சிவய.திருக்கூட்டம்
sivaya.org
Please set your language preference
by clicking below languages link
Search this site with
words in any language e.g. पोऱ्‌ऱि
song/pathigam/paasuram numbers: e.g. 7.039

This page in Tamil   Hindi/Sanskrit   Telugu   Malayalam   Bengali   Kannada   English   ITRANS    Marati  Gujarathi   Oriya   Singala   Tibetian   Thai   Japanese   Urdu   Cyrillic/Russian   Spanish   Hebrew  
Selected thirumurai      thirumurai Thalangal      All thirumurai Songs     

Thirumurai   1   2   3   4   5   6   7   8   9   10   11   12

Pathigam first Letter :                                          
Paadal first letter:     (  .                                                
Search: Filter By: Order By:
திருமுறை 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12 இருந்து பாடல் சொல் ஆவ
ஆவா!     ஆவிக்     ஆவில்     ஆவையும்     ஆவன     ஆவின்     ஆவுடை     ஆவ     ஆவது     ஆவா     ஆவதிது     ஆவணம்     ஆவதென்     ஆவடுதண்     ஆவதொன்     ஆவதும்     ஆவி     ஆவதே     ஆவினிரை     ஆவினில்     ஆவியைப்     ஆவகை,     ஆவியன்     ஆவியின்    
1.089   1 st/nd Thirumurai   Song # 7   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
ஆவா! என அரக்கன் அலற அடர்த்திட்டு,
தேவா! என, அருள் ஆர் செல்வம் கொடுத்திட்ட
கோவே! எருக்கத்தம்புலியூர் மிகு கோயில்-
தேவே! என, அல்லல் தீர்தல் திடம் ஆமே.

1.102   1 st/nd Thirumurai   Song # 8   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
ஆவிக் கமலத்து அன்னம் இயங்கும் கழி சூழ,
காவிக் கண்ணார் மங்கலம் ஓவாக் கலிக் காழி,
வில்-தோன்றும் புத்தேளொடு மாலவன் தானும்
மேவிப் பரவும் அரசே! என்ன, வினை போமே.

1.112   1 st/nd Thirumurai   Song # 7   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
ஆவில் ஐந்து அமர்ந்தவன் அரிவையொடு
மேவி நன்கு இருந்தது ஒர் வியல் நகர்தான்-
வில் வண்டு அமர்தரு பொய்கை அன்னச்-
சேவல் தன் பெடை புல்கு சிவபுரமே.

4.032   4 st/nd Thirumurai   Song # 7   திருநாவுக்கரசர்   தேவாரம்  
ஆவி ஆய், அவியும் ஆகி, அருக்கம் ஆய், பெருக்கம் ஆகி,
பாவியார் பாவம் தீர்க்கும் பரமனாய், பிரமன் ஆகி,
காவி அம் கண்ணள் ஆகிக் கடல்வண்ணம் ஆகி நின்ற
தேவியைப் பாகம் வைத்தார்- திருப் பயற்றூரனாரே.

4.109   4 st/nd Thirumurai   Song # 2   திருநாவுக்கரசர்   தேவாரம்  
ஆவா! சிறுதொண்டன் என் நினைந்தான்! என்று அரும் பிணிநோய்
காவாது ஒழியின் கலக்கும், உன்மேல் பழி; காதல் செய்வார்
தேவா! திருவடி நீறு என்னைப் பூசு-செந்தாமரையின்
பூ ஆர் கடந்தையுள்-தூங்கானை மாடத்து எம் புண்ணியனே!

5.056   5 st/nd Thirumurai   Song # 6   திருநாவுக்கரசர்   தேவாரம்  
ஆவின் பால் கண்டு அளவு இல் அருந்தவப்
பாலன் வேண்டலும், செல்! என்று பாற்கடல்
கூவினான், குளிரும் பொழில் கோளிலி
மேவினானை, தொழ வினை வீடுமே.

