சிவய.திருக்கூட்டம்
sivaya.org
Please set your language preference
by clicking below languages link
Search this site with
words in any language e.g. पोऱ्‌ऱि
song/pathigam/paasuram numbers: e.g. 7.039

This page in Tamil   Hindi/Sanskrit   Telugu   Malayalam   Bengali   Kannada   English   ITRANS    Marati  Gujarathi   Oriya   Singala   Tibetian   Thai   Japanese   Urdu   Cyrillic/Russian   Spanish   Hebrew  
Selected thirumurai      thirumurai Thalangal      All thirumurai Songs     

Thirumurai   1   2   3   4   5   6   7   8   9   10   11   12

Pathigam first Letter :                                          
Paadal first letter:     (  .                                                
Search: Filter By: Order By:
திருமுறை 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12 இருந்து பாடல் சொல் ஆர்
ஆர்அறி     ஆர்த்தெழு     ஆர்க்கும்     ஆர்வம்     ஆர்வ     ஆர்வல்லார்     ஆர்க்கின்ற     ஆர்துணையா     ஆர்மலி     ஆர்த்தி     ஆர்கொல்     ஆர்தம     ஆர்வநிறை     ஆர்     ஆர்த்து     ஆர்,     ஆர்த்த     ஆர்த்தானை,     ஆர்ந்தவனே!     ஆர்த்தான்     ஆர்த்தவர்,     ஆர்த்தாய்,     ஆர்க்கோ?    
3.059   3 st/nd Thirumurai   Song # 9   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
ஆர் எரி ஆழியானும் அலரானும் அளப்பு அரிய
நீர் இரி புன்சடை மேல் நிரம்பா மதி சூடி, நல்ல
கூர் எரி ஆகி நீண்ட குழகன்; குடமூக்கு இடமா,
ஈர் உரி கோவணத்தோடு இருந்தான்; அவன் எம் இறையே.

4.016   4 st/nd Thirumurai   Song # 5   திருநாவுக்கரசர்   தேவாரம்  
ஆர்த்து ஆர் உயிர் அடும் அந்தகன் தன் உடல்
பேர்த்தார், பிறைநுதல் பெண்ணின் நல்லாள் உட்கக்
கூர்த்து ஆர் மருப்பின் கொலைக் களிற்று ஈர் உரி
போர்த்தார்-புகலூர்ப் புரிசடையாரே.

4.048   4 st/nd Thirumurai   Song # 9   திருநாவுக்கரசர்   தேவாரம்  
ஆர் அழல் உருவம் ஆகி அண்டம் ஏழ் கடந்த எந்தை
பேர் ஒளி உருவினானைப் பிரமனும் மாலும் காணாச்
சீர் அவை பரவி ஏத்திச் சென்று அடி வணங்குவார்க்குப்
பேர் அருள் அருளிச் செய்வார், பேணும் ஆப்பாடியாரே.

4.061   4 st/nd Thirumurai   Song # 6   திருநாவுக்கரசர்   தேவாரம்  
ஆர், வலம் நம்மின் மிக்கார்?’ என்ற அவ் அரக்கர் கூடிப்
போர் வலம் செய்து மிக்குப் பொருதவர் தம்மை வீட்டித்
தேர் வலம் செற்ற மால் செய் திரு இராமேச்சுரத்தைச்
சேர்,-மட நெஞ்சமே!-நீ செஞ்சடை எந்தைபாலே!

4.072   4 st/nd Thirumurai   Song # 10   திருநாவுக்கரசர்   தேவாரம்  
ஆர்த்து எழும் இலங்கைக் கோனை அருவரை அடர்ப்பர் போலும்;
பார்த்தனோடு அமர் பொரூது படை கொடுத்து அருள்வர் போலும்;
தீர்த்தம் ஆம் கங்கை தன்னைத் திருச்சடை வைப்பர் போலும்;
ஏத்த ஏழ் உலகும் வைத்தார்-இன்னம்பர் ஈசனாரே.

4.104   4 st/nd Thirumurai   Song # 5   திருநாவுக்கரசர்   தேவாரம்  
ஆர் அட்டதேனும் இரந்து, உண்டு, அகம் அகவன் திரிந்து,
வேர் அட்ட, நிற்பித்திடுகின்றதால்-விரிநீர்ப் பரவைச்
சூர் அட்ட வேலவன் தாதையை, சூழ் வயல் ஆர் அதிகை-
வீரட்டத்தானை, விரும்பா அரும்பாவவேதனையே.

