சிவய.திருக்கூட்டம்
sivaya.org
Please set your language preference
by clicking below languages link
Search this site with
words in any language e.g. पोऱ्‌ऱि
song/pathigam/paasuram numbers: e.g. 7.039

This page in Tamil   Hindi/Sanskrit   Telugu   Malayalam   Bengali   Kannada   English   ITRANS    Marati  Gujarathi   Oriya   Singala   Tibetian   Thai   Japanese   Urdu   Cyrillic/Russian   Spanish   Hebrew  
Selected thirumurai      thirumurai Thalangal      All thirumurai Songs     

Thirumurai   1   2   3   4   5   6   7   8   9   10   11   12

Pathigam first Letter :                                          
Paadal first letter:     (  .                                                
Search: Filter By: Order By:
திருமுறை 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12 இருந்து பாடல் சொல் மாட
மாடே     மாடம்     மாடு     மாட     மாட்டிய     மாடத்     மாட்டும்     மாடுபோ     மாடலை     மாடெங்கும்     மாடுற்றணை     மாடநிரை     மாடுபுனற்     மாடுள     மாட்டூர்,     மாட்டினேன்,     மாடத்து     மாட்டுப்     மாட்டைத்     மாடு,     மாடும்,     மாடஞ்செய்     மாட்டியன்    
1.024   1 st/nd Thirumurai   Song # 5   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
மாடே ஓதம் எறிய, வயல் செந்நெல்
காடு ஏறிச் சங்கு ஈனும் காழியார்,
வாடா மலராள் பங்கர் அவர்போல் ஆம்
ஏடார் புரம் மூன்று எரித்த இறைவரே.

1.027   1 st/nd Thirumurai   Song # 11   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
மாடம் மல்கு மதில் சூழ் காழி மன்,
சேடர் செல்வர் உறையும் திருப் புன்கூர்
நாட வல்ல ஞானசம்பந்தன்,
பாடல்பத்தும் பரவி வாழ்மினே!

1.031   1 st/nd Thirumurai   Song # 7   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
மாடு ஆர் மலர்க்கொன்றை வளர்சடை வைத்து,
தோடு ஆர் குழைதான் ஒரு காதில் இலங்க,
கூடார் மதில் எய்து, குரங்கணில் முட்டத்து,
ஆடு ஆர் அரவம் அரை ஆர்த்து, அமர்வானே.

1.064   1 st/nd Thirumurai   Song # 8   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
மாட வீதி மன் இலங்கை மன்னனை மாண்பு அழித்து,
கூட வென்றிவாள் கொடுத்து ஆள் கொள்கையினார்க்கு இடம் ஆம்
பாடலோடும் ஆடல் ஓங்கி, பல்மணி பொன் கொழித்து,
ஓடி நீரால் வைகை சூழும் உயர் திருப்பூவணமே.

1.099   1 st/nd Thirumurai   Song # 11   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
மாட வீதி வருபுனல் காழியார் மன்னன்,
கோடல் ஈன்று கொழு முனை கூம்பும் குற்றாலம்
நாட வல்ல, நல்-தமிழ் ஞானசம்பந்தன்,
பாடல்பத்தும் பாட, நம் பாவம் பறையுமே.

1.124   1 st/nd Thirumurai   Song # 4   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
மாடு அமர் சனம் மகிழ்தரு மனம் உடையவர்
காடு அமர் கழுதுகள் அவை முழவொடும் இசை
பாடலின் நவில்பவர் மிகுதரும் உலகினில்
நீடு அமர் மிழலையை நினைய வல்லவரே.

2.007   2 st/nd Thirumurai   Song # 8   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
மாடம் நீடு கொடி மன்னிய தென் இலங்கைக்கு மன்
வாடி ஊட வரையால் அடர்த்து அன்று அருள்செய்தவர்,
வேடவேடர், திரு வாஞ்சியம் மேவிய வேந்தரைப்
பாட நீடு மனத்தார் வினை பற்றுஅறுப்பார்களே

2.039   2 st/nd Thirumurai   Song # 7   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
மாட்டூர், மடப் பாச்சிலாச்சிரமம்,
முண்டீச்சரம், வாதவூர், வாரணாசி,
காட்டூர், கடம்பூர், படம்பக்கம் கொட்டும்
கடல் ஒற்றியூர், மற்று உறையூர் அவையும்,
கோட்டூர், திரு ஆமாத்தூர், கோழம்பமும்,
கொதுங்கோவலூர், திருக்குணவாயில்,

