சிவய.திருக்கூட்டம்
sivaya.org
Please set your language preference
by clicking below languages link
Search this site with
words in any language e.g. पोऱ्‌ऱि
song/pathigam/paasuram numbers: e.g. 7.039

This page in Tamil   Hindi/Sanskrit   Telugu   Malayalam   Bengali   Kannada   English   ITRANS    Marati  Gujarathi   Oriya   Singala   Tibetian   Thai   Japanese   Urdu   Cyrillic/Russian   Spanish   Hebrew  
Selected thirumurai      thirumurai Thalangal      All thirumurai Songs     

Thirumurai   1   2   3   4   5   6   7   8   9   10   11   12

Pathigam first Letter :                                          
Paadal first letter:     (  .                                                
Search: Filter By: Order By:
திருமுறை 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12 இருந்து பாடல் சொல் அர
அருநெறிய     அருகரொடு     அரன்     அரக்கன்     அரவு     அரை     அரவச்     அரும்பும்     அரையோடு     அரசு     அரியும்,     அரனை     அரக்கனார்     அருவன்,     அரப்பள்ளியானும்     அரவின்     அருந்திறல்     அருமறை     அருத்தனை,     அருமையன்,     அரியொடு     அரனடி     அருளும்     அரிபிர     அரைக்கின்     அருளல்ல     அருமைவல்     அரித்த     அரகர     அருவினில்     அருள்பெற்     அருங்கரை     அரநெறி     அரனெறி     அரசுடன்     அருளால்     அருள்எங்கு     அருளின்     அருளே     அருட்கண்     அருளில்     அருளது     அருந்திய     அரன்முத     அருளான     அரன்அன்பர்     அருள்பெற்ற     அருள்தரும்     அரன்துடி     அரிக்கின்ற     அரனென்கோ     அரவமொன்     அராவி     அரங்கமாப்     அரவம்     அரம்கா     அரியாகிக்     அரிஅரணஞ்     அரணம்     அருளாத     அரிகரியக்     அரியும்     அரியாரும்     அரன்காய     அரசுமாய்     அருள்நம்பாற்     அருள்சேரா     அரனே     அருளு     அருள்பழுத்     அருளைத்     அரிதன்     அருதிக்கு     அருள்தரு     அருட்டுறை     அருந்தமி     அரசினை     அரும்பின     அரும்பத     அருளுந்     அரியோடு     அருங்கலைநூல்     அரியை     அருந்தமிழ்     அரியாருங்     அரம்பைய     அரிதரு     அரசுகொள்     அரந்தை     அருங்கடி     அருந்தவத்     அரசியல்     அரசிய     அரசனாங்     அரும்பெறல்     அருவரைக்     அரையிற்சர     அருள்செய்த     அரும     அருவி     அரவநெடுந்     அருமறைஅந்     அரசர்குலப்     அருள்கொண்ட     அரசனது     அருகணைந்தார்     அருள்நயந்     அரிஅயனுக்     அருட்பெரு     அரியானை     அருட்பெருகு     அருந்தனயன்     அரிதில்     அரசறிய     அருந்தவர்     அருகர்     அரிஅயனே     அருக்கன்முதற்     அருமையாற்     அரிசனமும்     அருள்வெள்ளத்     அருகணையுந்     அரசரு     அருவிலையிற்     அருமறைகள்     அரசருளிச்     அரச     அருமறைவாழ்     அருகர்தாம்     அரிய     அருநி     அரசிலியில்     அருமறையோர்     அருந்தவத்தோர்     அருப்புமென்     அருந்தமிழா     அருளும்இக்     அருகு     அரிஅயற்     அரிவைகா     அருமையினில்     அருகுதிரு     அருள்பொழியுந்     அரசர்க்     அரண்முற்     அரியஅத்     அரசரவர்     அருவாகி     அரசனும்     அரிவையர்     அரியணை     அரசர்     அருந்தானை,     அரு     அருப்பின்     அருத்தம்     அரவினொடு     அரவ     அரையில்     அரவமே     அர     அரணை     அரவினில்-துயில்     அருவராது     அரியன     அரண்     அரும்     அரவத்தால்     அரி,     அரக்கர்     அருந்தும்பொழுது     அரைப்பால்     அரும்பு     அரிச்சு     அரக்கனை     அரக்கின்     அருவனாய்,     அருவராதது     அருந்     அரிசிலின்     அருப்புப்     அருக்கன்     அருமறையனை,     அருத்தமும்     அரி     அரிச்சு,     அரியானை,     அருந்தவர்கள்     அருந்துணையை;     அரும்பித்த     அருப்பு     அரிச்சந்திரத்து     அரிபிரமர்     அருந்தவத்தின்     அரித்து     அருமணியை,     அரைக்கும்     அரங்கு     அருந்தவம்     அருளியது     அருளொது     அருமையில்     அரியானே     அரைசே,     அரிக்கும்,|     அருமந்த     அருணன்,     அரைசே!     அருளாது     அரைசனே!     அருள்     அருந்தும்     அருந்தே     அரமங்     அருட்டிரட்     அரும்பேதைக்     அருளுமா     அருள்செய்     அரிவையோர்     அரும்புனல்     அருள்பெறின்    
Search limited to first 100
1.001   1 st/nd Thirumurai   Song # 11   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
அருநெறிய மறை வல்ல முனி அகன் பொய்கை அலர் மேய,
பெரு நெறிய, பிரமாபுரம் மேவிய பெம்மான் இவன் தன்னை,
ஒரு நெறிய மனம் வைத்து உணர் ஞானசம்பந்தன் உரை செய்த
திரு நெறிய தமிழ் வல்லவர் தொல்வினை தீர்தல் எளிதுஆமே.

1.012   1 st/nd Thirumurai   Song # 10   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
அருகரொடு புத்தர் அவர் அறியா அரன், மலையான்
மருகன், வரும் இடபக் கொடி உடையான், இடம் மலர் ஆர்
கருகு குழல் மடவார் கடிகுறிஞ்சி அது பாடி,
முருகனது பெருமை பகர் முதுகுன்று அடைவோமே.

