சிவய.திருக்கூட்டம்
sivaya.org
Please set your language preference
by clicking below languages link
Search this site with
words in any language e.g. पोऱ्‌ऱि
song/pathigam/paasuram numbers: e.g. 7.039

This page in Tamil   Hindi/Sanskrit   Telugu   Malayalam   Bengali   Kannada   English   ITRANS    Marati  Gujarathi   Oriya   Singala   Tibetian   Thai   Japanese   Urdu   Cyrillic/Russian   Spanish   Hebrew  
Selected thirumurai      thirumurai Thalangal      All thirumurai Songs     

Thirumurai   1   2   3   4   5   6   7   8   9   10   11   12

Pathigam first Letter :                                          
Paadal first letter:     (  .                                                
Search: Filter By: Order By:
திருமுறை 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12 இருந்து பாடல் சொல் அன்னம்
அன்னம்    
1.130   1 st/nd Thirumurai   Song # 11   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
அன்னம் மலி பொழில் புடை சூழ் ஐயாற்று எம்பெருமானை, அம் தண் காழி
மன்னிய சீர் மறை நாவன்-வளர் ஞானசம்பந்தன்-மருவு பாடல்
இன் இசையால் இவைபத்தும் இசையுங்கால், ஈசன் அடி ஏத்துவார்கள்
தன் இசையோடு அமருலகில் தவநெறி சென்று எய்துவார், தாழாது அன்றே!

2.115   2 st/nd Thirumurai   Song # 5   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
அன்னம் கன்னிப்பெடை புல்கி, ஒல்கி அணி நடையவாய்,
பொன் அம்காஞ்சி மலர்ச்சின்னம் ஆலும் புகலூர்தனுள்
முன்னம் மூன்றுமதில் எரித்த மூர்த்தி திறம் கருதுங்கால்,
இன்னர் என்னப் பெரிது அரியர்; ஏத்தச் சிறிது எளியரே.

2.120   2 st/nd Thirumurai   Song # 4   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
அன்னம் அன்ன(ந்) நடைச் சாயலாளோடு, அழகு எய்தவே
மின்னை அன்ன சடைக் கங்கையாள் மேவிய காரணம்
தென்னன், கோழி எழில் வஞ்சியும் ஓங்கு செங்கோலினான்,
மன்னன் மூக்கீச்சுரத்து அடிகள் செய்கின்றது ஓர் மாயமே!

2.121   2 st/nd Thirumurai   Song # 9   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
அன்னம் தாவும் அணி ஆர் பொழில், மணி ஆர் புன்னை
பொன் அம் தாது சொரி பாதிரிப்புலியூர் தனுள்
முன்னம் தாவி அடிமூன்று அளந்தவன், நான்முகன்,
தன்னம் தாள் உற்று உணராதது ஓர் தவ நீதியே.

5.001   5 st/nd Thirumurai   Song # 1   திருநாவுக்கரசர்   தேவாரம்  
அன்னம் பாலிக்கும் தில்லைச் சிற்றம்பலம்
பொன்னம் பாலிக்கும்; மேலும், இப் பூமிசை
என் அன்பு ஆலிக்கும் ஆறு கண்டு, இன்பு உற
இன்னம் பாலிக்குமோ, இப் பிறவியே

6.022   6 st/nd Thirumurai   Song # 4   திருநாவுக்கரசர்   தேவாரம்  
அன்னம் ஆம் பொய்கை சூழ் அம்பரானை, ஆச்சிராம(ந்) நகரும் ஆனைக்காவும்,
முன்னமே கோயிலாக் கொண்டான் தன்னை, மூ உலகும் தான் ஆய மூர்த்தி தன்னை,
சின்னம் ஆம் பல் மலர்கள் அன்றே சூடிச் செஞ்சடைமேல் வெண்மதியம் சேர்த்தினானை,-
கன்னி அம்புன்னை சூழ் அம் தண்
நாகைக்காரோணத்து எஞ்ஞான்றும் காணல் ஆமே.

7.036   7 st/nd Thirumurai   Song # 11   சுந்தரமூர்த்தி சுவாமிகள்   திருப்பாட்டு  
அன்னம் சேர் வயல் சூழ் பைஞ்ஞீலியில் ஆரணீய விடங்கரை
மின்னும் நுண் இடை மங்கைமார் பலர் வேண்டிக் காதல் மொழிந்த சொல்
மன்னு தொல் புகழ் நாவலூரன்-வன்தொண்டன்-வாய்மொழி பாடல் பத்து
உன்னி இன் இசை பாடுவார், உமை கேள்வன் சேவடி சேர்வரே.

7.041   7 st/nd Thirumurai   Song # 10   சுந்தரமூர்த்தி சுவாமிகள்   திருப்பாட்டு  
அன்னம் மன்னும் வயல் சூழ் கச்சூர் ஆலக்கோயில் அம்மானை
உன்ன முன்னும் மனத்து ஆரூரன்-ஆரூரன் பேர் முடி வைத்த
மன்னு புலவன், வயல் நாவலர் கோன், செஞ்சொல் நாவன், வன்தொண்டன்
பன்னு தமிழ் நூல் மாலை வல்லார் அவர் என் தலைமேல் பயில்வாரே .

10.721   10 st/nd Thirumurai   Song # 30   திருமூலர்   திருமந்திரம்  
அன்னம் பிராணன்என்(று) ஆர்க்கும் இருவிந்து
தன்னை அறிந்துண்டு சாதிக்க வல்லார்க்குச்
சொன்னமுமாம் உருத்தோன்றும் எண்சித்தியாம்
அன்னவ ரெல்லாம் அழிவற நின்றதே.

10.727   10 st/nd Thirumurai   Song # 2   திருமூலர்   திருமந்திரம்  
அன்னம் இரண்டுள ஆற்றங் கரையினில்;
துன்னி இரண்டும் துணைப்பிரியா; தன்னந்
தன்னிலை அன்னம் தனிஒன்(று);அ தென்றக்கால்
பின்ன மடஅன்னம் பேறணு காதே. 28,

11.037   11 st/nd Thirumurai   Song # 6   நம்பியாண்டார் நம்பி   ஆளுடையபிள்ளையார் திருவுலாமாலை  
அன்னம் துயில்இழப்ப அம்சிறைசேர் வண்டினங்கள்
துன்னும் துணைஇழப்பச் சூழ் கிடங்கின் மன்னிய

12.000   12 st/nd Thirumurai   Song # 60   சேக்கிழார்   திருமலைச் சருக்கம்  
அன்னம் ஆடும் அகன்றுறைப் பொய்கையில்
துன்னும் மேதி படியத் துதைந்தெழும்
கன்னி வாளை கமுகின்மேற் பாய்வன
மன்னு வான்மிசை வானவில் போலுமால்.

This page was last modified on Thu, 09 May 2024 05:33:06 +0000
          send corrections and suggestions to admin-at-sivaya.org

thirumurai all list