சிவய.திருக்கூட்டம்
sivaya.org
Please set your language preference
by clicking below languages link
Search this site with
words in any language e.g. पोऱ्‌ऱि
song/pathigam/paasuram numbers: e.g. 7.039

This page in Tamil   Hindi/Sanskrit   Telugu   Malayalam   Bengali   Kannada   English   ITRANS    Marati  Gujarathi   Oriya   Singala   Tibetian   Thai   Japanese   Urdu   Cyrillic/Russian   Spanish   Hebrew  
Selected thirumurai      thirumurai Thalangal      All thirumurai Songs     

Thirumurai   1   2   3   4   5   6   7   8   9   10   11   12

Pathigam first Letter :                                          
Paadal first letter:     (  .                                                
Search: Filter By: Order By:
திருமுறை 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12 இருந்து பாடல் சொல் உரை
உரையாதார்     உரை     உரைத்தன     உரைத்திடுங்     உரைத்த     உரையற்     உரையற்ற     உரைக்கப்     உரையினால்     உரைவளர்     உரையும்     உரைவந்     உரையா     உரையின்     உரைப்பமரும்     உரைகெழுவு     உரைசெய்து     உரைகுழறி     உரைப்பார்     உரைசெய்     உரையினில்     உரைக்கும்     உரைப்பக்     உரைமாலைஎல்லாம்    
1.055   1 st/nd Thirumurai   Song # 6   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
உரையாதார் இல்லை, ஒன்றும் நின் தன்மையை;
பரவாதார் இல்லை, நாள்களும்;
திரை ஆர் பாலியின் தென் கரை மாற்பேற்று
அரையானே! அருள் நல்கிடே!

1.122   1 st/nd Thirumurai   Song # 5   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
உரை அரும் உருவினர், உணர்வு அரு வகையினர்,
அரை பொரு புலி அதள் உடையினர், அதன்மிசை
இரை மரும் அரவினர், இடைமருது என உளம்
உரைகள் அது உடையவர் புகழ் மிக உளதே.

1.132   1 st/nd Thirumurai   Song # 4   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
உரை சேரும் எண்பத்து நான்கு
நூறு ஆயிரம் ஆம் யோனி பேதம்
நிரை சேரப் படைத்து, அவற்றின் உயிர்க்கு உயிர் ஆய்,
அங்கு அங்கே நின்றான்கோயில்
வரை சேரும் முகில் முழவ, மயில்கள் பல
நடம் ஆட, வண்டு பாட,
விரை சேர் பொன் இதழி தர, மென்காந்தள்
கை ஏற்கும் மிழலை ஆமே.

2.006   2 st/nd Thirumurai   Song # 9   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
உரைசெய் தொல் வழி செய்து அறியா இலங்கைக்கு மன்
வரை செய் தோள் அடர்த்து மதி சூடிய மைந்தனார்;
கரை செய் காவிரியின் வடபாலது காதலான்;
அரை செய் மேகலையானும் ஐயாறு உடை ஐயனே.

2.086   2 st/nd Thirumurai   Song # 1   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
உரையினில் வந்த பாவம், உணர் நோய்கள், உ(ம்)ம செயல்
தீங்கு குற்றம், உலகில்
வரையின் நிலாமை செய்த அவை தீரும் வண்ணம் மிக
ஏத்தி, நித்தம் நினைமின்
வரை சிலை ஆக, அன்று, மதில் மூன்று எரித்து, வளர்
கங்குல், நங்கை வெருவ,
திரை ஒலி நஞ்சம் உண்ட சிவன் மேய செல்வத் திரு
நாரையூர் கைதொழவே!

2.100   2 st/nd Thirumurai   Song # 7   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
உரையும் பாட்டும் தளர்வு எய்தி உடம்பு மூத்தபோதின்
கண்,
நரையும் திரையும் கண்டு எள்கி நகுவர் நமர்கள் ஆதலால்,
வரை கொள் பெண்ணை வந்து உலா வயல்கள் சூழ்ந்த
கோவலூர்,
விரை கொள் சீர் வெண் நீற்றினான், வீரட்டானம் சேர்துமே.

3.010   3 st/nd Thirumurai   Song # 4   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
உரை உணராதவன், காமம் என்னும்(ம்) உறு வேட்கையான்,
வரை பொரு தோள் இறச் செற்ற வில்லி மகிழ்ந்து ஏத்திய
விரை மருவும் கடல் ஓதம் மல்கும் இராமேச்சுரத்து
அரை அரவு ஆட நின்று, ஆடல் பேணும் அம்மான் அல்லனே!

3.034   3 st/nd Thirumurai   Song # 4   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
உரையின் ஆர் உறு பொருள் ஆயினான், உமையொடும்;
விரையின் ஆர் கொன்றை சேர் சடையினார்; மேவு இடம்
உரையின் ஆர் ஒலி என ஓங்கு முத்தாறு மெய்த்
திரையின் ஆர் எறி புனல்-திரு முதுகுன்றமே.