5.032   5 st/nd Thirumurai   Song # 2   திருநாவுக்கரசர்   தேவாரம்  
ஆர்த்த தோல் உடை கட்டி ஓர் வேடனாய்ப்
பார்த்தனோடு படை தொடும் ஆகிலும்,
பூத்த நீள் பொழில் பூந்துருத்தி(ந்) நகர்த்
தீர்த்தன் சேவடிக்கீழ் நாம் இருப்பதே!

6.018   6 st/nd Thirumurai   Song # 11   திருநாவுக்கரசர்   தேவாரம்  
ஆர் உருவ உள்குவார் உள்ளத்துள்ளே
அவ் உரு  ஆய் நிற்கின்ற அருளும் தோன்றும்;
வார் உருவப்பூண் முலை நல் மங்கை தன்னை 
மகிழ்ந்து ஒருபால் வைத்து உகந்த வடிவும் தோன்றும்;
நீர் உருவக் கடல் இலங்கை அரக்கர் கோனை
நெறு நெறு என அடர்த்திட்ட நிலையும் தோன்றும்;
போர் உருவக் கூற்று உதைத்த பொற்புத் தோன்றும்
பொழில் திகழும் பூவணத்து எம் புனிதனார்க்கே.

6.041   6 st/nd Thirumurai   Song # 2   திருநாவுக்கரசர்   தேவாரம்  
ஆர்த்த எனக்கு அன்பன் நீயே என்றும்,   ஆதிக்கயிலாயன் நீயே என்றும்,
கூர்த்த நடம் ஆடி நீயே என்றும், கோடிகா மேய குழகா! என்றும்,
பார்த்தற்கு அருள் செய்தாய் நீயே என்றும்,   பழையனூர் மேவிய பண்பா! என்றும்,
தீர்த்தன் சிவலோகன் நீயே என்றும், நின்ற நெய்த்தானா! என் நெஞ்சு உளாயே.

6.043   6 st/nd Thirumurai   Song # 6   திருநாவுக்கரசர்   தேவாரம்  
ஆர்த்தானை, வாசுகியை, அரைக்கு ஓர் கச்சா அசைத்தானை; அழகு ஆய பொன் ஆர் மேனிப்
பூத்தானத்தான் முடியைப் பொருந்தா வண்ணம் புணர்த்தானை; பூங்கணையான் உடலம் வேவப்
பார்த்தானை; பரிந்தானை; பனி நீர்க்கங்கை படர் சடைமேல் பயின்றானை; பதைப்ப யானை
போர்த்தானை; புண்ணியனை; புனிதன் தன்னை; பொய் இலியை; பூந்துருத்திக் கண்டேன், நானே.

6.044   6 st/nd Thirumurai   Song # 6   திருநாவுக்கரசர்   தேவாரம்  
ஆர்ந்தவனே! உலகு எலாம் நீயே ஆகி அமைந்தவனே! அளவு இலாப் பெருமையானே!
கூர்ந்தவனே! குற்றாலம் மேய கூத்தா! கொடு மூ இலையது ஓர் சூலம் ஏந்திப்
பேர்ந்தவனே! பிரளயங்கள் எல்லாம் ஆய பெம்மான்! என்று எப்போதும் பேசும் நெஞ்சில்
சேர்ந்தவனே! திருச் சோற்றுத்துறை உளானே! திகழ் ஒளியே! சிவனே! உன் அபயம், நானே.

6.085   6 st/nd Thirumurai   Song # 1   திருநாவுக்கரசர்   தேவாரம்  
ஆர்த்தான் காண், அழல் நாகம் அரைக்கு நாணா; அடியவர்கட்கு அன்பன் காண்; ஆனைத்தோலைப்
போர்த்தான் காண்; புரிசடை மேல் புனல் ஏற்றான் காண்; புறங்காட்டில் ஆடல் புரிந்தான் தான் காண்;
காத்தான் காண், உலகு ஏழும் கலங்கா வண்ணம், கனை கடல் வாய் நஞ்சு அதனைக் கண்டத்துள்ளே!
சேர்த்தான் காண் திரு முண்டீச்சுரத்து மேய சிவலோகன் காண்; அவன் என் சிந்தையானே.

6.088   6 st/nd Thirumurai   Song # 1   திருநாவுக்கரசர்   தேவாரம்  
ஆர் ஆரும் மூ இலை வேல் அங்கையானை; அலை கடல் நஞ்சு அயின்றானை; அமரர் ஏத்தும்
ஏர் ஆரும் மதி பொதியும் சடையினானை; எழுபிறப்பும் எனை ஆளா உடையான் தன்னை;
ஊர் ஆரும் பட நாகம் ஆட்டுவானை; உயர் புகழ் சேர்தரும் ஓமாம்புலியூர் மன்னும்
சீர் ஆரும் வடதளி எம் செல்வன் தன்னை; சேராதே திகைத்து நாள் செலுத்தினேனே!.

