சிவய.திருக்கூட்டம்
sivaya.org
Please set your language preference
by clicking below languages link
Search this site with
words in any language e.g. पोऱ्‌ऱि
song/pathigam/paasuram numbers: e.g. 7.039

This page in Tamil   Hindi/Sanskrit   Telugu   Malayalam   Bengali   Kannada   English   ITRANS    Marati  Gujarathi   Oriya   Singala   Tibetian   Thai   Japanese   Urdu   Cyrillic/Russian   Spanish   Hebrew  
Selected thirumurai      thirumurai Thalangal      All thirumurai Songs     

Thirumurai   1   2   3   4   5   6   7   8   9   10   11   12

Pathigam first Letter :                                          
Paadal first letter:     (  .                                                
Search: Filter By: Order By:
திருமுறை 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12 இருந்து பாடல் சொல் ஆல
ஆலும்     ஆலக்     ஆலநீழலார்,     ஆல்     ஆலிங்     ஆலய     ஆலிக்குங்     ஆலம்உண்     ஆலைக்     ஆலமர்     ஆல     ஆலையங்     ஆலை     ஆலுமறை     ஆலங்கா     ஆலமே     ஆலவாய்     ஆலின்கீழ்     ஆலநிழற்     ஆலம்     ஆலம்,     ஆலின்     ஆலத்து     ஆலநீழல்     ஆலாலம்     ஆலைப்     ஆலத்தி    
1.074   1 st/nd Thirumurai   Song # 10   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
ஆலும் மயிலின் பீலி அமணர், அறிவு இல் சிறுதேரர்,
கோலும் மொழிகள் ஒழிய, குழுவும் தழலும் எழில் வானும்
போலும் வடிவும் உடையான், கடல் சூழ் புறவம் பதி ஆக,
ஏலும் வகையால் இமையோர் ஏத்த, உமையோடு இருந்தானே.

1.081   1 st/nd Thirumurai   Song # 3   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
ஆலக் கோலத்தின் நஞ்சு உண்டு, அமுதத்தைச்
சாலத் தேவர்க்கு ஈந்து அளித்தான், தன்மையால்
பாலற்கு ஆய் நன்றும் பரிந்து பாதத்தால்
காலற் காய்ந்தான், ஊர் காழி நகர்தானே.

1.094   1 st/nd Thirumurai   Song # 3   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
ஆலநீழலார், ஆலவாயிலார்,
காலகாலனார் பால் அது ஆமினே!

1.111   1 st/nd Thirumurai   Song # 3   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
ஆல் இளமதியினொடு, அரவு, கங்கை,
கோல வெண் நீற்றனைத் தொழுது இறைஞ்சி,
ஏல நல்மலரொடு விரை கமழும்
காலன வள நகர் கடைமுடியே.

2.009   2 st/nd Thirumurai   Song # 9   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
ஆலம் உண்டு அமுதம் அமரர்க்கு அருள் அண்ணலார்,
காலன் ஆர் உயிர் வீட்டிய மா மணிகண்டனார்
சால நல் அடியார் தவத்தார்களும் சார்வுஇடம்,
மால் அயன் வணங்கும், மழபாடி எம் மைந்தனே.

2.081   2 st/nd Thirumurai   Song # 5   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
ஆலை சேர் தண்கழனி அழகு ஆக நறவு உண்டு
சோலை சேர் வண்டு இனங்கள் இசை பாட, தூ மொழியார்
காலையே புகுந்து இறைஞ்சிக் கைதொழ, மெய்
மாதினொடும்
பாலையாழ் வேணுபுரம் பதி ஆகக் கொண்டீரே.

3.036   3 st/nd Thirumurai   Song # 2   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
ஆலம், மா, மரவமோடு, அமைந்த சீர்ச் சந்தனம்,
சாலம், மா பீலியும், சண்பகம், உந்தியே,
காலம் ஆர் முகலி வந்து அணைதரு காளத்தி,
நீலம் ஆர் கண்டனை நினையுமா நினைவதே!

