சிவய.திருக்கூட்டம்
sivaya.org
Please set your language preference
by clicking below languages link
Search this site with
words in any language e.g. पोऱ्‌ऱि
song/pathigam/paasuram numbers: e.g. 7.039

This page in Tamil   Hindi/Sanskrit   Telugu   Malayalam   Bengali   Kannada   English   ITRANS    Marati  Gujarathi   Oriya   Singala   Tibetian   Thai   Japanese   Urdu   Cyrillic/Russian   Spanish   Hebrew  
Selected thirumurai      thirumurai Thalangal      All thirumurai Songs     

Thirumurai   1   2   3   4   5   6   7   8   9   10   11   12

Pathigam first Letter :                                          
Paadal first letter:     (  .                                                
Search: Filter By: Order By:
திருமுறை 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12 இருந்து பாடல் சொல் அத்த
அத்தம்     அத்தன்     அத்திப்     அத்திசைக்     அத்தத்தில்     அத்தர்     அத்தி     அத்திறம்     அத்தருவளர்     அத்துறையின்     அத்திருப்     அத்தன்மை     அத்திரு     அத்தகைமை     அத்த     அத்தனாய்     அத்தியின்     அத்தகு     அத்திர     அத்தா!     அத்தனே!    
1.039   1 st/nd Thirumurai   Song # 10   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
அத்தம் மண் தோய் துவரார், அமண்குண்டர், ஆதும் அல்லா உரையே உரைத்துப்
பொய்த்தவம் பேசுவது அல்லால் புறன் உரை யாதொன்றும் கொள்ளேல்;
முத்து அன வெண் முறுவல் உமை அஞ்ச, மூரி வல் ஆனையின் ஈர் உரி போர்த்த
வித்தகர், வேத முதல்வர் வேட்கள நன் நகராரே.

1.093   1 st/nd Thirumurai   Song # 2   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
அத்தன் முதுகுன்றை, பத்தி ஆகி, நீர்,
நித்தம் ஏத்துவீர்க்கு உய்த்தல் செல்வமே.

2.043   2 st/nd Thirumurai   Song # 7   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
அத்தியின் ஈர் உரி மூடி, அழகு ஆக அனல் ஏந்தி,
பித்தரைப் போல் பலி திரியும் பெருமானார் பேணும் இடம்
பத்தியினால் வழிபட்டு, பலகாலம் தவம் செய்து,
புத்தி ஒன்ற வைத்து உகந்தான் புள்ளிருக்கு வேளூரே.

3.016   3 st/nd Thirumurai   Song # 3   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
அத்தகு வானவர்க்கு ஆக, மால்விடம்
வைத்தவர், மணி புரை கண்டத்தி(ன்)னுளே;
மத்தமும் வன்னியும் மலிந்த சென்னிமேல்
கொத்து அலர் கொன்றையர் கொள்ளிக்காடரே.

3.028   3 st/nd Thirumurai   Song # 4   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
அத்தியின் உரிதனை அழகு உறப் போர்த்தவன்;
முத்தி ஆய் மூவரில் முதல்வனாய் நின்றவன்;
பத்தியால் பாடிட, பரிந்து அவர்க்கு அருள்செயும்
அத்தனார்; உறைவு இடம் அணி மழபாடியே.

3.087   3 st/nd Thirumurai   Song # 10   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
அத்திர நயனி தொல் மலைமகள் பயன் உறும் அதிசயச்
சித்திர மணி அணி திகழ் முலை இணையொடு செறிதலின்,
புத்தரொடு அமணர் பொய் பெயரும் நள்ளாறர் தம் நாமமே,
மெய்த் திரள் எரியினில் இடில், இவை பழுது இலை; மெய்ம்மையே!

