சிவய.திருக்கூட்டம்
sivaya.org
Please set your language preference
by clicking below languages link
Search this site with
words in any language e.g. पोऱ्‌ऱि
song/pathigam/paasuram numbers: e.g. 7.039

This page in Tamil   Hindi/Sanskrit   Telugu   Malayalam   Bengali   Kannada   English   ITRANS    Marati  Gujarathi   Oriya   Singala   Tibetian   Thai   Japanese   Urdu   Cyrillic/Russian   Spanish   Hebrew  
Selected thirumurai      thirumurai Thalangal      All thirumurai Songs     

Thirumurai   1   2   3   4   5   6   7   8   9   10   11   12

Pathigam first Letter :                                          
Paadal first letter:     (  .                                                
Search: Filter By: Order By:
திருமுறை 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12 இருந்து பாடல் சொல் அப்ப
அப்பனை     அப்பினிற்     அப்பணி     அப்பரி     அப்பகை     அப்பது     அப்பும்     அப்பினில்     அப்பொற்     அப்பொழு     அப்பெற்றியில்     அப்பதியிற்     அப்பெருங்     அப்பொழுதே     அப்பதியைச்     அப்படிச்     அப்பு     அப்ப     அப்பதி     அப்பூதி     அப்பதிதான்     அப்பதியின்     அப்பொழுது     அப்பாலைக்     அப்பர்சோற்     அப்பதியில்     அப்பொழுதின்     அப்போ     அப்பரே     அப்பதியைத்     அப்பரிசங்     அப்பர்தாம்     அப்பர்     அப்பணியால்     அப்பூங்     அப்பன்-ஆலவாய்     அப்பன்     அப்போது     அப்பனே,     அப்புற்ற    
3.051   3 st/nd Thirumurai   Song # 11   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
அப்பன்-ஆலவாய் ஆதி அருளினால்,
வெப்பம் தென்னவன் மேல் உற, மேதினிக்கு
ஒப்ப, ஞானசம்பந்தன் உரைபத்தும்,
செப்ப வல்லவர் தீது இலாச் செல்வரே.

3.116   3 st/nd Thirumurai   Song # 7   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
அப்பு இயன்ற கண் அயனுமே, அமரர்கோமகனும், அயனுமே,
ஒப்பு இல் இன்று, அமரர், தருவதே, ஒண் கையால் அமரர் தரு அதே;
மெய்ப் பயின்றவர், இருக்கையே, மிழலை ஊர் உமது இருக்கையே;
செப்புமின்(ன்), எருது மேயுமே! சேர்வு உமக்கு எருதும் ஏயுமே.

6.095   6 st/nd Thirumurai   Song # 1   திருநாவுக்கரசர்   தேவாரம்  
அப்பன் நீ, அம்மை நீ, ஐயனும் நீ,| அன்பு உடைய மாமனும் மாமியும் நீ,
ஒப்பு உடைய மாதரும் ஒண் பொருளும் நீ,| ஒரு குலமும் சுற்றமும் ஓர் ஊரும் நீ,
துய்ப்பனவும் உய்ப்பனவும் தோற்றுவாய் நீ,| துணை ஆய் என் நெஞ்சம் துறப்பிப்பாய் நீ,
இப் பொன் நீ, இம் மணி நீ, இம் முத்து(ந்)நீ,| இறைவன் நீ-ஏறு ஊர்ந்த செல்வன் நீயே.

7.079   7 st/nd Thirumurai   Song # 7   சுந்தரமூர்த்தி சுவாமிகள்   திருப்பாட்டு  
அப்போது வந்து உண்டீர்களுக்கு, அழையாது முன் இருந்தேன்;
எப்போதும் வந்து உண்டால், எமை எமர்கள் சுளியாரோ?
இப்போது உமக்கு இதுவே தொழில் என்று ஓடி, அக் கிளியைச்
செப்பு ஏந்து இளமுலையாள் எறி சீ பர்ப்பத மலையே.

8.105.10   8 st/nd Thirumurai   Song # 98   மாணிக்க வாசகர்    திருவாசகம்  
அப்பனே, எனக்கு அமுதனே, ஆனந்தனே, அகம் நெக அள்ளூறு தேன்
ஒப்பனே, உனக்கு உரிய அன்பரில் உரியனாய், உனைப் பருக நின்றது ஓர்
துப்பனே, சுடர் முடியனே, துணையாளனே, தொழும்பாளர் எய்ப்பினில்
வைப்பனே, எனை வைப்பதோ, சொலாய் நைய, வையகத்து, எங்கள் மன்னனே?

