சிவய.திருக்கூட்டம்
sivaya.org
Please set your language preference
by clicking below languages link
Search this site with
words in any language e.g. पोऱ्‌ऱि
song/pathigam/paasuram numbers: e.g. 7.039

This page in Tamil   Hindi/Sanskrit   Telugu   Malayalam   Bengali   Kannada   English   ITRANS    Marati  Gujarathi   Oriya   Singala   Tibetian   Thai   Japanese   Urdu   Cyrillic/Russian   Spanish   Hebrew  
Selected thirumurai      thirumurai Thalangal      All thirumurai Songs     

Thirumurai   1   2   3   4   5   6   7   8   9   10   11   12

Pathigam first Letter :                                          
Paadal first letter:     (  .                                                
Search: Filter By: Order By:
திருமுறை 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12 இருந்து பாடல் சொல் அல்
அல்     அல்குற்கு     அல்லல்     அல்லி     அல்லிருள்     அல்லார்     அல்லிய     அல்லியான்,     அல்லன்     அல்லலோடு     அல்லும்     அல்லிக்     அல்லியம்     அல்லாய்ப்    
1.069   1 st/nd Thirumurai   Song # 11   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
அல் ஆடு அரவம் இயங்கும் சாரல் அண்ணாமலையாரை,
நல்லார் பரவப்படுவான் காழி ஞானசம்பந்தன்
சொல்லால் மலிந்த பாடல் ஆன பத்தும் இவை கற்று
வல்லார் எல்லாம் வானோர் வணங்க மன்னி வாழ்வாரே.

2.064   2 st/nd Thirumurai   Song # 9   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
அல்லி மலர்மேல் அயனும், அரவின் அணையானும்,
சொல்லிப் பரவித் தொடர ஒண்ணாச் சோதி ஊர்
கொல்லை வேடர் கூடி நின்று கும்பிட,
முல்லை அயலே முறுவல் செய்யும் முதுகுன்றே.

2.082   2 st/nd Thirumurai   Song # 11   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
அல்லல் இன்றி விண் ஆள்வர்கள் காழியர்க்கு அதிபன்,
நல்ல செந்தமிழ் வல்லவன், ஞானசம்பந்தன்,
எல்லை இல் புகழ் மல்கிய எழில் வளர் தேவூர்த்
தொல்லை நம்பனைச் சொல்லிய பத்தும் வல்லாரே.

2.095   2 st/nd Thirumurai   Song # 11   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
அல்லி நீள் வயல் சூழ்ந்த அரசிலி அடிகளை, காழி
நல்ல ஞானசம்பந்தன் நல் தமிழ் பத்து இவை, நாளும்,
சொல்ல வல்லவர், தம்மைச் சூழ்ந்து அமரர் தொழுது ஏத்த,
வல்ல வான் உலகு எய்தி, வைகலும் மகிழ்ந்து இருப்பாரே.

2.097   2 st/nd Thirumurai   Song # 6   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
அல்லல் வாழ்க்கை உய்ப்பதற்கு அவத்தமே பிறந்து, நீர்,
எல்லை இல் பிணக்கினில் கிடந்திடாது எழு(ம்) மினோ!
பல் இல் வெண் தலையினில் பலிக்கு இயங்கு பான்மையான்,
கொல்லை ஏறு அது ஏறுவான், கோலக் காழி சேர்மினே!

2.099   2 st/nd Thirumurai   Song # 2   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
அல்லல் மிக்க வாழ்க்கையை ஆதரித்து இராது நீர்,
நல்லது ஓர் நெறியினை நாடுதும், நட(ம்)மினோ!
வில்லை அன்ன வாள் நுதல் வெள்வளை ஒர் பாகம் ஆம்
கொல்லை வெள்ளை ஏற்றினான் கோடி காவு சேர்மினே!

2.111   2 st/nd Thirumurai   Song # 6   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
அல்லிய மலர் புல்கு விரிகுழலார் கழல் இணை அடி நிழல்
அவை பரவ,
எல்லி அம்போது கொண்டு எரி ஏந்தி, எழிலொடு தொழில்
அவை இசைய வல்லார்;
சொல்லிய அருமறை இசை பாடி, சூடு இளமதியினர்; தோடு
பெய்து,
வல்லியந்தோல் உடுத்து, இவராணீர் வாய்மூர் அடிகள்
வருவாரே.

5.001   5 st/nd Thirumurai   Song # 4   திருநாவுக்கரசர்   தேவாரம்  
அல்லல் என் செயும்? அருவினை என் செயும்?
தொல்லை வல்வினைத் தொந்தம் தான் என்செயும்?-
தில்லை மா நகர்ச் சிற்றம்பலவனார்க்கு
எல்லை இல்லது ஓர் அடிமை பூண்டேனுக்கே.