6.095   6 st/nd Thirumurai   Song # 8   திருநாவுக்கரசர்   தேவாரம்  
அத்தா! உன் அடியேனை அன்பால் ஆர்த்தாய்; | அருள் நோக்கில்-தீர்த்த நீர் ஆட்டிக் கொண்டாய்;
எத்தனையும் அரியை நீ எளியை ஆனாய்; | எனை ஆண்டு கொண்டு இரங்கி ஏன்று கொண்டாய்;
பித்தனேன், பேதையேன், பேயேன், நாயேன், | பிழைத் தனகள் அத்தனையும் பொறுத்தாய் அன்றே!
இத்தனையும் எம் பரமோ? ஐய! ஐயோ! | எம்பெருமான் திருக்கருணை இருந்த ஆறே!.

8.113   8 st/nd Thirumurai   Song # 19   மாணிக்க வாசகர்    திருவாசகம்  
அத்தி உரித்து, அது போர்த்தருளும் பெருந்துறையான்,
பித்த வடிவு கொண்டு, இவ் உலகில் பிள்ளையும் ஆய்,
முத்தி முழு முதல், உத்தரகோசமங்கை வள்ளல்,
புத்தி புகுந்தவா பூவல்லி கொய்யாமோ!

8.137   8 st/nd Thirumurai   Song # 8   மாணிக்க வாசகர்    திருவாசகம்  
அத்தனே! அண்டர் அண்டம் ஆய் நின்ற ஆதியே! யாதும் ஈறு இல்லாச்
சித்தனே! பத்தர் சிக்கெனப் பிடித்த செல்வமே! சிவபெருமானே!
பித்தனே! எல்லா உயிரும் ஆய்த் தழைத்து, பிழைத்து, அவை அல்லை ஆய் நிற்கும்
எத்தனே! உன்னைச் சிக்கெனப் பிடித்தேன்; எங்கு எழுந்தருளுவது, இனியே?

10.105   10 st/nd Thirumurai   Song # 18   திருமூலர்   திருமந்திரம்  
அத்திப் பழமும் அறைக்கீரை நல்வித்துங்
கொத்தி உலைப்பெய்து கூழட்டு வைத்தனர்
அத்திப் பழத்தை அறைக்கீரை வித்துண்ணக்
கத்தி எடுத்தவர் காடுபுக் காரே. 

10.402   10 st/nd Thirumurai   Song # 23   திருமூலர்   திருமந்திரம்  
அத்திசைக் குள்நின் றனலை எழுப்பிய
அத்திசைக் குள்நின்ற நவ்வெழுத் தோதினால்
அத்திசைக் குள்நின்ற அந்த மறையனை
அத்திசைக் குள்ளுற வாக்கினள் தானே.

10.704   10 st/nd Thirumurai   Song # 4   திருமூலர்   திருமந்திரம்  
அத்திசைக் குள்ளே அமர்ந்தன ஆறங்கம்
அத்திசைக் குள்ளே அமர்ந்தன நால்வேதம்
அத்திசைக் குள்ளே அமர்ந்த சரியையோடு
அத்திசைக் குள்ளே அமர்ந்த சமயமே.

10.735   10 st/nd Thirumurai   Song # 14   திருமூலர்   திருமந்திரம்  
அத்தன் அருளின் விளையாட் டிடம்சடம்
சித்தொ டசித்துத் தெளிவித்தச் சீவனைச்
சுத்தனு மாக்கித் துடைத்து மலங்களைச்
சத்துடன் ஐங்கரு மத்திடுந் தன்மையே.

10.801   10 st/nd Thirumurai   Song # 2   திருமூலர்   திருமந்திரம்  
அத்தன் அமைத்த உடல்இரு கூற்றினில்
சுத்தம தாகிய சூக்குமம் சொல்லுங்கால்
சத்த பரிச ரூப ரசகந்தம்
புத்திமன்ஆங் காரம் புரியட்ட காயமே.

10.816   10 st/nd Thirumurai   Song # 20   திருமூலர்   திருமந்திரம்  
அத்தத்தில் உத்தரம் கேட்ட அருந்தவர்
அத்தத்தில் உத்தர மாகும் திருமேனி
அத்தத்தி னாலே அணையப் பிடித்தலும்
அத்தத்தில் தம்மை அடைந்திநின் றாரே. 17,

12.000   12 st/nd Thirumurai   Song # 16   சேக்கிழார்   திருமலைச் சருக்கம்  
அத்தர் தந்த அருட்பாற் கடலுண்டு
சித்தம் ஆர்ந்து தெவிட்டி வளர்ந்தவன்
பத்த ராய முனிவர்பல் லாயிரர்
சுத்த யோகிகள் சூழ இருந்துழி.