3.115   3 st/nd Thirumurai   Song # 1   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
ஆல நீழல் உகந்தது இருக்கையே; ஆன பாடல் உகந்தது இருக்கையே;
பாலின் நேர் மொழியாள் ஒருபங்கனே; பாதம் ஓதலர் சேர் புர பங்கனே;
கோலம் நீறு அணி மே தகு பூதனே; கோது இலார் மனம் மேவிய பூதனே;
ஆல நஞ்சு அமுது உண்ட களத்தனே ஆலவாய் உறை
அண்டர்கள் அத்தனே.

4.036   4 st/nd Thirumurai   Song # 6   திருநாவுக்கரசர்   தேவாரம்  
ஆலின் கீழ் அறங்கள் எல்லாம் அன்று அவர்க்கு அருளிச்செய்து
நூலின் கீழவர்கட்கு எல்லாம் நுண்பொருள் ஆகி நின்று,
காலின் கீழ்க் காலன் தன்னைக் கடுகத் தான் பாய்ந்து, பின்னும்
பாலின் கீழ் நெய்யும் ஆனார்-பழனத்து எம் பரமனாரே.

4.040   4 st/nd Thirumurai   Song # 2   திருநாவுக்கரசர்   தேவாரம்  
ஆல் அலால் இருக்கை இல்லை; அருந்தவ முனிவர்க்கு அன்று
நூல் அலால் நொடிவது இல்லை; நுண் பொருள் ஆய்ந்து கொண்டு
மாலும் நான்முகனும் கூடி மலர் அடி வணங்க, வேலை
ஆல் அலால் அமுதம் இல்லை-ஐயன் ஐயாறனார்க்கே.

5.037   5 st/nd Thirumurai   Song # 4   திருநாவுக்கரசர்   தேவாரம்  
ஆலம் உண்டு அழகு ஆயது ஓர் ஆனையார்;
நீலமேனி நெடும் பளிங்கு ஆனையார்;
கோலம் ஆய கொழுஞ் சுடர் ஆனையார்;
கான ஆனைகண்டீர்-கடவூரரே.

5.048   5 st/nd Thirumurai   Song # 8   திருநாவுக்கரசர்   தேவாரம்  
ஆலும் மா மயில் சாயல் நல்லாரொடும்
சால நீ உறு மால் தவிர், நெஞ்சமே!
நீலமாமிடற்று அண்ணல் ஏகம்பனார்
கோல மா மலர்ப்பாதமே கும்பிடே!

5.059   5 st/nd Thirumurai   Song # 2   திருநாவுக்கரசர்   தேவாரம்  
ஆலத்து ஆர் நிழலில்(ல்) அறம் நால்வர்க்குக்
கோலத்தால் உரைசெய்தவன், குற்றம் இல்
மாலுக்கு ஆர் அருள் செய்தவன், மாற்பேறு
ஏலத்தான் தொழுவார்க்கு இடர் இல்லையே.

5.075   5 st/nd Thirumurai   Song # 7   திருநாவுக்கரசர்   தேவாரம்  
ஆலநீழல் அமர்ந்த அழகனார்,
காலனை உதைகொண்ட கருத்தனார்,
கோல மஞ்ஞைகள் ஆலும் குரக்குக்காப்-
பாலருக்கு அருள்செய்வர், பரிவொடே.

6.017   6 st/nd Thirumurai   Song # 3   திருநாவுக்கரசர்   தேவாரம்  
ஆல நிழல் இருப்பர்; ஆகாயத்தர்; அரு
வரையின் உச்சியர்; ஆணர்; பெண்ணர்;
காலம்பல கழித்தார்; கறை சேர் கண்டர்;
கருத்துக்குச் சேயார், தாம், காணாதார்க்கு;
கோலம்பல உடையர்; கொல்லை ஏற்றர்;
கொடு மழுவர்; கோழம்பம் மேய ஈசர்;
ஏலம் மணம் நாறும் ஈங்கோய் நீங்கார்-இடைமருது
மேவி இடம்கொண்டாரே.