5.033   5 st/nd Thirumurai   Song # 9   திருநாவுக்கரசர்   தேவாரம்  
அல்லியான், அரவுஐந்தலை நாக(அ)அணைப்-
பள்ளியான், அறியாத பரிசு எலாம்
சொல்லி, நீ என்றும் சோற்றுத்துறையர்க்கே
புல்லி, நீ பணி செய், மட நெஞ்சமே!

5.042   5 st/nd Thirumurai   Song # 4   திருநாவுக்கரசர்   தேவாரம்  
அல்லல் இல்லை; அருவினைதான் இல்லை-
மல்கு வெண்பிறை சூடும் மணாளனார்,
செல்வனார், திரு வேட்களம் கைதொழ
வல்லர் ஆகில்; வழி அது காண்மினே!

5.043   5 st/nd Thirumurai   Song # 6   திருநாவுக்கரசர்   தேவாரம்  
அல்லல் ஆக ஐம் பூதங்கள் ஆட்டினும்,
வல்ல ஆறு சிவாய நம என்று,
நல்லம் மேவிய நாதன் அடி தொழ,
வெல்ல வந்த வினைப்பகை வீடுமே.

5.056   5 st/nd Thirumurai   Song # 5   திருநாவுக்கரசர்   தேவாரம்  
அல்லல் ஆயின தீரும்; அழகிய
முல்லை வெண்முறுவல்(ல்) உமை அஞ்சவே,
கொல்லை யானை உரித்தவன், கோளிலிச்
செல்வன், சேவடி சென்று தொழுமினே!

5.068   5 st/nd Thirumurai   Song # 8   திருநாவுக்கரசர்   தேவாரம்  
அல்லன் என்றும் அலர்க்கு, அருள் ஆயின
சொல்லன் என்று,-சொல்லா மறைச்சோதியான்,-
வல்லன் என்றும், வல்லார் வளம் மிக்கவர்;
நல்லன், என்றும் நல்லார்க்கு, நள்ளாறனே.

5.070   5 st/nd Thirumurai   Song # 7   திருநாவுக்கரசர்   தேவாரம்  
அல்லலோடு அருநோயில் அழுந்தி, நீர்,
செல்லுமா நினையாதே, கனை குரல்
கொல்லை ஏறு உடைக் கொண்டீச்சுரவனை
வல்ல ஆறு தொழ, வினை மாயுமே.

6.041   6 st/nd Thirumurai   Song # 3   திருநாவுக்கரசர்   தேவாரம்  
அல் ஆய்ப் பகல் ஆனாய் நீயே என்றும், ஆதிக் கயிலாயன் நீயே என்றும்,
கல்லால் அமர்ந்தாயும் நீயே என்றும், காளத்திக் கற்பகமும் நீயே என்றும்,
சொல் ஆய்ப் பொருள் ஆனாய் நீயே என்றும், சோற்றுத்துறை உறைவாய் நீயே என்றும்,
செல் வாய்த் திரு ஆனாய் நீயே என்றும், நின்ற நெய்த்தானா! என் நெஞ்சு உளாயே.

6.078   6 st/nd Thirumurai   Song # 5   திருநாவுக்கரசர்   தேவாரம்  
அல்லும் பகலும் ஆய் நின்றார் தாமே; அந்தியும் சந்தியும் ஆனார் தாமே;
சொல்லும் பொருள் எலாம் ஆனார் தாமே; தோத்திரமும் சாத்திரமும் ஆனார் தாமே;
பல் உரைக்கும் பா எலாம் ஆனார் தாமே; பழனை பதியா உடையார் தாமே;
செல்லும் நெறி காட்ட வல்லார் தாமே திரு ஆலங்காடு உறையும் செல்வர் தாமே.

6.082   6 st/nd Thirumurai   Song # 9   திருநாவுக்கரசர்   தேவாரம்  
அல்லல் அடியார்க்கு அறுப்பார் போலும்; அமருலகம் தம் அடைந்தார்க்கு ஆட்சிபோலும்;
நல்லமும் நல்லூரும் மேயார் போலும்; நள்ளாறு நாளும் பிரியார் போலும்;
முல்லை முகை நகையாள் பாகர் போலும்; முன்னமே தோன்றி முளைத்தார் போலும்;
தில்லை நடம் ஆடும் தேவர் போலும் திருச் சாய்க்காட்டு இனிது உறையும் செல்வர் தாமே.

6.089   6 st/nd Thirumurai   Song # 1   திருநாவுக்கரசர்   தேவாரம்  
அல்லி மலர் நாற்றத்து உள்ளார் போலும்; அன்பு உடையர் சிந்தை அகலார் போலும்;
சொல்லின், அருமறைகள் தாமே போலும்; தூநெறிக்கு வழி காட்டும் தொழிலார் போலும்;
வில்லின் புரம் மூன்று எரித்தார் போலும்; வீங்கு இருளும் நல் வெளியும் ஆனார் போலும்;
எல்லி நடம் ஆட வல்லார் போலும் இன்னம்பர்த் தான் தோன்றி ஈசனாரே.

