சிவய.திருக்கூட்டம்
sivaya.org
Please set your language preference
by clicking below languages link
Search this site with
words in any language e.g. पोऱ्‌ऱि
song/pathigam/paasuram numbers: e.g. 7.039

This page in Tamil   Hindi/Sanskrit   Telugu   Malayalam   Bengali   Kannada   English   ITRANS    Marati  Gujarathi   Oriya   Singala   Tibetian   Thai   Japanese   Urdu   Cyrillic/Russian   Spanish   Hebrew  
Selected thirumurai      thirumurai Thalangal      All thirumurai Songs     

Thirumurai   1   2   3   4   5   6   7   8   9   10   11   12

Pathigam first Letter :                                          
Paadal first letter:     (  .                                                
Search: Filter By: Order By:
திருமுறை 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12 இருந்து பாடல் சொல் ஆய
ஆயாதன     ஆய்ந்துகொள்     ஆய்வரும்     ஆய்ந்துரை     ஆயும்     ஆயிழை     ஆயத்துள்நின்ற     ஆய்ந்துண     ஆய்ந்தறி     ஆய     ஆயும்பொய்     ஆயன     ஆயினேன்     ஆயின     ஆயினஅன்     ஆயம்     ஆயன்     ஆய்ந்துன்றன்     ஆயர்     ஆயஇசைப்     ஆயநா     ஆய்ந்தசீர்     ஆய்ந்த     ஆயபல     ஆயி     ஆயிடை     ஆயுள்வே     ஆயசெயல்     ஆயஅர     ஆயிரம்     ஆய்ந்தவன்     ஆயிரங்     ஆயாத    
1.011   1 st/nd Thirumurai   Song # 5   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
ஆயாதன சமயம் பல அறியாதவன், நெறியின்
தாய் ஆனவன், உயிர் கட்கு முன் தலை ஆனவன், மறை முத்
தீ ஆனவன், சிவன், எம் இறை, செல்வத் திரு ஆரூர்
மேயான் அவன், உறையும் இடம் வீழிமிழலையே.

4.004   4 st/nd Thirumurai   Song # 8   திருநாவுக்கரசர்   தேவாரம்  
ஆயிரம் தாமரை போலும் ஆயிரம் சேவடியானும்,
ஆயிரம் பொன் வரை போலும் ஆயிரம் தோள் உடையானும்,
ஆயிரம் ஞாயிறு போலும் ஆயிரம் நீள் முடியானும்,
ஆயிரம் பேர் உகந்தானும்- ஆரூர் அமர்ந்த அம்மானே.



4.053   4 st/nd Thirumurai   Song # 10   திருநாவுக்கரசர்   தேவாரம்  
ஆயிரம் திங்கள் மொய்த்த அலைகடல் அமுதம் வாங்கி,
ஆயிரம் அசுரர் வாழும் அணி மதில் மூன்றும் வேவ
ஆயிரம் தோளும் மட்டித்து, ஆடிய அசைவு தீர,
ஆயிரம் அடியும் வைத்த அடிகள் ஆரூரனாரே.

4.085   4 st/nd Thirumurai   Song # 4   திருநாவுக்கரசர்   தேவாரம்  
ஆய்ந்த கை வாள் அரவத்தொடு, மால்விடை ஏறி, எங்கும்
பேர்ந்த கை மான், நடம் ஆடுவர்; பின்னு சடை இடையே
சேர்ந்த கைம் மா மலர் துன்னிய சோற்றுத்துறை உறைவார்
ஏந்து கைச் சூலம் மழு எம்பிரானுக்கு அழகியதே!

4.085   4 st/nd Thirumurai   Song # 7   திருநாவுக்கரசர்   தேவாரம்  
ஆயம் உடையது நாம் அறிவோம்; அரணத்தவரைக்
காயக் கணை சிலை வாங்கியும் எய்தும் துயக்கு அறுத்தான்,
தூய வெண் நீற்றினன், சோற்றுத்துறை உறைவார், சடைமேல்
பாயும் வெண் நீர்த்திரைக் கங்கை எம்மானுக்கு அழகியதே!