3.056   3 st/nd Thirumurai   Song # 11   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
உரை தரு நால்மறையோர் புகழ்ந்து ஏத்த, ஒண் மாதினொடும்
வரை என வீற்றிருந்தான், மலிகின்ற பிரமபுரத்து
அரசினை ஏத்த வல்ல அணி சம்பந்தன் பத்தும் வல்லார்
விரைதரு விண்ணுலகம் எதிர் கொள்ள விரும்புவரே.

4.099   4 st/nd Thirumurai   Song # 5   திருநாவுக்கரசர்   தேவாரம்  
உரைக்கும் கழிந்து இங்கு உணர்வு அரியான்; உள்குவார் வினையைக்
கரைக்கும் எனக் கைதொழுவது அல்லால், கதிரோர்கள் எல்லாம்,
விரைக்கொள் மலரவன், மால், எண்வசுக்கள், ஏகாதசர்கள்,
இரைக்கும் அமிர்தர்க்கு, அறிய ஒண்ணான் எங்கள் ஏகம்பனே.

5.023   5 st/nd Thirumurai   Song # 6   திருநாவுக்கரசர்   தேவாரம்  
உரைப்பக் கேண்மின், நும் உச்சி உளான்தனை!
நிரைப் பொன் மா மதில் சூழ் திரு நின்றியூர்
உரைப் பொன்கற்றையர் ஆர் இவரோ? எனில்,
திரைத்துப் பாடித் திரிதரும் செல்வரே.

5.043   5 st/nd Thirumurai   Song # 5   திருநாவுக்கரசர்   தேவாரம்  
உரை தளர்ந்து உடலார் நடுங்காமுனம்,
நரைவிடை உடையான் இடம் நல்லமே
பரவுமின்! பணிமின்! பணிவாரொடே
விரவுமின்! விரவாரை விடுமினே!

5.054   5 st/nd Thirumurai   Song # 7   திருநாவுக்கரசர்   தேவாரம்  
உரைசெய் நூல்வழி ஒண்மலர் எட்டு இட,
திரைகள் போல் வரு வல்வினை தீர்ப்பரால்-
வரைகள் வந்து இழியும் கெடிலக் கரை,
விரைகள் சூழ்ந்து அழகுஆய, வீரட்டரே.

6.006   6 st/nd Thirumurai   Song # 7   திருநாவுக்கரசர்   தேவாரம்  
உரைமாலைஎல்லாம் உடைய(வ்) அடி;
உரையால் உணரப்படாத(வ்) அடி;
வரைமாதை வாடாமை வைக்கும்(ம்) அடி;
வானவர்கள்   தாம் வணங்கி வாழ்த்தும்(ம்) அடி;
அரைமாத்திரையில் அடங்கும்(ம்) அடி;
அகலம் அளக்கிற்பார் இல்லா அடி;
கரை மாங் கலிக் கெடில நாடன்(ன்) அடி
கமழ் வீரட்டானக் காபாலி(ய்) அடி;

6.011   6 st/nd Thirumurai   Song # 7   திருநாவுக்கரசர்   தேவாரம்  
உரை ஆர் பொருளுக்கு உலப்பு இலானை, ஒழியாமே எவ் உருவும் ஆனான் தன்னை,
புரை ஆய்க் கனம் ஆய் ஆழ்ந்து ஆழாதானை, புதியனவும் ஆய் மிகவும் பழையான் தன்னை
திரை ஆர் புனல் சேர் மகுடத்தானை, திருப் புன்கூர் மேவிய சிவலோக(ன்)னை,
நிரை ஆர் மணி மாட நீடூரானை,-நீதனேன் என்னே நான் நினையா ஆறே!.

6.062   6 st/nd Thirumurai   Song # 6   திருநாவுக்கரசர்   தேவாரம்  
உரை ஆரும் புகழானே! ஒற்றியூராய்! கச்சி ஏகம்பனே! காரோணத்தாய்!
விரை ஆரும் மலர் தூவி வணங்குவார் பால் மிக்கானே! அக்கு, அரவம், ஆரம், பூண்டாய்!
திரை ஆரும் புனல் பொன்னித் தீர்த்தம் மல்கு திரு ஆனைக்காவில் உறை தேனே! வானோர்-
அரையா! உன் பொன்பாதம் அடையப் பெற்றால்,
அல்ல கண்டம் கொண்டு அடியேன் என் செய்கேனே?.

7.092   7 st/nd Thirumurai   Song # 4   சுந்தரமூர்த்தி சுவாமிகள்   திருப்பாட்டு  
உரைப்பார் உரை உகந்து, உள்க வல்லார் தங்கள் உச்சியாய்!
அரைக்கு ஆடு அரவா! ஆதியும் அந்தமும் ஆயினாய்!
புரைக் காடு சோலைப் புக்கொளியூர் அவிநாசியே!-
கரைக்கால் முதலையைப் பிள்ளை தரச் சொல்லு, காலனையே!