7.056   7 st/nd Thirumurai   Song # 10   சுந்தரமூர்த்தி சுவாமிகள்   திருப்பாட்டு  
அல்லல் உள்ளன தீர்த்திடுவானை, அடைந்தவர்க்கு அமுது ஆயிடுவானை,
கொல்லை வல் அரவம்(ம்) அசைத்தானை, கோலம் ஆர் கரியின்(ன்) உரியானை,
நல்லவர்க்கு அணி ஆனவன் தன்னை, நானும் காதல் செய்கின்ற பிரானை,
எல்லி மல்லிகையே கமழ் நீடூர் ஏத்தி நாம் பணியா விடல் ஆமே?

8.101   8 st/nd Thirumurai   Song # 19   மாணிக்க வாசகர்    திருவாசகம்  
அல்லல் பிறவி அறுப்பானே! ஓ!' என்று,
சொல்லற்கு அரியானைச் சொல்லி, திருவடிக் கீழ்ச்
சொல்லிய பாட்டின் பொருள் உணர்ந்து சொல்லுவார்
செல்வர் சிவபுரத்தின் உள்ளார் சிவன் அடிக் கீழ்,
பல்லோரும் ஏத்தப் பணிந்து. (95)
திருச்சிற்றம்பலம். மாணிக்கவாசகர் அடிகள் போற்றி!

8.127   8 st/nd Thirumurai   Song # 4   மாணிக்க வாசகர்    திருவாசகம்  
அல்லிக் கமலத்து அயனும், மாலும், அல்லாதவரும், அமரர் கோனும்,
சொல்லிப் பரவும் நாமத்தானை, சொல்லும் பொருளும் இறந்த சுடரை,
நெல்லிக் கனியை, தேனை, பாலை, நிறை இன் அமுதை, அமுதின் சுவையை,
புல்லிப் புணர்வது என்று கொல்லோ என் பொல்லா மணியைப் புணர்ந்தே?

9.019   9 st/nd Thirumurai   Song # 3   பூந்துருத்தி நம்பி காடநம்பி   திருவிசைப்பா  
அல்லியம் பூம்பழனத் தாமூர்நா
   வுக்கரசைச்
செல்லநெறி வகுத்த சேவகனே
   தென்றில்லைக்
கொல்லை விடையேறி கூத்தா
   டரங்காகச்
செல்வ நிறைந்தசிற் றம்பலமே
   சேர்ந்தனையே.

9.024   9 st/nd Thirumurai   Song # 1   திருவாலியமுதனார்   திருவிசைப்பா  
அல்லாய்ப் பகலாய் அருவாய் உருவாய்
   ஆரா அமுதமாய்க்
கல்லால் நிழலாய் கயிலை மலையாய்
   காண அருள் என்று
பல்லா யிரம்பேர் பதஞ்ச லிகள்
   பரவ வெளிப்பட்டுச்
செல்வாய் மதிலின் றில்லைக் கருளித்
   தேவன் ஆடுமே.

11.008   11 st/nd Thirumurai   Song # 137   சேரமான் பெருமாள் நாயனார்   திருக்கயிலாய ஞான உலா  
அல்குற்கு மேகலையைச் சூழ்ந்தாள் அணிமுலைமேல்
மல்கிய சாந்தொடு பூண்புனைந்து நல்கூர்

11.026   11 st/nd Thirumurai   Song # 20   பட்டினத்துப் பிள்ளையார்   கோயில் நான்மணிமாலை  
அல்லல் வாழ்க்கை வல்லிதின் செலுத்தற்குக்
கைத்தேர் உழந்து கார்வரும் என்று
வித்து விதைத்தும் விண்பார்த் திருந்தும்
கிளையுடன் தவிரப் பொருளுடன் கொண்டு
முளைமுதிர் பருவத்துப் பதியென வழங்கியும்
அருளா வயவர் அம்பிடை நடந்தும்
இருளுறு பவ்வத் தெந்திரங் கடாஅய்த்
துன்றுதிரைப் பரப்பிற் குன்றுபார்த் தியங்கியும்
ஆற்றல் வேந்தர்க்குச் சோற்றுக்கடன் பூண்டும்
தாள்உழந் தோடியும் வாளுழந் துண்டும்

