன்னூல் பயில்வார் முறைமையால்

11.038   11 st/nd Thirumurai   Song # 13   நம்பியாண்டார் நம்பி   ஆளுடையபிள்ளையார் திருக்கலம்பகம்  
மறையவர்க் கொருவன் நீ
மருவலர்க் குருமு நீ
நிறைகுணத் தொருவன் நீ
நிகரில்உத் தமனும் நீ

12.000   12 st/nd Thirumurai   Song # 180   சேக்கிழார்   திருமலைச் சருக்கம்  
மறைகளா யினமுன் போற்றி
மலர்ப்பதம் பற்றி நின்ற
இறைவனைத் தொடர்ந்து பற்றி 
யெழுதுமா ளோலை வாங்கி
அறைகழ லண்ணல் ஆளாய்
அந்தணர் செய்த லென்ன
முறையெனக் கீறி யிட்டார்
முறையிட்டான் முடிவி லாதான்.
12.020   12 st/nd Thirumurai   Song # 22   சேக்கிழார்   தில்லை வாழ் அந்தணர் சருக்கம்  
மறையவ னாகி நின்ற
மலைமகள் கேள்வன் தானும்
உறையுளிற் புக்கு நின்ற
ஒருபெருந் தொண்டர் கேட்ப
இறையிலிங் கெய்தப் புக்காய்
தாழ்த்ததென் னென்ன வந்து
கறைமறை மிடற்றி னானைக்
கைதொழு துரைக்க லுற்றார்.
12.030   12 st/nd Thirumurai   Song # 16   சேக்கிழார்   தில்லை வாழ் அந்தணர் சருக்கம்  
மறைமுனி யஞ்சி னான்போல்
மாதினைப் பார்க்க மாதும்
இறைவனே அஞ்ச வேண்டா
இயற்பகை வெல்லு மென்ன
அறைகழ லண்ணல் கேளா
அடியனே னவரை யெல்லாம்
தறையிடைப் படுத்து கின்றேன்
தளர்ந்தருள் செய்யே லென்று.
12.050   12 st/nd Thirumurai   Song # 16   சேக்கிழார்   தில்லை வாழ் அந்தணர் சருக்கம்  
மறைத்தவன் புகுந்த போதே
மனம்அங்கு வைத்த தத்தன்
இறைப்பொழு தின்கட் கூடி
வாளினால் எறிய லுற்றான்
நிறைத்தசெங் குருதி சோர
வீழ்கின்றார் நீண்ட கையால்
தறைப்படும் அளவில் தத்தா
நமரெனத் தடுத்து வீழ்ந்தார்.
12.180   12 st/nd Thirumurai   Song # 31   சேக்கிழார்   மும்மையால் உலகாண்ட சருக்கம்  
மறையவர்கள் மொழிந்ததற்பின்
தென்றிசையின் மதிற்புறத்துப்
பிறையுரிஞ்சும் திருவாயில்
முன்னாகப் பிஞ்ஞகர்தம்
நிறையருளால் மறையவர்கள்
நெருப்பமைத்த குழியெய்தி
இறையவர்தாள் மனங்கொண்டே
எரிசூழ வலங்கொண்டார்.
12.190   12 st/nd Thirumurai   Song # 76   சேக்கிழார்   மும்மையால் உலகாண்ட சருக்கம்  
மறைக ளால்துதித் தருந்தவம் புரிந்து
மாறி லாநிய மந்தலை நின்று
முறைமை யால்வரும் பூசனை செய்ய
முனிவர் வானவர் முதலுயி ரெல்லாம்
நிறையும் அன்பினால் அர்ச்சனை செய்ய
நீடு காமங்கள் அவரவர்க் கருளி
இறைவர் தாமகிழ்ந் தருளிய தளிகள்
எண்ணி றந்தஅத் திருநக ரெல்லை.