1.020   1 st/nd Thirumurai   Song # 8   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
அரன் உறைதரு கயிலையை நிலை குலைவு அது செய்த தசமுகனது
கரம் இருபதும் நெரிதர விரல் நிறுவிய கழல் அடி உடையவன்;
வரல் முறை உலகு அவை தரு, மலர் வளர், மறையவன் வழி வழுவிய
சிரம் அதுகொடு பலி திரிதரு சிவன்; உறை பதி திரு மிழலையே.

1.029   1 st/nd Thirumurai   Song # 8   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
அரக்கன் ஆண்மை அழிய வரைதன்னால்
நெருக்க ஊன்றும் விரலான் விரும்பும் ஊர்,
பரக்கும் கீர்த்தி உடையார், நறையூரில்
திருக்கொள் சித்தீச்சுரமே தெளி நெஞ்சே!

1.033   1 st/nd Thirumurai   Song # 11   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
அரவு ஆர் புனல் அன்பில் ஆலந்துறை தன் மேல்
கரவாதவர் காழியுள் ஞானசம்பந்தன்
பரவு ஆர் தமிழ் பத்து இசை பாட வல்லார் போய்
விரவு ஆகுவர், வான் இடை; வீடு எளிது ஆமே.

1.034   1 st/nd Thirumurai   Song # 8   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
அரக்கன் வலி ஒல்க அடர்த்து,
வரைக்கு மகளோடு மகிழ்ந்தான்,
சுரக்கும் புனல் சூழ்தரு, காழி
நிரக்கும் மலர் தூவும், நினைந்தே!

1.035   1 st/nd Thirumurai   Song # 1   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
அரை ஆர் விரி கோவண ஆடை,
நரை ஆர் விடை ஊர்தி, நயந்தான்,
விரை ஆர் பொழில், வீழி மிழலை
உரையால் உணர்வார் உயர்வாரே.

1.037   1 st/nd Thirumurai   Song # 1   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
அரவச் சடை மேல் மதி, மத்தம்,
விரவிப் பொலிகின்றவன் ஊர் ஆம்
நிரவிப் பல தொண்டர்கள் நாளும்
பரவிப் பொலியும் பனையூரே.

1.039   1 st/nd Thirumurai   Song # 4   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
அரை புல்கும் ஐந்தலை ஆடல் அரவம் அமைய வெண்
   கோவணத்தோடு அசைத்து,
வரை புல்கு மார்பில் ஓர் ஆமை வாங்கி அணிந்தவர் தாம்
திரை புல்கு தெண் கடல் தண் கழி ஓதம் தேன் நல் அம்
   கானலில் வண்டு பண்செய்ய,
விரை புல்கு பைம்பொழில் சூழ்ந்த வேட்கள நன் நகராரே.

1.040   1 st/nd Thirumurai   Song # 2   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
அரை கெழு கோவண ஆடையின்மேல் ஓர் ஆடு அரவம் அசைத்து, ஐயம்
புரை கெழு வெண் தலை ஏந்தி, போர் விடை ஏறி, புகழ
வரை கெழு மங்கையது ஆகம் ஒர்பாகம் ஆயவன் வாழ்கொளிபுத்தூர்,
விரை கெழு மா மலர் தூவி, விரிசடையான் அடி சேர்வோம்.

1.046   1 st/nd Thirumurai   Song # 2   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
அரும்பும் குரும்பையும் அலைத்த மென் கொங்கைக்
கரும்பு இன்மொழியாளோடு உடன் கை அனல் வீசி,
சுரும்பு உண் விரிகொன்றைச் சுடர் பொன் சடை தாழ,
விரும்பும் அதிகையுள் ஆடும், வீரட்டானத்தே.

1.046   1 st/nd Thirumurai   Song # 10   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
அரையோடு அலர் பிண்டி மருவிக் குண்டிகை
சுரை ஓடு உடன் ஏந்தி, உடை விட்டு உழல்வார்கள்
உரையோடு உரை ஒவ்வாது; உமையோடு உடன் ஆகி,
விரை தோய் அலர்தாரான் ஆடும், வீரட்டானத்தே.

1.055   1 st/nd Thirumurai   Song # 7   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
அரசு அளிக்கும் அரக்கன் அவன்தனை
உரை கெடுத்து, அவன் ஒல்கிட
வரம் மிகுத்த எம் மாற்பேற்று அடிகளைப்
பரவிடக் கெடும், பாவமே.

1.058   1 st/nd Thirumurai   Song # 1   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
அரியும், நம் வினை உள்ளன ஆசு அற
வரி கொள் மாமணி போல் கண்டம்
கரியவன், திகழும் கரவீரத்து எம்
பெரியவன், கழல் பேணவே.

1.084   1 st/nd Thirumurai   Song # 7   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
அரை ஆர் அழல்நாகம் அக்கோடு அசைத்திட்டு,
விரை ஆர் வரைமார்பின் வெண் நீறு அணி அண்ணல்
வரை ஆர்வன போல வளரும் வங்கங்கள்
கரை ஆர் கடல் நாகைக்காரோணத்தானே.

1.089   1 st/nd Thirumurai   Song # 4   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
அரை ஆர்தரு நாகம் அணிவான், அலர்மாலை
விரை ஆர்தரு கொன்றை உடையான், விடை ஏறி,
வரையான், எருக்கத்தம்புலியூர் மகிழ்கின்ற
திரை ஆர் சடையானைச் சேர, திரு ஆமே.

1.090   1 st/nd Thirumurai   Song # 1   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
அரனை உள்குவீர்! பிரமன் ஊருள் எம்
பரனையே மனம் பரவி, உய்ம்மினே!

1.091   1 st/nd Thirumurai   Song # 8   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
அரக்கன் ஆண்மையை நெருக்கினான் ஆரூர்
கரத்தினால்-தொழ, திருத்தம் ஆகுமே.