8.225   8 st/nd Thirumurai   Song # 3   மாணிக்க வாசகர்    திருச்சிற்றம்பலக் கோவையார்  
அப்புற்ற சென்னியன் தில்லை
   யுறாரி னவர்உறுநோய்
ஒப்புற் றெழில்நல மூரன்
   கவரஉள் ளும்புறம்பும்
வெப்புற்று வெய்துயிர்ப் புற்றுத்தம்
   மெல்லணை யேதுணையாச்
செப்புற்ற கொங்கையர் யாவர்கொ
   லாருயிர் தேய்பவரே.

10.101   10 st/nd Thirumurai   Song # 32   திருமூலர்   திருமந்திரம்  
அப்பனை நந்தியை ஆரா அமுதினை
ஒப்பிலி வள்ளலை ஊழி முதல்வனை
எப்பரி சாயினும் ஏத்துமின் ஏத்தினால்
அப்பரி சீசன் அருள்பெற லாமே. 

10.104   10 st/nd Thirumurai   Song # 24   திருமூலர்   திருமந்திரம்  
அப்பினிற் கூர்மை ஆதித்தன் வெம்மையால்
உப்பெனப் பேர்பெற் றுருச்செய்த அவ்வுரு
அப்பினிற் கூடிய தொன்றாகு மாறுபோற்
செப்பினிற் சீவன் சிவத்துள் அடங்குமே.

10.202   10 st/nd Thirumurai   Song # 5   திருமூலர்   திருமந்திரம்  
அப்பணி செஞ்சடை ஆதி புராதனன்
முப்புரஞ் செற்றனன் என்பர்கள் மூடர்கள்
முப்புர மாவது மும்மல காரியம்
அப்புரம் எய்தமை யாரறி வாரே. 

10.204   10 st/nd Thirumurai   Song # 3   திருமூலர்   திருமந்திரம்  
அப்பரி சேஅய னார்பதி வேள்வியுள்
அப்பரி சேஅங்கி அதிசய மாகிலும்
அப்பரி சேஅது நீர்மையை யுள்கலந்
தப்பரி சேசிவன் ஆலிக்கின் றானே.

10.204   10 st/nd Thirumurai   Song # 4   திருமூலர்   திருமந்திரம்  
அப்பரி சேஅயன் மால்முதல் தேவர்கள்
அப்பரி சேயவ ராகிய காரணம்
அப்பரி சங்கி யுளநாளும் உள்ளிட்
டப்பரி சாகி அலர்ந்திருந் தானே. 

10.209   10 st/nd Thirumurai   Song # 29   திருமூலர்   திருமந்திரம்  
அப்பரி செண்பத்து நான்குநூ றாயிரம்
மெய்ப்பரி செய்தி விரிந்துயி ராய்நிற்கும்
பொய்ப்பரி செய்திப் புகலும் மனிதர்கட்
கிப்பரி சேஇருள் மூடிநின் றானே. 

10.221   10 st/nd Thirumurai   Song # 3   திருமூலர்   திருமந்திரம்  
அப்பகை யாலே அசுரருந் தேவரும்
நற்பகை செய்து நடுவே முடிந்தனர்
எப்பகை யாகிலும் எய்தார் இறைவனைப்
பொய்ப்பகை செய்யினும் பொன்றுப தாமே. 

10.409   10 st/nd Thirumurai   Song # 7   திருமூலர்   திருமந்திரம்  
அப்பது வாக விரிந்தது சக்கரம்
அப்பினில் அப்புறம் அவ் அன லாயிடும்
அப்பினில் அப்புறம் மாருத மாய் எழ
அப்பினில் அப்புறம் ஆகாச மாமே.

10.807   10 st/nd Thirumurai   Song # 40   திருமூலர்   திருமந்திரம்  
அப்பும் அனலும் அகலத்து ளேவரும்
அப்பும் அனலும் அகலத்து ளேவாரா
அப்பும் அனலும் அகலத்துள் ஏதென்னில்
அப்பும் அனலும் கலந்த(து) அவ் ஆறே.

