1.031
1 st/nd Thirumurai
Song # 5
திருஞானசம்பந்த சுவாமிகள்
திருக்கடைக்காப்பு
இறை ஆர் வளையாளை ஒரு பாகத்து அடக்கி, கறை ஆர் மிடற்றான்; கரி கீறிய கையான்; குறை ஆர் மதி சூடி குரங்கணில் முட்டத்து உறைவான்; எமை ஆள் உடை ஒண் சுடரானே.
|
1.059
1 st/nd Thirumurai
Song # 7
திருஞானசம்பந்த சுவாமிகள்
திருக்கடைக்காப்பு
இறை ஊண் துகளோடு இடுக்கண் எய்தி இழிப்பு ஆய வாழ்க்கை ஒழியத் தவம் நிறை ஊண் நெறி கருதி நின்றீர் எல்லாம், நீள் கழலே நாளும் நினைமின்!சென்னிப் பிறை, சூழ் அலங்கல் இலங்கு கொன்றை, பிணையும் பெருமான் பிரியாத நீர்த் துறை சூழ் கடந்தைத் தடங்கோயில் சேர் தூங்கானை மாடம் தொழுமின்களே!
|
1.092
1 st/nd Thirumurai
Song # 2
திருஞானசம்பந்த சுவாமிகள்
திருக்கடைக்காப்பு
இறைவர் ஆயினீர்! மறை கொள் மிழலையீர்! கறை கொள் காசினை முறைமை நல்குமே!
|
2.074
2 st/nd Thirumurai
Song # 11
திருஞானசம்பந்த சுவாமிகள்
திருக்கடைக்காப்பு
இறைவன் அமர் சண்பை, எழில் புறவம், அயன் ஊர்,
இமையோர்க்கு அதிபன் சேர் ஊர்,
குறைவு இல் புகழ்ப் புகலி, வெங்குரு, தோணிபுரம், குணம்
ஆர் பூந்தராய், நீர்ச்
சிறை மலி நல் சிரபுரம், சீர்க் காழி, வளர் கொச்சை,
கழுமலம் தேசு இன்றிப்
பறி தலையொடு அமண்கையர், சாக்கியர்கள், பரிசு அறியா
அம்மான் ஊரே.
|
2.080
2 st/nd Thirumurai
Song # 4
திருஞானசம்பந்த சுவாமிகள்
திருக்கடைக்காப்பு
இறை நின்று இலங்கு வளையாள் இளையாள் ஒருபால்
உடையார்,
மறை நின்று இலங்கு மொழியார், மலையார், மனத்தின்
மிசையார்
கறை நின்று இலங்கு பொழில் சூழ் கடவூர் மயானம்
அமர்ந்தார்;
பிறை நின்று இலங்கு சடையார் அவர் எம்பெருமான்
அடிகளே
|
2.083
2 st/nd Thirumurai
Song # 11
திருஞானசம்பந்த சுவாமிகள்
திருக்கடைக்காப்பு
இறைவனை, ஒப்பு இலாத ஒளி மேனியானை, உலகங்கள் ஏழும் உடனே
மறைதரு வெள்ளம் ஏறி வளர் கோயில் மன்னி இனிதா இருந்த மணியை,
குறைவு இல ஞானம் மேவு குளிர் பந்தன் வைத்த தமிழ்மாலை பாடுமவர், போய்,
அறை கழல் ஈசன் ஆளும் நகர் மேவி, என்றும் அழகா இருப்பது அறிவே.
|
3.016
3 st/nd Thirumurai
Song # 7
திருஞானசம்பந்த சுவாமிகள்
திருக்கடைக்காப்பு
இறை உறு வரி வளை இசைகள் பாடிட,
அறை உறு கழல் அடி ஆர்க்க, ஆடுவர்;
சிறை உறு விரிபுனல் சென்னியின் மிசைக்
குறை உறு மதியினர் கொள்ளிக்காடரே.
|
3.056
3 st/nd Thirumurai
Song # 1
திருஞானசம்பந்த சுவாமிகள்
திருக்கடைக்காப்பு
இறையவன், ஈசன், எந்தை, இமையோர் தொழுது ஏத்த நின்ற
கறை அணி கண்டன், வெண்தோடு அணி காதினன், காலத்து அன்று
மறை மொழி வாய்மையினான், மலையாளொடு மன்னு சென்னிப்
பிறை அணி செஞ்சடையான், பிரமாபுரம் பேணுமினே!