6.065   6 st/nd Thirumurai   Song # 6   திருநாவுக்கரசர்   தேவாரம்  
ஆய்ந்தவன் காண், அருமறையோடு அங்கம் ஆறும்;
அணிந்தவன் காண், ஆடு அரவோடு என்பும் ஆமை;
காய்ந்தவன் காண், கண் அழலால் காமன் ஆகம்; கனன்று எழுந்த காலன் உடல் பொடி ஆய் வீழப்
பாய்ந்தவன் காண்; பண்டு பலசருகால் பந்தர் பயின்ற நூல் சிலந்திக்குப் பார் ஆள் செல்வம்
ஈந்தவன் காண் எழில் ஆரும் பொழில் ஆர் கச்சி ஏகம்பன் காண்; அவன் என் எண்ணத்தானே.

7.095   7 st/nd Thirumurai   Song # 7   சுந்தரமூர்த்தி சுவாமிகள்   திருப்பாட்டு  
ஆயம் பேடை அடையும் சோலை ஆரூர் அகத்தீரே!
ஏ, எம்பெருமான்! இதுவே ஆம் ஆறு, உமக்கு ஆட்பட்டோர்க்கு?
மாயம் காட்டி, பிறவி காட்டி, மறவா மனம் காட்டி,
காயம் காட்டி, கண் நீர் கொண்டால், வாழ்ந்துபோதீரே!

7.103   7 st/nd Thirumurai   Song # 2      
ஆயிரம் செங் கதிர் விளங்க, புவனம் தன்னில் அளவு(வு) இறந்த பிறவி தனக்கு(கு) உயிர் ஆய், எங்கும்
மா இருளைக் கடிந்து, மயக்கு(கு) அறுத்து, நாளும் வஞ்சகரை வஞ்சித்திட்டு(டு), அடியேன் உய்ய
ஆயிரம்பாவம்களைந்தே, என்னை ஆண்ட ஆதவன் என்று(று) உலகு(கு) அறியும் ஆதி மூர்த்தி!
ஆயிரம் பேர் உடையானே! அமரர் ஏறே! ஆதித்தா! அடியேன் என் இடர்தீர்ப் பாயே .

8.105.03   8 st/nd Thirumurai   Song # 23   மாணிக்க வாசகர்    திருவாசகம்  
ஆய நான்மறையவனும் நீயே ஆதல்
அறிந்து, யான் யாவரினும் கடையன் ஆய
நாயினேன் ஆதலையும் நோக்கிக் கண்டும்,
நாதனே! நான் உனக்கு ஓர் அன்பன் என்பேன்
ஆயினேன்; ஆதலால், ஆண்டுகொண்டாய்
அடியார் தாம் இல்லையே? அன்றி, மற்று ஓர்
பேயனேன்? இது தான் நின் பெருமை அன்றே!
எம்பெருமான்! என் சொல்லிப் பேசுகேனே?

8.119   8 st/nd Thirumurai   Song # 9   மாணிக்க வாசகர்    திருவாசகம்  
ஆய மொழிக் கிள்ளாய்! அள்ளூறும் அன்பர்பால்
மேய பெருந்துறையான் மெய்த் தார் என்? தீய வினை
நாளும் அணுகாவண்ணம் நாயேனை ஆளுடையான்,
தாளி அறுகு ஆம், உவந்த தார்.

9.005   9 st/nd Thirumurai   Song # 8   சேந்தனார்   திருவிசைப்பா  
ஆயிரங் கமலம் ஞாயிறா யிரமுக்
   கண்முக கரசர ணத்தோன்

9.021   9 st/nd Thirumurai   Song # 4   வேணாட்டடிகள்   திருவிசைப்பா  
ஆயாத சமயங்கள் அவரவர்கண்
   முன்பென்னை
நோயோடு பிணிநலிய இருக்கின்ற
   அதனாலே
பேயாஇத் தொழும்பனைத்தம் பிரான்இகழும்
   என்பித்தாய்
நாயேனைத் திருத்தில்லை நடம்பயிலும்
   நம்பானே.