அறியா ஒருவனைச் செறிவந்து தெருட்டியும்
சொற்பல புனைந்தும் கற்றன கழறியும்
குடும்பப் பாசம் நெடுந்தொடர்ப் பூட்டி
ஐவர் ஐந்திடத் தீர்ப்ப நொய்தில்
பிறந்தாங் கிறந்தும் இறந்தாங்கு பிறந்தும்
கணத்திடைத் தோன்றிக் கணத்திடைக் கரக்கும்
கொப்புட் செய்கை ஒப்பில் மின்போல்
உலப்பில் யோனிக் கலக்கத்து மயங்கியும்
நெய்யெரி வளர்த்துப் பெய்முகிற் பெயல்தரும்
தெய்வ வேதியர் தில்லை மூதூர்
ஆடகப் பொதுவில் நாடகம் நவிற்றும்
கடவுட் கண்ணுதல் நடம்முயன் றெடுத்த
பாதப் போதும் பாய்புலிப் பட்டும்
மீதியாத் தசைத்த வெள்ளெயிற் றரவும்
சேயுயர் அகலத் தாயிரங் குடுமி

மணிகிடந் திமைக்கும் ஒருபே ராரமும்
அருள்பொதிந் தலர்ந்த திருவாய் மலரும்
நெற்றியில் திகழ்ந்த ஒற்றை நாட்டமும்
கங்கை வழங்கும் திங்கள் வேணியும்
கண்ணிடைப் பொறித்து மனத்திடை அழுத்தி ஆங்

குள்மகிழ்ந் துரைக்க உறுதவஞ் செய்தனன்
நான்முகன் பதத்தின் மேல்நிகழ் பதந்தான்
உறுதற் கரியதும் உண்டோ
பெறுதற் கரியதோர் பேறுபெற் றேற்கே.

11.031   11 st/nd Thirumurai   Song # 11   நம்பியாண்டார் நம்பி   திருநாரையூர் விநாயகர் திருஇரட்டைமணிமாலை  
அல்லல் களைந்தான்தன் அம்பொன் உலகத்தின்
எல்லை புகுவிப்பான் ஈண்டுழவர் - நெல்லல்களை
செங்கழுநீர் கட்கும் திருநாரை யூர்ச்சிவன்சேய்
கொங்கெழுதார் ஐங்கரத்த கோ.

12.130   12 st/nd Thirumurai   Song # 9   சேக்கிழார்   இலை மலிந்த சருக்கம்  
அல்லல் நல்குர வாயிடக் கூலிக்கு
நெல்ல றுத்துமெய்ந் நீடிய அன்பினால்
நல்ல செந்நெலிற் பெற்றன நாயனார்க்
கொல்லை யின்னமு தாக்கொண் டொழுகுவார்.
12.140   12 st/nd Thirumurai   Song # 5   சேக்கிழார்   இலை மலிந்த சருக்கம்  
அல்லி மலர்ப்பழ னத்தயல் நாகிள ஆன்ஈனும்
ஒல்லை முழுப்பை உகைப்பின் உழக்கு குழக்கன்று
கொல்லை மடக்குல மான்மறி யோடு குதித்தோடும்
மல்கு வளத்தது முல்லை யுடுத்த மருங்கோர்பால்.
12.210   12 st/nd Thirumurai   Song # 122   சேக்கிழார்   திருநின்ற சருக்கம்  
அல்லிருள் அன்னவர் கூற
அரும்பெரும் பாவத் தவன்பின்
தொல்லைச் சமயம் அழித்துத்
துயரம் விளைத்தவன் தன்னைச்
சொல்லும் இனிச்செய்வ தென்னச்
சூழ்ச்சி முடிக்குந் தொழிலோர்
கல்லுடன் பாசம் பிணித்துக்
கடலிடைப் பாய்ச்சுவ தென்றார்.
12.210   12 st/nd Thirumurai   Song # 162   சேக்கிழார்   திருநின்ற சருக்கம்  
அல்லல் பவம்அற அருளுந் தவமுதல்
அடியார்எதிர்கொள அவரோடும்
மல்லற் புனல்கமழ் மாடே வாயிலின்
வழிபுக் கெதிர்தொழு தணைவுற்றார்
கல்வித் துறைபல வருமா மறைமுதல்
கரைகண் டுடையவர் கழல்பேணுஞ்
செல்வக் குடிநிறை நல்வைப் பிடைவளர்
சிவமே நிலவிய திருவீதி.
12.210   12 st/nd Thirumurai   Song # 259   சேக்கிழார்   திருநின்ற சருக்கம்  
அல்லார் கண்டத் தண்டர்பிரான்
அருளால் பெற்ற படிக்காசு
பல்லா றியன்ற வளம்பெருகப்
பரமன் அடியா ரானார்கள்
எல்லாம் எய்தி உண்கவென
இரண்டு பொழுதும் பறைநிகழ்த்திச்
சொல்லால் சாற்றிச் சோறிட்டார்
துயர்கூர் வறுமை தொலைத்திட்டார்.

This page was last modified on Thu, 09 May 2024 05:33:06 +0000
          send corrections and suggestions to admin-at-sivaya.org

thirumurai all list