சிவய.திருக்கூட்டம்
sivaya.org
Please set your language preference by clicking language links.
Search this site internally
Or with Google

This page in Tamil   Hindi/Sanskrit   Telugu   Malayalam   Bengali   Kannada   English   ITRANS    Marati  Gujarathi   Oriya   Singala   Tibetian   Thai   Japanese   Urdu   Cyrillic/Russian   Spanish   Hebrew   Korean  
Selected thirumurai      thirumurai Thalangal      All thirumurai Songs     

Thirumurai   1   2   3   4   5   6   7   8   9   10   11   12

Pathigam first Letter :                                          
Paadal first letter:         (  .                                                
Search: Filter By: Order By:
திருமுறை 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12 இருந்து பாடல் சொல் வளர்
வளர்     வளர்கின்ற     வளர்பிறை     வளர்ந்த     வளர்தரு     வளர்பொற்     வளர்பருவ     வளர்மதிக்    
1.100   1 st/nd Thirumurai   Song # 4   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
வளர் பூங்கோங்கம் மாதவியோடு மல்லிகைக்
குளிர்பூஞ்சாரல் வண்டு அறை சோலைப் பரங்குன்றம்,
தளிர் போல் மேனித் தையல் நல்லாளோடு ஒரு பாகம்,
நளிர் பூங்கொன்றை சூடினன் மேய நகர்தானே.

4.003   4 st/nd Thirumurai   Song # 11   திருநாவுக்கரசர்   தேவாரம்  
வளர்மதிக் கண்ணியினானை வார் குழலாளொடும் பாடி,
களவு படாதது ஒர் காலம் காண்பான் கடைக் கண் நிற்கின்றேன்,
அளவு படாதது ஒர் அன்போடு ஐயாறு அடைகின்ற போது,
இள மண நாகு தழுவி ஏறு வருவன கண்டேன்;-
கண்டேன், அவர் திருப்பாதம்; கண்டு அறியாதன கண்டேன்!

4.008   4 st/nd Thirumurai   Song # 4   திருநாவுக்கரசர்   தேவாரம்  
வளர் பொறி ஆமை புல்கி, வளர் கோதை வைகி, வடி தோலும் நூலும் வளர,
கிளர் பொறி நாகம் ஒன்று மிளிர்கின்ற மார்பர்; கிளர் காடும், நாடும், மகிழ்வர்;
நளிர் பொறி மஞ்ஞை அன்ன தளிர் போன்ற சாயலவள் தோன்று வாய்மை பெருகி,
குளிர் பொறி வண்டு பாடு குழலாள் ஒருத்தி உளள் போல், குலாவி உடனே.

8.106   8 st/nd Thirumurai   Song # 4   மாணிக்க வாசகர்    திருவாசகம்  
வளர்கின்ற நின் கருணைக் கையில் வாங்கவும் நீங்கி, இப்பால்
மிளிர்கின்ற என்னை விடுதி கண்டாய்? வெண் மதிக் கொழுந்து ஒன்று
ஒளிர்கின்ற நீள் முடி உத்தரகோசமங்கைக்கு அரசே,
தெளிகின்ற பொன்னும், மின்னும், அன்ன தோற்றச் செழும் சுடரே.

10.321   10 st/nd Thirumurai   Song # 26   திருமூலர்   திருமந்திரம்  
வளர்கின்ற ஆதித்தன் தன்கலை ஆறும்
தளர்கின்ற சந்திரன் தன்கலை ஆறும்
மலர்ந்தெழு பன்னிரண் டங்குலம் ஓடி
அலர்ந்து விழுந்தமை யாரறி வாரே. 

10.718   10 st/nd Thirumurai   Song # 1   திருமூலர்   திருமந்திரம்  
வளர்பிறை யில்தேவர் தம்பாலின் மன்னி
உளரொளிப் பானுவி னுள்ளே யொடுங்கித்
தளர்வில் பிதிர்பதம் தங்கிச் சசியுள்
உளதுறும் யோகி உடல் விட்டால் தானே.

11.010   11 st/nd Thirumurai   Song # 67   நக்கீரதேவ நாயனார்   திருஈங்கோய்மலை எழுபது  
வளர்ந்த இளங்கன்னி மாங்கொம்பின் கொங்கை
அளைந்து வடுப்படுப்பான் வேண்டி இளந்தென்றல்
எல்லிப் புகநுழையும் ஈங்கோயே தீங்கருப்பு
வில்லிக்குக் கூற்றானான் வெற்பு.

11.025   11 st/nd Thirumurai   Song # 19   அதிராவடிகள்   மூத்த பிள்ளையார் திருமும்மணிக்கோவை  
வளர்தரு கவட்டின் கிளரொளிக் கற்பகப்
பொதும்பர்த் தும்பி ஒழிவின் றோச்சும்
பாரிடைக் குறுநடைத் தோடி ஞாங்கர்
இட்ட மாங்கனி
முழுவதும் விழுங்கிய முளைப்பனைத் தடக்கை
எந்தை அல்லது மற்று யாவுள
சிந்தை செய்யும் தேவதை நமக்கே.

12.210   12 st/nd Thirumurai   Song # 165   சேக்கிழார்   திருநின்ற சருக்கம்  
வளர்பொற் கனமணி திருமா ளிகையினை
வலம்வந் தலமரும் வரைநில்லா
அளவிற் பெருகிய ஆர்வத் திடையெழும்
அன்பின் கடல்நிறை உடலெங்கும்
புளகச் செறிநிரை விரவத் திருமலி
பொற்கோ புரமது புகுவார்முன்
களனிற் பொலிவிடம் உடையார் நடநவில்
கனகப் பொதுஎதிர் கண்ணுற்றார்.
12.280   12 st/nd Thirumurai   Song # 50   சேக்கிழார்   வம்பறா வரிவண்டுச் சருக்கம்  
வளர்பருவ முறையாண்டு
வருவதன்முன் மலர்வரிவண்
டுளர்கருமென் சுருட்குஞ்சி
உடனலையச் செந்நின்று
கிளர்ஒலிகிண் கிணியெடுப்பக்
கீழ்மைநெறிச் சமயங்கள்
தளர்நடையிட் டறத்தாமும்
தளர்நடையிட் டருளினார்.
     
send corrections and suggestions to admin-at-sivaya.org
This page was last modified on Tue, 27 Jan 2026 00:59:47 +0000