சிவய.திருக்கூட்டம்
sivaya.org
Please set your language preference
by clicking below languages link
Search this site with
words in any language e.g. पोऱ्‌ऱि
song/pathigam/paasuram numbers: e.g. 7.039

This page in Tamil   Hindi/Sanskrit   Telugu   Malayalam   Bengali   Kannada   English   ITRANS    Marati  Gujarathi   Oriya   Singala   Tibetian   Thai   Japanese   Urdu   Cyrillic/Russian   Spanish   Hebrew  
Selected thirumurai      thirumurai Thalangal      All thirumurai Songs     

Thirumurai   1   2   3   4   5   6   7   8   9   10   11   12

Pathigam first Letter :                                          
Paadal first letter:     (  .                                                
Search: Filter By: Order By:
திருமுறை 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12 இருந்து பாடல் சொல் அம்
அம்     அம்புயம்     அம்பன்ன     அம்மனை     அம்மையும்     அம்முதல்     அம்பர     அம்பலம்     அம்பல     அம்பவள     அம்பலவர்     அம்பரம்     அம்புந்து     அம்பொன்     அம்பிகைசெம்     அம்மொழி     அம்மலர்சீர்ப்     அம்ம     அம்மருங்கு     அம்பிகை     அம்பர்     அம்புய     அம்மலர்க்     அம்பொன்மலைக்     அம்பலவ     அம்மாற்றங்     அம்மானை,     அம்பின்     அம்மான்     அம்பு     அம்மானை,-     அம்மை     அம்மானே!     அம்பலத்தே     அம்மையே!     அம்பரா     அம்பளிங்கு     அம்பலத்    
1.028   1 st/nd Thirumurai   Song # 11   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
அம் தண் சோற்றுத்துறை எம் ஆதியைச்
சிந்தை செய்ம்மின், அடியர் ஆயினீர்!
சந்தம் பரவு ஞானசம்பந்தன்
வந்த ஆறே புனைதல் வழிபாடே.

1.085   1 st/nd Thirumurai   Song # 7   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
அம் கோல்வளை மங்கை காண, அனல் ஏந்தி,
கொங்கு ஆர் நறுங்கொன்றை சூடி, குழகு ஆக,
வெங்காடு இடம் ஆக, வெந்தீ விளையாடும்
நம் கோன்; நமை ஆள்வான்-நல்லம் நகரானே.

1.088   1 st/nd Thirumurai   Song # 11   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
அம் தண்புனல் வைகை அணி ஆப்பனூர் மேய
சந்த மலர்க்கொன்றை சடைமேல் உடையானை,
நந்தி அடி பரவும் நல ஞானசம்பந்தன்
சந்தம் இவை வல்லார் தடுமாற்று அறுப்பாரே.

1.094   1 st/nd Thirumurai   Song # 7   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
அம் பொன்-ஆலவாய் நம்பனார் கழல்
நம்பி வாழ்பவர் துன்பம் வீடுமே.

2.012   2 st/nd Thirumurai   Song # 11   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
அம் தண் பூங்கச்சி ஏகம்பனை, அம்மானை,
கந்து அண் பூங்காழிஊரன் கலிக்கோவையால்
சந்தமே பாட வல்ல தமிழ் ஞானசம்
பந்தன் சொல் பாடி ஆட, கெடும், பாவமே.

2.039   2 st/nd Thirumurai   Song # 11   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
அம்மானை, அருந்தவம் ஆகிநின்ற
அமரர்பெருமான், பதி ஆன உன்னி,
கொய்ம் மா மலர்ச்சோலை குலாவு கொச்சைக்கு
இறைவன் சிவ ஞானசம்பந்தன் சொன்ன
இம் மாலை ஈர் ஐந்தும் இரு நிலத்தில்
இரவும் பகலும் நினைந்து ஏத்தி நின்று,
விம்மா, வெருவா, விரும்பும்(ம்) அடியார்,
விதியார் பிரியார் சிவன் சேவடிக்கே.

2.051   2 st/nd Thirumurai   Song # 4   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
அம்பின் நேர் தடங்கண்ணினார் உடன் ஆடவர் பயில் மாட மாளிகை
செம்பொன் ஆர் பொழில் சூழ்ந்து அழகு ஆய திருக்களருள
என்பு பூண்டது ஓர் மேனி எம் இறைவா! இணை அடி போற்றி நின்றவர்க்கு
அன்பு செய்தவனே! அடைந்தார்க்கு அருளாயே!

2.052   2 st/nd Thirumurai   Song # 4   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
அம்பின் நேர் விழி மங்கைமார் பலர் ஆடகம் பெறு மாட மாளிகைக்
கொம்பின் நேர் துகிலின் கொடி ஆடு கோட்டாற்றில்,
நம்பனே! நடனே! நலம் திகழ் நாதனே! என்று காதல் செய்தவர்
தம் பின் நேர்ந்து அறியார், தடுமாற்ற வல்வினையே.

