சிவய.திருக்கூட்டம்
sivaya.org
Please set your language preference by clicking language links.
Search this site internally
Or with Google

This page in Tamil   Hindi/Sanskrit   Telugu   Malayalam   Bengali   Kannada   English   ITRANS    Marati  Gujarathi   Oriya   Singala   Tibetian   Thai   Japanese   Urdu   Cyrillic/Russian   Spanish   Hebrew   Korean  
Selected thirumurai      thirumurai Thalangal      All thirumurai Songs     

Thirumurai   1   2   3   4   5   6   7   8   9   10   11   12

Pathigam first Letter :                                          
Paadal first letter:         (  .                                                
Search: Filter By: Order By:
திருமுறை 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12 இருந்து பாடல் சொல் வெள்ள
வெள்ளம்     வெள்ளத்     வெள்ளிவெண்     வெள்ளி     வெள்ளடை     வெள்ளக்     வெள்ளை     வெள்ளிமால்     வெள்ளைத்திங்கள்     வெள்ளியர்;     வெள்ளத்தைச்     வெள்ள     வெள்ளிக்     வெள்ளத்தார்     வெள்ளிக்குன்று     வெள்ளத்துள்     வெள்ளைக்    
1.002   1 st/nd Thirumurai   Song # 7   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
வெள்ளம் ஆர்ந்து மிளிர் செஞ்சடை தன் மேல் விளங்கும் மதி சூடி,
உள்ளம் ஆர்ந்த அடியார் தொழுது ஏத்த, உகக்கும் அருள் தந்து, எம்
கள்ளம் ஆர்ந்து கழியப் பழி தீர்த்த கடவுள் இடம் என்பர்
புள்ளை ஆர்ந்த வயலின் விளைவால் வளம் மல்கும் புகலூரே.

1.058   1 st/nd Thirumurai   Song # 9   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
வெள்ளத் தாமரையானொடு மாலும் ஆய்த்
தெள்ள, தீத்திரள் ஆகிய
கள்ளத்தான் உறையும் கரவீரத்தை
உள்ளத் தான் வினை ஓயுமே.

1.103   1 st/nd Thirumurai   Song # 6   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
வெள்ளம் எல்லாம் விரிசடைமேல் ஓர் விரிகொன்றை
கொள்ள வல்லான், குரைகழல் ஏத்தும் சிறு தொண்டர்
உள்ளம் எல்லாம் உள்கி நின்று ஆங்கே உடன் ஆடும்
கள்ளம் வல்லான், காதல்செய் கோயில் கழுக்குன்றே.

1.104   1 st/nd Thirumurai   Song # 4   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
வெள்ளம் அது சடைமேல் கரந்தான், விரவார் புரங்கள் மூன்றும்
கொள்ள எரி மடுத்தான், குறைவு இன்றி உறை கோயில்
அள்ளல் விளை கழனி அழகு ஆர் விரைத் தாமரைமேல் அன்னப்
புள் இனம் வைகி எழும் புகலிப்பதிதானே.

2.080   2 st/nd Thirumurai   Song # 5   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
வெள்ளை எருத்தின் மிசையார், விரி தோடு ஒரு காது
இலங்கத்
துள்ளும் இளமான் மறியார், சுடர் பொன் சடைகள்
துளங்கக்
கள்ளம் நகு வெண்தலையார் கடவூர் மயானம் அமர்ந்தார்;
பிள்ளை மதியம் உடையார் அவர் எம்பெருமான் அடிகளே

3.042   3 st/nd Thirumurai   Song # 10   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
வெள்ளைத்திங்கள் வாண்முக மாதர்பாட வீழ்சடைப்
பிள்ளைத்திங்கள் சூடியோ ராடல்மேய பிஞ்ஞகன்
உள்ளத்தார்சிற் றேமத்தான் உருவார்புத்தர் ஒப்பிலாக்
கள்ளத்தாரைத் தானாக்கியுட் கரந்துவைத்தான் அல்லனே.

