சிவய.திருக்கூட்டம்
sivaya.org
Please set your language preference
by clicking below languages link
Search this site with
words in any language e.g. पोऱ्‌ऱि
song/pathigam/paasuram numbers: e.g. 7.039

This page in Tamil   Hindi/Sanskrit   Telugu   Malayalam   Bengali   Kannada   English   ITRANS    Marati  Gujarathi   Oriya   Singala   Tibetian   Thai   Japanese   Urdu   Cyrillic/Russian   Spanish   Hebrew  
Selected thirumurai      thirumurai Thalangal      All thirumurai Songs     

Thirumurai   1   2   3   4   5   6   7   8   9   10   11   12

Pathigam first Letter :                                          
Paadal first letter:     (  .                                                
Search: Filter By: Order By:
திருமுறை 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12 இருந்து பாடல் சொல் ஆதி
ஆதி     ஆதியு     ஆதிப்     ஆதியோ     ஆதித்தன்     ஆதியை     ஆதித்த     ஆதியும்     ஆதிச்     ஆதிமா     ஆதியாய்     ஆதியார்     ஆதிநான்     ஆதிமாமறை     ஆதிமுதல்     ஆதிதிரு     ஆதியார்,     ஆதியன்,     ஆதி,     ஆதித்தன்,     ஆதியில்     ஆதியான்,     ஆதிநாதன்;     ஆதியும்(ம்),     ஆதியானை,     ஆதிப்பால்     ஆதிக்கண்ணான்     ஆதியனை,     ஆதியன்;     ஆதிமூர்த்திகட்கு    
1.050   1 st/nd Thirumurai   Song # 6   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
ஆதி ஆய நான்முகனும் மாலும் அறிவு அரிய
சோதியானே! நீதி இல்லேன் சொல்லுவன், நின் திறமே;
ஓதி நாளும் உன்னை ஏத்தும் என்னை வினை அவலம்
வாதியாமே வந்து நல்காய் வலிவலம் மேயவனே!

2.026   2 st/nd Thirumurai   Song # 7   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
ஆதியார், அந்தம் ஆயினார், வினை
கோதியார், மதில் கூட்டுஅழித்தவர்,
நீதியார் அ நெல்வாயிலார்; மறை
ஓதியார், எமது உச்சியாரே.

2.031   2 st/nd Thirumurai   Song # 7   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
ஆதி அடியைப் பணிய, அப்பொடு, மலர்ச் சேர்
சோதிஒளி, நல் புகை, வளர்க் குவடு புக்குத்
தீது செய வந்து அணையும் அந்தகன் அரங்கக்
காதினன் இருப்பது கருப்பறியலூரே.

3.052   3 st/nd Thirumurai   Song # 7   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
ஆதி அந்தம் ஆயினாய்! ஆலவாயில் அண்ணலே!
சோதி அந்தம் ஆயினாய்! சோதியுள் ஒர் சோதியாய்!
கீதம் வந்த வாய்மையால் கிளர் தருக்கினார்க்கு அல்லால்,
ஓதி வந்த வாய்மையால் உணர்ந்து உரைக்கல் ஆகுமே?

3.061   3 st/nd Thirumurai   Song # 1   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
ஆதியன், ஆதிரையன், அனல் ஆடிய ஆர் அழகன்,
பாதி ஒர் மாதினொடும் பயிலும் பரமாபரமன்,
போது இயலும் முடிமேல் புனலோடு அரவம் புனைந்த
வேதியன், மாதிமையால் விரும்பும்(ம்) இடம் வெண்டுறையே.

3.109   3 st/nd Thirumurai   Song # 9   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
ஆதி, மால் அயன் அவர் காண்பு அரியார்
வேதங்கள் துதிசெயும் மயேந்திரரும்;
காதில் ஒர் குழை உடைக் கயிலையாரும்;
ஆதி ஆரூர் எந்தை ஆனைக்காவே.

4.036   4 st/nd Thirumurai   Song # 7   திருநாவுக்கரசர்   தேவாரம்  
ஆதித்தன், அங்கி, சோமன், அயனொடு, மால், புத(ன்)னும்,
போதித்து நின்று உல(ஃ)கில் போற்று இசைத்தார்; இவர்கள்
சோதித்தார்; ஏழு உல(ஃ)கும் சோதியுள்சோதி ஆகிப்
பாதிப் பெண் உருவம் ஆனார்-பழனத்து எம் பரமனாரே.