2.053   2 st/nd Thirumurai   Song # 9   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
அம் தண் மாதவி, புன்னை, நல்ல அசோகமும்(ம்), அரவிந்தம், மல்லிகை,
பைந் தண் நாழல்கள், சூழ் புறவு ஆர் பனங்காட்டூர்,
எந்து இள(ம்) முகில்வண்ணன், நான்முகன், என்று இவர்க்கு
அரிது ஆய் நிமிர்ந்தது ஒர்
சந்தம் ஆயவனே! தவத்தார்க்கு அருளாயே!

2.074   2 st/nd Thirumurai   Song # 12   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
அம்மான் சேர் கழுமலம், மாச் சிரபுரம், வெங்குரு,
கொச்சை, புறவம், அம் சீர்
மெய்ம் மானத்து ஒண் புகலி, மிகு காழி, தோணிபுரம்,
தேவர் கோன் ஊர்,
அம் மால் மன் உயர் சண்பை, தராய், அயன் ஊர், வழி
முடக்கும் ஆவின்பாச்சல்
தம்மான் ஒன்றிய ஞானசம்பந்தன் தமிழ் கற்போர்,
தக்கோர் தாமே.

2.121   2 st/nd Thirumurai   Song # 11   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
அம் தண் நல்லார் அகன் காழியுள் ஞானசம்
பந்தன், நல்லார் பயில் பாதிரிப்புலியூர்தனுள்
சந்த மாலைத்தமிழ் பத்து இவை தரித்தார்கள் மேல்,
வந்து தீய(வ்) அடையாமையால், வினை மாயுமே.

3.014   3 st/nd Thirumurai   Song # 3   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
அம் சுரும்பு அணி மலர் அமுதம் மாந்தி, தேன்
பஞ்சுரம் பயிற்று பைஞ்ஞீலி மேவலான்-
வெஞ்சுரம்தனில், உமை வெருவ, வந்தது ஓர்
குஞ்சரம் பட, உரி போர்த்த கொள்கையே!

3.040   3 st/nd Thirumurai   Song # 11   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
அம் தண் காழிப் பந்தன் சொல்லைச்
சிந்தை செய்வோர் உய்ந்து உளோரே.

3.044   3 st/nd Thirumurai   Song # 11   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
அம் தண் காழி அருமறை ஞானசம்-
பந்தன், பாய் புனல் சூழ் கழிப்பாலையைச்
சிந்தையால் சொன்ன செந்தமிழ் வல்லவர்
முந்தி வான் உலகு ஆடல் முறைமையே.

3.067   3 st/nd Thirumurai   Song # 4   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
அம் கண் மதி, கங்கை நதி, வெங்கண் அரவங்கள், எழில் தங்கும் இதழித்
துங்க மலர், தங்கு சடை அங்கி நிகர் எங்கள் இறை தங்கும் இடம் ஆம்
வெங்கதிர் விளங்கு உலகம் எங்கும் எதிர் பொங்கு எரி புலன்கள் களைவோர்
வெங் குரு விளங்கி உமைபங்கர் சரணங்கள் பணி வெங்குரு அதே.

3.068   3 st/nd Thirumurai   Song # 11   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
அம் தண் வரை வந்த புனல் தந்த திரை சந்தனமொடு உந்தி, அகிலும்
கந்தமலர் கொந்தினொடு மந்திபல சிந்து கயிலாயமலைமேல்,
எந்தை அடி வந்து அணுகு சந்தமொடு செந்தமிழ் இசைந்த புகலிப்
பந்தன் உரை சிந்தை செய, வந்த வினை நைந்து, பரலோகம் எளிதே.

3.070   3 st/nd Thirumurai   Song # 2   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
அம் தண்மதி செஞ்சடையர், அம் கண் எழில் கொன்றையொடு அணிந்து, அழகர் ஆம்
எம்தம் அடிகட்கு இனிய தானம் அது, வேண்டில், எழில் ஆர் பதி அது ஆம்
கந்தம் மலி சந்தினொடு கார் அகிலும் வாரி வரு காவிரியுளால்
வந்த திரை உந்தி, எதிர் மந்தி மலர் சிந்தும் > மயிலாடுதுறையே.

3.077   3 st/nd Thirumurai   Song # 3   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
அம்பு அனைய கண் உமை மடந்தை அவள் அஞ்சி வெருவ, சினம் உடைக்
கம்ப மதயானை உரிசெய்த அரனார் கருதி மேய இடம் ஆம்
வம்பு மலி சோலை புடை சூழ, மணி மாடம் அது நீடி, அழகு ஆர்
உம்பரவர்கோன் நகரம் என்ன, மிக மன் உதவி மாணிகுழியே.