10.925   10 st/nd Thirumurai   Song # 11   திருமூலர்   திருமந்திரம்  
அப்பினில் உப்பென அத்தன் அணைந்திட்டுச்
செப்பு பராபரம் சேரபர மும்விட்டுக்
கப்புறு சொற்பதம் மாளக் கலந்தமை
எப்படி அப்படி என்னும்அவ் வாறே.

12.060   12 st/nd Thirumurai   Song # 4   சேக்கிழார்   தில்லை வாழ் அந்தணர் சருக்கம்  
அப்பொற் பதியி னிடைவேளாண்
குலத்தை விளக்க அவதரித்தார்
செப்பற் கரிய பெருஞ்சீர்த்திச்
சிவனார் செய்ய கழல்பற்றி
எப்பற் றினையும் அறஎறிவார்
எல்லை தெரிய ஒண்ணாதார்
மெய்ப்பத் தர்கள்பாற் பரிவுடையார்
எம்பி ரானார் விறன்மிண்டர்.
12.080   12 st/nd Thirumurai   Song # 15   சேக்கிழார்   இலை மலிந்த சருக்கம்  
அப்பொழு தணைய வொட்டா
தடற்களி றகன்று போக
மெய்ப்பெருந் தொண்டர் மூப்பால்
விரைந்துபின் செல்ல மாட்டார்
தப்பினர் விழுந்து கையால்
தரையடித் தெழுந்து நின்று
செப்பருந் துயரம் நீடிச்
செயிர்த்துமுன் சிவதா வென்பார்.
12.100   12 st/nd Thirumurai   Song # 67   சேக்கிழார்   இலை மலிந்த சருக்கம்  
அப்பெற்றியில் வாழ்த்தும் அணங்குடை
யாட்டி தன்னைச்
செப்பற்கரி தாய சிறப்பெதிர்
செய்து போக்கிக்
கைப்பற்றிய திண்சிலைக் கார்மழை  
மேக மென்ன
மெய்ப்பொற்புடை வேட்டை யின்மேற்கொண்
டெழுந்து போந்தார்.
12.110   12 st/nd Thirumurai   Song # 10   சேக்கிழார்   இலை மலிந்த சருக்கம்  
அப்பொழு ததனைக் கொண்டு
நெற்கொள்வான் அவரும் போக
ஒப்பில்குங் குலியங் கொண்டோர்
வணிகனும் எதிர்வந் துற்றான்
இப்பொதி யென்கொல் என்றார்
உள்ளவா றியம்பக் கேட்டு
முப்புரி வெண்ணூல் மார்பர்
முகமலர்ந் திதனைச் சொன்னார்.
12.120   12 st/nd Thirumurai   Song # 7   சேக்கிழார்   இலை மலிந்த சருக்கம்  
அப்பதியிற் குலப்பதியாய்
அரசர்சே னாபதியாம்
செப்பவருங் குடிவிளங்கத்
திருஅவதா ரஞ்செய்தார்
மெய்ப்பொருளை அறிந்துணர்ந்தார்
விழுமியவே ளாண்குடிமை
வைப்பனைய மேன்மையினார்
மானக்கஞ் சாறனார்.
12.150   12 st/nd Thirumurai   Song # 8   சேக்கிழார்   மும்மையால் உலகாண்ட சருக்கம்  
அப்பொற் பதிவாழ் வணிகர்குலத்
தான்ற தொன்மைச்
செப்பத் தகுசீர்க் குடிசெய்தவம்
செய்ய வந்தார்
எப்பற் றினையும்அறுத் தேறுகைத்
தேறு வார்தாள்
மெய்ப்பற் றெனப்பற்றி விடாத
விருப்பின் மிக்கார்.