2.107   2 st/nd Thirumurai   Song # 11   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
மாடு எலாம் மணமுரசு எனக் கடலினது ஒலி கவர்
மாதோட்டத்து
ஆடல் ஏறு உடை அண்ணல் கேதீச்சுரத்து அடிகளை,
அணி காழி
நாடு உளார்க்கு இறை ஞானசம்பந்தன் சொல் நவின்று எழு
பாமாலைப்
பாடல் ஆயின பாடுமின், பத்தர்காள்! பரகதி பெறல் ஆமே.

2.109   2 st/nd Thirumurai   Song # 7   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
மாட மாளிகை, கோபுரம், கூடங்கள், மணி அரங்கு, அணி
சாலை,
பாடு சூழ் மதில் பைம்பொன் செய் மண்டபம், பரிசொடு
பயில்வு ஆய
கூடு பூம்பொழில் சூழ்தரு கோட்டூர் நற்கொழுந்தே! என்று
எழுவார்கள்
கேடு அது ஒன்று இலர் ஆகி, நல் உலகினில் கெழுவுவர்;
புகழாலே.

3.088   3 st/nd Thirumurai   Song # 4   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
மாடம் அது என வளர் மதில் அவை எரி செய்வர், விரவு சீர்ப்
பீடு என அருமறை உரை செய்வர், பெரிய பல் சரிதைகள்
பாடலர், ஆடிய சுடலையில் இடம் உற நடம் நவில்
வேடம் அது உடையவர், வியல் நகர் அது சொலில் விளமரே.

4.078   4 st/nd Thirumurai   Song # 3   திருநாவுக்கரசர்   தேவாரம்  
மாட்டினேன், மனத்தை முன்னே; மறுமையை உணர மாட்டேன்;
மூட்டி, நான், முன்னை நாளே முதல்வனை வணங்க மாட்டேன்;
பாட்டு இல் நாய் போல நின்று பற்று அது ஆம் பாவம் தன்னை;
ஈட்டினேன்; களைய மாட்டேன் என் செய்வான் தோன்றினேனே!

5.012   5 st/nd Thirumurai   Song # 4   திருநாவுக்கரசர்   தேவாரம்  
மாடத்து ஆடும் மனத்து உடன் வைத்தவர்,
கோடத்தார், குருக்கேத்திரத்தார் பலர்,
பாடத்தார், பழிப்பார் பழிப்பு இல்லது ஓர்
வேடத்தார், தொழும் வீழிமிழலையே.

5.070   5 st/nd Thirumurai   Song # 3   திருநாவுக்கரசர்   தேவாரம்  
மாடு தான் அது இல் எனின், மானுடர்
பாடுதான் செல்வார் இல்லை; பல்மாலையால்
கூட நீர் சென்று, கொண்டீச்சுரவனைப்
பாடுமின்! பரலோகத்து இருத்துமே.

5.077   5 st/nd Thirumurai   Song # 4   திருநாவுக்கரசர்   தேவாரம்  
மாடு தேடி, மயக்கினில் வீழ்ந்து, நீர்,
ஓடி எய்த்தும், பயன் இலை; ஊமர்காள்!
சேடர் வாழ் சேறைச் செந்நெறி மேவிய
ஆடலான் தன் அடி அடைந்து உய்ம்மினே!

5.084   5 st/nd Thirumurai   Song # 1   திருநாவுக்கரசர்   தேவாரம்  
மாட்டுப் பள்ளி மகிழ்ந்து உறைவீர்க்கு எலாம்
கேட்டுப் பள்ளி கண்டீர்! கெடுவீர்; இது
ஓட்டுப் பள்ளி விட்டு ஓடல் உறாமுனம்,
காட்டுப்பள்ளி உளான் கழல் சேர்மினே!

5.084   5 st/nd Thirumurai   Song # 2   திருநாவுக்கரசர்   தேவாரம்  
மாட்டைத் தேடி மகிழ்ந்து, நீர், நும்முளே
நாட்டுப் பொய் எலாம் பேசிடும் நாண் இலீர்!
கூட்டை விட்டு உயிர் போவதன் முன்னமே,
காட்டுப்பள்ளி உளான் கழல் சேர்மினே!