1.092   1 st/nd Thirumurai   Song # 8   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
அரக்கன் நெரிதர, இரக்கம் எய்தினீர்!
பரக்கும் மிழலையீர்! கரக்கை தவிர்மினே!

1.094   1 st/nd Thirumurai   Song # 8   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
அரக்கனார் வலி நெருக்கன் ஆலவாய்
உரைக்கும் உள்ளத்தார்க்கு, இரக்கம் உண்மையே.

1.094   1 st/nd Thirumurai   Song # 9   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
அருவன், ஆலவாய் மருவினான்தனை
இருவர் ஏத்த, நின்று உருவம் ஓங்குமே.

1.098   1 st/nd Thirumurai   Song # 9   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
அரப்பள்ளியானும் மலர் உறைவானும், அறியாமைக்
கரப்பு உள்ளி, நாடிக் கண்டிலரேனும், கல் சூழ்ந்த
சிரப்பள்ளி மேய வார்சடைச் செல்வர் மனைதோறும்
இரப்பு உள்ளீர்; உம்மை ஏதிலர் கண்டால், இகழாரே?

1.099   1 st/nd Thirumurai   Song # 9   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
அரவின் வாயின் முள் எயிறு எய்ப்ப அரும்பு ஈன்று,
குரவம்பாவை முருகு அமர் சோலைக் குற்றாலம்
பிரமனோடு மால் அறியாத பெருமை எம்
பரமன் மேய நன் நகர்போலும்; பணிவீர்காள்!

1.109   1 st/nd Thirumurai   Song # 5   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
அருந்திறல் அவுணர்கள் அரண் அழியச்
சரம் துரந்து எரி செய்த சங்கரன் ஊர்
குருந்தொடு கொடிவிடு மாதவிகள்
திருந்திய புறவு அணி சிரபுரமே.

1.109   1 st/nd Thirumurai   Song # 11   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
அருமறை ஞானசம்பந்தன், அம் தண்
சிரபுரநகர் உறை சிவன் அடியைப்
பரவிய செந்தமிழ் பத்தும் வல்லார்
திருவொடு புகழ் மல்கு தேசினரே.

1.111   1 st/nd Thirumurai   Song # 1   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
அருத்தனை, அறவனை, அமுதனை, நீர்
விருத்தனை, பாலனை, வினவுதிரேல்,
ஒருத்தனை, அல்லது இங்கு உலகம் ஏத்தும்
கருத்தவன், வள நகர் கடைமுடியே.

1.121   1 st/nd Thirumurai   Song # 3   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
அருமையன், எளிமையன், அழல் விட மிடறினன்,
கருமையின் ஒளி பெறு கமழ் சடைமுடியன்,
பெருமையன், சிறுமையன், பிணைபெணொடு ஒருமையின்
இருமையும் உடை அணல், இடம் இடைமருதே.

1.122   1 st/nd Thirumurai   Song # 9   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
அரியொடு மலரவன் என இவர் அடி முடி
தெரி வகை அரியவர், திருவடி தொழுது எழ,
எரிதரும் உருவர்தம் இடைமருது அடைவு உறல்
புரிதரும் மன்னவர் புகழ் மிக உளதே.

1.134   1 st/nd Thirumurai   Song # 6   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
அரவு உற்ற நாணா, அனல் அம்பு அது ஆக,
செரு உற்றவர் புரம் தீ எழச் செற்றான்-
தெருவில் கொடி சூழ் திருப் பறியலூரில்,
வெரு உற்றவர் தொழும் வீரட்டத்தானே.

2.007   2 st/nd Thirumurai   Song # 6   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
அரவம் பூண்பர்; அணியும் சிலம்பு ஆர்க்க அகம்தொறும்
இரவில் நல்ல பலி பேணுவர் நாண் இலர்; நாமமே
பரவுவார் வினை தீர்க்க நின்றார் திரு வாஞ்சியம்
மருவி ஏத்த மடமாதொடு நின்ற எம் மைந்தரே.

2.011   2 st/nd Thirumurai   Song # 3   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
அருந்தானை, அன்பு செய்து ஏத்தகில்லார்பால்;
பொருந்தானை, பொய் அடிமைத் தொழில் செய்வாருள
விருந்தானை; வேதியர் ஓதி மிடை காழி
இருந்தானை; ஏத்துமின், நும் வினை ஏகவே!

2.017   2 st/nd Thirumurai   Song # 2   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
அரவு ஆர் கரவன், அமை ஆர் திரள்தோள
குரவு ஆர் குழலாள் ஒருகூறன், இடம்
கரவாத கொடைக்கு அலந்தார் அவர்க்கு
விரவு ஆக வல்லார் வேணுபுரமே.

2.017   2 st/nd Thirumurai   Song # 5   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
அரை ஆர் கலை சேர் அனமென்னடையை
உரையா உகந்தான் உறையும் இடம் ஆம்
நிரை ஆர் கமுகின் நிகழ் பாளை உடை
விரை ஆர் பொழில் சூழ் வேணுபுரமே.

2.020   2 st/nd Thirumurai   Song # 11   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
அரு ஞானம் வல்லார் அழுந்தை மறையோர்
பெரு ஞானம் உடைப் பெருமான் அவனைத்
திருஞானசம்பந்தன செந்தமிழ்கள்,
உருஞானம் உண்டுஆம், உணர்ந்தார்தமக்கே.

2.025   2 st/nd Thirumurai   Song # 8   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
அருப்பின் ஆர் முலை மங்கை பங்கினன்,
விருப்பினான் அரக்கன் உரம் செகும்
பொருப்பினான், பொழில் ஆர் புகலிஊர்
இருப்பினான், அடி ஏத்தி வாழ்த்துமே!

