சிவய.திருக்கூட்டம்
sivaya.org
Please set your language preference
by clicking below languages link
Search this site with
words in any language e.g. पोऱ्‌ऱि
song/pathigam/paasuram numbers: e.g. 7.039

This page in Tamil   Hindi/Sanskrit   Telugu   Malayalam   Bengali   Kannada   English   ITRANS    Marati  Gujarathi   Oriya   Singala   Tibetian   Thai   Japanese   Urdu   Cyrillic/Russian   Spanish   Hebrew  
Selected thirumurai      thirumurai Thalangal      All thirumurai Songs     

Thirumurai   1   2   3   4   5   6   7   8   9   10   11   12

Pathigam first Letter :                                          
Paadal first letter:     (  .                                                
Search: Filter By: Order By:
திருமுறை 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12 இருந்து பாடல் சொல் அயன்
அயன்நெடிய     அயன்கபா     அயன்,     அயன்    
4.100   4 st/nd Thirumurai   Song # 9   திருநாவுக்கரசர்   தேவாரம்  
அயன், நெடுமால், இந்திரன், சந்திராதித்தர், அமரர் எல்லாம்
சய சய என்று முப்போதும் பணிவன; தண்கடல் சூழ்
வியல் நிலம் முற்றுக்கும் விண்ணுக்கும் நாகர் வியல் நகர்க்கும்
இயபரம் ஆவன இன்னம்பரான்தன் இணைஅடியே.

6.023   6 st/nd Thirumurai   Song # 10   திருநாவுக்கரசர்   தேவாரம்  
அயன் அவனும் மால் அவனும் அறியா வண்ணம்,
ஆர் அழல் ஆய் நீண்டு, உகந்த அண்ணல் கண்டாய்;
துயர் இலங்கை வேந்தன் துளங்க, அன்று, சோதி விரலால் உற வைத்தான் கண்டாய்;
பெயர் அ(அ)வற்குப் பேர் அருள்கள் செய்தான் கண்டாய்; பேரும், பெரும் படையோடும், ஈந்தான் கண்டாய்;
மயர் உறு வல்வினை நோய் தீர்ப்பான் கண்டாய்-மறைக்காட்டு உறையும் மணாளன் தானே.

8.109   8 st/nd Thirumurai   Song # 18   மாணிக்க வாசகர்    திருவாசகம்  
அயன் தலை கொண்டு செண்டு ஆடல் பாடி, அருக்கன் எயிறு பறித்தல் பாடி,
கயம் தனைக் கொன்று, உரி போர்த்தல் பாடி, காலனைக் காலால் உதைத்தல் பாடி,
இயைந்தன முப்புரம் எய்தல் பாடி, ஏழை அடியோமை ஆண்டுகொண்ட
நயம் தனைப் பாடிநின்று, ஆடி ஆடி, நாதற்கு, சுண்ணம் இடித்தும், நாமே!

11.038   11 st/nd Thirumurai   Song # 43   நம்பியாண்டார் நம்பி   ஆளுடையபிள்ளையார் திருக்கலம்பகம்  
அயன்நெடிய மாலும்அவ
  ரறிவரிய தாணுவரன்
அருளினொடு நீடவனி
  இடர்முழுது போயகல
வயலணிதென் வீழிமிழ
  லையின்நிலவு காசின்மலி
மழைபொழியு மானகுண
  மதுரன்மதி தோய்கனக
செயநிலவு மாடமதில்
  புடைதழுவு வாசமலி
செறிபொழில்சு லாவிவளர்
  சிரபுரசு ரேசன்முதிர்
பயன்நிலவு ஞானதமிழ்
  விரகன்மறை ஞானமுணர்
பரமகுரு நாதன்மிகு
  பரசமய கோளரியே. 24

12.360   12 st/nd Thirumurai   Song # 34   சேக்கிழார்   வார்கொண்ட வனமுலையாள் சருக்கம்  
அயன்கபா லந்தரித்த
விடத்திருக்கை யாலணைத்த
வயங்கொளிமூ விலைச்சூல
மணித்திருத்தோள் மிசைப்பொலியத்
தயங்குசுடர் வலத்திருக்கைத்
தமருகத்தின் ஒலிதழைப்பப்
பயன்தவத்தாற் பெறும்புவியும்
பாததா மரைசூட.

This page was last modified on Thu, 09 May 2024 05:33:06 +0000
          send corrections and suggestions to admin-at-sivaya.org

thirumurai all list