3.088   3 st/nd Thirumurai   Song # 3   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
அம் கதிர் ஒளியினர்; அரை இடை மிளிர்வது ஒர் அரவொடு
செங்கதிர் அன நிறம், அனையது ஒர் செழு மணி மார்பினர்;
சங்கு, அதிர் பறை, குழல், முழவினொடு, இசை தரு சரிதையர்
வெங்கதிர் உறும் மழு உடையவர்; இடம் எனில் விளமரே.

4.041   4 st/nd Thirumurai   Song # 8   திருநாவுக்கரசர்   தேவாரம்  
அம் கதிரோன் அவ(ன்)னை அண்ணலாக் கருத வேண்டா;
வெங் கதிரோன் வழீயே போவதற்கு அமைந்து கொண் மின்!
அம் கதிரோன் அவ(ன்)னை உடன் வைத்த ஆதிமூர்த்தி-
செங் கதிரோன் வணங்கும் திருச் சோற்றுத் துறையனாரே.

4.058   4 st/nd Thirumurai   Song # 9   திருநாவுக்கரசர்   தேவாரம்  
அம் கண் மால் உடையர் ஆய ஐவரால் ஆட்டுணாதே
உங்கள் மால் தீர வேண்டில் உள்ளத்தால் உள்கி ஏத்தும்!
செங்கண் மால் பரவி ஏத்திச் சிவன் என நின்ற செல்வர்
பைங்கண் வெள் ஏறு அது ஏறிப் பருப்பதம் நோக்கினாரே.

4.086   4 st/nd Thirumurai   Song # 10   திருநாவுக்கரசர்   தேவாரம்  
அம் கள் கடுக்கைக்கு முல்லைப் புறவம்; முறுவல் செய்யும்
பைங்கண்-தலைக்கு சுடலைக் களரி; பரு மணி சேர்
கங்கைக்கு வேலை; அரவுக்குப் புற்று; கலை நிரம்பாத்
திங்கட்கு வானம்-திரு ஒற்றியூரர் திருமுடியே.

4.104   4 st/nd Thirumurai   Song # 3   திருநாவுக்கரசர்   தேவாரம்  
அம் மலர்க் கண்ணியர் அஞ்சனம்,- செந்துவர்வாய் இளையார்-
வெம் முலைச் சாந்தம், விலை பெறு மாலை, எடுத்தவர்கள்,
தம் மருங்கிற்கு இரங்கார், தடந் தோள் மெலியக் குடைவார்
விம்மு புனல் கெடிலக் கரைத்தே-எந்தை வீரட்டமே.

5.098   5 st/nd Thirumurai   Song # 4   திருநாவுக்கரசர்   தேவாரம்  
அம்மானை,- அமுதின் அமுதே! என்று-
தம்மானை, தத்துவத்து அடியார் தொழும்
செம் மான(ந்) நிறம் போல்வது ஓர் சிந்தையுள்
எம்மானை, கண்டுகொண்டது, என் உள்ளமே.

6.006   6 st/nd Thirumurai   Song # 10   திருநாவுக்கரசர்   தேவாரம்  
அம் தாமரைப்போது அலர்ந்த(வ்) அடி;
  அரக்கனையும் ஆற்றல் அழித்த(வ்) அடி;
முந்துஆகி முன்னே முளைத்த(வ்) அடி; முழங்கு
அழல் ஆய் நீண்ட எம் மூர்த்தி(ய்) அடி;
பந்து ஆடு மெல்விரலாள் பாகன்(ன்) அடி;
பவளத்தடவரையே போல்வான் அடி;
வெந்தார் சுடலை நீறு ஆடும்(ம்) அடி-வீரட்டம்
காதல் விமலன்(ன்) அடி.

6.023   6 st/nd Thirumurai   Song # 8   திருநாவுக்கரசர்   தேவாரம்  
அம்மை பயக்கும் அமிர்து கண்டாய்; அம் தேன் தெளிகண்டாய்; ஆக்கம் செய்திட்டு
இம்மை பயக்கும் இறைவன் கண்டாய்; என் நெஞ்சே! உன்னில் இனியான் கண்டாய்;
மெய்ம்மையே ஞான விளக்குக் கண்டாய்; வெண் காடன் கண்டாய்; வினைகள் போக
மம்மர் அறுக்கும் மருந்து கண்டாய்-மறைக்காட்டு உறையும் மணாளன் தானே.