7.019   7 st/nd Thirumurai   Song # 6   சுந்தரமூர்த்தி சுவாமிகள்   திருப்பாட்டு  
ஆர்த்தவர், ஆடு அரவம்(ம்) அரைமேல்; புலி ஈர் உரிவை
போர்த்தவர்; ஆனையின் தோல் உடல் வெம் புலால் கை அகலப்
பார்த்தவர்; இன் உயிர், பார், படைத்தான் சிரம் அஞ்சில் ஒன்றைச்
சேர்த்தவருக்கு உறையும்(ம்) இடம் ஆம் திரு நின்றியூரே .

7.023   7 st/nd Thirumurai   Song # 6   சுந்தரமூர்த்தி சுவாமிகள்   திருப்பாட்டு  
ஆர்த்தாய், ஆடுஅரவை அரை ஆர் புலி அதள்மேல்;
போர்த்தாய், ஆனையின் தோல் உரிவை புலால் நாற;
காத்தாய், தொண்டு செய்வார் வினைகள் அவை போக,
பார்த்தானுக்கு இடம் ஆம் பழி இல் கழிப்பாலை அதே .

8.107   8 st/nd Thirumurai   Song # 12   மாணிக்க வாசகர்    திருவாசகம்  
ஆர்த்த பிறவித் துயர் கெட, நாம் ஆர்த்து ஆடும்
தீர்த்தன்; நல் தில்லைச் சிற்றம்பலத்தே தீ ஆடும்
கூத்தன்; இவ் வானும், குவலயமும், எல்லோமும்,
காத்தும், படைத்தும், கரந்தும், விளையாடி,
வார்த்தையும் பேசி, வளை சிலம்ப, வார் கலைகள்
ஆர்ப்பு அரவம் செய்ய, அணி குழல்மேல் வண்டு ஆர்ப்ப,
பூத் திகழும் பொய்கை குடைந்து, உடையான் பொன் பாதம்
ஏத்தி, இரும் சுனை நீர் ஆடு' ஏல் ஓர் எம்பாவாய்!

8.147   8 st/nd Thirumurai   Song # 2   மாணிக்க வாசகர்    திருவாசகம்  
ஆர்க்கோ? அரற்றுகோ? ஆடுகோ? பாடுகோ?
பார்க்கோ? பரம்பரனே, என் செய்கேன்? தீர்ப்பு அரிய
ஆனந்த மால் ஏற்றும் அத்தன், பெருந்துறையான்
தான்' என்பார் ஆர் ஒருவர் தாழ்ந்து?

10.100   10 st/nd Thirumurai   Song # 32   திருமூலர்   திருமந்திரம்  
ஆர்அறி வார்எங்கள் அண்ணல் பெருமையை
ஆர்அறி வார்அவ் வகலமும் நீளமும்
பேர்அறி யாத பெருஞ்சுடர் ஒன்றதின்
வேர்அறி யாமை விளம்புகின் றேனே.

10.105   10 st/nd Thirumurai   Song # 15   திருமூலர்   திருமந்திரம்  
ஆர்த்தெழு சுற்றமும் பெண்டிரும் மக்களும்
ஊர்த்துறைக் காலே ஒழிவர் ஒழிந்தபின்
வேர்த்தலை போக்கி விறகிட் டெரிமூட்டி
நீர்த்தலை மூழ்குவர் நீதியி லோரே. 

10.118   10 st/nd Thirumurai   Song # 1   திருமூலர்   திருமந்திரம்  
ஆர்க்கும் இடுமின் அவரிவர் என்னன்மின்
பார்த்திருந் துண்மின் பழம்பொருள் போற்றன்மின்
வேட்கை யுடையீர் விரைந்தொல்லை உண்ணன்மின்
காக்கை கரைந்துண்ணும் காலம் அறிமினே.19,

10.121   10 st/nd Thirumurai   Song # 4   திருமூலர்   திருமந்திரம்  
ஆர்வம் உடையவர் காண்பர் அரன்தன்னை
ஈரம் உடையவர் காண்பார் இணையடி
பாரம் உடையவர் காண்பார் பவந்தன்னைக்
கோர நெறிகொடு கொங்குபுக் காரே. 

10.737   10 st/nd Thirumurai   Song # 8   திருமூலர்   திருமந்திரம்  
ஆர்வ மனமும் அளவில் இளமையும்
ஈரமும் நல்லஎன் றின்புறு காலத்துத்
தீர வருவதோர் காமத் தொழில்நின்று
மாதவன் இன்பம் மறந்தொழிந் தார்களே.