2.058   2 st/nd Thirumurai   Song # 6   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
அரவு ஆர்ந்த திருமேனி ஆன வெண் நீறு ஆடினீர்!
இரவு ஆர்ந்த பெய் பலி கொண்டு இமையோர் ஏத்த நஞ்சு
உண்டீர்!
குரவு ஆர்ந்த பூஞ்சோலை வாசம் வீசும் குடவாயில்
திரு ஆர்ந்த கோயிலே கோயில் ஆகத் திகழ்ந்தீரே.

2.059   2 st/nd Thirumurai   Song # 8   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
அரக்கன் முடிதோள் நெரிய அடர்த்தான், அடியார்க்குக்
கரக்ககில்லாது அருள்செய் பெருமான், கலிக் காழிப்
பரக்கும், புகழான் தன்னை ஏத்திப் பணிவார்மேல்,
பெருக்கும், இன்பம்; துன்பம் ஆன பிணி போமே.

2.066   2 st/nd Thirumurai   Song # 6   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
அருத்தம் அது ஆவது நீறு; அவலம் அறுப்பது நீறு;
வருத்தம் தணிப்பது நீறு; வானம் அளிப்பது நீறு;
பொருத்தம் அது ஆவது நீறு; புண்ணியர் பூசும் வெண் நீறு;
திருத் தகு மாளிகை சூழ்ந்த திரு ஆலவாயான் திருநீறே.

2.068   2 st/nd Thirumurai   Song # 2   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
அரவினொடு ஆமையும் பூண்டு, அம் துகில் வேங்கை
அதளும்,
விரவும் திரு முடி தன் மேல் வெண்திங்கள் சூடி,
விரும்பிப்
பரவும் தனிக் கடம்பூரில் பைங்கண் வெள் ஏற்று
அண்ணல் பாதம்
இரவும் பகலும் பணிய, இன்பம் நமக்கு அது ஆமே.

2.071   2 st/nd Thirumurai   Song # 9   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
அரவின் அணையானும் நான்முகனும் காண்பு அரிய
அண்ணல், சென்னி
விரவி மதி அணிந்த விகிர்தர்க்கு இடம்போலும்
விரிபூஞ்சாரல்,
மரவம் இரு கரையும் மல்லிகையும் சண்பகமும் மலர்ந்து
மாந்த,
குரவம் முறுவல் செய்யும் குன்று இடம் சூழ் தண் சாரல்
குறும்பலாவே.

2.091   2 st/nd Thirumurai   Song # 5   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
அரவம் வீக்கிய அரையும், அதிர்கழல் தழுவிய அடியும்,
பரவ, நாம் செய்த பவம் பறை தர அருளுவர் பதிதான்
மரவம் நீடு உயர் சோலை மழலை வண்டு யாழ் செயும்
மறைக்காட்டு
இரவும் எல்லி அம் பகலும் ஏத்துதல் குணம் எனல் ஆமே.

2.103   2 st/nd Thirumurai   Song # 2   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
அரவம் ஆட்டுவர்; அம் துகில் புலி அதள்; அங்கையில்
அனல் ஏந்தி,
இரவும் ஆடுவர்; இவை இவர் சரிதைகள்! இசைவன,
பலபூதம்;
மரவம் தோய் பொழில், அரிசிலின் வடகரை, வருபுனல்,
மாகாளம்
பரவியும் பணிந்து ஏத்த வல்லார் அவர் பயன்
தலைப்படுவாரே.

2.114   2 st/nd Thirumurai   Song # 8   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
அரவ முந்நீர் அணி இலங்கைக் கோனை, அருவரைதனால்
வெருவ ஊன்றி, விரலால் அடர்த்தார்க்கு இடம் என்பரால்
குரவம், கோங்கம், குளிர் பிண்டி, ஞாழல், சுரபுன்னை,
மேல்
கிரமம் ஆக வரிவண்டு பண் செய்யும் கேதாரமே.

2.117   2 st/nd Thirumurai   Song # 10   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
அரவம் ஆர்த்து, அன்று, அனல் அங்கை ஏந்தி, அடியும்
முடி
பிரமன் மாலும்(ம்) அறியாமை நின்ற பெரியோன் இடம்
குரவம் ஆரும் பொழில் குயில்கள் சேரும்(ம்)
இரும்பைதனுள்,
மருவி வானோர் மறையோர் தொழுகின்ற மாகாளமே.

2.120   2 st/nd Thirumurai   Song # 7   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
அரையில் ஆரும் கலை இல்லவன்; ஆணொடு பெண்ணும்
ஆம்
உரையில் ஆர் அவ் அழல் ஆடுவர்; ஒன்று அலர்;
காண்மினோ
விரவலார்தம் மதில் மூன்று உடன் வெவ் அழல்
ஆக்கினான்,
அரையன் மூக்கீச்சுரத்து அடிகள், செய்கின்றது ஓர்
அச்சமே!

3.024   3 st/nd Thirumurai   Song # 8   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
அரக்கனார் அரு வரை எடுத்தவன்-அலறிட,
நெருக்கினார், விரலினால்; நீடு யாழ் பாடவே,
கருக்கு வாள் அருள் செய்தான்; கழுமல வள நகர்
பெருக்கும் நீரவளொடும் பெருந்தகை இருந்ததே!

3.047   3 st/nd Thirumurai   Song # 8   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
அரக்கன் தான் கிரி ஏற்றவன் தன் முடிச்
செருக்கினைத் தவிர்த்தாய்! திரு ஆலவாய்
பரக்கும் மாண்பு உடையாய்! அமண்பாவரை,
கரக்க, வாதுசெயத் திரு உள்ளமே?

3.054   3 st/nd Thirumurai   Song # 2   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
அரிய காட்சியராய், தமது அங்கை சேர்
எரியர்; ஏறு உகந்து ஏறுவர்; கண்டமும்
கரியர்; காடு உறை வாழ்க்கையர்; ஆயினும்,
பெரியர்; ஆர் அறிவார், அவர் பெற்றியே?