12.200   12 st/nd Thirumurai   Song # 43   சேக்கிழார்   மும்மையால் உலகாண்ட சருக்கம்  
மறையோர் மொழியக் கேட்டஞ்சிச்
சிறுமா ணவகன் செய்தஇது
இறையும் நான்முன் பறிந்திலேன்
இதற்கு முன்பு புகுந்ததனை
நிறையும் பெருமை அந்தணர்காள்
பொறுக்க வேண்டும் நீங்களெனக்
குறைகொண் டிறைஞ்சி இனிப்புகுதில்
குற்றம் எனதே யாம்என்றான்.
12.280   12 st/nd Thirumurai   Song # 61   சேக்கிழார்   வம்பறா வரிவண்டுச் சருக்கம்  
மறைமுனிவர் மூழ்குதலும்
மற்றவர்தம் மைக்காணா
திறைதரியார் எனும்நிலைமை
தலைக்கீடா ஈசர்கழல்
முறைபுரிந்த முன்னுணர்வு
மூளஅழத் தொடங்கினார்
நிறைபுனல்வா விக்கரையில்
நின்றருளும் பிள்ளையார்.
12.280   12 st/nd Thirumurai   Song # 82   சேக்கிழார்   வம்பறா வரிவண்டுச் சருக்கம்  
மறைகள் கிளர்ந்தொலி வளர
முழங்கிட வானோர்தம்
நிறைமுடி உந்திய நிறைமணி
சிந்திட நீள்வானத்
துறையென வந்துல கடைய
நிறைந்திட ஓவாமெய்ப்
பொறைபெரு குந்தவ முனிவர்
எனுங்கடல் புடைசூழ.
12.280   12 st/nd Thirumurai   Song # 92   சேக்கிழார்   வம்பறா வரிவண்டுச் சருக்கம்  
மறைவளர் திருவே வைதிக
நிலையே வளர்ஞானப்
பொறையணி முகிலே புகலியர்
புகலே பொருபொன்னித்
துறைபெறு மணியே சுருதியின்
ஒளியே வெளியேவந்
திறையவன் உமையா ளுடன்அருள்
தரஎய் தினையென்பார்.
12.280   12 st/nd Thirumurai   Song # 188   சேக்கிழார்   வம்பறா வரிவண்டுச் சருக்கம்  
மறைய னைத்தும் ஒருவடி வாமென
நிறைம திப்பிள்ளை நீள்நிலஞ் சேர்ந்தெனத்
துறைய லைக்கங்கை சூடும் அரத்துறை
இறைவ ரைத்தொழு வான்விரைந் தேகினார்.
12.280   12 st/nd Thirumurai   Song # 233   சேக்கிழார்   வம்பறா வரிவண்டுச் சருக்கம்  
மறைமு ழங்கின தழங்கின
வண்தமிழ் வயிரின்
குறைந ரன்றன முரன்றன
வளைக்குலங் காளம்
முறையி யம்பின இயம்பல
ஒலித்தன முரசப்
பொறை கறங்கின பிறங்கின
போற்றிசை அரவம்.
12.280   12 st/nd Thirumurai   Song # 262   சேக்கிழார்   வம்பறா வரிவண்டுச் சருக்கம்  
மறையவர்கள் அடிபோற்றத் தந்தை யாரும்
மருங்கணைய மாளிகையில்அணையும் போதில்
நிறைகுடமும் மணிவிளக்கும் முதலா யுள்ள
நீதிமறைக் குலமகளிர் நெருங்கி யேந்த
இறைவர்திரு நீற்றுக்காப் பேந்தி முன்சென்
றீன்றதா யார்சாத்தி இறைஞ்சி ஏத்த
முறைமையவர்க் கருள்செய்து மடத்தில் புக்கார்
முதல்வர்பால் மணிமுத்தின் சிவிகை பெற்றார்.
12.280   12 st/nd Thirumurai   Song # 378   சேக்கிழார்   வம்பறா வரிவண்டுச் சருக்கம்  
மறை விளங்கும்அப் பதியினில்
மணிகண்டர் பொற்றாள்
நிறையும் அன்பொடு வணங்கியே
நிகழ்பவர் நிலவும்
பிறைய ணிந்தவர் அருள்பெறப்
பிரசமென் மலர்வண்
டறைந றும்பொழில் திருவலஞ்
சுழியில்வந் தணைந்தார்.
