சிவய.திருக்கூட்டம்
sivaya.org



This page in Tamil   Hindi/Sanskrit   Telugu   Malayalam   Bengali   Kannada   English   ITRANS    Marati  Gujarathi   Oriya   Singala   Tibetian   Thai   Japanese   Urdu   Cyrillic/Russian   Spanish   Hebrew   Korean  
Selected thirumurai      thirumurai Thalangal      All thirumurai Songs     

Thirumurai   1   2   3   4   5   6   7   8   9   10   11   12

Pathigam first Letter :                                          
Paadal first letter:       (  .  <                                                
Search: Filter By: Order By:
திருமுறை 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12 இருந்து பாடல் சொல் அழி
அழி     அழிகின்ற     அழிதக     அழித்தவன்     அழிப்பர்,     அழிவு    
1.037   1 st/nd Thirumurai   Song # 10   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
அழி வல் அமணரொடு தேரர்
மொழி வல்லன சொல்லிய போதும்,
இழிவு இல்லது ஒரு செம்மையினான் ஊர்
பழி இல்லவர் சேர் பனையூரே.

2.054   2 st/nd Thirumurai   Song # 3   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
அழி மல்கு பூம் புனலும், அரவும், சடைமேல் அடைவு எய்த,
மொழி மல்கு மாமறையீர்! கறை ஆர் கண்டத்து எண்தோளீர்!
பொழில் மல்கு வண்டு இனங்கள் அறையும் கானல் பூம் புகலி,
எழில் மல்கு கோயிலே கோயில் ஆக இருந்தீரே.

6.064   6 st/nd Thirumurai   Song # 6   திருநாவுக்கரசர்   தேவாரம்  
அழித்தவன் காண், எயில் மூன்றும் அயில்வாய் அம்பால்; ஐயாறும் இடை மருதும் ஆள்வான் தான் காண்;
பழித்தவன் காண், அடையாரை; அடைவார் தங்கள் பற்று அவன் காண்; புற்று அரவம் நாணினான் காண்;
சுழித்தவன் காண், முடிக் கங்கை; அடியே போற்றும் தூய மா முனிவர்க்காப் பார்மேல் நிற்க
இழித்தவன் காண் எழில் ஆரும் பொழில் ஆர் கச்சி ஏகம்பன் காண்; அவன் என் எண்ணத்தானே.

7.060   7 st/nd Thirumurai   Song # 5   சுந்தரமூர்த்தி சுவாமிகள்   திருப்பாட்டு  
அழிப்பர், ஐவர் புரவு உடையார்கள்; ஐவரும் புரவு ஆசு அற ஆண்டு,
கழித்து, கால் பெய்து, போயின பின்னை, கடை முறை உனக்கே பொறை ஆனேன்;
விழித்துக் கண்டனன், மெய்ப் பொருள் தன்னை; வேண்டேன், மானுட வாழ்க்கை, ஈது  ஆகில்;
இழித்தேன்; என் தனக்கு உய்வகை அருளாய் இடை மருது(வ்) உறை எந்தை பிரானே! .

8.136   8 st/nd Thirumurai   Song # 8   மாணிக்க வாசகர்    திருவாசகம்  
அழிவு இன்றி நின்றது ஒர் ஆனந்த வெள்ளத்திடை அழுத்தி,
கழிவு இல் கருணையைக் காட்டி, கடிய வினை அகற்றி,
பழ மலம் பற்று அறுத்து, ஆண்டவன், பாண்டிப் பெரும் பதமே,
முழுது உலகும், தருவான், கொடையே; சென்று முந்துமினே.

10.314   10 st/nd Thirumurai   Song # 3   திருமூலர்   திருமந்திரம்  
அழிகின்ற ஆண்டவை ஐயைஞ்சு மூன்று
மொழிகின்ற முப்பத்து மூன்றென்ப தாகும்
கழிகின்ற கால்அறு பத்திரண் டெண்ப
தெழுகின்ற ஈரைம்ப தெண்ணல் திருந்தே. 

10.713   10 st/nd Thirumurai   Song # 7   திருமூலர்   திருமந்திரம்  
அழிதக வில்லா அரன்அடி யாரைத்
தொழுதகை ஞாலத்துத் தூங்கிருள் நீங்கும்
பழுது படாவண்ணம் பண்பனை நாடித்
தொழுதெழ வையகத் தோரின்ப மாமே.

10.720   10 st/nd Thirumurai   Song # 14   திருமூலர்   திருமந்திரம்  
அழிகின்ற விந்து அளவை யறியார்
கழிகின் றதனையுட் காக்கலும் ஓரார்
அழிகின்ற காயத் தழிந்தயர் வுற்றோர்
அழிகின்ற தன்மை யறிந்தொழி யாரே. 21,

10.802   10 st/nd Thirumurai   Song # 2   திருமூலர்   திருமந்திரம்  
அழிகின்ற ஓர்உடம் பாகும் செவி, கண்,
கழிகின்ற கால், அவ் இரதங்கள், தானம்,
மொழிகின்ற வாக்கு, முடிகின்ற நாடி;
ஒழிகின்ற ஊனுக் குறுதுணை யில்லையே.

10.837   10 st/nd Thirumurai   Song # 1   திருமூலர்   திருமந்திரம்  
அழிகின்ற சாயா புருடனைப் போலக்
கழிகின்ற நீரிற் குமிழியைக் காணின்
எழுகின்ற தீயிற்கர்ப் பூரத்தை யொக்கப்
பொழிகின்ற இவ்வுடல் போம்அப் பரத்தே.

11.006   11 st/nd Thirumurai   Song # 52   சேரமான் பெருமாள் நாயனார்   பொன்வண்ணத்தந்தாதி  
அழிகின்ற தாருயிர் ஆகின்ற
தாகுலம் ஏறிடும்மால்
இழிகின்ற சங்கம் இருந்த
முலைமேற் கிடந்தனபீர்
பொழிகின்ற கண்ணீர் புலர்ந்தது
வாய்கலை போனவந்தார்
மொழிகின்ற தென்னினி நான்மறை
முக்கண் முறைவனுக்கே.


This page was last modified on Fri, 10 Jul 2026 00:17:47 +0000      
send corrections and suggestions to admin-at-sivaya.org