|
3.064
3 st/nd Thirumurai
Song # 4
திருஞானசம்பந்த சுவாமிகள்
திருக்கடைக்காப்பு
இறைக் கண்ட வளையாளோடு இரு கூறு ஆய் ஒருகூறு
மறைக் கண்டத்து இறை நாவர், மதில் எய்த சிலை வலவர்,
கறைக் கொண்ட மிடறு உடையர், கனல் கிளரும் சடைமுடிமேல்
பிறைக் கொண்ட பெருமானார் பெருவேளூர் பிரியாரே.
|
5.038
5 st/nd Thirumurai
Song # 4
திருநாவுக்கரசர்
தேவாரம்
இறைவனார், இமையோர் தொழு பைங்கழல் மறவனார்-கடவூரின் மயானத்தார்; அறவனார், அடியார் அடியார் தங்கள் பிறவி தீர்ப்பர், பெருமான் அடிகளே.
|
5.092
5 st/nd Thirumurai
Song # 5
திருநாவுக்கரசர்
தேவாரம்
இறை என் சொல் மறவேல், நமன்தூதுவீர்! பிறையும் பாம்பும் உடைப் பெருமான் தமர், நறவம் நாறிய நன்நறுஞ் சாந்திலும் நிறைய நீறு அணிவார், எதிர் செல்லலே!
|
6.008
6 st/nd Thirumurai
Song # 10
திருநாவுக்கரசர்
தேவாரம்
இறையவன் காண்;ஏழ் உலகும் ஆயினான்காண்; ஏழ்கடலும் சூழ் மலையும் ஆயினான் காண்; குறை உடையார் குற்றேவல் கொள்வான் தான் காண்; குடமூக்கில் கீழ்க்கோட்டம் மேவினான் காண்; மறை உடைய வானோர் பெருமான் தான் காண்; மறைக்காட்டு உறையும் மணிகண்டன் காண்; கறை உடைய கண்டத்து எம் காபாலீ காண் - காளத்தியான் அவன், என் கண் உளானே.
|
7.008
7 st/nd Thirumurai
Song # 1
சுந்தரமூர்த்தி சுவாமிகள்
திருப்பாட்டு
இறைகளோடு இசைந்த இன்பம், இன்பத்தோடு இசைந்த வாழ்வு, பறை கிழித்தனைய போர்வை பற்றி யான் நோக்கினேற்கு, திறை கொணர்ந்து ஈண்டி, தேவர், செம்பொனும் மணியும் தூவி, அறை கழல் இறைஞ்சும் ஆரூர் அப்பனே! அஞ்சினேனே.
|
7.044
7 st/nd Thirumurai
Song # 6
சுந்தரமூர்த்தி சுவாமிகள்
திருப்பாட்டு
இறைவன்! என்று எம்பெருமானை வானவர் ஏத்தப் போய், துறை ஒன்றி, தூ மலர் இட்டு, அடி இணை போற்றுவார்; மறை அன்றிப் பாடுவது இல்லையோ? மல்கு வான் இளம்- பிறை அன்றிச் சூடுவது இல்லையோ, எம்பிரானுக்கே?
|
9.025
9 st/nd Thirumurai
Song # 5
திருவாலியமுதனார்
திருவிசைப்பா
இறைவனை என்கதியை என்னுள்ளே உயிர்ப்பாகி நின்ற மறைவனை மண்ணும் விண்ணும் மலிவான் சுடராய் மலிந்த சிறையணி வண்டறையும் தில்லை மாநகர்ச் சிற்றம்பலம் நிறையணி யாம் இறையை நினைத்தேன் இனிப் போக்குவனே.
|
9.025
9 st/nd Thirumurai
Song # 10
திருவாலியமுதனார்
திருவிசைப்பா
இறைவனை ஏத்துகின்ற இளையாள்மொழி இன்றமிழால் மறைவல நாவலர்கள் மகிழ்ந்தேத்து சிற்றம்பலத்தை அறைசெந்நெல் வான்கரும்பின் அணியாலைகள் சூழ்மயிலை மறைவல ஆலிசொல்லை மகிழ்ந்தேத்துக வானெளிதே.
|
10.212
10 st/nd Thirumurai
Song # 3
திருமூலர்
திருமந்திரம்
இறையவன் மாதவன் இன்பம் படைத்த மறையவன் மூவரும் வந்துடன் கூடி இறையவன் செய்த இரும்பொறி யாக்கை மறையவன் வைத்த பரிசறி யாரே.