5.065   5 st/nd Thirumurai   Song # 4   திருநாவுக்கரசர்   தேவாரம்  
ஆவில் மேவிய ஐந்து அமர்ந்து ஆடுவான்,
தூ வெண்நீறு துதைந்த செம்மேனியான்,
மேவ நூல்விரி-வெண்ணியின் தென்கரை-
பூவனூர் புகுவார் வினை போகுமே.

6.038   6 st/nd Thirumurai   Song # 8   திருநாவுக்கரசர்   தேவாரம்  
ஆவினில் ஐந்தும் அமர்ந்தாய், நீயே; அளவு இல் பெருமை உடையாய், நீயே;
பூவினில் நாற்றம் ஆய் நின்றாய், நீயே; போர்க் கோலம் கொண்டு எயில் எய்தாய், நீயே;
நாவில் நடு உரை ஆய் நின்றாய், நீயே; நண்ணி அடி என்மேல் வைத்தாய், நீயே;
தேவர் அறியாத தேவன், நீயே திரு ஐயாறு அகலாத செம்பொன்சோதீ!.

7.029   7 st/nd Thirumurai   Song # 2   சுந்தரமூர்த்தி சுவாமிகள்   திருப்பாட்டு  
ஆவியைப் போகாமே தவிர்த்து, என்னை ஆட்கொண்டாய்;
வாவியில் கயல் பாய, குளத்து இடை மடைதோறும்
காவியும் குவளையும் கமலம் செங்கழு நீரும்
மேவிய குருகாவூர் வெள்ளடை நீ அன்றே! .

8.109   8 st/nd Thirumurai   Song # 16   மாணிக்க வாசகர்    திருவாசகம்  
ஆவகை, நாமும் வந்து, அன்பர் தம்மோடு ஆட்செயும் வண்ணங்கள் பாடி, விண்மேல்
தேவர் கனாவிலும் கண்டு அறியாச் செம் மலர்ப் பாதங்கள் காட்டும் செல்வச்
சே வலன் ஏந்திய வெல் கொடியான், சிவபெருமான், புரம் செற்ற கொற்றச்
சேவகன், நாமங்கள் பாடிப் பாடி, செம் பொன் செய் சுண்ணம் இடித்தும், நாமே!

8.114   8 st/nd Thirumurai   Song # 6   மாணிக்க வாசகர்    திருவாசகம்  
ஆவா திருமால் அவிப்பாகங் கொண்டன்று
சாவா திருந்தானென்றுந்தீபற
சதுர்முகன் தாதையென் றுந்தீபற.

8.202   8 st/nd Thirumurai   Song # 19   மாணிக்க வாசகர்    திருச்சிற்றம்பலக் கோவையார்  
ஆவியன் னாய்கவ லேல்அக
   லேமென் றளித்தொளித்த
ஆவியன் னார்மிக்க வாவின
   ராய்க்கெழு மற்கழிவுற்
றாவியன் னார்மன்னி யாடிடஞ்
   சேர்வர்கொ லம்பலத்தெம்
ஆவியன் னான்பயி லுங்கயி
   லாயத் தருவரையே.

8.209   8 st/nd Thirumurai   Song # 1   மாணிக்க வாசகர்    திருச்சிற்றம்பலக் கோவையார்  
ஆவா விருவ ரறியா
   அடிதில்லை யம்பலத்து
மூவா யிரவர் வணங்கநின்
   றோனையுன் னாரின்முன்னித்
தீவா யுழுவை கிழித்ததந்
   தோசிறி தேபிழைப்பித்
தாவா மணிவேல் பணிகொண்ட
   வாறின்றொ ராண்டகையே.

9.026   9 st/nd Thirumurai   Song # 2   புருடோத்தம நம்பி   திருவிசைப்பா  
ஆவியின் பரம்என்றன் ஆதரவும்
   அருவினை யேனைவிட் டம்ம அம்ம
பாவிவன் மனம்இது பைய வேபோய்ப்
   பனிமதிச் சடையரன் பால தாலோ
நீவியும் நெகிழ்ச்சியும் நிறையழிவும்
   நெஞ்சமும் தஞ்சமி லாமை யாலே
ஆவியின் வருத்தமி தார்அறிவார்
   அம்பலத் தருநடம்ஆடு வானே.