10.123   10 st/nd Thirumurai   Song # 7   திருமூலர்   திருமந்திரம்  
ஆய்ந்துகொள் வார்க்கரன் அங்கே வெளிப்படும்
தோய்ந்த நெருப்பது தூய்மணி சிந்திடும்
ஏய்ந்த இளமதி எட்டவல் லார்கட்கு
வாய்ந்த மனமல்கு நூல்ஏணி யாமே

10.311   10 st/nd Thirumurai   Song # 60   திருமூலர்   திருமந்திரம்  
ஆய்வரும் அத்தனி நாயகி தன்னுடன்
ஆய்வரு வாயு அளப்பது சொல்லிடில்
ஆய்வரும் ஐஞ்ஞூற்று முப்பத்தொன் றொன்பது
மாய்வரு வாயு வளப்புள் ளிருந்ததே. 

10.318   10 st/nd Thirumurai   Song # 4   திருமூலர்   திருமந்திரம்  
ஆய்ந்துரை செய்யில் அமுதம்நின் றூறிடும்
வாய்ந்துரை செய்யும் வருகின்ற காலத்து
நீந்துரை செய்யில் நிலாமண் டலமதாய்ப்
பாய்ந்துரை செய்தது பாலிக்கு மாறே. 

10.402   10 st/nd Thirumurai   Song # 10   திருமூலர்   திருமந்திரம்  
ஆயும் சிவாய நமமசி வாயந
ஆயும் நமசி வயய நமசிவா
ஆயுமே வாய நமசியெனும் மந்திரம்
ஆயும் சிகாரம்தொட் டந்தத் தடைவிலே.

10.408   10 st/nd Thirumurai   Song # 66   திருமூலர்   திருமந்திரம்  
ஆயிழை யாளொடும் ஆதிப் பரனிடம்
ஆயதொ ரண்டவை ஆறும் இரண்டுள
ஆய மனந்தொ றாறுமுக மாமவற்
றேய குழலி இனிதுநின் றாளே.

10.408   10 st/nd Thirumurai   Song # 85   திருமூலர்   திருமந்திரம்  
ஆயும் அறிவுங் கடந்(து) அணு வோரணி
மாயம தாகி மதோமகி ஆயிடுஞ்
சேய அரிவை சிவானந்த சுந்தரி
நேயம் தாம்நெறி யாகிநின் றாளே.

10.517   10 st/nd Thirumurai   Song # 1   திருமூலர்   திருமந்திரம்  
ஆயத்துள்நின்ற அருசம யங்களும்
காயத்துள் நின்ற கடவுளைக் காண்கில
மாயக் குழியில் விழுவ மனைமக்கட்
பாசத்துள் உற்றுப் பதைக்கின்ற வாறே.

10.519   10 st/nd Thirumurai   Song # 10   திருமூலர்   திருமந்திரம்  
ஆய்ந்துண ரார்களின் ஆன்மாச் சதுர்பல
வாய்ந்துண ராவகை நின்ற அரன்நெறி
பாய்ந்துணர் வார் அரன் சேவடி கைதொழு
தேய்ந்துணர் செய்வதோர் இன்பமு மாமே.
10.519   10 st/nd Thirumurai   Song # 15   திருமூலர்   திருமந்திரம்  
ஆய்ந்தறி வார்கள் அமரர்வித் தியாதரர்
ஆய்ந்தறி யாவண்ணம் நின்ற அரன்நெறி
ஆய்ந்தறிந் தேன்அவன் சேவடி கைதொழ
ஆய்ந்தறிந் தேன்இம்மை அம்மை கண்டேனே.

10.701   10 st/nd Thirumurai   Song # 8   திருமூலர்   திருமந்திரம்  
ஆய மலர்இன் அணிமலர் மேலது
வாய இதழும் பதினாறும் அங்குள
தூய அறிவு சிவானந்த மாகிப்போய்
மேய அறிவாய் விளைந்தது தானே. 2,

10.709   10 st/nd Thirumurai   Song # 13   திருமூலர்   திருமந்திரம்  
ஆயும் அறிவோ டறியாத மாமாயை
ஆய கரணம் அடைக்கும்ஐம் பூதங்கள்
ஆய பலஇந் திரிய மவற்றுடன்
ஆய அனைத்துமாம் அவ்வரும் செய்கையே.