|
10.614
10 st/nd Thirumurai
Song # 12
திருமூலர்
திருமந்திரம்
இறையடி தாழ்ந்ததை வணக்கமும் எய்திக் குறையது கூறிக் குணங்கொண்டு போற்றச் சிறையுடல் நீயறக் காட்டிச் சிவத்தோ டறிவுக் கறிவிப்போன் சன்மார்க்கி யாமே.
|
11.004
11 st/nd Thirumurai
Song # 5
காரைக்கால் அம்மையார்
அற்புதத் திருவந்தாதி
இறைவனே எவ்வுயிருந் தோற்றுவிப்பான் தோற்றி இறைவனே ஈண்டிறக்கஞ் செய்வான் - இறைவனே எந்தாய் என இரங்கும் எங்கள்மேல் வெந்துயரம் வந்தால் அதுமாற்று வான்.
|
11.021
11 st/nd Thirumurai
Song # 4
கபிலதேவ நாயனார்
சிவபெருமான் திருஇரட்டைமணிமாலை
இறைக்கோ குறைவில்லை உண்டிறை யேஎழி லார்எருக்கு நறைக்கோ மளக்கொன்றை துன்றும் சடைமுடி நக்கர்சென்றிப் பிறைக்கோர் பிளவும் பெறுவிளிக் கொண்டெம் பிரான்உடுக்கும் குறைக்கோ வணமொழிந் தாற்பின்னை ஏதுங் குறைவில்லையே.
|
11.022
11 st/nd Thirumurai
Song # 40
கபிலதேவ நாயனார்
சிவபெருமான் திருவந்தாதி
இறையாய வெண்சங் கிவைதருவேன் என்னும் இறைஆகம் இன்றருளாய் என்னும் இறையாய் மறைக்காட்டாய் மாதவனே நின்னுருவம் இங்கே மறைக்காட்டாய் என்னும்இம் மாது.
|
11.029
11 st/nd Thirumurai
Song # 59
பட்டினத்துப் பிள்ளையார்
திருஏகம்பமுடையார் திருவந்தாதி
இறைத்தார் புரமெய்த வில்லிமை நல்லிம வான்மகட்கு மறைத்தார் கருங்குன்றம் வெண்குன்றம் செங்குன்ற மன்னற்குன்றம் நிறைத்தார் நெடுங்குன்றம் நீள்கழுக் குன்றமென் தீவினைகள் குறைத்தார் முதுகுன்றம் ஏகம்பர் குன்றென்று கூறுமினே.
|
11.032
11 st/nd Thirumurai
Song # 31
நம்பியாண்டார் நம்பி
கோயில் திருப்பண்ணியர் விருத்தம்
இறையும் தெளிகிலர் கண்டும் எழில்தில்லை யம்பலத்துள் அறையும் புனல்சென்னி யோனரு ளாலன் றடுகரிமேல் நிறையும் புகழ்த்திரு வாரூ ரனும்நிறை தார்ப்பரிமேல் நறையும் கமழ்தொங்கல் வில்லவ னும்புக்க நல்வழியே.
|
12.200
12 st/nd Thirumurai
Song # 38
சேக்கிழார்
மும்மையால் உலகாண்ட சருக்கம்
இறையோன் அடிக்கீழ் மறையவனார்
எடுத்துத் திருமஞ் சனமாட்டும்
நிறைபூ சனைக்குக் குடங்கள்பால்
நிரம்பச் சொரிந்து நிரைக்குலங்கள்
குறைபா டின்றி மடிபெருகக்
குவிந்த முலைப்பால் குறைவின்றி
மறையோர் மனையின் முன்புதரும்
வளங்கள் பொலிய வைகுமால்.
|
12.280
12 st/nd Thirumurai
Song # 356
சேக்கிழார்
வம்பறா வரிவண்டுச் சருக்கம்
இறைஞ்சி ஏத்தி எழுந்துநின் றின்னிசை
நிறைந்த செந்தமிழ் பாடி நிலாவிஅங்
குறைந்து வந்தடி யாருட னெய்தினார்
சிறந்த சீர்த்திரு வேதி குடியினில்.
|
12.280
12 st/nd Thirumurai
Song # 1015
சேக்கிழார்
வம்பறா வரிவண்டுச் சருக்கம்
இறைவர்திருக் காரிகரை யிறைஞ்சி அப்பால்
எண்ணில்பெரு வரைகளிரு மருங்கு மெங்கும்
நிறையருவி நிரைபலவாய் மணியும் பொன்னும்
நிறைதுவலை புடைசிதறி நிகழ்ப வாகி
அறைகழல்வா னவர்க்கிறைவன் குலிச வேற்றால்
அற்றசிறை பெற்றவன்மே லெழுவ தற்குச்
சிறகடித்துப் பறக்கமுயன் றுயர்ந்த போலும்
சிலைநிலத்தி லெழுந்தருளிச் செல்லா நின்றார்.