12.000   12 st/nd Thirumurai   Song # 33   சேக்கிழார்   திருமலைச் சருக்கம்  
அத்தி ருப்பதி யில்நமை ஆளுடை
மெய்த்த வக்கொடி காண விருப்புடன்
நித்தன் நீடிய அம்பலத் தாடும்மற்று
இத்தி றம்பெற லாந்திசை எத்திசை.
12.000   12 st/nd Thirumurai   Song # 129   சேக்கிழார்   திருமலைச் சருக்கம்  
அத்தர் வேண்டிமுன் ஆண்டவர் அன்பினால்
மெய்த்த ழைத்து விதிர்ப்புறு சிந்தையார்
கைத்தி ருத்தொண்டு செய்கடப் பாட்டினார்
இத்தி றத்தவ ரன்றியும் எண்ணிலார்.
12.050   12 st/nd Thirumurai   Song # 18   சேக்கிழார்   தில்லை வாழ் அந்தணர் சருக்கம்  
அத்திறம் அறிந்தார் எல்லாம் 
அரசனைத் தீங்கு செய்த
பொய்த்தவன் தன்னைக்
கொல்வோம் எனப்புடை சூழ்ந்த போது
தத்தனு மவரை எல்லாம்
தடுத்துடன் கொண்டு போவான்
இத்தவன் போகப் பெற்ற
திறைவன தாணை என்றான்.
12.070   12 st/nd Thirumurai   Song # 23   சேக்கிழார்   தில்லை வாழ் அந்தணர் சருக்கம்  
அத்தர் முன்புசென் றடிகள்நீர் தந்தகோ வணத்தை
வைத்தி டத்துநான் கண்டிலேன் மற்றுமோ ரிடத்தில்
உய்த்தொ ளித்தனர் இல்லைஅஃ தொழிந்தவா றறியேன்
இத்த கைத்தவே றதிசயங் கண்டிலே னென்று.
12.100   12 st/nd Thirumurai   Song # 91   சேக்கிழார்   இலை மலிந்த சருக்கம்  
அத்தருவளர் சுழலிடையடை  
அதனிலையறி பவர்முன்
கைத்தெரிகணை யினிலடுவது
கருதலர்விசை கடுகி
மொய்த்தெழுசுடர் விடுசுரிகையை
முனைபெறஎதிர் உருவிக்
குத்தினருடல் முறிபடவெறி
குலமறவர்கள் தலைவர்.
12.210   12 st/nd Thirumurai   Song # 40   சேக்கிழார்   திருநின்ற சருக்கம்  
அத்துறையின் மீக்கூரும்
அமைதியினால் அகலிடத்தில்
சித்தநிலை அறியாத
தேரரையும் வாதின்கண்
உய்த்தவுணர் வினில்வென்றே
உலகின்கண் ஒளியுடைய
வித்தகராய் அமண்சமயத்
தலைமையினில் மேம்பட்டார்.
12.210   12 st/nd Thirumurai   Song # 132   சேக்கிழார்   திருநின்ற சருக்கம்  
அத்திருப் பதியினில்
அணைந்த அன்பரை
மெய்த்தவக் குழாமெலாம்
மேவி ஆர்த்தெழ
எத்திசை யினும்அர
வென்னும் ஓசைபோல்
தத்துநீர்ப் பெருங்கடல்
தானும் ஆர்த்ததே.
12.210   12 st/nd Thirumurai   Song # 188   சேக்கிழார்   திருநின்ற சருக்கம்  
அத்தன்மை யினில்அரசும் பிள்ளை யாரும்
அளவளா வியமகிழ்ச்சி அளவி லாத
சித்தநெகிழ்ச் சியினோடு செல்லும் நாளில்
திருநாவுக் கரசர்திரு வுள்ளந் தன்னில்
மைத்தழையும் மணிமிடற்றார் பொன்னி நாட்டு