11.004   11 st/nd Thirumurai   Song # 96   காரைக்கால் அம்மையார்    அற்புதத் திருவந்தாதி  
ஆர்வல்லார் காண அரன்அவனை அன்பென்னும்
போர்வை யதனாலே போர்த்தமைத்துச் - சீர்வல்ல
தாயத்தால் நாமுந் தனிநெஞ்சி னுள்ளடைத்து
மாயத்தால் வைத்தோம் மறைத்து.

11.006   11 st/nd Thirumurai   Song # 50   சேரமான் பெருமாள் நாயனார்   பொன்வண்ணத்தந்தாதி  
ஆர்க்கின்ற நீரும் அனலும்
மதியும்ஐ வாயரவும்
ஓர்க்கின்ற யோகும் உமையும்
உருவும் அருவும்வென்றி
பார்க்கின்ற வேங்கையும் மானும்
பகலும் இரவுமெல்லாம்
கார்க்கொன்றை மாலையி னார்க்குடன்
ஆகிக் கலந்தனவே.
11.023   11 st/nd Thirumurai   Song # 45   பரணதேவ நாயனார்   சிவபெருமான் திருவந்தாதி  
ஆர்துணையா ஆங்கிருப்ப தம்பலவாஅஞ்சொலுமை
ஆர்துணையா ஆனை உரிமூடின் ஆர்துணையாம்
பூவணத்தாய் பூதப் படையாளி பொங்கொளியாய்
பூவணத்தாய் என்னின் புகல்.

11.038   11 st/nd Thirumurai   Song # 31   நம்பியாண்டார் நம்பி   ஆளுடையபிள்ளையார் திருக்கலம்பகம்  
ஆர்மலி புகலி நாதன்
  அருளென இரவில் வந்தென்
வார்முலை பயலை தீர
  மணந்தவர் தணந்து போன
தேரதர் அழியல் உம்மைச்
  செய்பிழை எம்ம தில்லை
கார்திரை புரள மோதிக்
  கரைபொருங் கடலி னீரே. 12
  பதிக வகை: கலிவிருத்தம்

12.000   12 st/nd Thirumurai   Song # 298   சேக்கிழார்   திருமலைச் சருக்கம்  
ஆர்த்தி கண்டும்என் மேல்நின்று அழற்கதிர்
தூர்ப்ப தேயெனைத் தொண்டுகொண் டாண்டவர்
நீர்த்த ரங்கநெடுங் கங்கை நீள்முடிச்
சாத்தும் வெண்மதி போன்றிலை தண்மதி.
12.090   12 st/nd Thirumurai   Song # 11   சேக்கிழார்   இலை மலிந்த சருக்கம்  
ஆர்கொல் பொரவழைத்தார்
என்றரியேற் றிற்கிளர்ந்து
சேர்வு பெறக்கச்சில்
செறிந்தவுடை மேல்வீக்கி
வார்கழலுங் கட்டி
வடிவாள் பலகைகொடு
போர்முனையில் ஏனாதி
நாதர் புறப்பட்டார்.
12.100   12 st/nd Thirumurai   Song # 113   சேக்கிழார்   இலை மலிந்த சருக்கம்  
ஆர்தம ராக நீரிங்
கிருப்பதென் றகல மாட்டேன்
நீர்பசித் திருக்க இங்கு  
நிற்கவுங் கில்லேன் என்று
சோர்தரு கண்ணீர் வாரப்  
போய்வரத் துணிந்தா ராகி
வார்சிலை எடுத்துக் கொண்டு  
மலர்க்கையால் தொழுது போந்தார்.
12.280   12 st/nd Thirumurai   Song # 1187   சேக்கிழார்   வம்பறா வரிவண்டுச் சருக்கம்  
ஆர்வ மிக்கெழும் அன்பினால்
மலர்அயன் அனைய
சீர்ம றைத்தொழிற் சடங்குசெய்
திருந்துநூல் முனிவர்
பார்வ ழிப்பட வரும்இரு
வினைகளின் பந்தச்
சார்பொ ழிப்பவர் திருக்கையில்
காப்புநாண் சாத்த.
12.360   12 st/nd Thirumurai   Song # 20   சேக்கிழார்   வார்கொண்ட வனமுலையாள் சருக்கம்  
ஆர்வநிறை பெருஞ்சுற்றம்
அகம்மலர வளித்தவர்தாம்
பார்பெருகு மகிழ்ச்சியுடன்
பருவமுறைப் பாராட்டுச்
சீர்பெருகச் செய்யவளர்
திருமகனார் சீரடியில்
தார்வளர்கிண் கிணியசையத்
தளர்நடையின் பதஞ்சார்ந்தார்.

This page was last modified on Thu, 09 May 2024 05:33:06 +0000
          send corrections and suggestions to admin-at-sivaya.org

thirumurai all list