3.057   3 st/nd Thirumurai   Song # 4   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
அரவமே கச்சு அது ஆக அசைத்தான்; அலர்க்கொன்றை அம்தார்
விரவி, வெண் நூல் கிடந்த விரை ஆர் வரைமார்பன்; எந்தை;
பரவுவார் பாவம் எல்லாம் பறைத்து, படர்புன்சடை மேல்
உரவு நீர் ஏற்ற பெம்மான்; உறையும்(ம்) இடம் ஒற்றியூரே.

3.059   3 st/nd Thirumurai   Song # 1   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
அர விரி கோடல் நீடல் அணி காவிரியாற்று அயலே,
மர விரி போது, மௌவல், மணமல்லிகை, கள் அவிழும்
குர, விரி சோலை சூழ்ந்த, குழகன், குடமூக்கு இடமா,
இர விரி திங்கள் சூடி இருந்தான்; அவன் எம் இறையே.

3.066   3 st/nd Thirumurai   Song # 9   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
அருமறை நான் முகத்தானும், அகலிடம் நீர் ஏற்றானும்,
இருவரும் ஆய் அளப்பு அரிய எரி உரு ஆய் நீண்ட பிரான்;
வருபுனலின் மணி உந்தி மறிதிரை ஆர் சுடர்ப் பவளத்-
திரு உருவில் வெண் நீற்றார் திரு வேட்டக்குடியாரே.

3.067   3 st/nd Thirumurai   Song # 7   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
அரணை உறு முரணர் பலர் மரணம் வர, இரணம் மதில் அரம் மலி படைக்
கரம் விசிறு விரகன், அமர் கரணன், உயர் பரன், நெறி கொள் கரனது இடம் ஆம்
பரவு அமுது விரவ, விடல் புரளம் உறும் அரவை அரி சிரம் அரிய, அச்
சிரம் அரன சரணம் அவை பரவ, இரு கிரகம் அமர் சிரபுரம் அதே.

3.089   3 st/nd Thirumurai   Song # 9   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
அரவினில்-துயில் தரும் அரியும், நல் பிரமனும், அன்று, அயர்ந்து
குரைகழல், திருமுடி, அளவு இட அரியவர் கோங்கு செம்பொன்
விரி பொழில் இடை மிகு மலைமகள் மகிழ்தர வீற்றிருந்த
கரிய நல் மிடறு உடைக் கடவுளார் கொச்சையே கருது,
நெஞ்சே!

3.104   3 st/nd Thirumurai   Song # 2   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
அரவு ஒலி, வில் ஒலி, அம்பின் ஒலி, அடங்கார் புரம் மூன்றும்
நிரவ வல்லார், நிமிர் புன்சடைமேல் நிரம்பா மதி சூடி,
இரவு இல் புகுந்து, என் எழில் கவர்ந்த இறைவர்க்கு
இடம்போலும்
பரவ வல்லார் வினை பாழ்படுக்கும் பரிதி(ந்) நியமமே.
3.105   3 st/nd Thirumurai   Song # 9   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
அரு வரை ஏந்திய மாலும், மற்றை அலர்மேல் உறைவானும்,
இருவரும் அஞ்ச, எரி உரு ஆய் எழுந்தான் கலிக்காமூர்,
ஒரு வரையான் மகள் பாகன் தன்னை உணர்வால்-தொழுது ஏத்த,
திரு மருவும்; சிதைவு இல்லை; செம்மைத் தேசு உண்டு,
அவர்பாலே.

3.118   3 st/nd Thirumurai   Song # 9   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
அரு வரை பொறுத்த ஆற்றலினானும், அணி கிளர் தாமரையானும்,
இருவரும் ஏத்த, எரிஉரு ஆன இறைவனார் உறைவு இடம் வினவில்,
ஒருவர் இவ் உலகில் வாழ்கிலா வண்ணம் ஒலிபுனல்
வெள்ளம் முன் பரப்ப,
கருவரை சூழ்ந்த கடல் இடை மிதக்கும் கழுமலநகர் எனல் ஆமே.

3.123   3 st/nd Thirumurai   Song # 9   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
அருவராது ஒரு கை வெண்தலை ஏந்தி; அகம்தொறும் பலி உடன் புக்க
பெருவராய் உறையும் நீர்மையர்; சீர்மைப் பெருங்கடல் வண்ணனும், பிரமன்,
இருவரும் அறியா வண்ணம் ஒள் எரி ஆய் உயர்ந்தவர்; பெயர்ந்த நல் மாற்கும்
குருவராய் நின்றார், குரைகழல் வணங்க; கோணமாமலை அமர்ந்தாரே.

4.020   4 st/nd Thirumurai   Song # 3   திருநாவுக்கரசர்   தேவாரம்  
அரு மணித் தடம் பூண் முலை அரம்பையரொடு அருளிப்பாடியர்
உரிமையில்- தொழுவார், உருத்திர பல் கணத்தார்
விரிசடை விரதிகள், அந்தணர், சைவர், பாசுபதர், கபாலிகள்
தெருவினில் பொலியும் திரு ஆரூர் அம்மானே!

4.030   4 st/nd Thirumurai   Song # 4   திருநாவுக்கரசர்   தேவாரம்  
அரியன அங்கம் வேதம் அந்தணர்க்கு அருளும் வைத்தார்
பெரியன புரங்கள் மூன்றும் பேர் அழலுண்ண வைத்தார்
பரிய தீ வண்ணர் ஆகிப் பவளம் போல் நிறத்தை வைத்தார்
கரியது ஓர் கண்டம் வைத்தார்-கழிப்பாலைச் சேர்ப்பனாரே.

4.054   4 st/nd Thirumurai   Song # 10   திருநாவுக்கரசர்   தேவாரம்  
அரு வரை தாங்கினானும், அருமறை ஆதியானும்,
இருவரும் அறிய மாட்டா ஈசனார்; இலங்கை வேந்தன்
கருவரை எடுத்த ஞான்று கண் வழி குருதி சோரத்
திருவிரல் சிறிது வைத்தார் திருப் புகலூரனாரே.