12.210   12 st/nd Thirumurai   Song # 125   சேக்கிழார்   திருநின்ற சருக்கம்  
அப்பரி சவ்வினை முற்றி
அவர்அகன் றேகிய பின்னர்
ஒப்பரும் ஆழ்கடல் புக்க
உறைப்புடை மெய்த்தொண்டர் தாமும்
எப்பரி சாயினு மாக
ஏத்துவன் எந்தையை யென்று
செப்பிய வண்டமிழ் தன்னால்
சிவன்அஞ் செழுத்துந் துதிப்பார்.
12.210   12 st/nd Thirumurai   Song # 128   சேக்கிழார்   திருநின்ற சருக்கம்  
அப்பெருங் கல்லும்அங்
கரசு மேல்கொளத்
தெப்பமாய் மிதத்தலில்
செறித்த பாசமும்
தப்பிய ததன்மிசை
இருந்த தாவில்சீர்
மெய்ப்பெருந் தொண்டனார்
விளங்கித் தோன்றினார்.
12.210   12 st/nd Thirumurai   Song # 179   சேக்கிழார்   திருநின்ற சருக்கம்  
அப்பொழுதே அம்பலத்துள் ஆடுகின்ற
கழல்வணங்கி அருள்முன் பெற்றுப்
பொய்ப்பிறவிப் பிணியோட்டுந் திருவீதி
புரண்டுவலங் கொண்டு போந்தே
எப்புவனங் களும்நிறைந்த திருப்பதியின்
எல்லையினை இறைஞ்சி ஏத்திச்
செப்பரிய பெருமையினார் திருநாரை
யூர்பணிந்து பாடிச் செல்வார்.
12.210   12 st/nd Thirumurai   Song # 200   சேக்கிழார்   திருநின்ற சருக்கம்  
அப்பதியைச் சூழ்ந்ததிருப்
பதியில்அர னார்மகிழும்
ஒப்பரிய தானங்கள்
உள்ளுருகிப் பணிந்தணைவார்
மெய்ப்பொருள்தேர்
நாவினுக்கு வேந்தர்தாம் மேவினார்
செப்பருஞ்சீர் அப்பூதி
அடிகளூர் திங்களூர்.
12.210   12 st/nd Thirumurai   Song # 241   சேக்கிழார்   திருநின்ற சருக்கம்  
அப்படிச் சின்னாள் சென்றபின்
ஆரூர் நகராளும்
துப்புறழ் வேணிக் கண்ணுத
லாரைத் தொழுதிப்பால்
மெய்ப்பொருள் ஞானம் பெற்றவர்
வேணு புரத்தெங்கள்
பொற்புரி முந்நூல் மார்பரும்
வந்தார் புகலூரில்.
12.210   12 st/nd Thirumurai   Song # 360   சேக்கிழார்   திருநின்ற சருக்கம்  
அப்பு றம்புரள் கின்ற நீளிடை
அங்கம் எங்கும் அரைந்திடச்
செப்ப ருங்கயி லைச்சி லம்படி
சிந்தை சென்றுறு மாதலால்
மெய்ப்பு றத்தில் உறுப்ப ழிந்தபின்
மெல்ல உந்து முயற்சியுந்
தப்பு றச்செய லின்றி அந்நெறி
தங்கி னார்தமி ழாளியார்.
12.220   12 st/nd Thirumurai   Song # 2   சேக்கிழார்   திருநின்ற சருக்கம்  
அப்ப திக்கு முதல்வர்வன் றொண்டர்தாம்
ஒப்ப ரும்பெரு நம்பிஎன் றோதிய
செப்ப ருஞ்சீர்க் குலச்சிறை யார்திண்மை
வைப்பி னால்திருத் தொண்டில் வழாதவர்.