7.006   7 st/nd Thirumurai   Song # 9   சுந்தரமூர்த்தி சுவாமிகள்   திருப்பாட்டு  
மாடம் காட்டும் கச்சி உள்ளீர், நிச்சயத்தால் நினைப்பு உளார் பால்;
பாடும் காட்டில் ஆடல் உள்ளீர்; பரவும் வண்ணம் எங்ஙனே தான்?
நாடும் காட்டில், அயனும் மாலும் நணுகா வண்ணம் அனலும் ஆய
வேடம் காட்டி, திரிவது என்னே? வேலை சூழ் வெண்காடனீரே! .

7.053   7 st/nd Thirumurai   Song # 10   சுந்தரமூர்த்தி சுவாமிகள்   திருப்பாட்டு  
மாடம் மல்கு கடவூரில் மறையோர் ஏத்தும் மயானத்து,
பீடை தீர அடியாருக்கு அருளும் பெருமான் அடிகள் சீர்
நாடி, நாவல் ஆரூரன் நம்பி சொன்ன நல்-தமிழ்கள்
பாடும் அடியார், கேட்பார் மேல், பாவம் ஆன பறையுமே.

7.087   7 st/nd Thirumurai   Song # 1   சுந்தரமூர்த்தி சுவாமிகள்   திருப்பாட்டு  
மாட மாளிகை கோபுரத்தொடு மண்டபம் வளரும் வளர் பொழில்
பாடல் வண்டு அறையும் பழனத் திருப் பனையூர்,
தோடு பெய்து, ஒரு காதினில் குழை தூங்க, தொண்டர்கள் துள்ளிப் பாட, நின்று
ஆடும் ஆறு வல்லார் அவரே அழகியரே.

8.109   8 st/nd Thirumurai   Song # 11   மாணிக்க வாசகர்    திருவாசகம்  
மாடு, நகை வாள் நிலா எறிப்ப, வாய் திறந்து அம் பவளம் துடிப்ப,
பாடுமின், நம் தம்மை ஆண்ட ஆறும், பணி கொண்ட வண்ணமும்; பாடிப் பாடித்
தேடுமின், எம்பெருமானை; தேடி, சித்தம் களிப்ப, திகைத்து, தேறி,
ஆடுமின்; அம்பலத்து ஆடினானுக்கு, ஆட, பொற்சுண்ணம் இடித்தும், நாமே!

8.141   8 st/nd Thirumurai   Song # 5   மாணிக்க வாசகர்    திருவாசகம்  
மாடும், சுற்றமும், மற்று உள போகமும், மங்கையர் தம்மோடும்
கூடி, அங்குள குணங்களால் ஏறுண்டு, குலாவியே திரிவேனை,
வீடு தந்து, என் தன் வெம் தொழில் வீட்டிட, மென் மலர்க் கழல் காட்டி,
ஆடுவித்து, எனது அகம் புகுந்து, ஆண்டது ஓர் அற்புதம் அறியேனே!

8.213   8 st/nd Thirumurai   Song # 14   மாணிக்க வாசகர்    திருச்சிற்றம்பலக் கோவையார்  
மாடஞ்செய் பொன்னக ரும்நிக
   ரில்லையிம் மாதர்க்கென்னப்
பீடஞ்செய் தாமரை யோன்பெற்ற
   பிள்ளையை யுள்ளலரைக்
கீடஞ்செய் தென்பிறப் புக்கெடத்
   தில்லைநின் றோன்கயிலைக்
கூடஞ்செய் சாரற் கொடிச்சியென்
   றோநின்று கூறுவதே.

8.218   8 st/nd Thirumurai   Song # 19   மாணிக்க வாசகர்    திருச்சிற்றம்பலக் கோவையார்  
மாட்டியன் றேயெம் வயிற்பெரு
   நாணினி மாக்குடிமா
சூட்டியன் றேநிற்ப தோடிய
   வாறிவ ளுள்ளமெல்லாங்
காட்டியன் றேநின்ற தில்லைத்தொல்
   லோனைக்கல் லாதவர்போல்
வாட்டியன் றேர்குழ லார்மொழி
   யாதன வாய்திறந்தே.