6.039   6 st/nd Thirumurai   Song # 9   திருநாவுக்கரசர்   தேவாரம்  
ஆலாலம் உண்டு உகந்த ஆதி கண்டாய்; அடையலர் தம் புரம் மூன்றும் எய்தான் கண்டாய்;
காலால் அக் காலனையும் காய்ந்தான் கண்டாய்; கண்ணப்பர்க்கு அருள் செய்த காளை கண்டாய்;
பால் ஆரும் மொழி மடவாள் பாகன் கண்டாய்; பசு ஏறிப் பலி திரியும் பண்பன் கண்டாய்;
மாலாலும் அறிவு அரிய மைந்தன் கண்டாய் மழபாடி மன்னும் மணாளன் தானே.

6.052   6 st/nd Thirumurai   Song # 2   திருநாவுக்கரசர்   தேவாரம்  
ஆலைப் படு கரும்பின் சாறு போல அண்ணிக்கும் அஞ்சு   எழுத்தின் நாமத்தான் காண்;
சீலம் உடை அடியார் சிந்தையான் காண்; திரி புரம் மூன்று எரிபடுத்த சிலையினான் காண்;
பாலினொடு தயிர் நறு நெய் ஆடினான் காண்; பண்டரங்க   வேடன் காண்; பலி தேர்வான் காண்;
வேலை விடம் உண்ட மிடற்றினான் காண் விண் இழி தண் வீழிமிழலையானே.

6.074   6 st/nd Thirumurai   Song # 9   திருநாவுக்கரசர்   தேவாரம்  
ஆலாலம் மிடற்று அணியா அடக்கினானை; ஆல் அதன் கீழ் அறம் நால்வர்க்கு அருள்செய்தானை;
பால் ஆகி, தேன் ஆகி, பழமும் ஆகி, பைங்கரும்பு ஆய், அங்கு அருந்தும் சுவை ஆனானை,
மேல் ஆய வேதியர்க்கு வேள்வி ஆகி, வேள்வியினின் பயன் ஆய விமலன் தன்னை;
நால் ஆய மறைக்கு இறைவன் ஆயினானை; நாரையூர் நன்நகரில் கண்டேன், நானே.

7.061   7 st/nd Thirumurai   Song # 1   சுந்தரமூர்த்தி சுவாமிகள்   திருப்பாட்டு  
ஆலம் தான் உகந்து அமுது செய்தானை, ஆதியை, அமரர் தொழுது ஏத்தும்
சீலம் தான் பெரிதும்(ம்) உடையானை, சிந்திப்பார் அவர் சிந்தை உளானை,
ஏல வார் குழலாள் உமை நங்கை என்றும் ஏத்தி வழிபடப் பெற்ற
கால காலனை, கம்பன் எம்மானை, காணக் கண் அடியேன் பெற்ற ஆறே! .

8.202   8 st/nd Thirumurai   Song # 9   மாணிக்க வாசகர்    திருச்சிற்றம்பலக் கோவையார்  
ஆலத்தி னாலமிர் தாக்கிய
   கோன்தில்லை யம்பலம்போற்
கோலத்தி னாள் பொருட் டாக
   வமிர்தங் குணங்கெடினுங்
காலத்தி னான்மழை மாறினும்
   மாறாக் கவிகைநின்பொற்
சீலத்தை நீயும் நினையா
   தொழிவதென் தீவினையே.

10.208   10 st/nd Thirumurai   Song # 8   திருமூலர்   திருமந்திரம்  
ஆலிங் கனஞ்செய் தெழுந்த பரஞ்சுடர்
மேலிங்ஙன் வைத்ததோர் மெய்ந்நெறி முன்னங்கண்
டோலிங் கனஞ்செய் துலகம் வலம்வருங்
கோலிங் கமைஞ்சருள் கூடலு மாமே.

10.402   10 st/nd Thirumurai   Song # 6   திருமூலர்   திருமந்திரம்  
ஆலய மாக அமர்ந்தபஞ் சாக்கரம்
ஆலய மாக அமர்ந்தஅத் தூலம்போய்
ஆலய மாக அறிகின்ற சூக்குமம்
ஆலய மாக அமர்ந்திருந் தானே.