12.240   12 st/nd Thirumurai   Song # 35   சேக்கிழார்   திருநின்ற சருக்கம்  
அப்பதி தன்னில் எய்தி
அலகில்பல் பொருள்கள் ஆக்கும்
ஒப்பில்மா நிதியம் எல்லாம்
ஒருவழிப் பெருக உய்த்து
மெய்ப்புகழ் விளங்கும் அவ்வூர்
விரும்பவோர் வணிகன் பெற்ற
செப்பருங் கன்னி தன்னைத்
திருமலி வதுவை செய்தான்.
12.240   12 st/nd Thirumurai   Song # 62   சேக்கிழார்   திருநின்ற சருக்கம்  
அப்பரி சருளப் பெற்ற
அம்மையுஞ் செம்மை வேத
மெய்ப்பொரு ளானார் தம்மை
விடைகொண்டு வணங்கிப் போந்து
செப்பரும் பெருமை அன்பால்
திகழ்திரு வாலங் காடாம்
நற்பதி தலையி னாலே
நடந்துபுக் கடைந்தார் அன்றே.
12.250   12 st/nd Thirumurai   Song # 43   சேக்கிழார்   திருநின்ற சருக்கம்  
அப்பூதி யடிக ளார்தம்
அடிமையைச் சிறப்பித் தான்ற
மெய்ப்பூதி அணிந்தார் தம்மை
விரும்புசொன் மாலை வேய்ந்த
இப்பூதி பெற்ற நல்லோர்
எல்லையில் அன்பால் என்றும்
செப்பூதி யங்கைக் கொண்டார்
திருநாவுக் கரசர் பாதம்.
12.280   12 st/nd Thirumurai   Song # 3   சேக்கிழார்   வம்பறா வரிவண்டுச் சருக்கம்  
அப்பதிதான் அந்தணர்தம்
கிடைகள்அரு மறைமுறையே
செப்பும்ஒலி வளர்பூகச்
செழுஞ்சோலை புறஞ்சூழ
ஒப்பில்நகர் ஓங்குதலால்
உகக்கடைநாள் அன்றியே
எப்பொழுதுங் கடல்மேலே
மிதப்பதென இசைந்துளதால்.
12.280   12 st/nd Thirumurai   Song # 15   சேக்கிழார்   வம்பறா வரிவண்டுச் சருக்கம்  
அப்பதியின் அந்தணர்தங்
குடிமுதல்வர் ஆசில்மறை
கைப்படுத்த சீலத்துக்
கவுணியர்கோத் திரம்விளங்கச்
செப்புநெறி வழிவந்தார்
சிவபாத விருதயர்என்று
இப்புவிவா ழத்தவஞ்செய்
இயல்பினார் உளரானார்.
12.280   12 st/nd Thirumurai   Song # 27   சேக்கிழார்   வம்பறா வரிவண்டுச் சருக்கம்  
அப்பொழுது பொற்புறு திருக்கழு மலத்தோர்
எப்பெயரி னோரும்அயல் எய்தும்இடை யின்றி
மெய்ப்படு மயிர்ப்புளகம் மேவியறி யாமே
ஒப்பில்களி கூர்வதொர் உவப்புற உரைப்பார்.
12.280   12 st/nd Thirumurai   Song # 87   சேக்கிழார்   வம்பறா வரிவண்டுச் சருக்கம்  
அப்பொழுது அங்கண் அணைந்தது
கண்டவர் அல்லாதார்
முப்புரி நூன்மறை யோர்கள்
உரோம முகிழ்ப்பெய்தி
இப்படி யொப்பதொர் அற்புதம்
எங்குள தென்றென்றே
துப்புறழ் வேணியர் கோயிலின்
வாயில் புறஞ்சூழ.
12.280   12 st/nd Thirumurai   Song # 176   சேக்கிழார்   வம்பறா வரிவண்டுச் சருக்கம்  
அப்பு றத்திடை வணங்கிஅங்
கருளுடன் அணிமணித் திருவாயில்
பொற்பு றத்தொழு தெழுந்துடன்
போதரப் போற்றிய புகழ்ப்பாணர்
நற்ப தந்தொழு தடியனேன்
பதிமுதல்நதி நிவாக் கரை மேய
ஒப்பில் தானங்கள் பணிந்திட
வேண்டும்என் றுரைசெய அதுநேர்வார்.
12.280   12 st/nd Thirumurai   Song # 254   சேக்கிழார்   வம்பறா வரிவண்டுச் சருக்கம்  
அப்பதி பணிந்தருந் தமிழ்பு னைந்துதம்
