சிவய.திருக்கூட்டம்
sivaya.org
Please set your language preference
by clicking below languages link
Search this site with
words in any language e.g. पोऱ्‌ऱि
song/pathigam/paasuram numbers: e.g. 7.039

This page in Tamil   Hindi/Sanskrit   Telugu   Malayalam   Bengali   Kannada   English   ITRANS    Marati  Gujarathi   Oriya   Singala   Tibetian   Thai   Japanese   Urdu   Cyrillic/Russian   Spanish   Hebrew  
Selected thirumurai      thirumurai Thalangal      All thirumurai Songs     

Thirumurai   1   2   3   4   5   6   7   8   9   10   11   12

Pathigam first Letter :                                          
Paadal first letter:     (  .                                                
Search: Filter By: Order By:
திருமுறை 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12 இருந்து பாடல் சொல் ஆண்
ஆண்டு     ஆண்மிகில்     ஆண்டான்     ஆண்டகை     ஆண்டெதிர்     ஆண்டகைமைத்     ஆண்டஅர     ஆண்ட     ஆண்     ஆண்டானை,     ஆண்டுகள்தோறும்     ஆண்டி    
3.033   3 st/nd Thirumurai   Song # 9   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
ஆண் அலார், பெண் அலார், அயனொடு மாலுக்கும்
காண ஒணா வண்ணத்தான், கருதுவார் மனத்து உளான்,
பேணுவார் பிணியொடும் பிறப்பு அறுப்பான், இடம்
சேண் உலாம் மாளிகைத் திரு உசாத்தானமே.

3.067   3 st/nd Thirumurai   Song # 5   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
ஆண் இயல்பு காண, வனவாண இயல் பேணி, எதிர் பாணமழை சேர்
தூணி அற, நாணி அற, வேணு சிலை பேணி அற, நாணி விசயன்
பாணி அமர் பூண, அருள் மாணு பிரமாணி இடம் ஏணி முறையில்
பாணி உலகு ஆள, மிக ஆணின் மலி தோணி நிகர் தோணிபுரமே.

6.018   6 st/nd Thirumurai   Song # 2   திருநாவுக்கரசர்   தேவாரம்  
ஆண் ஆகிப் பெண் ஆய வடிவு தோன்றும்;
அடியவர்கட்கு ஆர் அமுதம் ஆகித் தோன்றும்;
ஊண் ஆகி ஊர் திரிவான் ஆகித் தோன்றும்;
ஒற்றை வெண் பிறை தோன்றும்; பற்றார் தம்மேல்
சேண் நாக வரைவில்லால் எரித்தல் தோன்றும்;
செத்தவர்தம் எலும்பினால் செறியச் செய்த
பூண் நாணும் அரை நாணும் பொலிந்து தோன்றும்
பொழில் திகழும் பூவணத்து எம் புனிதனார்க்கே.

6.043   6 st/nd Thirumurai   Song # 9   திருநாவுக்கரசர்   தேவாரம்  
ஆண்டானை, வானோர் உலகம் எல்லாம்; அந் நாள் அறியாத தக்கன் வேள்வி
மீண்டானை, விண்ணவர்களோடும் கூடி; விரை மலர் மேல் நான்முகனும் மாலும் தேர
நீண்டானை; நெருப்பு உருவம் ஆனான் தன்னை; நிலை இலார் மும்மதிலும் வேவ, வில்லைப்
பூண்டானை; புண்ணியனை; புனிதன் தன்னை; பொய் இலியை; பூந்துருத்திக் கண்டேன், நானே.

6.054   6 st/nd Thirumurai   Song # 1   திருநாவுக்கரசர்   தேவாரம்  
ஆண்டானை, அடியேனை ஆளாக்கொண்டு; அடியோடு முடி அயன் மால் அறியா வண்ணம்
நீண்டானை; நெடுங்கள மா நகரான் தன்னை; நேமி வான் படையால் நீள் உரவோன் ஆகம்
கீண்டானை; கேதாரம் மேவினானை; கேடு இலியை; கிளர் பொறிவாள் அரவோடு என்பு
பூண்டானை; புள்ளிருக்கு வேளூரானை; போற்றாதே ஆற்ற  நாள் போக்கினேனே!.

8.104   8 st/nd Thirumurai   Song # 6   மாணிக்க வாசகர்    திருவாசகம்  
ஆண்டுகள்தோறும் அடைந்த அக் காலை
ஈண்டியும், இருத்தியும், எனைப் பல பிழைத்தும்;
காலை மலமொடு, கடும் பகல் பசி, நிசி
வேலை நித்திரை, யாத்திரை, பிழைத்தும்:
கரும் குழல்; செவ் வாய்; வெள் நகை; கார் மயில்

8.216   8 st/nd Thirumurai   Song # 56   மாணிக்க வாசகர்    திருச்சிற்றம்பலக் கோவையார்  
ஆண்டி லெடுத்தவ ராமிவர்
   தாமவ ரல்குவர்போய்த்
தீண்டி லெடுத்தவர் தீவினை
   தீர்ப்பவன் தில்லையின்வாய்த்
தூண்டி லெடுத்தவ ரால்தெங்கொ
   டெற்றப் பழம்விழுந்து
பாண்டி லெடுத்தபஃ றாமரை
   கீழும் பழனங்களே.