4.048   4 st/nd Thirumurai   Song # 2   திருநாவுக்கரசர்   தேவாரம்  
ஆதியும் அறிவும் ஆகி, அறிவினுள் செறிவும் ஆகி,
சோதியுள் சுடரும் ஆகி, தூநெறிக்கு ஒருவன் ஆகி,
பாதியில் பெண்ணும் ஆகி, பரவுவார் பாங்கர் ஆகி,
வேதியர் வாழும் சேய்ஞல் விரும்பும்-ஆப்பாடியாரே.

4.049   4 st/nd Thirumurai   Song # 1   திருநாவுக்கரசர்   தேவாரம்  
ஆதியில் பிரமனார் தாம் அர்ச்சித்தார், அடி இணைக்கீழ்;
ஓதிய வேத நாவர் உணரும் ஆறு உணரல் உற்றார்
சோதியுள் சுடர் ஆய்த் தோன்றிச் சொல்லினை இறந்தார்-பல்பூக்
கோதி வண்டு அறையும் சோலைக் குறுக்கை வீரட்டனாரே.

5.033   5 st/nd Thirumurai   Song # 4   திருநாவுக்கரசர்   தேவாரம்  
ஆதியான், அண்டவாணர்க்கு அருள் நல்கும்
நீதியான் என்றும், நின்மலனே என்றும்,
சோதியான் என்றும், சோற்றுத்துறையர்க்கே
வாதி ஆய்ப் பணி செய், மட நெஞ்சமே!

5.065   5 st/nd Thirumurai   Song # 7   திருநாவுக்கரசர்   தேவாரம்  
ஆதிநாதன்; அமரர்கள் அர்ச்சிதன்;
வேதநாவன்; வெற்பின் மடப்பாவை ஓர்
பாதி ஆனான்; பரந்த பெரும் படைப்
பூதநாதன் - தென்பூவனூர் நாதனே.

5.071   5 st/nd Thirumurai   Song # 2   திருநாவுக்கரசர்   தேவாரம்  
ஆதிநாதன்; அடல் விடைமேல் அமர்
பூதநாதன்; புலி அதள் ஆடையன்;
வேதநாதன் விசயமங்கை உளான்;
பாதம் ஓத வல்லார்க்கு இல்லை, பாவமே.

5.082   5 st/nd Thirumurai   Song # 8   திருநாவுக்கரசர்   தேவாரம்  
ஆதியும்(ம்), அரனாய், அயன், மாலும் ஆய்,
பாதி பெண் உருஆய பரமன் என்று
ஓதி, உள் குழைந்து, ஏத்த வல்லார் அவர்
வாதை தீர்த்திடும்-வான்மியூர் ஈசனே.

5.088   5 st/nd Thirumurai   Song # 10   திருநாவுக்கரசர்   தேவாரம்  
ஆதி மாமலை அன்று எடுத்தான் இற்று,
சோதி! என்றலும், தொல் அருள் செய்திடும்
ஆதியான், மருகல் பெருமான், திறம்
ஓதி வாழ்பவர் உம்பர்க்கும் உம்பரே.

5.094   5 st/nd Thirumurai   Song # 6   திருநாவுக்கரசர்   தேவாரம்  
ஆதியானை, அமரர் தொழப்படும்
நீதியானை, நியம நெறிகளை
ஓதியானை, உணர்தற்கு அரியது ஓர்
சோதியானை-கண்டீர்-தொழல்பாலதே.

5.094   5 st/nd Thirumurai   Song # 8   திருநாவுக்கரசர்   தேவாரம்  
ஆதிப்பால் அட்டமூர்த்தியை, ஆன் அஞ்சும்
வேதிப்பானை, நம்மேல் வினை வெந்து அறச்
சாதிப்பானை, தவத்து இடை மாற்றங்கள்
சோதிப்பானை-கண்டீர்-தொழல்பாலதே.

5.097   5 st/nd Thirumurai   Song # 3   திருநாவுக்கரசர்   தேவாரம்  
ஆதி ஆயவன், ஆரும் இலாதவன்,
போது சேர் புனை நீள் முடிப் புண்ணியன்
பாதி பெண் உருஆகி, பரஞ்சுடர்ச்-
சோதியுள் சோதிஆய், நின்ற சோதியே.