மெய்ப்படு விருப்பொடு மேவு நாள்அரன்
பொற்பதி பலவுமுன் பணிந்து போந்தனர்
பைப்பணி யவர்கருப் பறிய லூரினில்.
12.280   12 st/nd Thirumurai   Song # 290   சேக்கிழார்   வம்பறா வரிவண்டுச் சருக்கம்  
அப்பதி போற்றி அகல்வார்
அரனார் திருமணஞ்சேரி
செப்பருஞ் சீர்த்தொண்ட ரோடும்
சென்று தொழுதிசை பாடி
எப்பொரு ளுந்தரும் ஈசர்
எதிர்கொள்பா டிப்பதி எய்தி
ஒப்பில் பதிகங்கள் பாடி
ஓங்குவேள் விக்குடி யுற்றார்.
12.280   12 st/nd Thirumurai   Song # 327   சேக்கிழார்   வம்பறா வரிவண்டுச் சருக்கம்  
அப்பாலைக் குடபுலத்தில்
ஆறணிந்தார்அமர்கோயில்
எப்பாலுஞ் சென்றேத்தித்
திருநணா வினைஇறைஞ்சிப்
பைப்பாந்தள் புனைந்தவரைப்
பரவிப்பண் டமர்கின்ற
வைப்பான செங்குன்றூர்
வந்தணைந்து வைகினார்.
12.280   12 st/nd Thirumurai   Song # 337   சேக்கிழார்   வம்பறா வரிவண்டுச் சருக்கம்  
அப்பதி யின்கண் அமர்ந்து
சிலநாளில் அங்ககன்று
துப்புறழ் வேணியர் தானம்
பலவும் தொழுதருளி
முப்புரி நூலுடன் தோலணி
மார்பர் முனிவரொடும்
செப்பருஞ் சீர்த்திருப் பாண்டிக்
கொடுமுடி சென்றணைந்தார்.
12.280   12 st/nd Thirumurai   Song # 354   சேக்கிழார்   வம்பறா வரிவண்டுச் சருக்கம்  
அப்பர்சோற் றுத்துறை சென்றடை வோம்என்
றொப்பில் வண்டமிழ் மாலை ஒருமையால்
செப்பி யேசென்று சேர்ந்தனர் சேர்விலார்
முப்புரம் செற்ற முன்னவர் கோயில்முன்.
12.280   12 st/nd Thirumurai   Song # 399   சேக்கிழார்   வம்பறா வரிவண்டுச் சருக்கம்  
அப்பதியில் அமர்கின்ற
ஆளுடைய பிள்ளையார்
செப்பருஞ்சீர்த் திருவாறை
வடதளியில் சென்றிறைஞ்சி
ஒப்பரிய தமிழ்பாடி
உடனமரும் தொண்டருடன்
எப்பொருளு மாய்நின்றார்
இரும்பூளை எய்தினார்.
12.280   12 st/nd Thirumurai   Song # 449   சேக்கிழார்   வம்பறா வரிவண்டுச் சருக்கம்  
அப்பொழுது திருநீல கண்டஇசைப்
பெரும்பாணர் அதனை விட்டு
மெய்ப்பயமும் பரிவுமுறப் பிள்ளையார்
கழலிணைவீழ்ந் தெழுந்து நோக்கி
இப்பெரியோர் அருள்செய்த திருப்பதிகத்
திசையாழி லேற்பன் என்னச்
செப்பியதிக் கருவியைநான் தொடுதலின்அன்
றோஎன்று தெளிந்து செய்வார்.
12.280   12 st/nd Thirumurai   Song # 539   சேக்கிழார்   வம்பறா வரிவண்டுச் சருக்கம்  
அப்பொழுதின் ஆண்ட
அரசை எதிர்கொண்ட
மெய்ப்பெருமை அந்தணர்கள்
வெங்குருவாழ் வேந்தனார்
பிற்படவந் தெய்தும்
பெரும்பேறு கேட்டுவப்பார்
எப்பரிசி னால்வந்
தணைந்தங் கெதிர்கொண்டார்.
12.280   12 st/nd Thirumurai   Song # 542   சேக்கிழார்   வம்பறா வரிவண்டுச் சருக்கம்  
அப்போ தரையார்
விரிகோ வணவாடை
ஒப்போ தரும்பதிகத்
தோங்கும் இசைபாடி
மெய்ப்போதப் போதமர்ந்தார்
தங்கோயில் மேவினார்
கைப்போது சென்னியின்மேற்
கொண்டு கவுணியனார்.
12.280   12 st/nd Thirumurai   Song # 581   சேக்கிழார்   வம்பறா வரிவண்டுச் சருக்கம்  
