சிவய.திருக்கூட்டம்
sivaya.org
Please set your language preference
by clicking below languages link
Search this site with
words in any language e.g. पोऱ्‌ऱि
song/pathigam/paasuram numbers: e.g. 7.039

This page in Tamil   Hindi/Sanskrit   Telugu   Malayalam   Bengali   Kannada   English   ITRANS    Marati  Gujarathi   Oriya   Singala   Tibetian   Thai   Japanese   Urdu   Cyrillic/Russian   Spanish   Hebrew  
Selected thirumurai      thirumurai Thalangal      All thirumurai Songs     

Thirumurai   1   2   3   4   5   6   7   8   9   10   11   12

Pathigam first Letter :                                          
Paadal first letter:     (  .                                                
Search: Filter By: Order By:
திருமுறை 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12 இருந்து பாடல் சொல் அண்ட
அண்டத்தால்     அண்டமொ     அண்டஞ்     அண்ட     அண்டத்தி     அண்டங்கள்     அண்டம்     அண்டத்தில்     அண்டங்     அண்டர்     அண்டத்     அண்டர்பிரான்     அண்டர்கள்     அண்டவாணர்     அண்டத்தானை,     அண்டவர்கள்     அண்டத்து     அண்டப்     அண்டமோர்    
1.126   1 st/nd Thirumurai   Song # 4   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
அண்டத்தால் எண்திக்கும் அமைந்து அடங்கும் மண்தலத்து
ஆறே, வேறே வான் ஆள்வார் அவர் அவர் இடம் அது எலாம்
மண்டிப் போய் வென்றிப் போர் மலைந்து அலைந்த உம்பரும்
மாறு ஏலாதார்தாம் மேவும் வலி மிகு புரம் எரிய,
முண்டத்தே வெந்திட்டே முடிந்து இடிந்த இஞ்சி சூழ்
மூவா மூதூர் மூதூரா முனிவு செய்தவனது இடம்
கண்டிட்டே செஞ்சொல் சேர் கவின் சிறந்த மந்திரக்
காலே ஓவாதார் மேவும் கழுமல வள நகரே.

3.013   3 st/nd Thirumurai   Song # 7   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
அண்டர்கள் உய்ந்திட, அவுணர் மாய்தரக்
கண்டவர்; கடல்விடம் உண்ட கண்டனார்
புண்டரீக(வ்) வயல் பூந்தராய் நகர்
வண்டு அமர் குழலிதன் மணாளர்; காண்மினே!

3.068   3 st/nd Thirumurai   Song # 10   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
அண்டர் தொழு சண்டி பணி கண்டு அடிமை கொண்ட இறை, துண்ட மதியோடு
இண்டை புனைவுண்ட சடை முண்டதர சண்ட இருள்கண்டர் இடம் ஆம்
குண்டு அமண வண்டர் அவர், மண்டை கையில் உண்டு உளறி மிண்டு சமயம்
கண்டவர்கள் கொண்டவர்கள், பண்டும் அறியாத கயிலாயமலையே.

3.071   3 st/nd Thirumurai   Song # 2   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
அண்டம் உறு மேருவரை, அங்கி கணை, நாண் அரவு அது, ஆக, எழில் ஆர்
விண்டவர் தம் முப்புரம் எரித்த விகிர்தன்(ன்) அவன் விரும்பும் இடம் ஆம்
புண்டரிகம் மா மலர்கள் புக்கு விளையாடு வயல் சூழ் தடம் எலாம்
வண்டின் இசை பாட, அழகு ஆர் குயில் மிழற்று பொழில் வைகாவிலே.

4.007   4 st/nd Thirumurai   Song # 4   திருநாவுக்கரசர்   தேவாரம்  
அண்டம் ஆய், ஆதி ஆய், அருமறையோடு ஐம்பூதப்
பிண்டம் ஆய், உலகுக்கு ஒர் பெய் பொருள் ஆம் பிஞ்ஞகனை;
தொண்டர் தாம் மலர் தூவிச் சொல் மாலை புனைகின்ற
இண்டை சேர் சடையானை;-என் மனத்தே வைத்தேனே!