4.055   4 st/nd Thirumurai   Song # 8   திருநாவுக்கரசர்   தேவாரம்  
அருகு எலாம் குவளை, செந்நெல், அகல் இலை ஆம்பல் நெய்தல்;
தெரு எலாம் தெங்கு மாவின் பழம் விழும், படப்பை எல்லாம்
குருகு இனம் கூடி ஆங்கே கும்மலித்து இறகு உலர்த்தி
மருவல் ஆம் இடங்கள் காட்டும், வலம் புரத்து அடிகளாரே!

4.065   4 st/nd Thirumurai   Song # 3   திருநாவுக்கரசர்   தேவாரம்  
அரண் இலா வெளிய நாவல் அரு நிழல் ஆக ஈசன்
வரணியல் ஆகித் தன் வாய் நூலினால் பந்தர் செய்ய,
முரண் இலாச் சிலந்தி தன்னை முடி உடை மன்னன் ஆக்கித்
தரணி தான் ஆள வைத்தார் சாய்க்காடு மேவினாரே.

4.065   4 st/nd Thirumurai   Song # 4   திருநாவுக்கரசர்   தேவாரம்  
அரும் பெருஞ் சிலைக் கை வேடனாய், விறல் பார்த்தற்கு, அன்று(வ்)
உரம் பெரிது உடைமை காட்டி, ஒள் அமர் செய்து, மீண்டே
வரம் பெரிது உடையன் ஆக்கி, வாள் அமர் முகத்தில் மன்னும்
சரம் பொலி தூணி ஈந்தார் சாய்க்காடு மேவினாரே.

4.070   4 st/nd Thirumurai   Song # 7   திருநாவுக்கரசர்   தேவாரம்  
அரவத்தால் வரையைச் சுற்றி அமரரோடு அசுரர் கூடி
அரவித்துக் கடையத் தோன்றும் ஆல நஞ்சு அமுதா உண்டார்
விரவித் தம் அடியர் ஆகி வீடு இலாத் தொண்டர் தம்மை
நரகத்தில் வீழ ஒட்டார்-நனிபள்ளி அடிகளாரே.

4.088   4 st/nd Thirumurai   Song # 6   திருநாவுக்கரசர்   தேவாரம்  
அருகு அடை மாலையும் தான் உடையான், அழகால் அமைந்த
உரு உடை மங்கையும் தன் ஒரு பால் உலகு ஆயும் நின்றான்,
பொருபடை வேலினன், வில்லினன், பூந்துருத்தி(ய்) உறையும்
திரு உடைத் தேச மதியனை-யான் அடி போற்றுவதே.

4.099   4 st/nd Thirumurai   Song # 7   திருநாவுக்கரசர்   தேவாரம்  
அரி, அயன், இந்திரன், சந்திராதித்தர், அமரர் எல்லாம்,
உரிய நின் கொற்றக் கடைத்தலையார் உணங்காக் கிடந்தார்;
புரிதரு புன் சடைப் போக முனிவர் புலம்புகின்றார்;-
எரிதரு செஞ்சடை ஏகம்ப!-என்னோ, திருக்குறிப்பே?

4.100   4 st/nd Thirumurai   Song # 5   திருநாவுக்கரசர்   தேவாரம்  
அரக்கர் தம் முப்புரம் அம்பு ஒன்றினால் அடல் அங்கியின் வாய்க்
கரக்க முன் வைதிகத் தேர்மிசை நின்றன; கட்டு உருவம்
பரக்க வெங்கான் இடை வேடு உரு ஆயின; பல்பதிதோறு
இரக்க நடந்தன-இன்னம்பரான்தன் இணை அடியே.

4.101   4 st/nd Thirumurai   Song # 5   திருநாவுக்கரசர்   தேவாரம்  
அருந்தும்பொழுது உரையாடா அமணர் திறம் அகன்று,
வருந்தி நினைந்து, அரனே! என்று வாழ்த்துவேற்கு உண்டுகொலோ-
திருந்திய மா மதில் ஆரூர்த் திருமூலட்டானனுக்குப்
பொருந்தும் தவம் உடைத் தொண்டர்க்குத் தொண்டர் ஆம் புண்ணியமே?

4.113   4 st/nd Thirumurai   Song # 7   திருநாவுக்கரசர்   தேவாரம்  
அரைப்பால் உடுப்பன கோவணச் சின்னங்கள்; ஐயம் உணல்;
வரைப்பாவையைக் கொண்டது எக் குடிவாழ்க்கைக்கு? வான் இரைக்கும்
இரைப்பா! படுதலை ஏந்து கையா! மறை தேடும் எந்தாய்!ப்பார் உரைப்பனவே செய்தியால்-எங்கள் உத்தமனே!

5.001   5 st/nd Thirumurai   Song # 2   திருநாவுக்கரசர்   தேவாரம்  
அரும்பு அற்றப் பட ஆய் மலர் கொண்டு, நீர்,
சுரும்பு அற்றப் படத் தூவி, தொழுமினோ-
கரும்பு அற்றச் சிலைக் காமனைக் காய்ந்தவன்,
பெரும்பற்றப்புலியூர் எம்பிரானையே!

5.001   5 st/nd Thirumurai   Song # 3   திருநாவுக்கரசர்   தேவாரம்  
அரிச்சு உற்ற(வ்) வினையால் அடர்ப்புண்டு, நீர்,
எரிச் சுற்றக் கிடந்தார் என்று அயலவர்
சிரிச்சு உற்றுப் பல பேசப்படாமுனம்,
திருச் சிற்றம்பலம் சென்று அடைந்து உய்ம்மினே!

5.004   5 st/nd Thirumurai   Song # 9   திருநாவுக்கரசர்   தேவாரம்  
அருத்தனை, அரவு ஐந்தலை நாகத்தைத்
திருத்தனை, திரு அண்ணாமலையனை,
கருத்தனை, கடியார் புரம்மூன்று எய்த
வருத்தனை,-அடியேன் மறந்து உய்வனோ?

