4.015
4 st/nd Thirumurai
Song # 2
திருநாவுக்கரசர்
தேவாரம்
ஆனைக்காவில் அணங்கினை, ஆரூர் நிலாய அம்மானை,
கானப் பேரூர்க் கட்டியை, கானூர் முளைத்த கரும்பினை,
வானப் பேரார் வந்து ஏத்தும் வாய்மூர் வாழும் வலம்புரியை,
மானக் கயிலை மழகளிற்றை, மதியை, சுடரை, மறவேனே.
|
7.079
7 st/nd Thirumurai
Song # 5
சுந்தரமூர்த்தி சுவாமிகள்
திருப்பாட்டு
ஆனைக் குலம் இரிந்து ஓடி, தன் பிடி சூழலில்-திரிய, தானப் பிடி செவி தாழ்த்திட, அதற்கு(ம்) மிக இரங்கி, மானக் குற அடல் வேடர்கள் இலையால் கலை கோலி, தேனைப் பிழிந்து இனிது ஊட்டிடும் சீ பர்ப்பத மலையே.
|
7.100
7 st/nd Thirumurai
Song # 2
சுந்தரமூர்த்தி சுவாமிகள்
திருப்பாட்டு
ஆனை உரித்த பகை அடியேனொடு மீளக்கொலோ- ஊனை உயிர் வெருட்டி ஒள்ளியானை நினைந்திருந்தேன், வானை மதித்த(அ)மரர் வலம்செய்து, எனை ஏற வைக்க ஆனை அருள் புரிந்தான், நொடித்தான்மலை உத்தமனே?
|
8.106
8 st/nd Thirumurai
Song # 21
மாணிக்க வாசகர்
திருவாசகம்
ஆனை வெம் போரில், குறும் தூறு எனப் புலனால் அலைப்புண்
டேனை, எந்தாய், விட்டிடுதி கண்டாய்? வினையேன் மனத்துத்
தேனையும், பாலையும், கன்னலையும், அமுதத்தையும், ஒத்து,
ஊனையும், என்பினையும், உருக்காநின்ற ஒண்மையனே.
|
8.108
8 st/nd Thirumurai
Song # 14
மாணிக்க வாசகர்
திருவாசகம்
ஆனை ஆய்க் கீடம் ஆய் மானுடர் ஆய்த் தேவர் ஆய்
ஏனைப் பிற ஆய், பிறந்து, இறந்து எய்த்தேனை
ஊனையும் நின்று உருக்கி, என் வினையை ஓட்டு உகந்து,
தேனையும், பாலையும், கன்னலையும் ஒத்து, இனிய
கோன் அவன் போல் வந்து, என்னை, தன் தொழும்பில் கொண்டருளும்
வானவன் பூம் கழலே பாடுதும் காண்; அம்மானாய்!
|
10.413
10 st/nd Thirumurai
Song # 100
திருமூலர்
திருமந்திரம்
ஆனை மயக்கும் அறுபத்து நால்தறி ஆனை யிருக்கும் அறுபத்து நால்ஒளி ஆனை யிருக்கும் அறுபத்து நால்அறை ஆனையும் கோடும் அறுபத்து நாலிலே. 1,
|
10.813
10 st/nd Thirumurai
Song # 13
திருமூலர்
திருமந்திரம்
ஆனைகள் ஐந்தும் அடக்கி அறிவென்னும் ஞானந் திரியில் கொளுவி அதனுட்புக்(கு) ஊனை இருளற நோக்கும் ஒருவற்கு வானகம் ஏற வழிஎளி தாகுமே.
|
10.920
10 st/nd Thirumurai
Song # 5
திருமூலர்
திருமந்திரம்
ஆனை துரத்தில்என் அம்பூ டறுக்கில்என் கானத் துழுவை கலந்து வளைக்கில்என் ஏனைப் பதியினில் எம்பெரு மான்வைத்த ஞானத் துழவினை நான்உழு வேனே.
|
12.210
12 st/nd Thirumurai
Song # 299
சேக்கிழார்
திருநின்ற சருக்கம்
ஆனை இனத்தில் துகைப்புண்ட
அமணா யிரமும் மாய்ந்ததற்பின்
மேன்மை அரசன் ஈசர்க்கு விமான மாக்கி விளக்கியபின்
ஆன வழிபாட் டர்ச்சனைக்கு
நிபந்தம் எல்லாம் அமைத்திறைஞ்ச
ஞான அரசும் புக்கிறைஞ்சி
நாதர் முன்பு போற்றுவார்.
|
12.680
12 st/nd Thirumurai
Song # 13
சேக்கிழார்
மன்னிய சீர்ச் சருக்கம்
ஆனைக் காவில் தாம்முன்னம்
அருள்பெற் றதனை யறிந்தங்கு
மானைத் தரித்த திருக்கரத்தார்
மகிழுங் கோயில் செய்கின்றார்
ஞானச் சார்வாம் வெண்ணாவ
லுடனே கூட நலஞ்சிறக்கப்
பானற் களத்துத் தம்பெருமான்
அமருங் கோயிற் பணிசமைத்தார்.
|