4.029   4 st/nd Thirumurai   Song # 3   திருநாவுக்கரசர்   தேவாரம்  
வெள்ளியர்; கரியர்;செய்யர்; விண்ணவர் அவர்கள் நெஞ்சுள்
ஒள்ளியர்; ஊழி ஊழி உலகம் அது ஏத்த நின்ற
பள்ளியர்; நெஞ்சத்து உள்ளார்; பஞ்சமம் பாடி ஆடும்
தெள்ளியர்; கள்ளம் தீர்ப்பார்-திருச் செம்பொன்பள்ளியாரே.

4.045   4 st/nd Thirumurai   Song # 1   திருநாவுக்கரசர்   தேவாரம்  
வெள்ளத்தைச் சடையில் வைத்த வேத கீதன் தன் பாதம்
மெள்ளத்தான் அடைய வேண்டின் மெய் தரு ஞானத் தீயால்
கள்ளத்தைக் கழிய நின்றார் காயத்துள் கலந்து நின்று(வ்)
உள்ளத்துள் ஒளியும் ஆகும், ஒற்றியூர் உடைய கோவே.

4.068   4 st/nd Thirumurai   Song # 1   திருநாவுக்கரசர்   தேவாரம்  
வெள்ள நீர்ச் சடையர் போலும்; விரும்புவார்க்கு எளியர் போலும்;
உள்ளுளே உருகி நின்று அங்கு உகப்பவர்க்கு அன்பர் போலும்;
கள்ளமே வினைகள் எல்லாம் கரிசு அறுத்திடுவர் போலும்-
அள்ளல் அம் பழனை மேய ஆலங்காட்டு அடிகளாரே.

4.075   4 st/nd Thirumurai   Song # 9   திருநாவுக்கரசர்   தேவாரம்  
வெள்ள நீர்ச் சடையனார் தாம் வினவுவார் போல வந்து, என்
உள்ளமே புகுந்து நின்றார்க்கு, உறங்கும் நான் புடைகள் பேர்ந்து
கள்ளரோ, புகுந்தீர்? என்ன, கலந்து தான் நோக்கி, நக்கு,
வெள்ளரோம்! என்று, நின்றார்-விளங்கு இளம்பிறையனாரே.

4.112   4 st/nd Thirumurai   Song # 1   திருநாவுக்கரசர்   தேவாரம்  
வெள்ளிக் குழைத்துணி போலும் கபாலத்தன்; வீழ்ந்து இலங்கு
வெள்ளிப் புரி அன்ன வெண் புரிநூலன் விரிசடைமேல்
வெள்ளித் தகடு அன்ன வெண்பிறை சூடி, வெள் என்பு அணிந்து,
வெள்ளிப் பொடிப் பவளப்புறம் பூசிய வேதியனே.

5.020   5 st/nd Thirumurai   Song # 9   திருநாவுக்கரசர்   தேவாரம்  
வெள்ளை நீறு அணி மேனியவர்க்கு எலாம்
உள்ளம் ஆய பிரானார் உறைவு இடம்-
பிள்ளை வெண்பிறை சூடிய சென்னியான்,
கள்வன், சேர் கடம்பூர்க் கரக்கோயிலே.

5.037   5 st/nd Thirumurai   Song # 2   திருநாவுக்கரசர்   தேவாரம்  
வெள்ளி மால்வரை போல்வது ஓர் ஆனையார்;
உள்ள ஆறு எனை உள் புகும் ஆனையார்;
கொள்ளம் ஆகிய கோயிலுள் ஆனையார்;
கள்ள ஆனைகண்டீர்- கடவூரரே.

5.080   5 st/nd Thirumurai   Song # 6   திருநாவுக்கரசர்   தேவாரம்  
வெள்ளம் உள்ள விரிசடை நந்தியைக்
கள்ளம் உள்ள மனத்தவர் காண்கிலார்;
அள்ளல் ஆர் வயல் அன்பில் ஆலந்துறை
உள்ள ஆறு அறியார், சிலர் ஊமரே.

5.098   5 st/nd Thirumurai   Song # 3   திருநாவுக்கரசர்   தேவாரம்  
வெள்ளத்தார் விஞ்சையார்கள் விரும்பவே
வெள்ளத்தைச் சடை வைத்த விகிர்தனார்,
கள்ளத்தைக் கழிய(ம்) மனம் ஒன்றி நின்று
உள்ளத்தில், ஒளியைக் கண்டது-என் உள்ளமே.

