சிவய.திருக்கூட்டம்
sivaya.org
Please set your language preference
by clicking below languages link
Search this site with
words in any language e.g. पोऱ्‌ऱि
song/pathigam/paasuram numbers: e.g. 7.039

This page in Tamil   Hindi/Sanskrit   Telugu   Malayalam   Bengali   Kannada   English   ITRANS    Marati  Gujarathi   Oriya   Singala   Tibetian   Thai   Japanese   Urdu   Cyrillic/Russian   Spanish   Hebrew  
Selected thirumurai      thirumurai Thalangal      All thirumurai Songs     

Thirumurai   1   2   3   4   5   6   7   8   9   10   11   12

Pathigam first Letter :                                          
Paadal first letter:     (  .                                                
Search: Filter By: Order By:
திருமுறை 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12 இருந்து பாடல் சொல் உய்ய
உய்யல்     உய்யும்     உய்யவல்     உய்யாதென்     உய்ய    
1.091   1 st/nd Thirumurai   Song # 4   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
உய்யல் உறுவீர்காள்! ஐயன் ஆரூரைக்
கையினால்-தொழ, நையும், வினைதானே.

2.103   2 st/nd Thirumurai   Song # 9   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
உய்யும் காரணம் உண்டு என்று கருதுமின்! ஒளி கிளர்
மலரோனும்,
பை கொள் பாம்பு அணைப்பள்ளி கொள் அண்ணலும்,
பரவ நின்றவர் மேய
மை உலாம் பொழில், அரிசிலின் வடகரை, வருபுனல்
மாகாளம்
கையினால் தொழுது, அவலமும் பிணியும் தம் கவலையும்
களைவாரே.

2.115   2 st/nd Thirumurai   Song # 8   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
உய்ய வேண்டில்(ல்) எழு, போத! நெஞ்சே! உயர்
இலங்கைக் கோன்
கைகள் ஒல்கக் கருவரை எடுத்தானை ஒர்விரலினால்
செய்கை தோன்றச் சிதைத்து அருள வல்ல சிவன் மேய,
பூம்
பொய்கை சூழ்ந்த, புகலூர் புகழ, பொருள் ஆகுமே.

5.069   5 st/nd Thirumurai   Song # 5   திருநாவுக்கரசர்   தேவாரம்  
உய்யும் ஆறு இது கேண்மின்: உலகத்தீர்!
பை கொள் பாம்பு அரையான், படை ஆர் மழுக்
கையினான், உறைகின்ற கருவிலி,
கொய்கொள் பூம்பொழில், கொட்டிட்டை சேர்மினே!

8.114   8 st/nd Thirumurai   Song # 4   மாணிக்க வாசகர்    திருவாசகம்  
உய்யவல் லார்ஒரு மூவரைக் காவல்கொண்டு
எய்யவல் லானுக்கே உந்தீபற
இளமுலை பங்கன் என்று உந்தீபற.

10.838   10 st/nd Thirumurai   Song # 11   திருமூலர்   திருமந்திரம்  
உய்யும் வகையால் உணர்வினால் ஏத்துமின்
மெய்யன் அரன்நெறி மேல்உண்டு திண்ணெனப்
பொய்யொன்று மின்றிப் புறம்பொலி வார்நடு
ஐயனும் அங்கே அம்ர்ந்துநின் றானே.

10.917   10 st/nd Thirumurai   Song # 9   திருமூலர்   திருமந்திரம்  
உய்யவல் லார்கட் குயிர்சிவ ஞானமே
உய்யவல் லார்கட் குயிர்சிவ தெய்வமே
உய்யவல் லார்கட் கொடுக்கும் பிரணவம்
உய்யவல் லார்உள் ளறிவறி வாரே.

11.005   11 st/nd Thirumurai   Song # 24   ஐயடிகள் காடவர்கோன் நாயனார்   திருக்கோயில் திருவெண்பா சேத்திரத்  
உய்யும் மருந்திதனை உண்மின் எனவுற்றார்
கையைப் பிடித்தெதிரே காட்டியக்காற் பைய
எழுந்திருமி யான்வேண்டேன் என்னாமுன் நெஞ்சே
செழுந்திரும யானமே சேர்.

11.022   11 st/nd Thirumurai   Song # 35   கபிலதேவ நாயனார்    சிவபெருமான் திருவந்தாதி  
உய்யாதென் ஆவி ஒளிவளையும் மேகலையும்
உய்யா உடம்பழிக்கும் ஒண்திதலை உய்யாம்
இறையானே ஈசனே எம்மானே நின்னை
இறையானும் காண்கிடாய் இன்று.

12.280   12 st/nd Thirumurai   Song # 192   சேக்கிழார்   வம்பறா வரிவண்டுச் சருக்கம்  
உய்ய வந்தசம் பந்த ருடன்வந்தார்க்
கெய்து வெம்மை இளைப்பஞ்சி னான்போலக்
கைக ளாயிரம் வாங்கிக் கரந்துபோய்
வெய்ய வன்சென்று மேல்கடல் வீழ்ந்தனன்.

This page was last modified on Thu, 09 May 2024 05:33:06 +0000
          send corrections and suggestions to admin-at-sivaya.org

thirumurai all list