4.048   4 st/nd Thirumurai   Song # 4   திருநாவுக்கரசர்   தேவாரம்  
அண்டம் ஆர் அமரர் கோமான் -ஆதி, எம் அண்ணல், -பாதம்
கொண்டவன் குறிப்பினாலே கூப்பினான், தாபரத்தை;
கண்டு அவன் தாதை பாய்வான் கால் அற எறியக் கண்டு
தண்டியார்க்கு அருள்கள் செய்த தலைவர், ஆப்பாடியாரே.

4.085   4 st/nd Thirumurai   Song # 8   திருநாவுக்கரசர்   தேவாரம்  
அண்டர் அமரர் கடைந்து எழுந்து ஓடிய நஞ்சு அதனை
உண்டும் அதனை ஒடுக்க வல்லான், மிக்க உம்பர்கள் கோன்,
தொண்டு பயில்கின்ற சோற்றுத்துறை உறைவார், சடைமேல்
இண்டை மதியம் அன்றோ, எம்பிரானுக்கு அழகியதே?

5.013   5 st/nd Thirumurai   Song # 9   திருநாவுக்கரசர்   தேவாரம்  
அண்ட வானவர் கூடிக் கடைந்த நஞ்சு
உண்ட வானவனே! உணர்வு ஒன்று இலேன்;
விண்ட வான் பொழில் வீழிமிழலையுள்
கொண்டனே!-அடியேனைக் குறிக்கொளே!

5.039   5 st/nd Thirumurai   Song # 3   திருநாவுக்கரசர்   தேவாரம்  
அண்டர் வாழ்வும், அமரர் இருக்கையும்,
கண்டு வீற்றிருக்கும் கருத்து ஒன்று இலோம்
வண்டு சேர் மயிலாடுதுறை அரன்
தொண்டர் பாதங்கள் சூடித் துதையிலே.

5.046   5 st/nd Thirumurai   Song # 6   திருநாவுக்கரசர்   தேவாரம்  
அண்டவாணர் அமுது உண நஞ்சு உண்டு,
பண்டு நால்மறை ஓதிய பாடலன்;
தொண்டர் ஆகித் தொழுது மதிப்பவர்
புண்டரீகத்து உளார்-புகலூரரே.

5.094   5 st/nd Thirumurai   Song # 1   திருநாவுக்கரசர்   தேவாரம்  
அண்டத்தானை, அமரர் தொழப்படும்
பண்டத்தானை, பவித்திரம் ஆம் திரு-
முண்டத்தானை, முற்றாத இளம்பிறைத்-
துண்டத்தானை-கண்டீர்-தொழல்பாலதே.

5.097   5 st/nd Thirumurai   Song # 2   திருநாவுக்கரசர்   தேவாரம்  
அண்டம் ஆர் இருள் ஊடு கடந்து உம்பர்
உண்டுபோலும், ஓர் ஒண்சுடர்; அச் சுடர்
கண்டு இங்கு ஆர் அறிவார்? அறிவார் எலாம்,
வெண் திங்கள் கண்ணி வேதியன் என்பரே.

6.056   6 st/nd Thirumurai   Song # 7   திருநாவுக்கரசர்   தேவாரம்  
அண்டம் ஏழ் அன்று கடந்தாய், போற்றி!
ஆதிபுராணனாய் நின்றாய், போற்றி!
பண்டை வினைகள் அறுப்பாய், போற்றி!
பாரோர் விண் ஏத்தப்படுவாய், போற்றி!
தொண்டர் பரவும் இடத்தாய், போற்றி!
தொழில் நோக்கி ஆளும் சுடரே, போற்றி!
கண்டம் கறுக்கவும் வல்லாய், போற்றி!
கயிலை மலையானே, போற்றி போற்றி!.

6.083   6 st/nd Thirumurai   Song # 8   திருநாவுக்கரசர்   தேவாரம்  
அண்டவர்கள் கடல் கடைய, அதனுள்-தோன்றி, அதிர்ந்து எழுந்த ஆலாலம் வேலை ஞாலம்
எண்திசையும் சுடுகின்ற ஆற்றைக் கண்டு, இமைப்பு அளவில் உண்டு இருண்ட கண்டர்; தொண்டர்
வண்டு படு மதுமலர்கள் தூவி நின்று, வானவர்கள் தானவர்கள் வணங்கி, ஏத்தும்
பண்டரங்க வேடனை; எம் பாசூர் மேய பரஞ்சுடரை; கண்டு அடியேன் உய்ந்த ஆறே!.