6.037   6 st/nd Thirumurai   Song # 3   திருநாவுக்கரசர்   தேவாரம்  
அம் சுண்ண வண்ணனே! என்றேன், நானே;
அடியார்கட்கு ஆர் அமுதே! என்றேன், நானே;
நஞ்சு அணி கண்டனே! என்றேன், நானே; நாவலர்கள் நால்மறையே! என்றேன், நானே;
நெஞ்சு உணர உள் புக்கு இருந்தபோது நிறையும் அமுதமே! என்றேன், நானே;
அஞ்சாதே ஆள்வானே! ஐயாற(ன்)னே! என்று என்றே நான் அரற்றி நைகின்றேனே!.

7.019   7 st/nd Thirumurai   Song # 3   சுந்தரமூர்த்தி சுவாமிகள்   திருப்பாட்டு  
அம் கையில் மூ இலை வேலர்; அமரர் அடி பரவ,
சங்கையை நீங்க, அருளித் தடங்கடல் நஞ்சம் உண்டார்;
மங்கை ஒர்பாகர்; மகிழ்ந்த இடம் வளம் மல்கு புனல்
செங்கயல் பாயும் வயல் பொலியும் திரு நின்றியூரே .

7.096   7 st/nd Thirumurai   Song # 6   சுந்தரமூர்த்தி சுவாமிகள்   திருப்பாட்டு  
அம்மானே! ஆகம சீலர்க்கு அருள் நல்கும்
பெம்மானே பேர் அருளாளன் பிடவூரன்
தம்மானே! தண்தமிழ்நூல் புலவாணர்க்கு ஓர்
அம்மானே! பரவையுள்மண்டளி அம்மானே!

7.103   7 st/nd Thirumurai   Song # 1      
அம்மானே! ஆனந்த வெள்ள மூர்த்தி! அருமறையுள் அருமறையின் பொருளே! வானோர்
தம்மால் ஒன்று(று) அறிவு(வு) அரிய சிவனும், மாலும், சதுமுகனும், உடன் ஆக விளங்கும் சோதி!
இம்மாயப் பிறப்பு(பு) ஆகி, உலகும் தானாய், இரவு(வு) ஆகிப் பகல் ஆகிக் கலந்து நின்ற
அம்மானே! அம்பரம் மீது(து) எழுந்து தோன்றும் ஆதித்தா! அடியேன் என் இடர்தீர்ப் பாயே.

8.112   8 st/nd Thirumurai   Song # 17   மாணிக்க வாசகர்    திருவாசகம்  
அம்பலத்தே கூத்து ஆடி, அமுது செய்யப் பலி திரியும்
நம்பனையும் தேவன் என்று நண்ணும்அது என்? ஏடீ!
நம்பனையும் ஆமா கேள்; நான்மறைகள் தாம் அறியா,
எம்பெருமான், ஈசா' என்று ஏத்தின, காண்; சாழலோ!

8.112   8 st/nd Thirumurai   Song # 19   மாணிக்க வாசகர்    திருவாசகம்  
அம்பரம் ஆம், புள்ளித் தோல்; ஆலாலம், ஆர் அமுதம்;
எம்பெருமான் உண்ட சதிர், எனக்கு அறிய இயம்புல் ஏடீ!
எம்பெருமான் ஏது உடுத்து, அங்கு ஏது அமுது செய்திடினும்,
தம் பெருமை தான் அறியாத் தன்மையன், காண்; சாழலோ!

8.137   8 st/nd Thirumurai   Song # 3   மாணிக்க வாசகர்    திருவாசகம்  
அம்மையே! அப்பா! ஒப்பு இலா மணியே! அன்பினில் விளைந்த ஆர் அமுதே!
பொய்ம்மையே பெருக்கி, பொழுதினைச் சுருக்கும், புழுத் தலைப் புலையனேன் தனக்கு,
செம்மையே ஆய சிவபதம் அளித்த செல்வமே! சிவபெருமானே!
இம்மையே, உன்னைச் சிக்கெனப் பிடித்தேன்; எங்கு எழுந்தருளுவது, இனியே?

8.143   8 st/nd Thirumurai   Song # 10   மாணிக்க வாசகர்    திருவாசகம்  
அம் கணன், எங்கள் அமரர் பெம்மான், அடியார்க்கு அமுதன், அவனி வந்த
எங்கள் பிரான், இரும் பாசம் தீர இக பரம் ஆயது ஒர் இன்பம் எய்த,
சங்கம் கவர்ந்து, வண் சாத்தினோடும், சதுரன், பெருந்துறை ஆளி, அன்று,
மங்கையர் மல்கு மதுரை சேர்ந்த வகை அறிவார் எம்பிரான் ஆவாரே.