10.808   10 st/nd Thirumurai   Song # 7   திருமூலர்   திருமந்திரம்  
ஆயும்பொய் மாயை அகம்புற மாய்நிற்கும்
வாயும் மனமும் கடந்த மயக்கறின்
தூய அறிவு சிவானந்த மாகிப் போய்
வேயும் பொருளாய் விளைந்தது தானே.

10.816   10 st/nd Thirumurai   Song # 7   திருமூலர்   திருமந்திரம்  
ஆய பதிதான் அருட்சிவ லிங்கமாம்
ஆய பசுவும் அடல்ஏ றெனநிற்கும்
ஆய பலிபீடம் ஆகும்நற் பாசம்ஆம்
ஆய அரன்நிலை ஆய்ந்துகொள் வார்கட்கே.

10.902   10 st/nd Thirumurai   Song # 4   திருமூலர்   திருமந்திரம்  
ஆயன நந்தி அடிக்கென் தலைபெற்றேன்
வாயன நந்தியை வாழ்த்தஎன் வாய்பெற்றேன்
காயன நந்தியைக் காணஎன் கண்பெற்றேன்
சேயன நந்திக்கென் சிந்தைபெற் றேனே.

11.004   11 st/nd Thirumurai   Song # 8   காரைக்கால் அம்மையார்    அற்புதத் திருவந்தாதி  
ஆயினேன் ஆள்வானுக் கன்றே பெறற்கரியன்
ஆயினேன் அஃதன்றே ஆமாறு - தூய
புனற்கங்கை ஏற்றானோர் பொன்வரையே போல்வான்
அனற்கங்கை ஏற்றான் அருள்.

11.006   11 st/nd Thirumurai   Song # 58   சேரமான் பெருமாள் நாயனார்   பொன்வண்ணத்தந்தாதி  
ஆயின அந்தணர் வாய்மை
அரைக்கலை கைவளைகள்
போயின வாள்நிகர் கண்ணுறு
மைந்நீர் முலையிடையே
பாயின வேள்கைக் கரபத்
திரத்துக்குச் சூத்திரம்போல்
ஆயின பல்சடை யார்க்கன்பு
பட்டவெம் ஆயிழைக்கே.

11.007   11 st/nd Thirumurai   Song # 29   சேரமான் பெருமாள் நாயனார்   திருவாரூர் மும்மணிக்கோவை  
ஆயினஅன் பாரே அழிப்பர் அனலாடி
பேயினவன் பார்ஓம்பும் பேரருளான் - தீயினவன்
கண்ணாளன் ஆரூர்க் கடலார் மடப்பாவை
தண்ணாருங் கொங்கைக்கே தாழ்ந்து.

11.008   11 st/nd Thirumurai   Song # 54   சேரமான் பெருமாள் நாயனார்   திருக்கயிலாய ஞான உலா  
ஆய விழுப்போர் அருச்சுனன் ஆற்றற்குப்
பாசுபதம் ஈந்த பதம்போற்றி தூய

11.022   11 st/nd Thirumurai   Song # 28   கபிலதேவ நாயனார்    சிவபெருமான் திருவந்தாதி  
ஆயம் அழிய அலர்கொறைத் தார்வேண்டி
ஆயம் அழிய அயர்வேன்மேல் ஆயன்வாய்த்
தீங்குழலும் தென்றலும் தேய்கோட் டிளம்பிறையும்
தீங்குழலும் என்னையே தேர்ந்து.

11.023   11 st/nd Thirumurai   Song # 48   பரணதேவ நாயனார்   சிவபெருமான் திருவந்தாதி  
ஆயன் றமரர் அழியா வகைசெய்தான்
ஆயன் றமரர் அழியாமை ஆயன்
திருத்தினான் செங்கண் விடையூர்வான் மேனி
திருத்தினான் சேதுக் கரை.