6.020   6 st/nd Thirumurai   Song # 1   திருநாவுக்கரசர்   தேவாரம்  
ஆதிக்கண்ணான் முகத்தில் ஒன்று சென்று(வ்) அல்லாத   சொல் உரைக்கத் தன் கை வாளால்
சேதித்த திருவடியை, செல்ல நல்ல சிவலோக நெறி வகுத்துக் காட்டுவானை,
மா மதியை, மாது ஓர் கூறு ஆயினானை, மா மலர்மேல்   அயனோடு மாலும் காணா
நாதியை, நம்பியை, நள்ளாற்றானை, -நான் அடியேன் நினைக்கப் பெற்று உய்ந்த ஆறே!.

6.063   6 st/nd Thirumurai   Song # 7   திருநாவுக்கரசர்   தேவாரம்  
ஆதியனை, எறி மணியின் ஓசையானை, அண்டத்தார்க்கு அறிவு ஒண்ணாது அப்பால் மிக்க
சோதியனை, தூ மறையின் பொருளான் தன்னை,
சுரும்பு அமரும் மலர்க்கொன்றை தொல்-நூல் பூண்ட
வேதியனை, அறம் உரைத்த பட்டன் தன்னை, விளங்கு மலர் அயன் சிரங்கள் ஐந்தில் ஒன்றைச்
சேதியனை, திரு ஆனைக்கா உளானை, செழுநீர்த்திரளை, சென்று ஆடினேனே.

6.088   6 st/nd Thirumurai   Song # 2   திருநாவுக்கரசர்   தேவாரம்  
ஆதியான், அரி அயன், என்று அறிய ஒண்ணா அமரர் தொழும் கழலானை; அமலன் தன்னை;
சோதி மதி கலை தொலைய, தக்கன், எச்சன், சுடர் இரவி அயில் எயிறு, தொலைவித்தானை;
ஓதி மிக அந்தணர்கள் எரி மூன்று ஓம்பும் உயர் புகழ்  ஆர் தரும் ஓமாம்புலியூர் மன்னும்
தீது இல் திரு வடதளி எம் செல்வன் தன்னை; சேராதே திகைத்து நாள் செலுத்தினேனே!.

7.097   7 st/nd Thirumurai   Song # 1   சுந்தரமூர்த்தி சுவாமிகள்   திருப்பாட்டு  
ஆதியன்; ஆதிரையன்(ன்) அயன் மால் அறிதற்கு அரிய
சோதியன்; சொல்பொருள் ஆய்; சுருங்கா மறை நான்கினையும்
ஓதியன்; உமபர்தம் கோன்; உலகத்தினுள் எவ் உயிர்க்கும்
நாதியன்; நம்பெருமான்; நண்ணும் ஊர்-நனிபள்ளி அதே.

8.102   8 st/nd Thirumurai   Song # 25   மாணிக்க வாசகர்    திருவாசகம்  
ஆதிமூர்த்திகட்கு அருள்புரிந்தருளிய
தேவ தேவன் திருப் பெயர் ஆகவும்,
இருள் கடிந்தருளிய இன்ப ஊர்தி
அருளிய பெருமை அருள் மலை ஆகவும்,
எப் பெரும் தன்மையும், எவெவர் திறனும்,

8.107   8 st/nd Thirumurai   Song # 1   மாணிக்க வாசகர்    திருவாசகம்  
ஆதியும் அந்தமும் இல்லா அரும் பெரும்
சோதியை யாம் பாடக் கேட்டேயும், வாள் தடம் கண்
மாதே! வளருதியோ? வன் செவியோ நின் செவி தான்?
மா தேவன் வார் கழல்கள் வாழ்த்திய வாழ்த்து ஒலி போய்
வீதிவாய்க் கேட்டலுமே, விம்மி விம்மி, மெய்ம்மறந்து,
போது ஆர் அமளியின்மேல் நின்றும் புரண்டு, இங்ஙன்
ஏதேனும் ஆகாள், கிடந்தாள்; என்னே! என்னே!
ஈதே எம் தோழி பரிசு?' ஏல் ஓர் எம்பாவாய்!

10.101   10 st/nd Thirumurai   Song # 11   திருமூலர்   திருமந்திரம்  
ஆதியு மாய்அர னாய்உட லுள்நின்ற
வேதியு மாய்விரிந் தார்ந்திருந் தான்அருட்
சோதியு மாய்ச்சுருங் காததோர் தன்மையுள்
நீதியு மாய்நித்த மாகிநின் றானே. 