10.107   10 st/nd Thirumurai   Song # 2   திருமூலர்   திருமந்திரம்  
ஆண்டு பலவுங் கழிந்தன அப்பனைப்
பூண்டுகொண் டாரும் புகுந்தறி வார்இல்லை
நீண்டன காலங்கள் நீண்டு கொடுக்கினுந்
தூண்டு விளக்கின் சுடரறி யாரே. 

10.214   10 st/nd Thirumurai   Song # 28   திருமூலர்   திருமந்திரம்  
ஆண்மிகில் ஆணாகும் பெண்மிகிற் பெண்ணாகும்
பூணிரண் டொத்துப் பொருந்தில் அலியாகும்
தாண்மிகு மாகில் தரணி முழுதாளும்;
பாணவ மிக்கிடில் பாய்ந்ததும் இல்லையே. 

10.223   10 st/nd Thirumurai   Song # 1   திருமூலர்   திருமந்திரம்  
ஆண்டான் அடியவ ரார்க்கு விரோதிகள்
ஆண்டான் அடியவர் ஐயமேற் றுண்பவர்
ஆண்டான் அடியாரை வேண்டாது பேசினோர்
தாந்தாம் விழுவது தாழ்நர காகுமே. 

12.000   12 st/nd Thirumurai   Song # 161   சேக்கிழார்   திருமலைச் சருக்கம்  
ஆண்டகை யருளின் நோக்கின்
வெள்ளத்துள் அலைந்தோம் என்பார்
தாண்டிய பரியும் நம்பால்
தகுதியில் நடந்த தென்பார்
பூண்டயங் கிவனே காணும்
 புண்ணிய மூர்த்தி யென்பார்
ஈண்டிய மடவார் கூட்டம்  
இன்னன இசைப்பச் சென்றார்.
12.100   12 st/nd Thirumurai   Song # 20   சேக்கிழார்   இலை மலிந்த சருக்கம்  
ஆண்டெதிர் அணைந்து செல்ல
இடும்அடித் தளர்வு நீங்கிப்
பூண்திகழ் சிறுபுன் குஞ்சிப்
புலியுகிர்ச் சுட்டி சாத்தி
மூண்டெழு சினத்துச் செங்கண்
முளவுமுள் அரிந்து கோத்த
நாண்தரும் எயிற்றுத் தாலி
நலங்கிளர் மார்பில் தூங்க.
12.210   12 st/nd Thirumurai   Song # 23   சேக்கிழார்   திருநின்ற சருக்கம்  
ஆண்டகைமைத் தொழிலின்கண்
அடலரியே றெனவுள்ளார்
காண்டகைய பெருவனப்பிற்
கலிப்பகையார் எனும்பெயரார்
பூண்டகொடைப் புகழனார்
பாற்பொருவின் மகட்கொள்ள
வேண்டியெழுங் காதலினால்
மேலோரைச் செலவிட்டார்.
12.210   12 st/nd Thirumurai   Song # 94   சேக்கிழார்   திருநின்ற சருக்கம்  
ஆண்டஅர சருள்செய்யக்
கேட்டவரும் அடிவணங்கி
வேண்டியவர்க் கொண்டேக
விடையுகைத்தார் திருத்தொண்டர்
ஈண்டுவரும் வினைகளுக்கெம்
பிரானுளனென் றிசைந்திருந்தார்
மூண்டசினப் போர்மன்னன்
முன்னணைந்தங் கறிவித்தார்.
12.210   12 st/nd Thirumurai   Song # 97   சேக்கிழார்   திருநின்ற சருக்கம்  
ஆண்டஅர சதனகத்துள்
அணைந்தபொழு தம்பலத்துத்
தாண்டவமுன் புரிந்தருளுந்
தாள்நிழலைத் தலைக்கொண்டே
ஈண்டுவருந் துயருளவோ
ஈசனடி யார்க்கென்று
மூண்டமனம் நேர்நோக்கி
முதல்வனையே தொழுதிருந்தார்.
12.210   12 st/nd Thirumurai   Song # 118   சேக்கிழார்   திருநின்ற சருக்கம்  
ஆண்ட அரசை வணங்கி
அஞ்சிஅவ் வேழம் பெயரத்
தூண்டிய மேன்மறப் பாகர்
தொடக்கி அடர்த்துத் திரித்து
மீண்டும் அதனை அவர்மேல்
மிறைசெய்து காட்டிட வீசி
ஈண்டவர் தங்களை யேகொன்
றமணர்மேல் ஓடிற் றெதிர்ந்தே.
12.210   12 st/nd Thirumurai   Song # 189   சேக்கிழார்   திருநின்ற சருக்கம்  
ஆண்டஅர செழுந்தருளக் கோலக் காவை
அவரோடும் சென்றிறைஞ்சி அன்பு கொண்டு
மீண்டருளி னார்அவரும் விடைகொண் டிப்பால்
வேதநா யகர்விரும்பும் பதிக ளான
நீண்டகருப் பறியலூர் புன்கூர் நீடூர்
நீடுதிருக் குறுக்கைதிரு நின்றி யூரும்