11.023   11 st/nd Thirumurai   Song # 60   பரணதேவ நாயனார்   சிவபெருமான் திருவந்தாதி  
ஆய்ந்துன்றன் பாதம் அடைய வரும்என்மேல்
ஆய்ந்தென்றன் பாச மலமறுத் தாய்ந்துன்றன்
பாலணையச் செய்த பரமா பரமேட்டி
பாலணையச் செய்த பரம்.

12.030   12 st/nd Thirumurai   Song # 4   சேக்கிழார்   தில்லை வாழ் அந்தணர் சருக்கம்  
ஆயும் நுண்பொரு ளாகியும் வெளியே
அம்ப லத்துள்நின் றாடுவா ரும்பர்
நாய கிக்குமஃ தறியவோ பிரியா
நங்கை தானறி யாமையோ அறியோம்
தூய நீறுபொன் மேனியில் விளங்கத்
தூர்த்த வேடமுந் தோன்றவே தியராய்
மாய வண்ணமே கொண்டுதம் தொண்டர்
மறாத வண்ணமுங் காட்டுவான் வந்தார்.
12.140   12 st/nd Thirumurai   Song # 9   சேக்கிழார்   இலை மலிந்த சருக்கம்  
ஆயர் குலத்தை விளக்கிட வந்துத யஞ்செய்தார்
தூய சுடர்த்திரு நீறு விரும்பு தொழும்புள்ளார்
வாயினில் மெய்யின் வழுத்து மனத்தின் வினைப்பாலில்
பேயுட னாடு பிரானடி யல்லது பேணாதார்.
12.140   12 st/nd Thirumurai   Song # 25   சேக்கிழார்   இலை மலிந்த சருக்கம்  
ஆயஇசைப் புகல்நான்கின்
அமைந்தபுகல் வகையெடுத்து
மேயதுளை பற்றுவன
விடுப்பனவாம் விரல்நிரையில்
சேயவொளி யிடையலையத்
திருவாள னெழுத்தஞ்சுந்
தூயஇசைக் கிளைகொள்ளுந்
துறையஞ்சின் முறைவிளைத்தார்.
12.170   12 st/nd Thirumurai   Song # 4   சேக்கிழார்   மும்மையால் உலகாண்ட சருக்கம்  
ஆய அந்தணர் அருமறை உருத்திரங் கொண்டு
மாய னார்அறி யாமலர்ச் சேவடி வழுத்தும்
தூய அன்பொடு தொடர்பினில் இடையறாச் சுருதி
நேய நெஞ்சின ராகிஅத் தொழில்தலை நின்றார்.
12.190   12 st/nd Thirumurai   Song # 47   சேக்கிழார்   மும்மையால் உலகாண்ட சருக்கம்  
ஆய நானிலத் தமைதியில் தத்தமக் கடுத்த
மேய செய்தொழில் வேறுபல் குலங்களின் விளங்கித்
தீய வென்பன கனவிலும் நினைவிலாச் சிந்தைத்
தூய மாந்தர்வாழ் தொண்டைநாட் டியல்புசொல் வரைத்தோ.
12.200   12 st/nd Thirumurai   Song # 20   சேக்கிழார்   மும்மையால் உலகாண்ட சருக்கம்  
ஆய சிறப்பி னால்பெற்ற
அன்றே மன்றுள் நடம்புரியும்