10.101   10 st/nd Thirumurai   Song # 48   திருமூலர்   திருமந்திரம்  
ஆதிப் பிரானும் அணிமணி வண்ணனும்
ஆதிக் கமலத் தலர்மிசை யானும்
சோதிக்கில் மூன்றுந் தொடர்ச்சியில் ஒன்றெனார்
பேதித் துலகம் பிணங்குகின் றார்களே. 

10.125   10 st/nd Thirumurai   Song # 10   திருமூலர்   திருமந்திரம்  
ஆதிப் பிரான்அம ரர்க்கும் பரஞ்சுடர்
சோதி அடியார் தொடரும் பெருந்தெய்வம்
ஓதி உணரவல் லோம்என்பர் உள்நின்ற
சோதி நடத்துந் தொடர்வறி யாரே. 26,

10.209   10 st/nd Thirumurai   Song # 1   திருமூலர்   திருமந்திரம்  
ஆதியோ டந்தம் இலாத பராபரம்
போதம தாகப் புணரும் பராபரை
சோதி யதனிற் பரந்தோன்றத் தோன்றுமாம்
தீதில் பரைஅதன் பால்திகழ் நாதமே.

10.209   10 st/nd Thirumurai   Song # 30   திருமூலர்   திருமந்திரம்  
ஆதித்தன் சந்திரன் அங்கிஎண் பாலர்கள்
போதித்த வானொளி பொங்கிய நீர்புவி
வாதித்த சத்தாதி வாக்கு மனாதிகள்
ஓதுற்ற மாயையின் விந்துவின் உற்றதே. 10,

10.213   10 st/nd Thirumurai   Song # 7   திருமூலர்   திருமந்திரம்  
ஆதி படைத்தனன் ஐம்பெரும் பூதம்
ஆதி படைத்தனன் ஆசில்பல் ஊழி
ஆதி படைத்தனன் எண்ணிலி தேவரை
ஆதி படைத்தவை தாங்கிநின் றானே.

10.303   10 st/nd Thirumurai   Song # 1   திருமூலர்   திருமந்திரம்  
ஆதியை வேதத்தின் அப்பொரு ளானைச்
சோதியை அங்கே சுடுகின்ற அங்கியைப்
பாதியுள் மன்னும் பராசத்தி யோடுடன்
நீதி யுணர்ந்து நியமத்த னாமே. 

தூய்மை அருளூண் சுருக்கம் பொறைசெவ்வை
வாய்மை நிலைமை வளர்த்தலே மற்றிவை
காமம் களவு கொலையெனக் காண்பவை
நேமியீ ரைந்து நியமத்த னாமே.

10.405   10 st/nd Thirumurai   Song # 25   திருமூலர்   திருமந்திரம்  
ஆதி விதம்மிகுத் தண்டந்த மால்தங்கை
நீதி மலரின்மேல் நேரிழை நாமத்தைப்
பாதியில் வைத்துப் பலகாற் பயில்விரேல்
சோதி மிகுத்துமுக் காலமும் தோன்றுமே.

10.406   10 st/nd Thirumurai   Song # 25   திருமூலர்   திருமந்திரம்  
ஆதி வயிரவி கன்னித் துறைமன்னி
ஓதி உணரில் உடலுயிர் ஈசனாம்
பேதை உலகில் பிறவிகள் நாசமாம்
ஓத உலவாத கோலம்ஒன் றாகுமே.

10.406   10 st/nd Thirumurai   Song # 40   திருமூலர்   திருமந்திரம்  
ஆதி அனாதி அகாரணி காரணி
சோதி அசோதி சுகபர சுந்தரி
மாது சாமாதி மனோன்மனி மங்கலி
ஓதிஎன் உள்ளத் துடன்இயைந் தாளே.

10.406   10 st/nd Thirumurai   Song # 46   திருமூலர்   திருமந்திரம்  
ஆதி அனாதியும் ஆய பராசத்தி
பாதி பராபரை மேலுறை பைந்தொடி
மாது சமாதி மனோன்மனி மங்கலி
ஓதுமென் உள்ளத் துடன்முகிழ்த் தாளே.

10.406   10 st/nd Thirumurai   Song # 50   திருமூலர்   திருமந்திரம்  
ஆதி அனாதி அகாரணி காரணி
வேதம தாய்ந்தனள் வேதியர்க் காய் நின்ற
சோதி தனிச்சுடர்ச் சொரூபம தாய்நிற்கும்
பாதி பராபரை பன்னிரண் டாதியே. 7,

10.519   10 st/nd Thirumurai   Song # 14   திருமூலர்   திருமந்திரம்  
ஆதிப் பிரான் உல கேழும் அளந்தஅவ்
வோதக் கடலும் உயிர்களு மாய்நிற்கும்
பேதிப் பிலாமையின் நின்ற பராசத்தி
ஆதிக்கண் தெய்வமும் அந்தமும் ஆமே.