12.280   12 st/nd Thirumurai   Song # 860   சேக்கிழார்   வம்பறா வரிவண்டுச் சருக்கம்  
மறையவர் வேள்வி செய்ய
வானவர் மாரி நல்க
இறைவன் நன்னெறியின் ஓங்க
இகத்தினில் அவனி இன்பம்
குறைவில தெனினும் கூற்றை
உதைத்தவர் நாமம் கூறி
நிறைகடற் பிறவித் துன்பம்
நீங்கிடப் பெற்ற தன்றே.
12.280   12 st/nd Thirumurai   Song # 1159   சேக்கிழார்   வம்பறா வரிவண்டுச் சருக்கம்  
மறைவாழ அந்தணர்தம்
வாய்மையொழுக் கம்பெருகும்
துறைவாழச் சுற்றத்தார்
தமக்கருளி உடன்படலும்
பிறைவாழுந் திருமுடியில்
பெரும்புனலோ டரவணிந்த
கறைவாழுங் கண்டத்தார்
தமைத்தொழுது மனங்களித்தார்.
12.280   12 st/nd Thirumurai   Song # 1227   சேக்கிழார்   வம்பறா வரிவண்டுச் சருக்கம்  
மறைக்குல மனையின் வாழ்க்கை
மங்கல மகளி ரெல்லாம்
நிறைத்தநீர்ப் பொற்கு டங்கள்
நிறைமணி விளக்குத் தூபம்
நறைக்குல மலர்சூழ் மாலை
நகுசுடர் முளைப்பொற் பாண்டில்
உறைப்பொலி கலவை யேந்தி
உடன்எதி ரேற்று நின்றார்.
12.280   12 st/nd Thirumurai   Song # 1239   சேக்கிழார்   வம்பறா வரிவண்டுச் சருக்கம்  
மறையொலி பொங்கி யோங்க
மங்கல வாழ்த்து மல்க
நிறைவளைச் செங்கை பற்ற
நேரிழை யவர்முன் அந்தப்
பொறையணி முந்நூல் மார்பர்
புகரில்வெண் பொரிகை அட்டி
இறைவரை ஏத்தும் வேலை
எரிவலங் கொள்ள வேண்டி.
12.290   12 st/nd Thirumurai   Song # 76   சேக்கிழார்   வம்பறா வரிவண்டுச் சருக்கம்  
மறைக ளாய நான்கும்என
மலர்ந்த செஞ்சொல் தமிழ்ப்பதிகம்
நிறையுங் காத லுடனெடுத்து
நிலவு மன்பர் தமைநோக்கி
இறையும் பணிவா ரெம்மையுமா
ளுடையா ரென்றென் றேத்துவார்
உறையூர்ச் சோழன் மணியாரஞ்
சாத்துந் திறத்தை யுணர்ந்தருளி.
12.490   12 st/nd Thirumurai   Song # 1   சேக்கிழார்   கறைக் கண்டன் சருக்கம்  
மறையாளர் திருக்கடவூர்
வந்துதித்து வண்தமிழின்
துறையான பயன்தெரிந்து
சொல்விளங்கிப் பொருள்மறையக்
குறையாத தமிழ்க்கோவை
தம்பெயரால் குலவும்வகை
முறையாலே தொகுத்தமைத்து
மூவேந்தர் பால்பயில்வார்.
12.720   12 st/nd Thirumurai   Song # 5   சேக்கிழார்   வெள்ளானைச் சருக்கம்  
மறையோர் வாழும் அப்பதியின்
மாட வீதி மருங்கணைவார்
நிறையுஞ் செல்வத் தெதிர்மனைகள்
இரண்டில் நிகழ்மங் கலஇயங்கள்
அறையும் ஒலியொன் றினில்ஒன்றில்
அழுகை ஒலிவந் தெழுதலும் ஆங்கு
உறையும் மறையோர் களைஇரண்டும்
உடனே நிகழ்வ தென்னென்றார்.

This page was last modified on Thu, 09 May 2024 05:33:06 +0000
          send corrections and suggestions to admin-at-sivaya.org

thirumurai all list