9.011   9 st/nd Thirumurai   Song # 9   கருவூர்த் தேவர்   திருவிசைப்பா  
அம்பரா அனலா அனிலமே புவிநீ
   அம்புவே இந்துவே இரவி
உம்பரால் ஒன்றும் அறிவொணா அணுவாய்
   ஒழிவற நிறைந்தஒண் சுடரே
மொய்ம்பராய் நலஞ்சொல் மூதறி வாளர்
   முகத்தலை யகத்தமர்ந் தெனக்கே
எம்பிரா னாகி ஆண்டநீ மீண்டே
   எந்தையும் தாயும்ஆ யினையே. 

9.012   9 st/nd Thirumurai   Song # 3   கருவூர்த் தேவர்   திருவிசைப்பா  
அம்பளிங்கு பகலோன்பால்
   அடைபற்றாய் இவள்மனத்தின்
முன்பளிந்த காதலும்நின்
   முகந்தோன்ற விளங்கிற்றால்
வம்பளிந்த கனியேஎன்
   மருந்தேநல் வளர்முக்கட்
செம்பளிங்கே பொழிற்கோடைத்
   திரைலோக்கிய சுந்தரனே.

9.026   9 st/nd Thirumurai   Song # 3   புருடோத்தம நம்பி   திருவிசைப்பா  
அம்பலத் தருநட மாடவேயும்
   யாதுகொல் விளைவதென் றஞ்சி நெஞ்சம்
உம்பர்கள் வன்பழி யாளர் முன்னே
   ஊட்டினர் நஞ்சைஎன் றேயும் உய்யேன்
வன்பல படையுடைப் பூதஞ் சூழ
   வானவர் கணங்களை மாற்றி யாங்கே
என்பெரும் பயலைமை தீரும் வண்ணம்
   எழுந்தரு ளாய்எங்கள் வீதி யூடே.

10.403   10 st/nd Thirumurai   Song # 1   திருமூலர்   திருமந்திரம்  
அம்புயம் நீலம் கழுநீர் அணிநெய்தல்
வம்பவிழ் பூகமும் மாதவி மந்தாரம்
தும்பை வகுளம் சுரபுன்னை மல்லிகை
செண்பகம் பாதிரி செவ்வந்தி சாத்திடே.

10.407   10 st/nd Thirumurai   Song # 23   திருமூலர்   திருமந்திரம்  
அம்பன்ன கண்ணி அரிவை மனோன்மனி
கொம்பன்ன நுண்ணிடைக் கோதை குலாவிய
செம்பொன்செய் யாக்கை செறிகமழ் நாடொறும்
நம்பனை நோக்கி நவிலுகின் றாளே.

10.408   10 st/nd Thirumurai   Song # 99   திருமூலர்   திருமந்திரம்  
அம்மனை அம்மை அரிவை மனோன்மனி
செம்மனை செய்து திருமக ளாய்நிற்கும்
இம்மனை செய்த இருநில மங்கையும்
அம்மனை யாகி அமர்ந்துநின் றாளே.

10.408   10 st/nd Thirumurai   Song # 100   திருமூலர்   திருமந்திரம்  
அம்மையும் அத்தனும் அன்புற்ற தல்லது
அம்மையும் அத்தனும் ஆரறிவார் என்னை
அம்மையொ டத்தனும் யானும் உடனிருந்
தம்மையொ டத்தனை யான்புரிந் தேனே. 9,

10.409   10 st/nd Thirumurai   Song # 10   திருமூலர்   திருமந்திரம்  
அம்முதல் ஆறும்அவ் ஆதி எழுத்தாகும்
எம்முதல் ஆறும்அவ் அம்மை எழுத்தாகும்
இரும்முதல் நாலும் இருந்திடு வன்னியே
இரும்முத லாகும் எழுத்தவை எல்லாம்.

10.902   10 st/nd Thirumurai   Song # 18   திருமூலர்   திருமந்திரம்  
அம்பர நாதன் அகலிட நீள்பொழில்
தன்பர மல்லது தாம் `அறியோம்` என்பர்
உம்பருள் வானவர் தானவர் கண்டிலர்
எம்பெரு மான்அருள் பெற்றிருந் தாரே.

10.914   10 st/nd Thirumurai   Song # 11   திருமூலர்   திருமந்திரம்  
அம்பலம் ஆடரங் காக அதன்மீதே
எம்பரன் ஆடும் இருதாளின் ஈரொலி
உம்பர மாம் நாதத்து ரேகையுள்
தம்பத மாய்நின்று தான்வந் தருளுமே.

10.915   10 st/nd Thirumurai   Song # 14   திருமூலர்   திருமந்திரம்  
அம்பல மாவ அகில சராசரம்
அம்பல மாவன ஆதிப் பிரானடி
அம்பல மாவன அப்புத்தீ மண்டலம்
அம்பல மாவன அஞ்செழுத் தாமே.