6.097   6 st/nd Thirumurai   Song # 1   திருநாவுக்கரசர்   தேவாரம்  
அண்டம் கடந்த சுவடும் உண்டோ? அனல் அங்கை ஏந்திய ஆடல் உண்டோ?
பண்டை எழுவர் படியும் உண்டோ? பாரிடங்கள்   பல சூழப் போந்தது உண்டோ?
கண்டம் இறையே கறுத்தது உண்டோ? கண்ணின்   மேல் கண் ஒன்று கண்டது உண்டோ?
தொண்டர்கள் சூழத் தொடர்ச்சி உண்டோ? சொல்லீர், எம்பிரானாரைக் கண்ட ஆறே!.

7.012   7 st/nd Thirumurai   Song # 2   சுந்தரமூர்த்தி சுவாமிகள்   திருப்பாட்டு  
அண்டத்து அண்டத்தின் அப் புறத்து ஆடும் அமுதன் ஊர்
தண்டந் தோட்டம், தண்டங்குறை, தண்டலை, ஆலங்காடு,
கண்டல் முண்டல்கள் சூழ் கழிப்பாலை, கடற்கரை,
கொண்டல் நாட்டுக் கொண்டல், குறுக்கை நாட்டுக் குறுக்கையே .

7.022   7 st/nd Thirumurai   Song # 2   சுந்தரமூர்த்தி சுவாமிகள்   திருப்பாட்டு  
அண்ட கபாலம் சென்னி(ய்) அடிமேல் அலர் இட்டு நல்ல
தொண்டு அங்கு அடி பரவி, தொழுது ஏத்தி, நின்று ஆடும் இடம்;
வெண் திங்கள் வெண்மழுவன், விரை ஆர் கதிர் மூவிலைய
பண்டங்கன், மேய இடம் பழமண்ணிப் படிக் கரையே .

8.103   8 st/nd Thirumurai   Song # 1   மாணிக்க வாசகர்    திருவாசகம்  
அண்டப் பகுதியின் உண்டைப் பிறக்கம்,
அளப்புஅரும் தன்மை, வளப் பெரும் காட்சி
ஒன்றனுக்கு ஒன்று நின்ற எழில் பகரின்
நூற்று ஒரு கோடியின் மேற்பட விரிந்தன;
இல் நுழை கதிரின் துன் அணுப் புரைய,

9.013   9 st/nd Thirumurai   Song # 6   கருவூர்த் தேவர்   திருவிசைப்பா  
அண்டமோர் அணுவாம் பெருமைகொண்(டு) அணுவோர்
அண்டமாம் சிறுமைகொண்(டு) அடியேன்
உண்டவூண் உனக்காம் வகைஎன துள்ளம்
உள்கலந்(து) ஏழுபரஞ் சோதி
கொண்டநாண் பாம்பாம் பெருவரை வில்லில்
குறுகலர் புரங்கள் மூன்(று) எரித்த
கண்டனே ! நீல கண்டனே ! கங்கை
கொண்டசோ ளேச்சரத் தானே!

10.220   10 st/nd Thirumurai   Song # 2   திருமூலர்   திருமந்திரம்  
அண்டமொ டெண்டிசை தாங்கும் அதோமுகம்
கண்டங் கறுத்த கருத்தறி வாரில்லை
உண்டது நஞ்சென் றுரைப்பர் உணர்விலோர்
வெண்டலை மாலை விரிசடை யோற்கே. 

10.313   10 st/nd Thirumurai   Song # 12   திருமூலர்   திருமந்திரம்  
அண்டஞ் சுருங்கில் அதற்கோ ரழிவில்லை
பிண்டஞ் சுருங்கிற் பிராணன் நிலைபெறும்
உண்டி சுருங்கில் உபாயம் பலவுள
கண்டங் கறுத்த கபாலியு மாமே. 