10.706   10 st/nd Thirumurai   Song # 5   திருமூலர்   திருமந்திரம்  
ஆதி பரதெய்வம் அண்டத்து நற்றெய்வம்
சோதி அடியார் தொடரும் பெருந்தெய்வம்
நீதியுள் மாத்தெய்வம் நின்மலன் எம்இறை
பாதியுள் மன்னும் பராசத்தி யாமே.

10.722   10 st/nd Thirumurai   Song # 3   திருமூலர்   திருமந்திரம்  
ஆதித்தன் அன்பினொ டாயிர நாமமும்
சோதியி னுள்ளே சுடரொளி யாய்நிற்கும்
வேதியர் வேண்டினும் விண்ணவர் சொல்லினும்
ஆதியில் அன்பு பழுக்கின்ற வாறே.

10.722   10 st/nd Thirumurai   Song # 6   திருமூலர்   திருமந்திரம்  
ஆதித்தன் உள்ளினில் ஆனமுக் கோணத்தில்
சோதித் திலங்கும்நற் சூரியன் நாலாங்
கேத மறுங்கேணி சூரியன் எட்டில்
சோதிதன் ஈரெட்டில் சோடசந் தானே.

10.722   10 st/nd Thirumurai   Song # 7   திருமூலர்   திருமந்திரம்  
ஆதித்த னோடே அவனி இருண்டது
பேதித்த நாலும் பிதற்றிக் கழிந்தது
சோதிக்குள் நின்று துடியிடை செய்கின்ற
வேதப் பொருளை விளங்ககி லீரே.

10.723   10 st/nd Thirumurai   Song # 2   திருமூலர்   திருமந்திரம்  
ஆதித்தன் ஓடி அடங்கும் இடம்கண்டு
சாதிக்க வல்லவர் தம்மை உணர்ந்தவர்
பேதித் துலகம் பிதற்றும் பிதற்றெல்லாம்
ஆதித்த னோடே அடங்குகின் றாரே.

10.806   10 st/nd Thirumurai   Song # 4   திருமூலர்   திருமந்திரம்  
ஆதி பரம்சிவம் சத்தி சதாசிவம்
ஏதமில் ஈசன்நல் வித்தையாம் தத்துவம்
போதம் கலைகா லமேநியதி மாயையும்
நீதி அராகம் நிறுத்தினன் என்னே.

10.813   10 st/nd Thirumurai   Song # 39   திருமூலர்   திருமந்திரம்  
ஆதித்தன் தோன்ற அரும்பது மாதிகள்
பேதித்த தம்வினை யால்செயல் பேதிப்ப
ஆதித்தன் தன்கதி ரால்அவை சேட்டிப்பப்
பேதித்துப் பேதியா வா(று)அருட் பேதமே.

10.821   10 st/nd Thirumurai   Song # 2   திருமூலர்   திருமந்திரம்  
ஆதியும் அந்தமும் இல்லா அரும்பதி
சோதி பரஞ்சுடர் தோன்றித் தோன்றாமையின்
நீதிய தாய்நிற்கும் நீடிய அப்பர
போதம் உணர்ந்தவர் புண்ணியத் தோரே.

10.832   10 st/nd Thirumurai   Song # 7   திருமூலர்   திருமந்திரம்  
ஆதி பராபரம் ஆகும் பராபரை
சோதி பரம் உயிர் சொல்லும்நல் தத்துவம்
ஓதும் கலை மாயை ஓரிரண்(டு) ஓர்முத்தி
நீதியாம் பேதம்ஒன் பானுடன் ஆதியே.

10.843   10 st/nd Thirumurai   Song # 11   திருமூலர்   திருமந்திரம்  
ஆதிப் பிரான்தந்த வாள்அங்கைக் கொண்டபின்
வேதித்திங் கென்னை விலக்கவல் லார்இல்லை
சோதிப்பன் அங்கே சுவடும் படாவண்ணம்
ஆதிக்கண் தெய்வம் அவன்இவன் ஆமே.