அப்பரே வேதவனத் தையர் தம்மை
அபிமுகத் திருவாயில் திறந்து புக்கே
எப்பரிசும் நாம்இறைஞ்ச வேண்டும் நீரே
இவ்வாயில் திருக்காப்பு நீங்குமாறு
மெய்ப் பொருள்வண் டமிழ்பாடி அருளும் என்ன
விளங்குமொழி வேந்தரது மேற்கொண் டென்னை
இப்பரிசு நீரருளிச் செய்தீ ராகில்
இதுசெய்வேன் எனப்பதிகம் எடுத்துப் பாட.
12.280   12 st/nd Thirumurai   Song # 779   சேக்கிழார்   வம்பறா வரிவண்டுச் சருக்கம்  
அப்ப டிக்கெதிர் அமணரும்
அணைந்துறும் அளவில்
ஒப்பில் வண்புகழ்ச் சண்பையர்
காவலர் உரையால்
செப்ப ருந்திறல் மன்னனும்
திருந்தவை முன்னர்
வெப்பு றுந்தழல் அமைக்கென
வினைஞரை விடுத்தான்.
12.280   12 st/nd Thirumurai   Song # 891   சேக்கிழார்   வம்பறா வரிவண்டுச் சருக்கம்  
அப்பதியைத் தொழுதுவட திசைமேற் செல்வார்
அங்கையனல் தரித்தபிரான் அமருங் கோயில்
புக்கிறைஞ்சிப் பலபதியும் தொழுது போற்றிப்
புணரிபொரு தலைகரைவாய் ஒழியப் போந்தே
செப்பரிய புகழ்த்திருவா டானை சேர்ந்து
செந்தமிழ்மா லைகள்சாத்திச் சிவனார் மன்னும்
ஒப்பரிய புனவாயில் போற்றி செய்து
வணங்கினார் உலகுய்ய ஞானம் உண்டார்.
12.280   12 st/nd Thirumurai   Song # 929   சேக்கிழார்   வம்பறா வரிவண்டுச் சருக்கம்  
அப்பரிசங் கவர்மொழிய
ஆண்டஅர சினைக்காணும்
ஒப்பரிய பெருவிருப்பு
மிக்கோங்க ஒளிபெருகும்
மைப்பொருவு கறைக்கண்டர்
கழல்வணங்கி அருள்பெற்றுச்
செப்பரிய புகழ்ப்புகலிப்
பிள்ளையார் செல்கின்றார்.
12.280   12 st/nd Thirumurai   Song # 935   சேக்கிழார்   வம்பறா வரிவண்டுச் சருக்கம்  
அப்பர்தாம் எங்குற்றார்
இப்பொழுதென் றருள்செய்யச்
செப்பரிய புகழ்த்திருநா
வுக்கரசர் செப்புவார்
ஒப்பரிய தவஞ்செய்தேன்
ஆதலினால் உம்மடிகள்
இப்பொழுது தாங்கிவரப்
பெற்றுய்ந்தேன் யான்என்றார்.
12.280   12 st/nd Thirumurai   Song # 961   சேக்கிழார்   வம்பறா வரிவண்டுச் சருக்கம்  
அப்பர் நீர்இனி இங்கொழிந்
தருமறை அங்கிவேட் டன்போடுந்
துப்பு நேர்சடை யார்தமைப்
பரவியே தொழுதிரு மெனச்சொல்லி
மெய்ப்பெருந் தொண்டர் மீள்பவர்
தமக்கெலாம் விடைகொடுத் தருளிப்போய்
ஒப்பி லாதவர் தமைவழி
யிடைப்பணிந் துருகுமன் பொடுசெல்வார்.
12.280   12 st/nd Thirumurai   Song # 1002   சேக்கிழார்   வம்பறா வரிவண்டுச் சருக்கம்  
அப்பதியில் விருப்பினொடும்
அங்கணரைப் பணிந்தமர்வார்
செப்பரிய புகழ்ப்பாலித்
திருநதியின் தென்கரைபோய்
மைப்பொலியுங் கண்டர்திரு
மாற்பேறு மகிழ்ந்திறைஞ்சி
முப்புரஞ்செற் றவர்தம்மை
மொழிமாலை சாத்தினார்.
12.290   12 st/nd Thirumurai   Song # 83   சேக்கிழார்   வம்பறா வரிவண்டுச் சருக்கம்  
அப்பதி நீங்கி யருளினாற் போகி
ஆவின்அஞ் சாடுவார் நீடும்
எப்பெயர்ப் பதியு மிருமருங் கிறைஞ்சி