நாய னார்க்கு வளர்மதியும்
நதியும் நகுவெண் டலைத்தொடையும்
மேய வேணித் திருமுடிமேல்
விரும்பி யாடி அருளுதற்குத்
தூய திருமஞ் சனம்ஐந்தும்
அளிக்கும் உரிமைச் சுரபிகள்தாம்.
12.200   12 st/nd Thirumurai   Song # 28   சேக்கிழார்   மும்மையால் உலகாண்ட சருக்கம்  
ஆய நிரையின் குலமெல்லாம்
அழகின் விளங்கி மிகப்பல்கி
மேய இனிய புல்லுணவும்
விரும்பு புனலும் ஆர்தலினால்
ஏய மனங்கொள் பெருமகிழ்ச்சி
எய்த இரவும் நண்பகலும்
தூய தீம்பால் மடிபெருகிச்
சொரிய முலைகள் சுரந்தனவால்.
12.210   12 st/nd Thirumurai   Song # 27   சேக்கிழார்   திருநின்ற சருக்கம்  
ஆயநா ளிடைஇப்பால்
அணங்கனையாள் தனைப்பயந்த
தூயகுலப் புகழனார்
தொன்றுதொடு நிலையாமை
மேயவினைப் பயத்தாலே
இவ்வுலகை விட்டகலத்
தீயஅரும் பிணியுழந்து
விண்ணுலகில் சென்றடைந்தார்.
12.210   12 st/nd Thirumurai   Song # 287   சேக்கிழார்   திருநின்ற சருக்கம்  
ஆய பொழுது திருநாவுக்
கரசு புகலி ஆண்டகைக்குக்
காய மாசு பெருக்கியுழல்
கலதி அமணர் கடுவினைசெய்
மாயை சாலம் மிகவல்லார்
அவர்மற் றென்னை முன்செய்த
தீய தொழிலும் பலகெட்டேன்
செல்ல இசையேன் யான்என்றார்.
12.210   12 st/nd Thirumurai   Song # 355   சேக்கிழார்   திருநின்ற சருக்கம்  
ஆய வாரிரு ளின்கண் ஏகுமவ்
அன்பர் தம்மைஅ ணைந்துமுன்
தீய வாயவி லங்கு வன்தொழில்
செய்ய அஞ்சின நஞ்சுகால்
வாய நாகம ணிப்ப ணங்கொள்வி
ளக்கெ டுத்தன வந்துகால்
தோய வானவ ராயி னுந்தனி
துன்ன ருஞ்சுரம் முன்னினார்.
12.210   12 st/nd Thirumurai   Song # 382   சேக்கிழார்   திருநின்ற சருக்கம்  
ஆய வாறுமற் றவர்மனங்
களிப்புறக் கயிலை
மேய நாதர்தந் துணையொடும்
வீற்றிருந் தருளித்
தூய தொண்டனார் தொழுதெதிர்
நிற்கஅக் கோலம்
சேய தாக்கினார் திருவையா
றமர்ந்தமை திகழ.
12.220   12 st/nd Thirumurai   Song # 9   சேக்கிழார்   திருநின்ற சருக்கம்  
ஆய செய்கைய ராயவர் ஆறணி
நாய னார்திருப் பாதம் நவின்றுளார்
பாய சீர்புனை பாண்டிமா தேவியார்
மேய தொண்டுக்கு மெய்த்தொண்டர் ஆயினார்.