10.408   10 st/nd Thirumurai   Song # 56   திருமூலர்   திருமந்திரம்  
அண்ட முதலா அவனி பரியந்தம்
கண்டதொன் றில்லைக் கனங்குழை யல்லது
கண்டனும் கண்டியு மாகிய காரணம்
குண்டிகை கோளிகை கண்டத னாலே.

10.413   10 st/nd Thirumurai   Song # 44   திருமூலர்   திருமந்திரம்  
அண்டத்தி னுள்ளே அளப்பரி தானவள்
பிண்டத்தி னுள்ளே பெருவெளி கண்டவள்
குண்டத்தி னுள்ளே குணம்பல காணினும்
கண்டத்தி னுள்ளே கலப்பறி யார்களே.

10.714   10 st/nd Thirumurai   Song # 3   திருமூலர்   திருமந்திரம்  
அண்டங்கள் ஏழும் அகண்டமும் ஆவியும்
கொண்ட சராசர முற்றும் குணங்களும்
பண்டை மறையும் படைப்பளிப் பாதியும்
கண்ட சிவனுமென் கண்ணன்றி யில்லையே.

10.815   10 st/nd Thirumurai   Song # 19   திருமூலர்   திருமந்திரம்  
அண்டங்கள் ஏழுந் கடந்தகன் றப்பாலும்
உண்டென்ற பேரொளிக் குள்ளால் உளவொளி
பண்டுறு கின்ற பராசத்தி யென்னவே
கொண்டனன் அன்றிநின் றான்எங்கள் கோவே.

10.912   10 st/nd Thirumurai   Song # 1   திருமூலர்   திருமந்திரம்  
அண்டங்கள் ஏழினுக்(கு) அப்புறத்(து) அப்பால்
உண்டென்ற சத்தி சதாசிவத் துச்சிமேல்
கண்டங் கரியான் கருணைத் திருவுருக்
கொண்டங் குமைகாணக் கூத்துகந் தானே.
10.914   10 st/nd Thirumurai   Song # 1   திருமூலர்   திருமந்திரம்  
அண்டங்கள் ஓரேழும் அம்பொற் பதியாகப்
பண்டைஆ காசங்கள் ஐந்தும் பதியாகத்
தெண்டினிற் சத்தி திருவம் பலமாகக்
கொண்டு பரஞ்சோதி கூத்துகந் தானே.

10.915   10 st/nd Thirumurai   Song # 10   திருமூலர்   திருமந்திரம்  
அண்டங்கள் தத்துவம் ஆதி சதாசிவம்
தண்டினில் சாத்தவி சாமபி ஆதனம்
தெண்டினில் ஏழும் சிவாசன மாகவே`
கொண்டு பரஞ்சோதி கூத்துகந் தானே.

10.915   10 st/nd Thirumurai   Song # 12   திருமூலர்   திருமந்திரம்  
அண்டம் எழுகோடி பிண்டம் எழுகோடி
தெண்டிரை சூழ்ந்த திசைகள் எழுகோடி
எண்டிசை சூழ்ந்த இலிங்கம் எழுகோடி
அண்டன் நடம்செயும் ஆலயந் தானே.

10.915   10 st/nd Thirumurai   Song # 16   திருமூலர்   திருமந்திரம்  
அண்டத்தில் தேவர்கள் அப்பாலைத் தேவர்கள்
தெண்டிரை சூழ்புவிக் குள்ளுள்ள தேவர்கள்
புண்பரி கப்பதப் பொன்னம் பலக்கூத்துக்
கண்டுசே வித்துக் கதிபெறு வார்களே.

10.916   10 st/nd Thirumurai   Song # 3   திருமூலர்   திருமந்திரம்  
அண்ட ஒளியும் அகண்ட ஒளியுடன்
பிண்ட ஒளியால் பிதற்றும் பெருமையை
உண்ட வெளிக்குள் ஒளிக்குள் ஒளித்தது
கொண்ட குறியைக் குலைத்தது தானே.

10.928   10 st/nd Thirumurai   Song # 24   திருமூலர்   திருமந்திரம்  
அண்டங் கடந்துயர்ந் தோங்கும் பெருமையன்
பிண்டங் கடந்த பிறவிச் சிறுமையன்
கண்டர் கடந்த கனைகழல் காண்டொறும்
தொண்டர்கள் தூய்நெறி தூங்கிநின் றாரே.