5.004   5 st/nd Thirumurai   Song # 10   திருநாவுக்கரசர்   தேவாரம்  
அரக்கனை அலற(வ்) விரல் ஊன்றிய
திருத்தனை, திரு அண்ணாமலையனை,
இரக்கம் ஆய் என் உடல் உறு நோய்களைத்
துரக்கனை,-தொண்டனேன் மறந்து உய்வனோ?

5.010   5 st/nd Thirumurai   Song # 4   திருநாவுக்கரசர்   தேவாரம்  
அரிய நால்மறை ஓதிய நாவரோ!
பெரிய வான் புரம் சுட்ட சுவண்டரோ!
விரிகொள் கோவண ஆடை விருத்தரோ!
பெரிய வான் கதவம் பிரிவிக்கவே!

5.010   5 st/nd Thirumurai   Song # 11   திருநாவுக்கரசர்   தேவாரம்  
அரக்கனை விரலால் அடர்த்திட்ட நீர்
இரக்கம் ஒன்று இலீர்; எம்பெருமானிரே!
சுரக்கும் புன்னைகள் சூழ் மறைக்காடரோ!
சரக்க இக் கதவம் திறப்பிம்மினே!

5.018   5 st/nd Thirumurai   Song # 7   திருநாவுக்கரசர்   தேவாரம்  
அரிய நால்மறை ஆறு அங்கம் ஆய், ஐந்து
புரியன்; தேவர்கள் ஏத்த நஞ்சு உண்டவன்;
கரிய கண்டத்தினான்; கடம்பந்துறை
உரிய ஆறு நினை, மட நெஞ்சமே!

5.027   5 st/nd Thirumurai   Song # 10   திருநாவுக்கரசர்   தேவாரம்  
அரக்கின் மேனியன்; அம் தளிர் மேனியன்;
அரக்கின் சேவடியாள் அஞ்ச, அஞ்சல்! என்று,
அரக்கன் ஈர்-ஐந்துவாயும் அலறவே,
அரக்கினான், அடியாலும்-ஐயாறனே.

5.030   5 st/nd Thirumurai   Song # 11   திருநாவுக்கரசர்   தேவாரம்  
அரக்கன் ஆற்றல் அழித்த அழகனை,
பரக்கும் நீர்ப் பொன்னி மன்னு பராய்த்துறை
இருக்கை மேவிய ஈசனை, ஏத்துமின்!
பொருக்க, நும்வினை போய் அறும்; காண்மினே!

5.035   5 st/nd Thirumurai   Song # 1   திருநாவுக்கரசர்   தேவாரம்  
அருவனாய், அத்திஈர் உரி போர்த்து உமை
உருவனாய், ஒற்றியூர் பதி ஆகிலும்,
பரு வரால் வயல் சூழ்ந்த பழனத்தான்,
திருவினால்-திரு வேண்டும், இத் தேவர்க்கே.

5.036   5 st/nd Thirumurai   Song # 4   திருநாவுக்கரசர்   தேவாரம்  
அருவராதது ஓர் வெண்தலை ஏந்தி வந்து
இருவராய், இடுவார் கடை தேடுவார்,
தெரு எலாம் உழல்வார்-செம்பொன்பள்ளியார்;
ஒருவர் தாம் பலபேர் உளர்; காண்மினே!

5.038   5 st/nd Thirumurai   Song # 8   திருநாவுக்கரசர்   தேவாரம்  
அரவு கையினர், ஆதி புராணனார்-
மரவு சேர் கடவூரின் மயானத்தார்;
பரவுவார் இடர் தீர்ப்பர், பணி கொள்வர்,
பிரமன் மாற்கும் பெருமான் அடிகளே.

5.048   5 st/nd Thirumurai   Song # 2   திருநாவுக்கரசர்   தேவாரம்  
அருந் திறல்(ல்) அமரர் அயன் மாலொடு
திருந்த நின்று வழிபடத் தேவியோடு
இருந்தவன்(ன்) எழில் ஆர், கச்சி ஏகம்பம்
பொருந்தச் சென்று புடைபட்டு எழுதுமே.

5.048   5 st/nd Thirumurai   Song # 10   திருநாவுக்கரசர்   தேவாரம்  
அரக்கன் தன் வலி உன்னி, கயிலையை
நெருக்கிச் சென்று, எடுத்தான் முடிதோள் நெரித்து
இரக்க இன் இசை கேட்டவன் ஏகம்பம்,
தருக்கு அது ஆக நாம் சார்ந்து, தொழுதுமே.

5.053   5 st/nd Thirumurai   Song # 7   திருநாவுக்கரசர்   தேவாரம்  
அரை ஆர் கோவண ஆடையன், ஆறு எலாம்
திரை ஆர் ஒண் புனல் பாய் கெடிலக் கரை-
விரை ஆர் நீற்றன் விளங்கு வீரட்டன்பால்
கரையேன் ஆகில், என் கண் துயில் கொள்ளுமே?.

5.057   5 st/nd Thirumurai   Song # 10   திருநாவுக்கரசர்   தேவாரம்  
அரக்கன் ஆய இலங்கையர் மன்னனை
நெருக்கி அம் முடிபத்து இறுத்தான், அவற்கு
இரக்கம் ஆகியவன், திருக்கோளிலி
அருத்தி ஆய் அடியே தொழுது உய்ம்மினே!

5.061   5 st/nd Thirumurai   Song # 3   திருநாவுக்கரசர்   தேவாரம்  
அரிசிலின் கரைமேல், அணி ஆர்தரு
புரிசை, நம் திருப் புத்தூர்ப் புனிதனைப்
பரிசொடும் பரவிப் பணிவார்க்கு எலாம்
துரிசு இல் நன்நெறி தோன்றிடும்; காண்மினே!

5.061   5 st/nd Thirumurai   Song # 5   திருநாவுக்கரசர்   தேவாரம்  
அருப்புப் போல் முலையார் அல்லல் வாழ்க்கை மேல்
விருப்புச் சேர் நிலை விட்டு, நல் இட்டம் ஆய்,
திருப் புத்தூரனைச் சிந்தைசெயச் செய,
கருப்புச் சாற்றிலும் அண்ணிக்கும்; காண்மினே!