12.240   12 st/nd Thirumurai   Song # 53   சேக்கிழார்   திருநின்ற சருக்கம்  
ஆய்ந்தசீர் இரட்டை மாலை
அந்தாதி யெடுத்துப் பாடி
ஏய்ந்தபேர் உணர்வு பொங்க
எயிலொரு மூன்றும் முன்னாள்
காய்ந்தவர் இருந்த வெள்ளிக்
கைலைமால் வரையை நண்ண
வாய்ந்தபேர் அருள்முன் கூர
வழிபடும் வழியால் வந்தார்.
12.260   12 st/nd Thirumurai   Song # 3   சேக்கிழார்   திருநின்ற சருக்கம்  
ஆய்ந்த மெய்ப்பொருள் நீறென
வளர்க்கும்அக் காப்பில்
ஏய்ந்த மூன்றுதீ வளர்த்துளார்
இருபிறப் பாளர்
நீந்து நல்லறம் நீர்மையின்
வளர்க்கும்அத் தீயை
வாய்ந்த கற்புடன் நான்கென
வளர்ப்பர்கண் மடவார்.
12.260   12 st/nd Thirumurai   Song # 7   சேக்கிழார்   திருநின்ற சருக்கம்  
ஆய செய்கையில் அமருநாள்
ஆதிரை நாளில்
மேய பூசனை நியதியை
விதியினால் முடித்துத்
தூய தொண்டனார் தொல்லைநீ
டயவந்தி அமர்ந்த
நாய னாரையும் அருச்சனை
புரிந்திட நயந்தார்.
12.270   12 st/nd Thirumurai   Song # 26   சேக்கிழார்   திருநின்ற சருக்கம்  
ஆய பொழுது தம்பெருமான்
அருளா லேயோ மேனியினில்
ஏயும் அசைவின் அயர்வாலோ
அறியோம் இறையும் தாழாதே
மேய உறக்கம் வந்தணைய
விண்ணோர் பெருமான் கழல்நினைந்து
தூய அன்பர் துயில்கொண்டார்
துயிலும் பொழுது கனவின்கண்.
12.280   12 st/nd Thirumurai   Song # 40   சேக்கிழார்   வம்பறா வரிவண்டுச் சருக்கம்  
ஆயபல செய்தொழில்கள் அன்றுமுதல் விண்ணோர்
நாயகன் அருட்பெருமை கூறுநலம் எய்தத்
தூயதிரு மாமறை தொடர்ந்தநடை நூலின்
மேயவிதி ஐயிரு தினத்தினும் விளைத்தார்.
12.280   12 st/nd Thirumurai   Song # 210   சேக்கிழார்   வம்பறா வரிவண்டுச் சருக்கம்  
ஆய போழ்தின் அரவெனும் ஆர்ப்புடன்
தூய முத்தின் சிவிகை சுடர்க்குடை
மேய சின்னங்கள் கொண்டுமெய் யன்பரோ
டேய அந்தணர் தாமெதிர் தோன்றினார்.
12.280   12 st/nd Thirumurai   Song # 336   சேக்கிழார்   வம்பறா வரிவண்டுச் சருக்கம்  
ஆய குறிப்பினில் ஆணை
நிகழ அருளிச்செய்து
தூய பதிகத் திருக்கடைக்
காப்புத் தொடுத்தணிய
மேயஅப் பொற்பதி வாழ்பவர்க்
கேயன்றி மேவும்அந்நாள்
தீய பனிப்பிணி அந்நாடு
அடங்கவும் தீர்ந்ததன்றே.
12.280   12 st/nd Thirumurai   Song # 826   சேக்கிழார்   வம்பறா வரிவண்டுச் சருக்கம்  
ஆயி னும்பெரி யாரவர் என்பது
மேய இவ்வியல் பேயன்றி விண்முதற்
பாய பூதங்கள் பல்லுயிர் அண்டங்கள்
ஏயும் யாவும் இவர்வடி வென்றதாம்.
12.280   12 st/nd Thirumurai   Song # 1050   சேக்கிழார்   வம்பறா வரிவண்டுச் சருக்கம்  
ஆய நாள்களில் அமண்பயில்
பாண்டிநா டதனைத்
தூய ஞானமுண் டருளிய
தோன்றலார் அணைந்து
மாய வல்லமண் கையரை
வாதில்வென் றதுவும்
மேய வெப்பிடர் மீனவன்
மேலொழித் ததுவும்.
12.280   12 st/nd Thirumurai   Song # 1073   சேக்கிழார்   வம்பறா வரிவண்டுச் சருக்கம்  
ஆய வேலையில் அருமறைப்
புகலியர் பிரானும்
மேய ஒற்றியூர் பணிபவர்
வியனகர் அகன்று
காயல் சூழ்கரைக் கடல்மயி
லாபுரி நோக்கித்
தூய தொண்டர்தம் குழாத்தொடும்
எதிர்வந்து தோன்ற.