10.404   10 st/nd Thirumurai   Song # 13   திருமூலர்   திருமந்திரம்  
மாட்டிய குண்டத்தி னுள்எழு வேதத்துள்
ஆட்டி கால்ஒன் றிரண்டும் அலர்ந்திடும்
வாட்டிய கையிரண் டொன்று பதைத்தெழ
நாட்டுஞ் சுரர்இவர் நல்லொளி யானே.

10.840   10 st/nd Thirumurai   Song # 2   திருமூலர்   திருமந்திரம்  
மாடத் துளான் அலன் மண்டபத் தான்அலன்
கூடத் துளான்அலன் கோயிலுள் ளான் அலன்
வேடத் துளான்அல்லன் வேட்கைவிட் டார்நெஞ்சில்
மூடத்து ளேநின்று முத்திதந் தானே.

11.008   11 st/nd Thirumurai   Song # 62   சேரமான் பெருமாள் நாயனார்   திருக்கயிலாய ஞான உலா  
மாட நடுவில் மலர்ஆர் அமளியே
கூடிய போர்க்கள மாக்குறித்துக் கேடில்

11.023   11 st/nd Thirumurai   Song # 58   பரணதேவ நாயனார்   சிவபெருமான் திருவந்தாதி  
மாட்டும் பொருளை உருவு வருகாலம்
வாட்டும் பொருளை மறையானை மாட்டும்
உருவானைச் சோதி உமைபங்கார் பங்காம்
உருவானைச் சோதி உரை.

12.000   12 st/nd Thirumurai   Song # 73   சேக்கிழார்   திருமலைச் சருக்கம்  
மாடுபோ தகங்கள் எங்கும்
வண்டுபோ தகங்கள் எங்கும்
பாடுமம் மனைகள் எங்கும்
பயிலுமம் மனைகள் எங்கும்
நீடுகே தனங்கள் எங்கும்
நிதிநிகே தனங்கள் எங்குந்
தோடுசூழ் மாலை எங்குந்
துணைவர்சூழ் மாலை எங்கும்.
12.030   12 st/nd Thirumurai   Song # 24   சேக்கிழார்   தில்லை வாழ் அந்தணர் சருக்கம்  
மாடலை குருதி பொங்க
மடிந்தசெங் களத்தின் நின்றும்
ஆடுறு செயலின் வந்த
கிளைஞரோ டணைந்தார் தம்மில்
ஓடினார் உள்ளார் உய்ந்தார்
ஒழிந்தவர் ஒழிந்தே மாண்டார்
நீடிய வாளுந் தாமும்
நின்றவர் தாமே நின்றார்.
12.140   12 st/nd Thirumurai   Song # 1   சேக்கிழார்   இலை மலிந்த சருக்கம்  
மாடு விரைப்பொலி சோலையின் வான்மதி வந்தேறச்
சூடு பரப்பிய பண்ணை வரம்பு சுரும்பேற
ஈடு பெருக்கிய போர்களின் மேகம் இளைத்தேற
நீடு வளத்தது மேன்மழ நாடெனும் நீர்நாடு.

12.150   12 st/nd Thirumurai   Song # 43   சேக்கிழார்   மும்மையால் உலகாண்ட சருக்கம்  
மாடெங்கும் நெருங்கிய மங்கல
ஓசை மல்கச்
சூடுஞ்சடை மௌலி யணிந்தவர்
தொல்லை ஏனம்
தேடுங்கழ லார்திரு வாலவாய்
சென்று தாழ்ந்து
நீடுங்களிற் றின்மிசை நீள்மறு
கூடு போந்தார்.
12.210   12 st/nd Thirumurai   Song # 113   சேக்கிழார்   திருநின்ற சருக்கம்  
மாடுற்றணை இவுளிக்குலம்
மறியச்செறி வயிரக்
கோடுற்றிரு பிளவிட்டறு
குறைகைக்கொடு முறியச்
சாடுற்றிடு மதில்தெற்றிகள்
சரியப்புடை அணிசெற்
றாடுற்றகல் வெளியுற்றதவ்
வடர்கைக்குல வரையே.
12.210   12 st/nd Thirumurai   Song # 251   சேக்கிழார்   திருநின்ற சருக்கம்  
மாட வீதி அலங்கரித்து
மறையோர் வாயின் மணிவிளக்கு
நீடு கதலி தழைப்பூகம்
நிரைத்து நிறைபொற் குடமெடுத்துப்
பீடு பெருகும் வாகீசர்
பிள்ளை யாரும் தொண்டர்களும்
கூட மகிழ்ந்து விண்ணிழிந்த
கோயில் வாயில் சென்றணைந்தார்.
12.210   12 st/nd Thirumurai   Song # 281   சேக்கிழார்   திருநின்ற சருக்கம்  
மாட நீடு திருப்புகலி
மன்னர் அவர்க்கு மாலயனும்
நேடி இன்னங் காணாதார்
நேரே காட்சி கொடுத்தருள
ஆடல் கண்டு பணிந்தேத்தி
அரசுங் காணக் காட்டுதலும்
பாட அடியார் என்றெடுத்துப்
பரமர் தம்மைப் பாடினார்.