|
12.290
12 st/nd Thirumurai
Song # 45
சேக்கிழார்
வம்பறா வரிவண்டுச் சருக்கம்
இறைஞ்சிப் போந்து பரவையார்
திருமா ளிகையில் எழுந்தருளி
நிறைந்த விருப்பின் மேவுநாள்
நீடு செல்வத் திருவாரூர்ப்
புறம்பு நணிய கோயில்களும்
பணிந்து போற்றிப் புற்றிடமாய்
உறைந்த பெருமான் கழல்பிரியா
தோவா இன்பம் உற்றிருந்தார்.
|
12.290
12 st/nd Thirumurai
Song # 335
சேக்கிழார்
வம்பறா வரிவண்டுச் சருக்கம்
இறைவர் விரைவில் எழுந்தருள
எய்து மவர்கள் பின்தொடர
அறைகொள் திரைநீர் தொடர்சடையில்
அரவு தொடர அரியஇளம்
பிறைகொள் அருகு நறைஇதழிப்
பிணையல் சுரும்பு தொடரவுடன்
மறைகள் தொடர வன்தொண்டர்
மனமுந் தொடர வரும்பொழுது.
|
12.360
12 st/nd Thirumurai
Song # 9
சேக்கிழார்
வார்கொண்ட வனமுலையாள் சருக்கம்
இறைஞ்சுதலும் முன்னிறைஞ்சி
என்னுரிமைத் தொழிற்கடுத்த
திறம்புரிவேன் அதற்கென்னோ
தீங்கென்ன ஆங்கவர்க்கு
நிறைந்தநிதிக் குவைகளுடன்
நீடுவிருத் திகளளித்தே
அறம்புரிசெங் கோலரசன்
அஞ்சலிசெய் துரைக்கின்றான்.
|
12.360
12 st/nd Thirumurai
Song # 69
சேக்கிழார்
வார்கொண்ட வனமுலையாள் சருக்கம்
இறையுந் தாழா தெழுந்தருளி
அமுது செய்யும் என்றிறைஞ்சக்
கறையுங் கண்டத் தினின்மறைத்துக்
கண்ணும் நுதலிற் காட்டாதார்
நிறையும் பெருமைச் சிறுத்தொண்டீர்
போதும் என்ன நிதியிரண்டும்
குறைவ னொருவன் பெற்றுவந்தாற்
போலக் கொண்டு மனைபுகுந்தார்.
|
12.370
12 st/nd Thirumurai
Song # 37
சேக்கிழார்
வார்கொண்ட வனமுலையாள் சருக்கம்
இறைவ ராணை மறுப்பதனுக்கு
அஞ்சி யிசைந்தார் இகல்வேந்தர்
நிறையு நிதியின் பரப்பையெல்லாம்
நிலத்தை நெளிய வுடன்கொண்டே
உறைமும் மதத்துக் களிறுபரி
யுள்ளிட் டனவேண் டுவகொண்டோர்
பிறைவெண் கோட்டு களிற்றுமேல்
கொண்டு போந்தார் பெரும்பாணர்.
|
12.370
12 st/nd Thirumurai
Song # 104
சேக்கிழார்
வார்கொண்ட வனமுலையாள் சருக்கம்
இறைவர்திருத் தொண்டுபுரி
யருமையினை இருநிலத்து
முறைபுரியும் முதல்வேந்தர்
மூவர்களும் கேட்டஞ்சி
மறைமுந்நூல் மணிமார்பின்
வன்றொண்டர் தமைப்பணிந்தார்
நிறைதவத்தோர் அப்பாலும்
நிருத்தர்பதி தொழநினைந்தார்.
|
12.370
12 st/nd Thirumurai
Song # 146
சேக்கிழார்
வார்கொண்ட வனமுலையாள் சருக்கம்
இறைவர் கோயில் மணிமுன்றில்
வலங்கொண் டிறைஞ்சி எதிர்புக்கு
நிறையுங் காத லுடன்வீழ்ந்து
பணிந்து நேர்நின் றாரூரர்
முறையில் விளம்புந் திருப்பதிகம்
முடிப்பது கங்கை யென்றெடுத்தப்
பிறைகொள் முடியார் தமைப்பாடிப்
பரவிப் பெருமா ளுடன்தொழுதார்.
|