12.290   12 st/nd Thirumurai   Song # 92   சேக்கிழார்   வம்பறா வரிவண்டுச் சருக்கம்  
ஆயிடை நீங்கி அருளினால் செல்வார்
அருவரைச் சுரங்களும் பிறவும்
பாயுநீர் நதியும் பலபல கடந்து
பரமர்தம் பதிபல பணிந்து
மேயவண் தமிழால் விருப்பொடும் பரவி
வெஞ்சமாக் கூடலும் பணிந்து
சேயிடை கழியப் போந்துவந் தடைந்தார்
தென்திசைக் கற்குடி மலையில்.
12.360   12 st/nd Thirumurai   Song # 3   சேக்கிழார்   வார்கொண்ட வனமுலையாள் சருக்கம்  
ஆயுள்வே தக்கலையும்
அலகில்வட நூற்கலையும்
தூயபடைக் கலத்தொழிலும்
துறைநிரம்பப் பயின்றுள்ளார்
பாயுமதக் குஞ்சரமும்
பரியுமுகைக் கும்பண்பு
மேயதொழில் விஞ்சையினும்
மேதினியில் மேலானார்.
12.370   12 st/nd Thirumurai   Song # 78   சேக்கிழார்   வார்கொண்ட வனமுலையாள் சருக்கம்  
ஆய சிறப்பிற் பூசனைகள்
அளித்த வெல்லாம் அமர்ந்தருளித்
தூய நீறு தங்கள்திரு
முடியில் வாங்கித் தொழுதணிந்து
மேய விருப்பி னுடனிருப்பக்
கழறிற் றறிவார் மெய்த்தொண்டின்
சேய நீர்மை யடைந்தாராய்
நம்பி செம்பொற் கழல்பணிந்தார்.
12.370   12 st/nd Thirumurai   Song # 140   சேக்கிழார்   வார்கொண்ட வனமுலையாள் சருக்கம்  
ஆய செயலின் அதிசயத்தைக்
கண்டக் கரையில் ஐயாறு
மேய பெருமான் அருள்போற்றி
வீழ்ந்து தாழ்ந்து மேல்பாற்போய்த்
தூய மதிவாழ்சடையார்தம்
பதிகள் பிறவுந் தொழுதேத்திச்
சேய கொங்கர் நாடணைந்தார்
திருவா ரூரர் சேரருடன்.
12.380   12 st/nd Thirumurai   Song # 2   சேக்கிழார்   வார்கொண்ட வனமுலையாள் சருக்கம்  
ஆய அன்பர்தாம் அணிமதில்
சண்பையி லமர்பெருந் திருத்தோணி
நாய னார்க்குநல் திருப்பணி
யாயின நாளும்அன் பொடுசெய்து
மேய அத்திருத் தொண்டினில்
விளங்குவார் விரும்பிவந் தணைவார்க்குத்
தூய கைத்திருத் தொண்டினில்
அவர்தமைத் துறைதொறும் பயில்விப்பார்.
12.480   12 st/nd Thirumurai   Song # 5   சேக்கிழார்   கறைக் கண்டன் சருக்கம்  
ஆயசெயல் மாண்டதற்பின்
அயலவர்பால் இரப்பஞ்சிக்
காயமுயற் சியில்அரிந்த
கணம்புல்லுக் கொடுவந்து
மேய விலைக் குக்கொடுத்து
விலைப்பொருளால் நெய்மாறித்
தூயதிரு விளக்கெரித்தார்
துளக்கறுமெய்த் தொண்டனார்.
12.500   12 st/nd Thirumurai   Song # 3   சேக்கிழார்   கறைக் கண்டன் சருக்கம்  
ஆயஅர சளிப்பார்பால்
அமர்வேண்டி வந்தேற்ற
சேயபுலத் தெவ்வரெதிர்
நெல்வேலிச் செருக்களத்துப்
பாயபடைக் கடல்முடுகும்
பரிமாவின் பெருவெள்ளம்
காயுமதக் களிற்றினிரை
பரப்பியமர் கடக்கின்றார்.
12.720   12 st/nd Thirumurai   Song # 28   சேக்கிழார்   வெள்ளானைச் சருக்கம்  
ஆய செய்கையின் நாள்பல
கழிந்தபின் அரசர்கள் முதற்சேரர்
தூய மஞ்சனத் தொழிலினில்
தொடங்கிடத் துணைவராம் வன்தொண்டர்
பாய கங்கைசூழ் நெடுஞ்சடைப்
பரமரைப் பண்டுதாம் பிரிந்தெய்தும்
சேய நன்னெறி குறுகிடக்
குறுகினார் திருவஞ்சைக் களந்தன்னில்.

This page was last modified on Thu, 09 May 2024 05:33:06 +0000
          send corrections and suggestions to admin-at-sivaya.org

thirumurai all list