5.062   5 st/nd Thirumurai   Song # 10   திருநாவுக்கரசர்   தேவாரம்  
அரக்கன் ஆற்றல் அழித்து அவன் பாடல் கேட்டு
இரக்கம் ஆகி அருள் புரி ஈசனை,
திரைக் கொள் நீர்க் கடுவாய்க்கரைத்தென்புத்தூர்
இருக்கும் நாதனை, காணப்பெற்று உய்ந்தெனே.

5.064   5 st/nd Thirumurai   Song # 9   திருநாவுக்கரசர்   தேவாரம்  
அரவு அணைப் பயில் மால், அயன், வந்து அடி
பரவனை; பரம் ஆம் பரஞ்சோதியை;
குரவனை; குரவு ஆர் பொழில் கோழம்பத்து
உரவனை; ஒருவர்க்கு உணர்வு ஒண்ணுமே?

5.067   5 st/nd Thirumurai   Song # 7   திருநாவுக்கரசர்   தேவாரம்  
அருக்கன் அங்கி யமனொடு தேவர்கள்
திருத்தும் சேவடியான் திகழும் நகர்
ஒருத்தி பாகம் உகந்தவன், வாஞ்சியம்
அருத்தியால் அடைவார்க்கு இல்லை, அல்லலே.

5.079   5 st/nd Thirumurai   Song # 3   திருநாவுக்கரசர்   தேவாரம்  
அருமறையனை, ஆணொடு பெண்ணனை,
கருவிடம் மிக உண்ட எம் கண்டனை,
புரிவெண்நூலனை, புள்ளிருக்குவேளூர்,
உருகி நைபவர் உள்ளம் குளிருமே.

5.079   5 st/nd Thirumurai   Song # 9   திருநாவுக்கரசர்   தேவாரம்  
அரக்கனார் தலைபத்தும் அழிதர
நெருக்கி, மா மலர்ப்பாதம் நிறுவிய
பொருப்பனார் உறை புள்ளிருக்குவேளூர்
விருப்பினால்-தொழுவார் வினை வீடுமே.

5.084   5 st/nd Thirumurai   Song # 4   திருநாவுக்கரசர்   தேவாரம்  
அருத்தமும் மனையாளொடு மக்களும்
பொருத்தம் இல்லை; பொல்லாதது போக்கிடும்
கருத்தன், கண்ணுதல், அண்ணல், காட்டுப்பள்ளி
திருத்தன், சேவடியைச் சென்று சேர்மினே!

5.085   5 st/nd Thirumurai   Song # 2   திருநாவுக்கரசர்   தேவாரம்  
அரி அயன் தலை வெட்டி வட்டு ஆடினார்,
அரி அயன் தொழுது ஏத்தும் அரும்பொருள்,
பெரியவன், சிராப்பள்ளியைப் பேணுவார்
அரி அயன் தொழ அங்கு இருப்பார்களே.

5.085   5 st/nd Thirumurai   Song # 3   திருநாவுக்கரசர்   தேவாரம்  
அரிச்சு, இராப்பகல் ஐவரால் ஆட்டுண்டு,
சுரிச்சு இராது,-நெஞ்சே!-ஒன்று சொல்லக் கேள்:
திரிச் சிராப்பள்ளி என்றலும், தீவினை
நரிச்சு இராது நடக்கும் நடக்குமே.

5.092   5 st/nd Thirumurai   Song # 11   திருநாவுக்கரசர்   தேவாரம்  
அரக்கன் ஈர்-ஐந்தலையும் ஓர் தாளினால்
நெருக்கி ஊன்றியிட்டான் தமர் நிற்கிலும்,
சுருக்கெனாது, அங்குப் பேர்மின்கள்! மற்று நீர்
சுருக்கெனில், சுடரான் கழல் சூடுமே.

5.097   5 st/nd Thirumurai   Song # 26   திருநாவுக்கரசர்   தேவாரம்  
அரவம் ஆர்த்து அனல் ஆடிய அண்ணலைப்
பரவுவார் அவர் பாவம் பறைதற்கு,
குரவை கோத்தவனும், குளிர்போதின்மேல்
கரவு இல் நான்முகனும், கரி அல்லரே.?

5.100   5 st/nd Thirumurai   Song # 8   திருநாவுக்கரசர்   தேவாரம்  
அருக்கன் பாதம் வணங்குவர், அந்தியில்;
அருக்கன் ஆவான் அரன் உரு அல்லனோ?
இருக்கு நால்மறை ஈசனையே தொழும்
கருத்தினை நினையார், கல்மனவரே.

5.100   5 st/nd Thirumurai   Song # 10   திருநாவுக்கரசர்   தேவாரம்  
அரக்கன் வல் அரட்டு ஆங்கு ஒழித்து, ஆர் அருள்
பெருக்கச் செய்த பிரான் பெருந்தன்மையை
அருத்தி செய்து அறியப் பெறுகின்றிலர்-
கருத்து இலாக் கயக்கவணத்தோர்களே.

6.001   6 st/nd Thirumurai   Song # 1   திருநாவுக்கரசர்   தேவாரம்  
அரியானை, அந்தணர் தம் சிந்தை யானை,
அருமறையின் அகத்தானை, அணுவை, யார்க்கும்
தெரியாத தத்துவனை, தேனை, பாலை, திகழ் ஒளியை,
தேவர்கள்தம் கோனை, மற்றைக்
கரியானை, நான்முகனை, கனலை, காற்றை,
கனைகடலை, குலவரையை, கலந்து நின்ற
பெரியானை, பெரும்பற்றப்புலியூரானை,-பேசாத நாள்
எல்லாம் பிறவா நாளே.

Search limited to first 100
This page was last modified on Thu, 09 May 2024 05:33:06 +0000
          send corrections and suggestions to admin-at-sivaya.org

thirumurai all list