10.914   10 st/nd Thirumurai   Song # 3   திருமூலர்   திருமந்திரம்  
ஆதி பரன்ஆட அங்கை அனலாட
ஓதும் சடையாட உன்மத்தம் உற்றாடப்
பாதி மதியாடப் பாராண்டம் மீதாட
நாதமொ டாடினான் நாதாந்த நட்டமே.

10.915   10 st/nd Thirumurai   Song # 26   திருமூலர்   திருமந்திரம்  
ஆதி நடம்செய்தான் என்பர்கள் ஆதர்கள்
ஆதி நடம்செய்கை ஆரும் அறிந்திலர்
ஆதி நடம்ஆடல் ஆரும் அறிந்தபின்
ஆதி நடம்ஆடல் ஆம்அருட் சத்தியே.

10.928   10 st/nd Thirumurai   Song # 23   திருமூலர்   திருமந்திரம்  
ஆதிப் பிரான்நம் பிரான் இவ்வகலிடச்
சோதிப் பிரான்சுடர் மூன்றொளி யாய்நிற்கும்
ஆதிப் பிரான்அண்டத் தப்பும் கீழவன்
ஆதிப் பிரான்நடு வாகிநின் றானே.

11.037   11 st/nd Thirumurai   Song # 67   நம்பியாண்டார் நம்பி   ஆளுடையபிள்ளையார் திருவுலாமாலை  
ஆதிச் சிவனருளால் அம்பொன்செய் வட்டிலில்
கோதில் அமிர்தநுகர் குஞ்சரத்தைத் தீதறுசீர்க்

12.000   12 st/nd Thirumurai   Song # 28   சேக்கிழார்   திருமலைச் சருக்கம்  
ஆதி மூர்த்தி அவன்திறம் நோக்கியே
மாதர் மேல்மனம் வைத்தனை தென்புவி
மீது தோன்றிஅம் மெல்லிய லாருடன்
காதல் இன்பம் கலந்தணை வாயென.
12.000   12 st/nd Thirumurai   Song # 43   சேக்கிழார்   திருமலைச் சருக்கம்  
ஆதிமா தவமுனி அகத்தி யன்தரு
பூதநீர்க் கமண்டலம் பொழிந்த காவிரி
மாதர்மண் மடந்தைபொன் மார்பில் தாழ்ந்ததோர்
ஓதநீர் நித்திலத் தாமம் ஒக்குமால்.
12.010   12 st/nd Thirumurai   Song # 1   சேக்கிழார்   தில்லை வாழ் அந்தணர் சருக்கம்  
ஆதியாய் நடுவு மாகி
அளவிலா அளவும் ஆகிச்
சோதியா யுணர்வு மாகித்
தோன்றிய பொருளு மாகிப்
பேதியா ஏக மாகிப்
பெண்ணுமாய் ஆணு மாகிப்
போதியா நிற்குந் தில்லைப்
பொதுநடம் போற்றி போற்றி.
12.020   12 st/nd Thirumurai   Song # 7   சேக்கிழார்   தில்லை வாழ் அந்தணர் சருக்கம்  
ஆதியார் நீல கண்டத்
தளவுதாங் கொண்ட ஆர்வம்
பேதியா ஆணை கேட்ட
பெரியவர் பெயர்ந்து நீங்கி
ஏதிலார் போல நோக்கி
எம்மைஎன் றதனால் மற்றை
மாதரார் தமையும் என்றன்
மனத்தினுந் தீண்டேன் என்றார்.
12.190   12 st/nd Thirumurai   Song # 104   சேக்கிழார்   மும்மையால் உலகாண்ட சருக்கம்  
ஆதி மூதெயில் அந்நகர் மன்னிய
சோதி நீள்மணித் தூபமுந் தீபமும்
கோதில் பல்லிய முங்கொடி யும்பயில்
வீதி நாளும் ஒழியா விழாவணி.
12.210   12 st/nd Thirumurai   Song # 284   சேக்கிழார்   திருநின்ற சருக்கம்  
ஆதி முதல்வர் தமைப்பணிந்தங்
கான பணிசெய் தமருநாள்
சீத மதிவெண் குடைவளவர்
மகளார் தென்னன் தேவியார்
கோதில் குணத்துப் பாண்டிமா
தேவி யார்முன் குலச்சிறையார்
போத விட்டார் சிலர்வந்தார்
புகலி வேந்தர் தமைக்காண.
12.210   12 st/nd Thirumurai   Song # 371   சேக்கிழார்   திருநின்ற சருக்கம்  
ஆதி தேவர்தந் திருவருள்
பெருமையார் அறிவார்
போத மாதவர் பனிவரைப்
பொய்கையில் மூழ்கி
மாதொர் பாகனார் மகிழும்ஐ
யாற்றிலோர் வாவி
மீது தோன்றிவந் தெழுந்தனர்
உலகெலாம் வியப்ப.