இறைவர்பைஞ் ஞீலியை யெய்திப்
பைப்பணி யணிவார் கோபுர மிறைஞ்சிப்
பாங்கமர் புடைவலங் கொண்டு
துப்புறழ் வேணி யார்கழல் தொழுவார்
தோன்றுகங் காளரைக் கண்டார்.
12.290   12 st/nd Thirumurai   Song # 97   சேக்கிழார்   வம்பறா வரிவண்டுச் சருக்கம்  
அப்ப திக்கண் அமர்ந்த தொண்டரும்
அன்று வெண்ணெய்நல் லூரினில்
ஒப்ப ருந்தனி வேதி யன்பழ
வோலை காட்டிநின் றாண்டவர்
இப்ப திக்கண்வந் தெய்த என்ன
தவங்கள் என்றெதிர் கொள்ளவே
முப்பு ரங்கள் எரித்த சேவகர்
கோயில் வாயிலில் முன்னினார்.
12.290   12 st/nd Thirumurai   Song # 151   சேக்கிழார்   வம்பறா வரிவண்டுச் சருக்கம்  
அப்பதியில் அன்பருடன்
அமர்ந்தகல்வார் அகலிடத்தில்
செப்பரிய புகழ்நீடூர்
பணியாது செல்பொழுதில்
ஒப்பரிய வுணர்வினால்
நினைந்தருளித் தொழலுறுவார்
மெய்ப்பொருள்வண் தமிழ்மாலை
விளம்பியே மீண்டணைந்தார்.
12.370   12 st/nd Thirumurai   Song # 100   சேக்கிழார்   வார்கொண்ட வனமுலையாள் சருக்கம்  
அப்பதியில் அமர்ந்திறைஞ்சிச்
சிலநாளில் ஆரூரர்
முப்பெருவேந் தர்களோடு
முதன்மதுரை நகரெய்தி
மெய்ப்பரிவில் திருவால
வாயுடையார் விரைமலர்த்தாள்
எப்பொழுதும் பணிந்தேத்தி
இன்புற்றங் கமர்கின்றார்.
12.450   12 st/nd Thirumurai   Song # 12   சேக்கிழார்   பொய்யடிமை யில்லாத புலவர் சருக்கம்  
அப்பணியால் வரும்பேறும்
அவ்வினைஞர் பலருளராய்
எப்பரிசுங் கிடையாத
வகைமுட்ட இடருழந்தே
ஒப்பில்மனை விற்றெரிக்கு
முறுபொருளும் மாண்டதற்பின்
செப்பருஞ்சீர் மனையாரை
விற்பதற்குத் தேடுவார்.
12.480   12 st/nd Thirumurai   Song # 2   சேக்கிழார்   கறைக் கண்டன் சருக்கம்  
அப்பதியில் குடிமுதல்வர்க்
கதிபராய் அளவிறந்த
எப்பொருளும் முடிவறியா
எய்துபெருஞ் செல்வத்தார்
ஒப்பில்பெருங் குணத்தினால்
உலகின்மேற் படவெழுந்தார்
மெய்ப்பொருளா வனஈசர்
கழல்என்னும் விருப்புடையார்.
12.650   12 st/nd Thirumurai   Song # 12   சேக்கிழார்   மன்னிய சீர்ச் சருக்கம்  
அப்பதி யணைந்து பூசல்
அன்பரிங் கமைத்த கோயில்
எப்புடை யதுஎன் றுஅங்கண்
எய்தினார் தம்மைக் கேட்கச்
செப்பிய பூசல் கோயில்
செய்ததொன் றில்லை யென்றார்
மெய்ப்பெரு மறையோர் எல்லாம்
வருகஎன் றுரைத்தான் வேந்தன்.
12.680   12 st/nd Thirumurai   Song # 2   சேக்கிழார்   மன்னிய சீர்ச் சருக்கம்  
அப்பூங் கானில் வெண்ணாவல்
அதன்கீழ் முன்னாள் அரிதேடும்
மெய்ப்பூங் கழலார் வெளிப்படலும்
மிக்க தவத்தோர் வெள்ளானை
கைப்பூம் புனலு முகந்தாட்டிக்
கமழ்பூங் கொத்தும் அணிந்திறைஞ்சி
மைப்பூங் குவளைக் களத்தாரை
நாளும் வழிபட் டொழுகுமால்.

This page was last modified on Thu, 09 May 2024 05:33:06 +0000
          send corrections and suggestions to admin-at-sivaya.org

thirumurai all list