12.070   12 st/nd Thirumurai   Song # 46   சேக்கிழார்   தில்லை வாழ் அந்தணர் சருக்கம்  
அண்டர் பூமழை பொழியமற் றதனிடை ஒளித்த
முண்ட வேதிய ரொருவழி யான்முதல் நல்லூர்ப்
பண்டு தாம்பயில் கோலமே விசும்பினிற் பாகம்
கொண்ட பேதையுந் தாமுமாய்க் காட்சிமுன் கொடுத்தார்.
12.190   12 st/nd Thirumurai   Song # 68   சேக்கிழார்   மும்மையால் உலகாண்ட சருக்கம்  
அண்டர் நாயகர் எதிர்நின்று கூறும்
அளவி னால்அஞ்சி அஞ்சலி கூப்பிக்
கொண்ட இற்றையென் பூசனை யின்னும்
குறைநி ரம்பிடக் கொள்கஎன் றருள
வண்டு வார்குழல் மலைமகள் கமல
வதனம் நோக்கிஅம் மலர்க்கண்நெற் றியின்மேல்
முண்ட நீற்றர்நின் பூசனை யென்றும்
முடிவ தில்லைநம் பாலென மொழிய.
12.200   12 st/nd Thirumurai   Song # 56   சேக்கிழார்   மும்மையால் உலகாண்ட சருக்கம்  
அண்டர் பிரானும் தொண்டர்தமக்
கதிபன் ஆக்கி அனைத்துநாம்
உண்ட கலமும் உடுப்பனவும்
சூடு வனவும் உனக்காகச்
சண்டீ சனுமாம் பதந்தந்தோம்
என்றங் கவர்பொற் றடமுடிக்குத்
துண்ட மதிசேர் சடைக்கொன்றை
மாலை வாங்கிச் சூட்டினார்.
12.280   12 st/nd Thirumurai   Song # 170   சேக்கிழார்   வம்பறா வரிவண்டுச் சருக்கம்  
அண்டத் திறைவர்
அருளால் அணிதில்லை
முண்டத் திருநீற்று
மூவா யிரவர்களும்
தொண்டத் தகைமைக்
கணநாத ராய்தோன்றக்
கண்டஅப் பரிசுபெரும்
பாணர்க்கும் காட்டினார்.
12.280   12 st/nd Thirumurai   Song # 324   சேக்கிழார்   வம்பறா வரிவண்டுச் சருக்கம்  
அண்டர்பிரான் ஆலயங்கள்
அம்மருங்குள் ளனபணிந்து
தெண்டிரைநீர்த் தடம்பொன்னித்
தென்கரையாங் கொங்கினிடை
வண்டலையும் புனற்சடையார்
மகிழ்விடங்கள் தொழுதணைந்தார்
கொண்டல்பயில் நெடும்புரிசைக்
கொடிமாடச் செங்குன்றூர்.
12.290   12 st/nd Thirumurai   Song # 225   சேக்கிழார்   வம்பறா வரிவண்டுச் சருக்கம்  
அண்டர் பெருமான் அந்தணராய்
ஆண்ட நம்பி யங்கணரைப்
பண்டை முறைமை யாற்பணிந்து
பாடிப் பரவிப் புறம்போந்து
தொண்டு செய்வார் திருத்தொழில்கள்
கண்டு தொழுது செல்கின்றார்
புண்ட ரீகத் தடம்நிகர்பூந்
திருமண் டபத்தி னுட்புகுந்தார்.
12.290   12 st/nd Thirumurai   Song # 331   சேக்கிழார்   வம்பறா வரிவண்டுச் சருக்கம்  
அண்டர் வாழக் கருணையினால்
ஆல காலம் அமுதாக
உண்ட நீலக் கோலமிடற்
றொருவர் இருவர்க் கறிவரியார்
வண்டு வாழும் மலர்க்கூந்தல்
பரவை யார்மா ளிகைநோக்கித்
தொண்ட னார்தம் துயர்நீக்கத்
தூத னாராய் எழுந்தருள.

This page was last modified on Thu, 09 May 2024 05:33:06 +0000
          send corrections and suggestions to admin-at-sivaya.org

thirumurai all list