9.027   9 st/nd Thirumurai   Song # 7   புருடோத்தம நம்பி   திருவிசைப்பா  
ஆவா இவர்தம் திருவடி
   கொண் டந்தகன்றன்
மூவா உடல்அவியக்
   கொன்றுகந்த முக்கண்ணர்
தேவாம் மறைபயிலும்
   தில்லைச்சிற் றம்பலவர்
கோவாய் இனவளைகள்
   கொள்வாரோ என்னையே. 

10.116   10 st/nd Thirumurai   Song # 6   திருமூலர்   திருமந்திரம்  
ஆவையும் பாவையும் மற்றற வோரையுந்
தேவர்கள் போற்றுந் திருவேடத் தாரையும்
காவலன் காப்பவன் காவா தொழிவனேல்
மேவும் மறுமைக்கு மீளா நரகமே. 

10.216   10 st/nd Thirumurai   Song # 4   திருமூலர்   திருமந்திரம்  
ஆவன ஆவ அழிவ அழிவன
போவன போவ புகுவ புகுவன
காவலன் பேர்நந்தி காட்டித்துக் கண்டவன்
ஏவின செய்யும் இலங்கிழை யோனே.17,

10.406   10 st/nd Thirumurai   Song # 48   திருமூலர்   திருமந்திரம்  
ஆவின் கிழத்தி நல் ஆவடு தண்டுறை
நாவின் கிழத்தி நலம்புகழ்ந் தேத்திடும்
தேவின் கிழத்தி திருவாம் சிவமங்கை
மேவுங் கிழத்தி வினைகடிந் தாளே.

10.711   10 st/nd Thirumurai   Song # 20   திருமூலர்   திருமந்திரம்  
ஆவிக் கமலத்தின் அப்புறத் தின்புறம்
மேவித் திரியும் விரிசடை நந்தியைக்
கூவிக் கருதிக் கொடுபோய்ச் சிவத்திடைத்
தாவிக்கும் மந்திரம் தாம்அறி யாரே.

10.815   10 st/nd Thirumurai   Song # 15   திருமூலர்   திருமந்திரம்  
ஆவுடை யானை அரன்வந்து கொண்டபின்
தேவுடை யான்எங்கள் சீர்நந்தி தாள்தந்து
வீவற வேதாந்த சித்தாந்த மேன்மையைக்
கூவி அருளிய கோனைக் கருதுமே.

10.823   10 st/nd Thirumurai   Song # 2   திருமூலர்   திருமந்திரம்  
ஆவ தறியா உயிர்பிறப்பால் உறும்
ஆவ தறியும் உயிர்அருட் பால்உறும்
ஆவதொன் றில்லை அகப்புறத் தென்றகன்(று)
ஓவு சிவனுடன் ஒன்றுதல் முத்தியே.

10.834   10 st/nd Thirumurai   Song # 6   திருமூலர்   திருமந்திரம்  
ஆவது தெற்கும் வடக்கும் அமரர்கள்
போவர் குடக்கும் குணக்கும் குறிவ
நாவினில் மந்திரம் என்று நடுஅங்கி
வேவது செய்து விளங்கிடு வீரே.

11.006   11 st/nd Thirumurai   Song # 84   சேரமான் பெருமாள் நாயனார்   பொன்வண்ணத்தந்தாதி  
ஆவன யாரே அழிக்கவல்
லாரமை யாவுலகில்
போவன யாரே பொதியகிற்
புராபுரம் மூன்றெரித்த
தேவனைத் தில்லைச் சிவனைத்
திருந்தடி கைதொழுது
தீவினை யேனிழந் தேன்கலை
யோடு செறிவளையே.

