சிவய.திருக்கூட்டம்
sivaya.org
Please set your language preference
by clicking below languages link
Search this site with
words in any language e.g. पोऱ्‌ऱि
song/pathigam/paasuram numbers: e.g. 7.039

This page in Tamil   Hindi/Sanskrit   Telugu   Malayalam   Bengali   Kannada   English   ITRANS    Marati  Gujarathi   Oriya   Singala   Tibetian   Thai   Japanese   Urdu   Cyrillic/Russian   Spanish   Hebrew  
Selected thirumurai      thirumurai Thalangal      All thirumurai Songs     

Thirumurai   1   2   3   4   5   6   7   8   9   10   11   12

Pathigam first Letter :                                          
Paadal first letter:     (  .                                                
Search: Filter By: Order By:
திருமுறை 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12 இருந்து பாடல் சொல் ஆறா
ஆறாற     ஆறாறின்     ஆறாறில்     ஆறாறும்     ஆறாறுக்     ஆறா     ஆறாறு     ஆறாம்     ஆறாவெங்     ஆறாத    
9.012   9 st/nd Thirumurai   Song # 9   கருவூர்த் தேவர்   திருவிசைப்பா  
ஆறாத பேரன்பி
   னவர்உள்ளம் குடிகொண்டு
வேறாகப் பலர்சூழ
   வீற்றிருத்தி அதுகொண்டு
வீறாடி இவள்உன்னைப்
   பொதுநீப்பான் விரைந்தின்னம்
தேறாள்தென் பொழிற்கோடைத்
   திரைலோக்கிய சுந்தரனே. 

10.321   10 st/nd Thirumurai   Song # 3   திருமூலர்   திருமந்திரம்  
ஆறாற தாங்கலை ஆதித்தன் சந்திரன்
நாறா நலங்கிளர் ஞாலங் கவர்கொளப்
பேறாங் கலைமுற்றும் பேருங்கால் ஈரெட்டும்
மாறாக் கதிர்கொள்ளும் மற்றங்கி கூடவே.

10.731   10 st/nd Thirumurai   Song # 4   திருமூலர்   திருமந்திரம்  
ஆறாறின் தன்மை அறியா திருந்தேனுக்கு
ஆறாறின் தன்மை அறிவித்தான் பேர்நந்தி
ஆறாறின் தன்மை அருளால் அறிந்தபின்
ஆறாறுக் கப்புற மாகிநின் றானே.

10.806   10 st/nd Thirumurai   Song # 11   திருமூலர்   திருமந்திரம்  
ஆறாறில் ஐயைந் தகலல் நனாநனா
ஆறாம் அவைவிட வாகும் நனாக்கனா
வேறான ஐந்தும் விடவே நனாவினில்
ஈறாம் சுழுத்தி இனிமாயை தானே.

10.807   10 st/nd Thirumurai   Song # 37   திருமூலர்   திருமந்திரம்  
ஆறாறும் ஆ(று) அதின் ஐயைந் தவத்தையோ
டீறாம் அதீதத் துரியத்(து) இவன்எய்தப்
பேறாகும் ஐவரும் போம்பிர காசத்தின்
ஈறார் பரசிவம் ஆதேய மாமே.

10.808   10 st/nd Thirumurai   Song # 3   திருமூலர்   திருமந்திரம்  
ஆறாறுக் கப்பால் அறி(வு)ஆர் அறிபவர்
ஆறாறுக் கப்பால் அருள் ஆர் பெறுபவர்
ஆறாறுக் கப்பால் அறிவாம் அவர்கட்கே
ஆறாறுக் கப்பால் அரன்இனி தாமே.

10.808   10 st/nd Thirumurai   Song # 22   திருமூலர்   திருமந்திரம்  
ஆறா றகன்று நமவிட் டறிவாகி
வேறான தானே யகாரமாய் மிக்கோங்கி
ஈறார் பரையின் இருளற்ற தற்பரன்
பேறார் சிவாய அடங்கும் பின் முத்தியே.

10.813   10 st/nd Thirumurai   Song # 42   திருமூலர்   திருமந்திரம்  
ஆறா றகன்று தனைஅறிந் தான்அவன்
ஈறாகி யாவினும் யாவும் தனில்எய்த
வேறாய் வெளிபுக்கு வீடுற்றான் அம்மருள்
தேறாத் தெளிவுற்றுத் தீண்டாச் சிவம்ஆமே.

10.816   10 st/nd Thirumurai   Song # 15   திருமூலர்   திருமந்திரம்  
ஆறாறு குண்டலி தன்னின் அகத்திட்டு
வேறாகும் மாயையில் முப்பால் முகுத்திட்டங்(கு)
ஈறாம் கருவி யிவற்றால் வகுத்திட்டு
வேறாம்பதி பசு பாசம்வீ டாகுமே.

10.820   10 st/nd Thirumurai   Song # 3   திருமூலர்   திருமந்திரம்  
ஆறாறு தத்துவத் தப்புறத் தப்பரம்
கூறா வுபதேசம் கூறில் சிவபரம்
வேறாய் வெளிப்பட்ட வேதப் பகவனார்
பேறாக ஆனந்தம் பேணும் பெருகவே.

10.827   10 st/nd Thirumurai   Song # 5   திருமூலர்   திருமந்திரம்  
ஆறாறும் நீங்க நமவாய் அகன்றிட்டு
வேறா கியபரை யாஎன்றும் மெய்ப்பரன்
ஈறான வாசியிற் கூட்டும் அதுஅன்றோ
தேறாச் சிவாய நமஎனத் தேறிலே.

10.828   10 st/nd Thirumurai   Song # 2   திருமூலர்   திருமந்திரம்  
ஆறாறு காரியோ பாதி அகன்றிட்டு
வேறாய் நினைவு மிகுத்த நனா கனா
ஆறா றகன்ற சுழுத்தி அதில் எய்தாப்
பேறாம் நிலத்துயிர் தொம்பதம் பேசிலே.

10.829   10 st/nd Thirumurai   Song # 4   திருமூலர்   திருமந்திரம்  
ஆறா றமைந்தா றவத்தையுள் நீங்குதல்
பேறான தன்னை அறிதல் பின் தீர்சுத்தி
கூறாத சாக்கிரா தீதம் குருபரன்
பேறாம் வியாத்தம் பிறங்குப சாந்தமே.

10.836   10 st/nd Thirumurai   Song # 2   திருமூலர்   திருமந்திரம்  
ஆறா றகன்ற அணுத்தொம் பதம் சுத்தம்
ஈறான தற்பதம் எய்துப சாந்தத்துப்
பேறா கியசீவன் நீங்கிப்பிர சாதத்து
வீறான தொந்தத் தசிதத்வ மசியே.

11.008   11 st/nd Thirumurai   Song # 49   சேரமான் பெருமாள் நாயனார்   திருக்கயிலாய ஞான உலா  
ஆறாம் இருதுவும் யோகும் அருந்தவமும்
மாறாத முத்திரையும் மந்திரமும் ஈறார்ந்த

11.022   11 st/nd Thirumurai   Song # 96   கபிலதேவ நாயனார்    சிவபெருமான் திருவந்தாதி  
ஆறாவெங் கூற்றுதைத் தானைத்தோல் போர்த்துகந்தங்
காறார் சடையீர்க் கமையாதே ஆறாத
ஆனினர்தார் தாந்தம் அணியிழையி னார்க்கடிமை
ஆனினத்தார் தாந்தவிர்ந்த ஆட்டு.


This page was last modified on Thu, 09 May 2024 05:33:06 +0000
          send corrections and suggestions to admin-at-sivaya.org

thirumurai all list