6.003   6 st/nd Thirumurai   Song # 2   திருநாவுக்கரசர்   தேவாரம்  
வெள்ளிக்குன்று அன்ன விடையான் தன்னை, வில்வலான் வில்வட்டம் காய்ந்தான் தன்னை,
புள்ளிவரிநாகம் பூண்டான் தன்னை, பொன்   பிதிர்ந்தன்ன சடையான் தன்னை,
வள்ளி வளைத் தோள் முதல்வன் தன்னை, வாரா   உலகு அருள வல்லான் தன்னை,
எள்க இடு பிச்சை ஏற்பான்தன்னை, - ஏழையேன் நான் பண்டு இகழ்ந்த ஆறே!

6.036   6 st/nd Thirumurai   Song # 2   திருநாவுக்கரசர்   தேவாரம்  
வெள்ளம் ஒரு சடைமேல் ஏற்றார் தாமே; மேலார்கள் மேலார்கள் மேலார் தாமே;
கள்ளம் கடிந்து என்னை ஆண்டார் தாமே; கருத்து உடைய பூதப்படையார் தாமே;
உள்ளத்து உவகை தருவார் தாமே உறு நோய் சிறு பிணிகள் தீர்ப்பார் தாமே
பள்ளப் பரவை நஞ்சு உண்டார் தாமே பழன நகர் எம்பிரானார் தாமே.

6.045   6 st/nd Thirumurai   Song # 3   திருநாவுக்கரசர்   தேவாரம்  
வெள்ளத்தைச் செஞ்சடை மேல் விரும்பி வைத்தீர்! வெண்மதியும் பாம்பும் உடனே வைத்தீர்!
கள்ளத்தை மனத்து அகத்தே கரந்து வைத்தீர்! கண்டார்க்குப் பொல்லாது கண்டீர்! எல்லே
கொள்ளத்தான் இசை பாடிப் பலியும் கொள்ளீர்! கோள் அரவும், குளிர்மதியும், கொடியும், காட்டி
உள்ளத்தை நீர் கொண்டீர் ஓதல் ஓவா ஒளி திகழும் ஒற்றியூர் உடைய கோவே!.

8.105.03   8 st/nd Thirumurai   Song # 21   மாணிக்க வாசகர்    திருவாசகம்  
வெள்ளம் தாழ் விரி சடையாய்! விடையாய்!விண்ணோர்
பெருமானே!' எனக் கேட்டு வேட்ட நெஞ்சாய்,
பள்ளம் தாழ் உறு புனலில், கீழ் மேலாக,
பதைத்து உருகும் அவர் நிற்க, என்னைஆண்டாய்க்கு,
உள்ளந்தாள் நின்று உச்சி அளவும் நெஞ்சாய்
உருகாதால்; உடம்பு எல்லாம் கண்ணாய், அண்ணா!
வெள்ளம் தான் பாயாதால்; நெஞ்சம் கல் ஆம்;
கண் இணையும் மரம் ஆம் தீவினையினேற்கே.

8.106   8 st/nd Thirumurai   Song # 14   மாணிக்க வாசகர்    திருவாசகம்  
வெள்ளத்துள் நா வற்றி ஆங்கு, உன் அருள் பெற்றுத் துன்பத்தின் [நின்]றும்
விள்ளக்கிலேனை விடுதி கண்டாய்? விரும்பும் அடியார்
உள்ளத்து உள்ளாய், மன்னும் உத்தரகோசமங்கைக்கு அரசே,
கள்ளத்து உளேற்கு, அருளாய் களியாத களி, எனக்கே.

8.117   8 st/nd Thirumurai   Song # 7   மாணிக்க வாசகர்    திருவாசகம்  
வெள்ளைக் கலிங்கத்தர், வெண் திருமுண்டத்தர்
பள்ளிக் குப்பாயத்தர்; அன்னே! என்னும்.
பள்ளிக் குப்பாயத்தர் பாய் பரி மேற்கொண்டு, என்
உள்ளம் கவர்வரால்; அன்னே! என்னும்.