11.022   11 st/nd Thirumurai   Song # 91   கபிலதேவ நாயனார்    சிவபெருமான் திருவந்தாதி  
ஆவா மனிதர் அறிவிலரே யாதொன்றும்
ஆவார்போற் காட்டி அழிகின்றார் ஆவா
பகல்நாடிப் பாடிப் படர்சடைக்குப் பல்பூப்
பகல்நாடி ஏத்தார் பகர்ந்து.

12.000   12 st/nd Thirumurai   Song # 172   சேக்கிழார்   திருமலைச் சருக்கம்  
ஆவதிது கேண்மின்மறை யோர்என்அடி யான்இந்
நாவல்நக ரூரனிது நான்மொழிவ தென்றான்
தேவரையும் மாலயன் முதற்றிருவின் மிக்கோர்
யாவரையும் வேறடிமை யாவுடைய எம்மான்.
12.000   12 st/nd Thirumurai   Song # 179   சேக்கிழார்   திருமலைச் சருக்கம்  
ஆவணம் பறிக்கச் சென்ற
அளவினில் அந்த ணாளன்
காவணத் திடையே யோடக்
கடிதுபின் தொடர்ந்து நம்பி
பூவணத் தவரை உற்றார்
அவரலால் புரங்கள் செற்ற
ஏவணச் சிலையி னாரை
யார்தொடர்ந் தெட்ட வல்லார்.
12.020   12 st/nd Thirumurai   Song # 26   சேக்கிழார்   தில்லை வாழ் அந்தணர் சருக்கம்  
ஆவதென் நின்பால் வைத்த
அடைக்கலப் பொருளை வௌவிப்
பாவகம் பலவும் செய்து
பழிக்குநீ யொன்றும் நாணாய்
யாவருங் காண உன்னை
வளைத்துநான் கொண்டே யன்றிப்
போவதுஞ் செய்யே னென்றான்
புண்ணியப் பொருளாய் நின்றான்.