11.010   11 st/nd Thirumurai   Song # 3   நக்கீரதேவ நாயனார்   திருஈங்கோய்மலை எழுபது  
அம்பவள வாய்மகளிர் அம்மனைக்குத் தம்மனையைச்
செம்பவளந் தாவென்னச் சீர்க்குறத்தி கொம்பின்
இறுதலையினாற் கிளைக்கும் ஈங்கோயே நம்மேல்
மறுதலைநோய் தீர்ப்பான் மலை.

11.026   11 st/nd Thirumurai   Song # 31   பட்டினத்துப் பிள்ளையார்   கோயில் நான்மணிமாலை  
அம்பலவர் அங்கணர் அடைந்தவர் தமக்கே
அன்புடையர் என்னுமிதென் ஆனையை யுரித்தே
கம்பலம் உவந்தருளு வீர்மதனன் வேவக்
கண்டருளு வீர்பெரிய காதலறி யாதே
வம்பலர் நிறைந்துவசை பேசவொரு மாடே
வாடையுயிர் ஈரமணி மாமையும் இழந்தென்
கொம்பல மருந்தகைமை கண்டுதக வின்றிக்
கொன்றையரு ளீர்கொடியிர் என்றருளு வீரே.

11.029   11 st/nd Thirumurai   Song # 34   பட்டினத்துப் பிள்ளையார்   திருஏகம்பமுடையார் திருவந்தாதி  
அம்பரம் கால்அனல் நீர்நிலம்
திங்கள் அருக்கன்அணு
வம்பரங் கொள்வதொர் வேழத்
துரியவன் தன்னுருவாம்
எம்பரன் கச்சியுள் ஏகம்பத்
தானிடை யாதடைவான்
நம்பரன் தன்னடி யாரறி
வார்கட்கு நற்றுணையே.

11.038   11 st/nd Thirumurai   Song # 68   நம்பியாண்டார் நம்பி   ஆளுடையபிள்ளையார் திருக்கலம்பகம்  
அம்புந்து கண்ணிமைக்கும்
  ஆன நுதல்வியர்க்கும்
வம்புந்து கோதை
  மலர்வாடும் - சம்பந்தன்
காமரு கழுமலம் அனையாள்
ஆமிவள் அணங்கலள்
  அடிநிலத் தனவே. 42
  பதிக வகை: பன்னிருசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்