10.408   10 st/nd Thirumurai   Song # 7   திருமூலர்   திருமந்திரம்  
ஆலிக்குங் கன்னி அரிவை மனோன்மனி
பாலித் துலகில் பரந்துபெண் ணாகும்
வேலைத் தலைவியை வேத முதல்வியை
ஓலித் தொருவன் உகந்துநின் றானே.

10.408   10 st/nd Thirumurai   Song # 57   திருமூலர்   திருமந்திரம்  
ஆலம்உண் டான்அமு தாங்கவர் தம்பதம்
சாலவந் தெய்தும் தவத்தின்பந் தான்வரும்
கோலிவந் தெய்தும் குவிந்த பதவையே
டேலவந் தீண்டி யிருந்தனள் மேலே.

10.925   10 st/nd Thirumurai   Song # 2   திருமூலர்   திருமந்திரம்  
ஆலிங் கனம்செய்து அகம்சுடச் சூலத்துச்
சாலிங் கமைத்துத் தலைமை தவிர்த்தனர்
கோலிங் கமைந்தபின் கூபப் பறவைகள்
மாலிங்கு வைத்தது முன்பின் வழியே.

10.927   10 st/nd Thirumurai   Song # 3   திருமூலர்   திருமந்திரம்  
ஆலைக் கரும்பும் அமுதும் அக் காரமும்
சோலைத்தண் ணீரும் உடைத்தெங்கள் நாட்டிடைப்
பீலிக்கண் ணன்ன வடிவுசெய் வாளொரு
கோலப்பெண் ணாட்குக் குறையொன்று மில்லை.

11.015   11 st/nd Thirumurai   Song # 3   நக்கீரதேவ நாயனார்   கார் எட்டு  
ஆலமர் கண்டத் தரன்தன் மணிமிடறும்
கோலக் குழற்சடையும் கொல்லேறும் போல்வ
இருண்டொன்று மின்தோன்றி அம்பொன்றவ் வானம்
கருண்டொன்று கூடுதலின் கார்.

11.023   11 st/nd Thirumurai   Song # 39   பரணதேவ நாயனார்   சிவபெருமான் திருவந்தாதி  
ஆல நிழற்கீழ் இருப்பதுவும் ஆய்வதறம்
ஆலம் அமுதுசெயல் ஆடுவதீ ஆலந்
துறையுடையான் ஆனை உரியுடையான் சோற்றுத்
துறையுடையான் சோராத சொல்லு.

11.029   11 st/nd Thirumurai   Song # 65   பட்டினத்துப் பிள்ளையார்   திருஏகம்பமுடையார் திருவந்தாதி  
ஆலையங் கார்கரு காவைகச்
சூர்திருக் காரிகரை
வேலையங் கேறு திருவான்மி
யூர்திரு ஊறல்மிக்க
சோலையங் கார்திருப் போந்தைமுக்
கோணம் தொடர்கடுக்கை
மாலையன் வாழ்திரு வாலங்கா
டேகம்பம் வாழ்த்துமினே.

11.037   11 st/nd Thirumurai   Song # 23   நம்பியாண்டார் நம்பி   ஆளுடையபிள்ளையார் திருவுலாமாலை  
ஆலை ஒலியும் அரிவார் குரல்ஒலியும்
சோலைக் கிளிமிழற்றும் சொல்லொலியும் ஆலும்