12.240   12 st/nd Thirumurai   Song # 66   சேக்கிழார்   திருநின்ற சருக்கம்  
ஆதியோ டந்த மில்லான்
அருள்நடம் ஆடும் போது
கீதமுன் பாடும் அம்மை
கிளரொளி மலர்த்தாள் போற்றிச்
சீதநீர் வயல்சூழ் திங்க
ளூரில்அப் பூதி யாராம்
போதமா முனிவர் செய்த
திருத்தொண்டு புகலல் உற்றேன்.
12.250   12 st/nd Thirumurai   Song # 32   சேக்கிழார்   திருநின்ற சருக்கம்  
ஆதிநான் மறைநூல் வாய்மை
அப்பூதி யாரை நோக்கிக்
காதலர் இவர்க்கு மூத்த
சேயையுங் காட்டும் முன்னே
மேதகு பூதி சாத்த
என்றலும் விளைந்த தன்மை
யாதும்ஒன் றுரையார் இப்போ
திங்கவன் உதவான் என்றார்.
12.270   12 st/nd Thirumurai   Song # 28   சேக்கிழார்   திருநின்ற சருக்கம்  
ஆதி தேவர் எழுந்தருள
உணர்ந்தார் இரவர்ச் சனைசெய்யா
தேதம் நினைந்தேன் எனஅஞ்சி
எழுந்த படியே வழிபட்டு
மாத ரார்க்கும் புகுந்தபடி
மொழிந்து விடியல் விரைவோடு
நாத னார்தந் திருவாரூர்
புகுத எதிர்அந் நகர்காண்பார்.
12.280   12 st/nd Thirumurai   Song # 116   சேக்கிழார்   வம்பறா வரிவண்டுச் சருக்கம்  
ஆதியார் கோயில் வாயில்
அணைந்துபுக் கன்பு கூர
நீதியாற் பணிந்து போற்றி
நீடிய அருள்முன் பெற்றுப்
போதுவார் தம்மைச் சூழ்ந்து
பூசுரர் குழாங்கள் போற்றும்
காதல்கண் டங்க மர்ந்தார்
கவுணியர் தலைவ னார்தாம்.
12.280   12 st/nd Thirumurai   Song # 187   சேக்கிழார்   வம்பறா வரிவண்டுச் சருக்கம்  
ஆதி யார்தம் அரத்துறை நோக் கியே
காத லால்அணை வார்கடி தேகிடத்
தாதை யாரும் பரிவுறச் சம்பந்தர்
பாத தாமரை நொந்தன பைப்பய.
12.280   12 st/nd Thirumurai   Song # 429   சேக்கிழார்   வம்பறா வரிவண்டுச் சருக்கம்  
ஆதிமாமறை விதியினால்
ஆறுசூழ் வேணி
நாத னாரைமுன் னாகவே
புரியுநல் வேள்வி
தீது நீங்கநீர் செய்யவும்
திருக்கழு மலத்து
வேத வேதியர் அனைவரும்
செய்யவும் மிகுமால்.
12.280   12 st/nd Thirumurai   Song # 698   சேக்கிழார்   வம்பறா வரிவண்டுச் சருக்கம்  
ஆதி மந்திரம் அஞ்செழுத்
தோதுவார் நோக்கும்
மாதி ரத்தினும் மற்றைமந்
திரவிதி வருமே
பூதி சாதனர் மடத்தில்தாம்
புனைந்தசா தனைகள்
சாதி யாவகை கண்டமண்
குண்டர்கள் தளர்ந்தார்.
12.280   12 st/nd Thirumurai   Song # 832   சேக்கிழார்   வம்பறா வரிவண்டுச் சருக்கம்  
ஆதி ஆட்பா லவர்க்கரு ளுந்திறம்
நாதன் மாட்சிமை கேட்க நவிலுங்கால்
ஓது மெல்லை உலப்பில வாதலின்
யாதும் ஆராய்ச்சி இல்லையாம் என்றதாம்.
12.280   12 st/nd Thirumurai   Song # 965   சேக்கிழார்   வம்பறா வரிவண்டுச் சருக்கம்  
ஆதி தேவர்அங் கமர்ந்தவீ
ரட்டானஞ் சென்றணை பவர்முன்னே
பூதம் பாடநின் றாடுவார்
திருநடம் புலப்படும் படிகாட்ட