காண்தகைய நனிபள்ளி முதலா நண்ணிக்
கண்ணுதலார் கழல்தொழுது வணங்கிச் செல்வார்.
12.210   12 st/nd Thirumurai   Song # 218   சேக்கிழார்   திருநின்ற சருக்கம்  
ஆண்டஅர செழுந்தருள
ஆரூரில் அன்பர்கள்தாம்
நீண்டசடை முடியார்பால்
நிறைந்தஅருள் பெற்றுடையார்
காண்டகுமா ளிகைமாடங்
கவின்சிறந்தோங் கிடஎங்குஞ்
சேண்திகழ்வீ திகள்பொலியத்
திருமலிமங் கலஞ்செய்தார்.
12.210   12 st/nd Thirumurai   Song # 232   சேக்கிழார்   திருநின்ற சருக்கம்  
ஆண்டஅர செழுந்தருளி அணியாரூர்
மணிப்புற்றில் அமர்ந்து வாழும்
நீண்டசுடர் மாமணியைக் கும்பிட்டு
நீடுதிருப் புகலூர் நோக்கி
மீண்டருளி னாரென்று கேட்டருளி
எதிர்கொள்ளும் விருப்பி னோடும்
ஈண்டுபெருந் தொண்டர்குழாம் புடைசூழ
வெழுந்தருளி எதிரே சென்றார்.
12.210   12 st/nd Thirumurai   Song # 283   சேக்கிழார்   திருநின்ற சருக்கம்  
ஆண்ட அரசும் பிள்ளையார்
உடனே அங்கண் இனிதமர்ந்து
பூண்ட காதல் பொங்கியெழ
வாய்மூர் அடிகள் அடிபோற்றி
மூண்ட அன்பின் மொழிமாலை
சாத்தி ஞான முனிவரொடு
மீண்டு வந்து திருமறைக்காட்
டெய்தி விமலர் தாள்பணிந்தார்.
12.210   12 st/nd Thirumurai   Song # 402   சேக்கிழார்   திருநின்ற சருக்கம்  
ஆண்டஅர சங்கணர்சீர்
அருள்பெற்றப் பதிநின்றும்
பாண்டிநாட் டெழுந்தருளும்
பான்மையராய்த் தென்திசைபோய்க்
காண்டகைய திருப்புத்தூர்
பணிந்தேத்திக் கதிர்மதியம்
தீண்டுகொடி மதில்மதுரைத்
திருவால வாய்சேர்ந்தார்.
12.280   12 st/nd Thirumurai   Song # 281   சேக்கிழார்   வம்பறா வரிவண்டுச் சருக்கம்  
ஆண்டகை யாரும் இசைந்தங்
கம்பொற் றிருத்தோணி மேவும்
நீண்ட சடையார் அடிக்கீழ்ப்
பணிவுற்று நீடருள் பெற்றே
ஈண்டு புகழ்த்தாதை யார்பின்
எய்திட யாழ்ப்பாண ரோடும்
காண்தகு காழி தொழுது
காதலி னால்புறம் போந்தார்.
12.290   12 st/nd Thirumurai   Song # 186   சேக்கிழார்   வம்பறா வரிவண்டுச் சருக்கம்  
ஆண்ட நம்பி யெதிர்கொண்ட
அடியார் வணங்க எதிர்வணங்கி
நீண்ட மதிற்கோ புரங்கடந்து
நிறைமா ளிகைவீ தியிற்போந்து
பூண்ட காதல் வாழ்த்தினுடன்
புனைமங் கலதூ ரியம்ஒலிப்ப
ஈண்டு தொண்டர் பெருகுதிரு
ஏகாம் பரஞ்சென் றெய்தினார்.
12.290   12 st/nd Thirumurai   Song # 237   சேக்கிழார்   வம்பறா வரிவண்டுச் சருக்கம்  
ஆண்டு கொண்ட அந்தணனார்
அவருக் கருளிக் கருணையினால்
நீண்ட கங்குல் யாமத்து
நீங்கி வானில் நிறைமதியந்
தீண்டு கன்னி மாடத்துச்
சென்று திகழ்சங் கிலியாராம்
தூண்டு சோதி விளக்கனையார்
தம்பால் கனவில் தோன்றினார்.
12.370   12 st/nd Thirumurai   Song # 75   சேக்கிழார்   வார்கொண்ட வனமுலையாள் சருக்கம்  
ஆண்ட நம்பி பெருமாளை
யுடனே யமுது செய்தருள
வேண்டு மென்ன ஆங்கவரும்
விரைந்து வணங்கி வெருவுறலும்
நீண்ட தடக்கை பிடித்தருளி
மீண்டும் நேரே குறைகொள்ள
ஈண்ட அமுது செய்வதனுக்
கிசைந்தார் பொறையர்க் கிறையவனார்.

This page was last modified on Thu, 09 May 2024 05:33:06 +0000
          send corrections and suggestions to admin-at-sivaya.org

thirumurai all list