12.100   12 st/nd Thirumurai   Song # 97   சேக்கிழார்   இலை மலிந்த சருக்கம்  
ஆவதென் இதனைக் கண்டிங்  
கணைதொறும் என்மேல் பாரம்
போவதொன் றுளது போலும்  
ஆசையும் பொங்கி மேன்மேல்
மேவிய நெஞ்சும் வேறோர்
விருப்புற விரையா நிற்கும்
தேவரங் கிருப்ப தெங்கே
போகென்றார் திண்ண னார்தாம்.
12.140   12 st/nd Thirumurai   Song # 12   சேக்கிழார்   இலை மலிந்த சருக்கம்  
ஆவின் நிரைக்குலம் அப்படி பல்க அளித்தென்றும்
கோவலர் ஏவல் புரிந்திட ஆயர் குலம்பேணும்
காவலர் தம்பெரு மானடி அன்புறு கானத்தின்
மேவு துளைக்கரு விக்குழல் வாசனை மேற்கொண்டார்.
12.210   12 st/nd Thirumurai   Song # 191   சேக்கிழார்   திருநின்ற சருக்கம்  
ஆவடுதண் டுறையாரை அடைந்துய்ந் தேன்என்
றளவில் திருத் தாண்டகமுன் அருளிச் செய்து
மேவுதிருக் குறுந்தொகைநே ரிசையும் சந்த
விருத்தங்க ளானவையும் வேறு வேறு
பாவலர்செந் தமிழ்த்தொடையால் பள்ளித் தாமம்
பலசாத்தி மிக்கெழுந்த பரிவி னோடும்
பூவலயத் தவர்பரவப் பலநாள் தங்கிப்
புரிவுறுகைத் திருத்தொண்டு போற்றிச் செய்வார்.
12.280   12 st/nd Thirumurai   Song # 641   சேக்கிழார்   வம்பறா வரிவண்டுச் சருக்கம்  
ஆவதென் பாவி காள்இக்
கனாத்திறம் அடிகள் மார்க்கு
மேவிய தீங்கு தன்னை
விளைப்பது திடமே என்று
நோவுறு மனத்த ராகி
நுகர்பெரும் பதமும் கொள்ளார்
யாவது செயலென் றெண்ணி
இடர்உழன் றழுங்கி னார்கள்.
12.280   12 st/nd Thirumurai   Song # 683   சேக்கிழார்   வம்பறா வரிவண்டுச் சருக்கம்  
ஆவ தேல்நுமக் கடுத்தது
கூறுவீர் என்று
காவ லன்பரிந் துரைத்தலும்
கார்அமண் கையர்
மாவ லாய்உன்றன் மதுரையிற்
சைவவே தியர்தாம்
மேவ லால்இன்று கண்டுமுட்
டியாமென்று விளம்ப.
12.280   12 st/nd Thirumurai   Song # 689   சேக்கிழார்   வம்பறா வரிவண்டுச் சருக்கம்  
ஆவதொன் றிதுவே யாகில்
அதனையே விரைந்து செய்யப்
போவதென் றவரைப் போக்கிப்
பொய்ப்பொரு ளாகக்கொண்டான்
யாவது உரையா டாதே
எண்ணத்திற் கவலை யோடும்
பூவணை அமளி புக்கான்
பொங்கெழில் தேவி சேர்ந்தாள்.
12.280   12 st/nd Thirumurai   Song # 736   சேக்கிழார்   வம்பறா வரிவண்டுச் சருக்கம்  
ஆவதும் அழிவும் எல்லாம்
அவர்செயல் அமண ராகும்
பாவகா ரிகளை நோக்கும்
பழுதுடன் நீங்க வெல்லச்
சேவுயர் கொடியி னார்தந்
திருவுள்ளம் அறிவே னென்று
பூவலர் பொழில்சூழ் சண்பைப்
புரவலர் போது கின்றார்.
12.280   12 st/nd Thirumurai   Song # 1062   சேக்கிழார்   வம்பறா வரிவண்டுச் சருக்கம்  
ஆவி தங்குபல் குறிகளும்
அடைவில வாக
மேவு காருட விஞ்சைவித்
தகர்இது விதியென்
றோவும் வேளையில் உறுபெரும்
சுற்றமும் அலறிப்
பாவை மேல்விழுந் தழுதனர்
படரொலிக் கடல்போல்.
12.290   12 st/nd Thirumurai   Song # 355   சேக்கிழார்   வம்பறா வரிவண்டுச் சருக்கம்  
ஆவதே செய்தீர் இன்றென்
அடிமைநீர் வேண்டா விட்டால்
பாவியேன் தன்னை அன்று
வலியஆட் கொண்ட பற்றென்
நோவும்என் னழிவுங் கண்டீர்
நுடங்கிடை யவள்பால் இன்று
மேவுதல் செய்யீ ராகில்
விடுமுயிர் என்று வீழ்ந்தார்.
12.300   12 st/nd Thirumurai   Song # 15   சேக்கிழார்   வம்பறா வரிவண்டுச் சருக்கம்  
ஆவினிரை மகிழ்வுறக்கண்
டளிகூர்ந்த அருளினராய்
மேவியவை மேய்விடத்துப்
பின்சென்று மேய்ந்தவைதாம்
காவிரிமுன் துறைத்தண்ணீர்
கலந்துண்டு கரையேறப்
பூவிரிதண் புறவின்நிழல்
இனிதாகப் புறங்காத்தார்.
12.300   12 st/nd Thirumurai   Song # 25   சேக்கிழார்   வம்பறா வரிவண்டுச் சருக்கம்  
ஆவடுதண் டுறையணைந்தங்
கரும்பொருளை யுறவணங்கி
மேவுவார் புறக்குடபால்
மிக்குயர்ந்த அரசின்கீழ்த்
தேவிருக்கை அமர்ந்தருளிச்
சிவயோகந் தலைநின்று
பூவலரும் இதயத்துப்
பொருளோடும் புணர்ந்திருந்தார்.

This page was last modified on Thu, 09 May 2024 05:33:06 +0000
          send corrections and suggestions to admin-at-sivaya.org

thirumurai all list