12.040   12 st/nd Thirumurai   Song # 1   சேக்கிழார்   தில்லை வாழ் அந்தணர் சருக்கம்  
அம்பொன் நீடிய அம்ப
லத்தினில் ஆடு வார்அடி சூடுவார்
தம்பி ரானடி மைத்தி றத்துயர்
சால்பின் மேன்மைத ரித்துளார்
நம்பு வாய்மையில் நீடு சூத்திர
நற்கு லஞ்செய்த வத்தினால்
இம்பர் ஞாலம் விளக்கி னார்இளை
யான்கு டிப்பதி மாறனார்.
12.190   12 st/nd Thirumurai   Song # 14   சேக்கிழார்   மும்மையால் உலகாண்ட சருக்கம்  
அம்பொன் வார்குழல் கொடிச்சியர் உடன்அர மகளிர்
வம்பு லாமலர்ச் சுனைபடிந் தாடுநீள் வரைப்பின்
உம்பர் நாயகர் திருக்கழுக் குன்றமும் உடைத்தால்
கொம்பர் வண்டுசூழ் குறிஞ்சிசெய் தவங்குறை யுளதோ.
12.210   12 st/nd Thirumurai   Song # 183   சேக்கிழார்   திருநின்ற சருக்கம்  
அம்பிகைசெம் பொற்கிண்ணத் தமுதஞா
னங்கொடுப்ப அழுகை தீர்ந்த
செம்பவள வாய்ப்பிள்ளை திருநாவுக்
கரசரெனச் சிறந்த சீர்த்தி
எம்பெருமக் களும்இயைந்த கூட்டத்தில்
அரனடியார் இன்பம் எய்தி
உம்பர்களும் போற்றிசைப்பச் சிவம்பெருகும்
ஒலிநிறைத்தார் உலகம் எல்லாம்.
12.210   12 st/nd Thirumurai   Song # 236   சேக்கிழார்   திருநின்ற சருக்கம்  
அம்மொழி மாலைச் செந்தமிழ்
கேளா அணிசண்பை
மைம்மலி கண்டத் தண்டர்
பிரானார் மகனாரும்
கொய்ம்மலர் வாவித் தென்திரு
வாரூர் கும்பிட்டே
உம்முடன் வந்திங் குடன்அமர்
வேன்என் றுரைசெய்தார்.
12.210   12 st/nd Thirumurai   Song # 341   சேக்கிழார்   திருநின்ற சருக்கம்  
அம்மலர்சீர்ப் பதியைஅகன்
றயல்உளவாம் பதிஅனைத்தின்
மைம்மருவுங் களத்தாரை
வணங்கிமகிழ் வொடும்போற்றி
மெய்ம்மைநிலை வழுவாத
வேளாள விழுக்குடிமைச்
செம்மையினார் பழையனூர்த்
திருஆல வனம்பணிந்தார்.
12.210   12 st/nd Thirumurai   Song # 350   சேக்கிழார்   திருநின்ற சருக்கம்  
அம்ம ருங்குக டந்து போமவர்
ஆர்கொள் சூல அயிற்படைச்
செம்மல் வெண்கயி லைப்பொ ருப்பைநி
னைந்தெ ழுந்ததொர் சிந்தையால்
எம்ம ருங்குமொர் காத லின்றி
இரண்டு பாலும் வியந்துளோர்
கைம்ம ருங்கணை யுந்தெ லுங்கு
கடந்து கன்னடம் எய்தினார்.
12.240   12 st/nd Thirumurai   Song # 25   சேக்கிழார்   திருநின்ற சருக்கம்  
அம்மருங்கு நின்றயர்வார்
அருங்கனிக்கங் கென்செய்வார்
மெய்ம்மறந்து நினைந்துற்ற
விடத்துதவும் விடையவர்தாள்
தம்மனங்கொண் டுணர்தலுமே
அவரருளால் தாழ்குழலார்
கைம்மருங்கு வந்திருந்த
ததிமதுரக் கனியொன்று.
12.240   12 st/nd Thirumurai   Song # 41   சேக்கிழார்   திருநின்ற சருக்கம்  
அம்மொழி கேட்ட போதே
அணங்கனார் சுற்றத் தாரும்
தம்முறு கிளைஞர்ப் போக்கி
அவன்நிலை தாமும் கேட்டு
மம்மர்கொள் மனத்த ராகி
மற்றவன் இருந்த பாங்கர்க்
கொம்மைவெம் முலையி னாளைக்
கொண்டுபோய் விடுவ தென்றார்.
12.240   12 st/nd Thirumurai   Song # 57   சேக்கிழார்   திருநின்ற சருக்கம்  
அம்பிகை திருவுள் ளத்தின்
அதிசயித் தருளித் தாழ்ந்து
தம்பெரு மானை நோக்கித்
தலையினால் நடந்திங் கேறும்
எம்பெரு மான்ஓர் எற்பின்
யாக்கைஅன் பென்னே என்ன
நம்பெரு மாட்டிக் கங்கு
நாயகன் அருளிச் செய்வான்.
12.280   12 st/nd Thirumurai   Song # 117   சேக்கிழார்   வம்பறா வரிவண்டுச் சருக்கம்  
அம்பிகை அளித்த ஞானம்
அகிலமும் உய்ய வுண்ட
நம்பெருந் தகையார் தம்மை
எதிர்கொண்டு நண்ண வேண்டி
உம்பரும் வணங்கு மெய்ம்மை
உயர்தவத் தொண்ட ரோடு
தம்பெரு விருப்பால் வந்தார்
தலைசைஅந் தணர்க ளெல்லாம்.
12.280   12 st/nd Thirumurai   Song # 417   சேக்கிழார்   வம்பறா வரிவண்டுச் சருக்கம்  
அம்ம லர்த்தடம் பதிபணிந்
தகன்றுபோந் தருகு
மைம்ம லர்க்களத் திறைவர்தங்