12.210   12 st/nd Thirumurai   Song # 319   சேக்கிழார்   திருநின்ற சருக்கம்  
மாட வீதி மருங்கெல்லாம்
மணிவா யில்களில் தோரணங்கள்
நீடு கதலி யுடன்கமுகு
நிரைத்து நிறைபொற் குடந்தீபம்
தோடு குலவு மலர்மாலை
சூழ்ந்த வாசப் பந்தர்களும்
ஆடு கொடியு முடனெடுத்தங்
கணிநீள் காஞ்சி அலங்கரித்தார்.
12.280   12 st/nd Thirumurai   Song # 300   சேக்கிழார்   வம்பறா வரிவண்டுச் சருக்கம்  
மாடநிரை மணிவீதித் திருவையாற்
றினில்வாழு மல்கு தொண்டர்
நாடுய்யப் புகலிவரு ஞானபோ
னகர்வந்து நண்ணி னாரென்
றாடலொடு பாடலறா அணிமூதூர்
அடையஅலங் காரஞ் செய்து
நீடுமனக் களிப்பினொடும் எதிர்கொள்ள
நித்திலயா னத்து நீங்கி.
12.280   12 st/nd Thirumurai   Song # 510   சேக்கிழார்   வம்பறா வரிவண்டுச் சருக்கம்  
மாடு சூழ்திரு மாளிகை
வலங்கொண்டு வணங்கிக்
கூடு காதலிற் கோபுரம்
பணிந்துகை குவித்துத்
தேடு மாலயற் கரியராய்ச்
செழுமணிப் புற்றில்
நீடு வார்முன்பு நிலமுறப்
பலமுறை பணிந்தார்.
12.280   12 st/nd Thirumurai   Song # 949   சேக்கிழார்   வம்பறா வரிவண்டுச் சருக்கம்  
மாடுபுனற் பொன்னி
இழிந்து வடகரையில்
நீடுதிரு நெய்த்தானம்
ஐயாறு நேர்ந்திறைஞ்சிப்
பாடுதமிழ் மாலைகளும்
சாத்திப் பரவிப்போய்
ஆடல் புரிந்தார்திருப்
பழனம் சென்றணைந்தார்.
12.280   12 st/nd Thirumurai   Song # 1084   சேக்கிழார்   வம்பறா வரிவண்டுச் சருக்கம்  
மாடம் ஓங்கிய மயிலைமா
நகருளார் மற்றும்
நாடு வாழ்பவர் நன்றியில்
சமயத்தி னுள்ளோர்
மாடு சூழ்ந்துகாண் பதற்குவந்
தெய்தியே மலிய
நீடு தேவர்கள் ஏனையோர்
விசும்பிடை நெருங்க.
12.290   12 st/nd Thirumurai   Song # 111   சேக்கிழார்   வம்பறா வரிவண்டுச் சருக்கம்  
மாடுள பதிகள் சென்று
வணங்கிப்போய் மங்கை பாகர்
நீடிய கடம்பூர் போற்றி
நிறைந்தஆ னந்தக் கூத்தர்
ஆடிய தில்லை மூதூர்
அணைந்தணி வாயில் புக்குச்
சேடுயர் மாட மன்னுஞ்
செழுந்திரு வீதி சார்ந்தார்.

This page was last modified on Thu, 09 May 2024 05:33:06 +0000
          send corrections and suggestions to admin-at-sivaya.org

thirumurai all list