மன்னியதா னங்களெல்லாம் வணங்கிப் போற்ற
மெய்த்தெழுந்த பெருங்காதல் பிள்ளை யார்க்கு
விளம்புதலும் அவரும்அது மேவி நேர்வார்.
12.210   12 st/nd Thirumurai   Song # 238   சேக்கிழார்   திருநின்ற சருக்கம்  
அத்திரு மூதூர் மேவிய
நாவுக் கரசுந்தம்
சித்தம் நிறைந்தே அன்பு
தெவிட்டுந் தெளிவெள்ளம்
மொய்த்திழி தாரைக் கண்பொழி
நீர்மெய்ம் முழுதாரப்
பைத்தலை நாகப் பூண்அணி
வாரைப் பணிவுற்றார்.
12.280   12 st/nd Thirumurai   Song # 242   சேக்கிழார்   வம்பறா வரிவண்டுச் சருக்கம்  
அத்திருப் பதிபணிந் தகன்று போய்அனல்
கைத்தலத் தவர்பதி பிறவுங் கைதொழு
முத்தமிழ் விரகராம் முதல்வர் நண்ணினார்
செய்த்தலைப் பணிலமுத்து ஈனுஞ் சேய்ஞலூர்.
12.280   12 st/nd Thirumurai   Song # 267   சேக்கிழார்   வம்பறா வரிவண்டுச் சருக்கம்  
அத்தகைமை பிள்ளையார் அருளிச் செய்ய
அந்தணர்கள் அருள்தலைமேற் கொண்டு தாழ்ந்து
சித்தமகிழ் வொடுசிறப்பத் தாமும் தெய்வத்
திருத்தோணி அமர்ந்தாரைச் சென்று தாழ்ந்து
மெய்த்தஇசைப் பதிகங்கள் கொண்டு போற்றி
விரைமலர்த்தாள் மனங்கொண்டு மீண்டுபோந்து
பத்தருடன் இனிதமரும் பண்பு கூடப்
பரமர்தாள் பணிந்தேத்திப் பயிலும் நாளில்.
12.280   12 st/nd Thirumurai   Song # 282   சேக்கிழார்   வம்பறா வரிவண்டுச் சருக்கம்  
அத்திரு மூதூரின் உள்ளார்
அமர்ந்துடன் போதுவார் போத
மெய்த்தவர் அந்தணர் நீங்கா
விடைகொண்டு மீள்வார்கள் மீள
முத்தின் சிவிகைமேல் கொண்டு
மொய்யொளித் தாமம் நிரைத்த
நித்தில வெண்குடை மீது
நிறைமதி போல நிழற்ற.
12.280   12 st/nd Thirumurai   Song # 440   சேக்கிழார்   வம்பறா வரிவண்டுச் சருக்கம்  
அத்தி ருப்பதி யகன்றுபோய்
அணிகிளர் சூலக்
கைத்த லப்படை வீரர்செம்
பொன்பள்ளி கருதி
மெய்த்த காதலில் விளநகர்
விடையவர் பாதம்
பத்தர் தம்முடன் பணிந்திசைப்
பதிகம்முன் பகர்ந்தார்.
12.280   12 st/nd Thirumurai   Song # 589   சேக்கிழார்   வம்பறா வரிவண்டுச் சருக்கம்  
அத்திரு வாயில் தன்னில்
அற்றைநாள் தொடங்கி நேரே
மெய்த்திரு மறைகள் போல
மேதினி புக்குப் போற்ற
வைத்தெதிர் வழக்கஞ் செய்த
வரம்பிலாப் பெருமை யோரைக்
கைத்தலங் குவித்துத் தாழ்ந்து
வாழ்ந்தது கடல்சூழ் வையம்.
12.280   12 st/nd Thirumurai   Song # 676   சேக்கிழார்   வம்பறா வரிவண்டுச் சருக்கம்  
அத்தி ருத்தொண்டர் தங்களுக்
கருள்முகம் அளித்து
மெய்த்த காதலின் அவரொடும்
புறத்தினில் மேவிச்