12.000   12 st/nd Thirumurai   Song # 59   சேக்கிழார்   திருமலைச் சருக்கம்  
ஆலை பாய்பவர் ஆர்ப்புறும் ஓலமும்
சோலை வாய்வண் டிரைத்தெழு சும்மையும்
ஞாலம் ஓங்கிய நான்மறை ஓதையும்
வேலை ஓசையின் மிக்கு விரவுமால்.
12.000   12 st/nd Thirumurai   Song # 163   சேக்கிழார்   திருமலைச் சருக்கம்  
ஆலுமறை சூழ்கயிலை யின்கணருள் செய்த
சாலுமொழி யால்வழி தடுத்தடிமை கொள்வான்
மேலுற வெழுந்துமிகு கீழுற அகழ்ந்து
மாலும்அய னுக்குமரி யாரொருவர் வந்தார்.
12.240   12 st/nd Thirumurai   Song # 63   சேக்கிழார்   திருநின்ற சருக்கம்  
ஆலங்கா டதனில் அண்ட
முறநிமிர்ந் தாடு கின்ற
கோலங்காண் பொழுது கொங்கை
திரங்கிஎன் றெடுத்துத் தங்கு
மூலங்காண் பரியார் தம்மை
மூத்தநற் பதிகம் பாடி
ஞாலங்கா தலித்துப் போற்றும்
நடம்போற்றி நண்ணு நாளில்.
12.280   12 st/nd Thirumurai   Song # 740   சேக்கிழார்   வம்பறா வரிவண்டுச் சருக்கம்  
ஆலமே அமுத மாக
உண்டுவா னவர்க்க ளித்துக்
காலனை மார்க்கண் டர்க்காக்
காய்ந்தனை அடியேற் கின்று
ஞாலம்நின் புகழே யாக
வேண்டும்நான் மறைக ளேத்துஞ்
சீலமே ஆல வாயில்
சிவபெரு மானே என்றார்.
12.280   12 st/nd Thirumurai   Song # 863   சேக்கிழார்   வம்பறா வரிவண்டுச் சருக்கம்  
ஆலவாய் அண்ணல் கோயில்
அங்கண்முன் தோன்றக் கண்டு
பாலறா வாயர் மிக்க
பண்பினால் தொழுது சென்று
மாலுநான் முகனும் போற்ற
மன்னினார் கோயில் வாயில்
சீலமா தவத்தோர் முன்பு
சிவிகைநின் றிழிந்து புக்கார்.
12.280   12 st/nd Thirumurai   Song # 883   சேக்கிழார்   வம்பறா வரிவண்டுச் சருக்கம்  
ஆலின்கீழ் நால்வர்க்கன்
றறமுரைத்த அங்கணனை
நூலின்கட் பொருள்பாடி
நூலறிவார்க் கீந்தானைக்
காலம்பெற் றினிதிறைஞ்சிக்
கைதொழுது புறம்போந்தார்
சீலங்கொள் தென்னவனும்
தேவியரும் உடன்போத.
12.290   12 st/nd Thirumurai   Song # 159   சேக்கிழார்   வம்பறா வரிவண்டுச் சருக்கம்  
ஆலநிழற் கீழிருந்தார்
அவர்தம்மை எதிர்நோக்கிச்
சாலமிகப் பசித்தீர்இப்
பொதிசோறு தருகின்றேன்
காலமினித் தாழாமே
கைக்கொண்டிங் கினிதருந்தி
ஏலநறுங் குளிர்தண்ணீர்
குடித்திளைப்புத் தீரஎன.
12.350   12 st/nd Thirumurai   Song # 3   சேக்கிழார்   வார்கொண்ட வனமுலையாள் சருக்கம்  
ஆலை சூழ் பூகவேலி
அத்திரு வாக்கூர் தன்னில்
ஞாலமார் புகழின் மிக்கார்
நான்மறைக் குலத்தி னுள்ளார்
நீலமார் கண்டத் தெண்டோள்
நிருத்தர்தந் திருத்தொண்டு ஏற்ற
சீலராய்ச் சாலும் ஈகைத்
திறத்தினிற் சிறந்த நீரார்.
12.690   12 st/nd Thirumurai   Song # 2   சேக்கிழார்   மன்னிய சீர்ச் சருக்கம்  
ஆலவாய் அமர்ந்தார் கோயில்
வாயிலை அடைந்து நின்று
பாலையீ ரேழு கோத்த
பண்ணினிற் கருவி வீக்கிக்
காலம் ஆதரித்த பண்ணில்
கைபல முறையும் ஆராய்ந்
தேலவார் குழலாள் பாகர்
பாணிகள் யாழில் இட்டார்.

This page was last modified on Thu, 09 May 2024 05:33:06 +0000
          send corrections and suggestions to admin-at-sivaya.org

thirumurai all list