கோயில்கள் வணங்கி
நம்ம லத்துயர் தீர்க்கவந்
தருளிய ஞானச்
செம்ம லார்திரு ஆவடு
துறையினைச் சேர்ந்தார்.
12.280   12 st/nd Thirumurai   Song # 530   சேக்கிழார்   வம்பறா வரிவண்டுச் சருக்கம்  
அம்பர் மாநகர் அணைந்துமா
காளத்தில் அண்ணலார் அமர்கின்ற
செம்பொன் மாமதிற் கோயிலை
வலங்கொண்டு திருமுன்பு பணிந்தேத்தி
வம்பு லாம்மலர் தூவிமுன்
பரவியே வண்டமிழ் இசைமாலை
உம்பர் வாழநஞ் சுண்டவர்
தமைப்பணிந் துருகும்அன் பொடுதாழ்ந்தார்.
12.280   12 st/nd Thirumurai   Song # 644   சேக்கிழார்   வம்பறா வரிவண்டுச் சருக்கம்  
அம்மொழி விளம்பி னோர்க்கு
வேண்டுவ அடைய நல்கி
மெய்ம்மையில் விளங்கு காதல்
விருப்புறு வெள்ளம் ஓங்கத்
தம்மையும் அறியா வண்ணம்
கைமிக்குத் தழைத்துப் பொங்கி
விம்மிய மகிழ்ச்சி கூர
மேவிய சிறப்பின் மிக்கார்.
12.280   12 st/nd Thirumurai   Song # 647   சேக்கிழார்   வம்பறா வரிவண்டுச் சருக்கம்  
அம்புய மலராள் போல்வாள்
ஆலவாய் அமர்ந்தார் தம்மைக்
கும்பிட வேண்டு மென்று
கொற்றவன் தனக்கும் கூறித்
தம்பரி சனங்கள் சூழத்
தனித்தடை யோடும் சென்று
நம்பரை வணங்கித் தாமும்
நல்வர வேற்று நின்றார்.
12.280   12 st/nd Thirumurai   Song # 742   சேக்கிழார்   வம்பறா வரிவண்டுச் சருக்கம்  
அம்மலர்க் குழலி னார்க்கும்
அமைச்சர்க்கும் அருள வேண்டிச்
செம்மணிப் பலகை முத்தின்
சிவிகைமேற் கொண்ட போதில்
எம்மருங் கினிலும் தொண்டர்
எடுத்தஆர்ப் பெல்லை இன்றி
மும்மைநீ டுலக மெல்லாம்
முழுதுடன் நிறைந்த தன்றே.
12.280   12 st/nd Thirumurai   Song # 1018   சேக்கிழார்   வம்பறா வரிவண்டுச் சருக்கம்  
அம்பொன்மலைக் கொடிமுலைப்பால் குழைத்த ஞானத்
தமுதுண்ட பிள்ளையார் அணைந்தார் என்று
செம்பொன்மலை வில்லியார் திருக்கா ளத்தி
சேர்ந்ததிருத் தொண்டர் குழாம்அடைய ஈண்டிப்
பம்புசடைத் திருமுனிவர் கபாலக் கையர்
பலவேடச் சைவர்குல வேடர் மற்றும்
உம்பர்தவம் புரிவார்அப் பதியி லுள்ளோர்
உடன்விரும்பி யெதிர்கொள்ள வுழைச்சென் றுற்றார்.
12.290   12 st/nd Thirumurai   Song # 352   சேக்கிழார்   வம்பறா வரிவண்டுச் சருக்கம்  
அம்மொழி விளம்பு நம்பிக்
கையர்தா மருளிச் செய்வார்
நம்மைநீ சொல்ல நாம்போய்ப்
பரவைதன் இல்லம் நண்ணிக்
கொம்மைவெம் முலையி னாட்குன்
திறமெலாங் கூறக் கொள்ளாள்
வெம்மைதான் சொல்லி நாமே
வேண்டவும் மறுத்தா ளென்றார்.
12.360   12 st/nd Thirumurai   Song # 39   சேக்கிழார்   வார்கொண்ட வனமுலையாள் சருக்கம்  
அம்பலவ ரடியாரை
யமுதுசெய்விப் பாரிற்றைக்
கெம்பெருமான் யாவரையுங்
கண்டிலர்தே டிப்போனார்
வம்பெனநீ ரெழுந்தருளி
வருந்திருவே டங்கண்டால்
தம்பெரிய பேறென்றே
மிகமகிழ்வர் இனித்தாழார்.
12.390   12 st/nd Thirumurai   Song # 7   சேக்கிழார்   வார்கொண்ட வனமுலையாள் சருக்கம்  
அம்பொன் நீடும் அம்பலத்துள்
ஆரா வமுதத் திருநடஞ்செய்
தம்பி ரானார் புவியின்மகிழ்
கோயி லெல்லாந் தனித்தனியே
இம்பர் ஞாலங் களிகூர எய்தும்
பெரும்பூ சனை யியற்றி
உம்பர் மகிழ அரசளித்தே
யுமையாள் கணவன் அடிசேர்ந்தார்.
12.410   12 st/nd Thirumurai   Song # 38   சேக்கிழார்   பொய்யடிமை யில்லாத புலவர் சருக்கம்  
அம்மாற்றங் கேட்டழியும்
அமைச்சரையும் இடரகற்றிக்
கைம்மாற்றுஞ் செயல்தாமே
கடனாற்றுங் கருத்துடையார்
செம்மார்க்கந் தலைநின்று
செந்தீமுன் வளர்ப்பித்துப்
பொய்ம்மாற்றுந் திருநீற்றுப்
புனைகோலத் தினிற்பொலிந்தார்.

This page was last modified on Thu, 09 May 2024 05:33:06 +0000
          send corrections and suggestions to admin-at-sivaya.org

thirumurai all list