10.316   10 st/nd Thirumurai   Song # 1   திருமூலர்   திருமந்திரம்  
வெள்ளிவெண் திங்கள் விளங்கும் புதன்இடம்
ஒள்ளிய மந்தன் இரவிசெவ் வாய்வலம்
வள்ளிய பொன்னே வளரும் பிறையிடம்
தெள்ளிய தேய்பிறை தான்வல மாமே.

10.316   10 st/nd Thirumurai   Song # 2   திருமூலர்   திருமந்திரம்  
வெள்ளிவெண் திங்கள் விளங்கும் புதன்மூன்றும்
தள்ளி இடத்தே தயங்குமே யாமாகில்
ஒள்ளிய காயத்துக் கூன மிலையென்று
வள்ளல் நமக்கு மகிழ்ந்துரைத் தானே. 

10.319   10 st/nd Thirumurai   Song # 10   திருமூலர்   திருமந்திரம்  
வெள்ளி யுருகிப்பின் பொன்வழி ஓடாமே
கள்ளத்தட் டானார் கரியிட்டு மூடினார்
கொள்ளி பறியக் குழல்வழி யேசென்று
அள்ளிஉண் ணாவில் அடக்கிவைத் தாரே. 

10.408   10 st/nd Thirumurai   Song # 4   திருமூலர்   திருமந்திரம்  
வெள்ளடை யான்இரு மாமிகு மாமலர்க்
கள்ளடை ஆரக் கமழ்குழ லார்மனம்
மள்ளடை யானும் வகைத்திற மாய்நின்ற
பெண்ணொரு பாகன் பிறவிபெண் ணாமே.

10.711   10 st/nd Thirumurai   Song # 12   திருமூலர்   திருமந்திரம்  
வெள்ளக் கடல்உள் விரிசடை நந்திக்கு
உள்ளக் கடற்புக்கு ஓர்சுமை பூக்கொண்டு
கள்ளக் கடல்விட்டுக் கைதொழ மாட்டாதார்
அள்ளற் கடலுள் அழுந்துகின் றாரே.

11.008   11 st/nd Thirumurai   Song # 61   சேரமான் பெருமாள் நாயனார்   திருக்கயிலாய ஞான உலா  
வெள்ளை யணிதலால் வேழத் துரிபோர்த்த
வள்ளலே போலும் வடிவுடைய ஒள்ளிய

11.008   11 st/nd Thirumurai   Song # 107   சேரமான் பெருமாள் நாயனார்   திருக்கயிலாய ஞான உலா  
வெள்ளி விலங்கல்மேல் வீற்றிருந்த ஞாயிறுபோல்
ஒள்ளிய மால்விடையை மேல்கொண்டு தெள்ளியநீர்

12.190   12 st/nd Thirumurai   Song # 50   சேக்கிழார்   மும்மையால் உலகாண்ட சருக்கம்  
வெள்ளி மால்வரைக் கயிலையில் வீற்றிருந் தருளித்
துள்ளு வார்புனல் வேணியார் அருள்செயத் தொழுது
தெள்ளு வாய்மையின் ஆகமத் திறனெலாம் தெளிய
உள்ள வாறுகேட் டருளினாள் உலகையா ளுடையாள்.
12.210   12 st/nd Thirumurai   Song # 379   சேக்கிழார்   திருநின்ற சருக்கம்  
வெள்ளி வெற்பின்மேல் மரகதக்
கொடியுடன் விளங்கும்
தெள்ளு பேரொளிப் பவளவெற்
பெனஇடப் பாகம்
கொள்ளு மாமலை யாளுடன்
கூடவீற் றிருந்த
வள்ள லாரைமுன் கண்டனர்
வாக்கின்மன் னவனார்.

12.280   12 st/nd Thirumurai   Song # 368   சேக்கிழார்   வம்பறா வரிவண்டுச் சருக்கம்  
வெள்ளிமால் வரையைநேர் விரிசுடர்க் கோயிலைப்
பிள்ளையார் வலம்வரும் பொழுதினில் பெருகுசீர்
வெள்ளஆ னந்தமெய் பொழியமே லேறிநீர்
துள்ளுவார் சடையரைத் தொழுதுமுன் பரவுவார்.
     
send corrections and suggestions to admin-at-sivaya.org
This page was last modified on Tue, 27 Jan 2026 00:59:47 +0000