சிவய.திருக்கூட்டம்
sivaya.org



This page in Tamil   Hindi/Sanskrit   Telugu   Malayalam   Bengali   Kannada   English   ITRANS    Marati  Gujarathi   Oriya   Singala   Tibetian   Thai   Japanese   Urdu   Cyrillic/Russian   Spanish   Hebrew   Korean  
Selected thirumurai      thirumurai Thalangal      All thirumurai Songs     

Thirumurai   1   2   3   4   5   6   7   8   9   10   11   12

Pathigam first Letter :                                          
Paadal first letter:       (  .  <                                                
Search: Filter By: Order By:
திருமுறை 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12 இருந்து பாடல் சொல் உருகி
உருகியஅன்     உருகிட     உருகி     உருகிப்    
3.003   3 st/nd Thirumurai   Song # 9   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
உருகிட உவகை தந்து உடலினுள்ளால்,
பருகிடும் அமுது அன பண்பினனே!
பொரு கடல் வண்ணனனும் பூ உளானும்
பெருகிடும் மருள் எனப் பிறங்கு எரி ஆய்
உயர்ந்தாய்! இனி, நீ எனை ஒண்மலர் அடி இணைக்கீழ்
வயந்து ஆங்கு உற நல்கிடு, வளர்மதில் புகலி மனே!

5.075   5 st/nd Thirumurai   Song # 9   திருநாவுக்கரசர்   தேவாரம்  
உருகி ஊன் குழைந்து ஏத்தி எழுமின், நீர்,
கரிய கண்டன் கழல் அடி தன்னையே!
குரவனம் செழுங் கோயில் குரக்குக்கா
இரவும் எல்லியும் ஏத்தித் தொழுமினே!

8.111   8 st/nd Thirumurai   Song # 15   மாணிக்க வாசகர்    திருவாசகம்  
உருகிப் | பெருகி, | உளம் குளிர | முகந்துகொண்டு,
பருகற்கு | இனிய | பரம் கருணைத் | தடம் கடலை
மருவி, | திகழ் தென்னன் | வார் கழலே | நினைந்து, அடியோம்
திருவைப் | பரவி, நாம் | தெள்ளேணம் | கொட்டாமோ!

12.280   12 st/nd Thirumurai   Song # 456   சேக்கிழார்   வம்பறா வரிவண்டுச் சருக்கம்  
உருகியஅன் புறுகாதல் உள்ளுருகி
நனைஈரம் பெற்றாற் போல
மருவுதிரு மேனியெலாம் முகிழ்த்தெழுந்த
மயிர்ப்புளகம் வளர்க்கு நீராய்
அருவிசொரி திருநயனத் தானந்த
வெள்ளம்இழிந் தலைய நின்று
பொருவில்பதி கம்போக மார்த்தபூண்
முலையாள்என் றெடுத்துப் போற்றி.
12.370   12 st/nd Thirumurai   Song # 170   சேக்கிழார்   வார்கொண்ட வனமுலையாள் சருக்கம்  
உருகியஅன் பொடுகைகள்
குவித்துவிழுந் துமைபாகம்
மருவியதம் பெருமான்முன்
வன்றொண்டர் பாடினார்
வெருவுறவே டுவர்பறிக்கும்
வெஞ்சுரத்தில் எத்துக்கிங்
கருகிருந்தீர் எனக்கொடுகு
வெஞ்சிலையஞ் சொற்பதிகம்.

This page was last modified on Fri, 10 Jul 2026 00:17:47 +0000      
send corrections and suggestions to admin-at-sivaya.org