வேத பாரகர் பணிந்துமெய்
உணர்வுடன் உருகிய விருப்போடும்
கோதி லாஇசை குலவுகுண்
டைக்குறட் பூதம்என் றெடுத்துஏத்தி.
12.280   12 st/nd Thirumurai   Song # 972   சேக்கிழார்   வம்பறா வரிவண்டுச் சருக்கம்  
ஆதி மூர்த்தி கழல்வணங்கி
அங்கண் இனிதின் அமருநாள்
பூத நாத ரவர் தம்மைப்
பூவார் மலராற் போற்றிசைத்துக்
காத லால்அத் திருமலையிற்
சிலநாள் வைகிக் கமழ்கொன்றை
வேத கீதர் திருப்பதிகள்
பிறவும் பணியும் விருப்புறுவார்.
12.280   12 st/nd Thirumurai   Song # 985   சேக்கிழார்   வம்பறா வரிவண்டுச் சருக்கம்  
ஆதி முதல்வர் குரங்கணில்முட்
டத்தை அணைந்து பணிந்தேத்தி
நீதி வழுவாத் திருத்தொண்டர்
போற்ற நிகரில் சண்பையினில்
வேத மோடு சைவநெறி
விளங்க வந்த கவுணியனார்
மாதொர் பாகர் தாம்மன்னும்
மதில்சூழ் காஞ்சி மருங்கணைந்தார்.
12.280   12 st/nd Thirumurai   Song # 1133   சேக்கிழார்   வம்பறா வரிவண்டுச் சருக்கம்  
ஆதிமுதல் வரைவணங்கி
ஆட்சிகொண்டார் எனமொழியும்
கோதில்திருப் பதிகஇசை
குலவியபா டலில்போற்றி
மாதவத்து முனிவருடன்
வணங்கிமகிழ்ந் தின்புற்றுத்
தீதகற்றுஞ் செய்கையினார்
சின்னாள்அங் கமர்ந்தருளி.
12.290   12 st/nd Thirumurai   Song # 240   சேக்கிழார்   வம்பறா வரிவண்டுச் சருக்கம்  
ஆதி தேவர் முன்னின்றங்
கருளிச் செய்த பொழுதின்கண்
மாத ரார்சங் கிலியாரும்
மாலும் மயனு மறிவரிய
சீத மலர்த்தா மரையடிக்கீழ்ச்
சேர்ந்து வீழ்ந்து செந்நின்று
வேத முதல்வர் முன்னடுக்கம்
எய்தித் தொழுது விளம்புவார்.
12.290   12 st/nd Thirumurai   Song # 305   சேக்கிழார்   வம்பறா வரிவண்டுச் சருக்கம்  
ஆதிதிரு அன்பரெதிர்
அணையஅவர் முகநோக்கிக்
கோதிலிசை யாற்குருகு
பாயவெனக் கோத்தெடுத்தே
ஏதிலார் போல்வினவி
ஏசறவால் திருப்பதிகம்
காதல்புரி கைக்கிளையாற்
பாடியே கலந்தணைவார்.
12.290   12 st/nd Thirumurai   Song # 368   சேக்கிழார்   வம்பறா வரிவண்டுச் சருக்கம்  
ஆதியும் மேலும் மால்அயன்
நாடற் கருளாதார்
தூதினில் ஏகித் தொண்டரை
யாளுந் தொழில்கண்டே
வீதியில் ஆடிப் பாடி
மகிழ்ந்தே மிடைகின்றார்
பூதியில் நீடும் பல்கண
நாதர் புகழ்வீரர்.
12.340   12 st/nd Thirumurai   Song # 17   சேக்கிழார்   வார்கொண்ட வனமுலையாள் சருக்கம்  
ஆதியார் தம்மை நாளுங்
கல்லெறிந் தணுகப் பெற்ற
கோதில்சீர்த் தொண்டர் கொண்ட
குறிப்பினை யவர்க்கு நல்கும்
சோதியா ரறித லன்றித்
துணிவதென் அவர்தாள் சூடித்
தீதினை நீக்க லுற்றேன்
சிறப்புலி யாரைச் செப்பி.

This page was last modified on Thu, 09 May 2024 05:33:06 +0000
          send corrections and suggestions to admin-at-sivaya.org

thirumurai all list