சித்தம் இன்புறும் அமைச்சனார்
திருமடம் காட்டப்
பத்தர் போற்றிடப் பரிசனத்
தொடும்இனி தமர்ந்தார்.
12.280   12 st/nd Thirumurai   Song # 783   சேக்கிழார்   வம்பறா வரிவண்டுச் சருக்கம்  
அத்தி ருப்பதி கத்தினை
அமர்ந்துகொண் டருளி
மைத்த வெங்கடு மிடற்றுநள்
ளாறரை வணங்கி
மெய்த்த நற்றிரு ஏட்டினைக்
கழற்றிமெய்ம் மகிழ்ந்து
கைத்த லத்திடைக் கொண்டனர்
கவுணியர் தலைவர்.
12.280   12 st/nd Thirumurai   Song # 912   சேக்கிழார்   வம்பறா வரிவண்டுச் சருக்கம்  
அத்தன்மை கேட்டருளிச் சண்பை வந்த
அடலேறு திருவுள்ளத் தழகி தென்று
மெத்தமகிழ்ச் சியினோடும் விரைந்து சென்று
வெண்தரளச் சிவிகையினின் றிழிந்து வேறோர்
சத்திரமண் டபத்தின் மிசை ஏறி நீடு
சைவருடன் எழுந்தருளி இருந்து சாரும்
புத்தர்களை அழைக்கவெனத் திருமுன் நின்றார்
புகலிகா வலர்ஏவல் போற்றிச் சென்றார்.
12.280   12 st/nd Thirumurai   Song # 1076   சேக்கிழார்   வம்பறா வரிவண்டுச் சருக்கம்  
அத்தி றத்துமுன் நிகழ்ந்தது
திருவுள்ளத்து அமைத்துச்
சித்தம் இன்புறு சிவநேசர்
தம்செயல் வாய்ப்பப்
பொய்த்த வச்சமண் சாக்கியர்
புறத்துறை அழிய
வைத்த வப்பெருங் கருணைநோக்
கால்மகிழ்ந் தருளி.
12.290   12 st/nd Thirumurai   Song # 89   சேக்கிழார்   வம்பறா வரிவண்டுச் சருக்கம்  
அத்திருப் பதியை யணைந்துமுன் தம்மை
யாண்டவர் கோயிலுள் புகுந்து
மெய்த்தவர் சூழ வலங்கொண்டு திருமுன்
மேவுவார் தம்மெதிர் விளங்க
நித்தனார் தில்லை மன்றுள்நின் றாடல்
நீடிய கோலம்நேர் காட்டக்
கைத்தலங் குவித்துக் கண்களா னந்தக்
கலுழிநீர் பொழிதரக் கண்டார்.
12.460   12 st/nd Thirumurai   Song # 3   சேக்கிழார்   பொய்யடிமை யில்லாத புலவர் சருக்கம்  
அத்த ராகிய வங்கணர் அன்பரை
இத்த லத்தில் இகழ்ந்தியம் பும்முரை
வைத்த நாவை வலித்தரி சத்தியால்
சத்தி யார்எனும் நாமந் தரித்துளார்.
12.570   12 st/nd Thirumurai   Song # 12   சேக்கிழார்   கடல் சூழ்ந்த சருக்கம்  
அத்தனாய் அன்னையாய்
ஆருயிராய் அமிர்தாகி
முத்தனாம் முதல்வன்தாள்
அடைந்துகிளை முதல்தடிந்த
கொத்தலர் தார்க் கோட்புலியார்
அடிவணங்கிக் கூட்டத்தில்
பத்தராய்ப் பணிவார்தம்
பரிசினையாம் பகருவாம்.

This page was last modified on Thu, 09 May 2024 05:33:06 +0000
          send corrections and suggestions to admin-at-sivaya.org

thirumurai all list