8.115   8 st/nd Thirumurai   Song # 14   மாணிக்க வாசகர்    திருவாசகம்  
உரை மாண்ட உள் ஒளி உத்தமன் வந்து, உளம் புகலும்,
கரை மாண்ட காமப் பெரும் கடலைக் கடத்தலுமே,
இரை மாண்ட இந்திரியப் பறவை இரிந்து ஓட,
துரை மாண்டவா பாடி தோள் நோக்கம் ஆடாமோ!
. திருப்பொன் ஊசல்

10.301   10 st/nd Thirumurai   Song # 1   திருமூலர்   திருமந்திரம்  
உரைத்தன வற்கரி ஒன்று முடிய
நிரைத்த இராசி நிரைமுறை எண்ணிப்
பிரச்சதம் எட்டும் முன்பேசிய நந்தி
நிரைத்த இயமம் நியமஞ்செய் தானே.

10.404   10 st/nd Thirumurai   Song # 2   திருமூலர்   திருமந்திரம்  
உரைத்திடுங் குண்டத்தி னுள்ளேமுக் காலும்
வகைத்தெழு நாற்கோண நன்மைகள் ஐந்தும்
பகைத்திடு முப்புரம் பார் அங்கி யோடே
மிகைத்தெழு கண்டங்கள் மேலறி யோமே.

10.406   10 st/nd Thirumurai   Song # 16   திருமூலர்   திருமந்திரம்  
உரைத்த நவசக்தி ஒன்று முடிய
நிரைத்த இராசி நெடுமுறை எண்ணிப்
பிரச்சதம் எட்டும்முன் பேசிய நந்தி
நிரைத்து நியதி நியமம்செய் தானே.

10.602   10 st/nd Thirumurai   Song # 4   திருமூலர்   திருமந்திரம்  
உரையற் றுணர்வற் றுயிர்பர மற்றுத்
திரையற்ற நீர்போல் சிவமாதல் தீர்த்துக்
கரையற்ற சத்தாதி நான்குங் கடந்த
சொரூபத் திருத்தினன் சொல்லிறந் தோமே.

10.843   10 st/nd Thirumurai   Song # 13   திருமூலர்   திருமந்திரம்  
உரையற்ற தொன்றை உரைத்தான் எனக்குக்
கரையற் றெழுந்த கலைவேட் பறுத்துத்
திரையற்ற என்னுடல் நீங்கா திருத்திப்
புரையற்ற என்னுட் புகும்தற் பரனே. 1,

10.919   10 st/nd Thirumurai   Song # 10   திருமூலர்   திருமந்திரம்  
உரையற்ற ஆனந்த மோனசொரூ பத்தன்
கரையற்ற சத்திஆதி காணில் அகாரம்
மருவுற் றுகாரம் மகாரம தாகி
உரையற்ற தாரத்தில் உள்ளொளி யாமே.

10.926   10 st/nd Thirumurai   Song # 2   திருமூலர்   திருமந்திரம்  
உரையற்ற தொன்றை உரைசெயும் ஊமர்காள்
கரையற்ற தொன்றைக் கரைகாண லாகுமோ
திரையற்ற நீர்போலச் சிந்தைதெளி வார்க்குப்
புரையற் றிருந்தான் புரிசடை யோனே.

11.003   11 st/nd Thirumurai   Song # 7   காரைக்கால் அம்மையார்    திரு இரட்டை மணிமாலை  
உரைக்கப் படுவதும் ஒன்றுண்டு
கேட்கின்செவ் வான்தொடைமேல்
இரைக்கின்ற பாம்பினை என்றுந்
தொடேல்இழிந் தோட்டத்தெங்கும்
திரைக்கின்ற கங்கையுந் தேன்நின்ற
கொன்றையுஞ் செஞ்சடைமேல்
விரைக்கின்ற வன்னியுஞ் சென்னித்
தலைவைத்த வேதியனே.

11.004   11 st/nd Thirumurai   Song # 101   காரைக்கால் அம்மையார்    அற்புதத் திருவந்தாதி  
உரையினால் இம்மாலை அந்தாதி வெண்பாக்
கரைவினாற் காரைக்காற் பேய்சொல் - பரவுவார்
ஆராத அன்பினோ டண்ணலைச்சென் றேத்துவார்
பேராத காதல் பிறந்து.

11.006   11 st/nd Thirumurai   Song # 28   சேரமான் பெருமாள் நாயனார்   பொன்வண்ணத்தந்தாதி  
உரைவளர் நான்மறை ஓதி
உலகம் எலாந் திரியும்
விரைவளர் கொன்றை மருவிய
மார்பன் விரிசடைமேல்
திரைவளர் கங்கை நுரைவளர்
தீர்த்தம் செறியச்செய்த
கரைவளர் வொத்துள தால்சிர
மாலையெம் கண்டனுக்கே.

11.009   11 st/nd Thirumurai   Song # 47   நக்கீரதேவ நாயனார்   கயிலைபாதி காளத்திபாதி அந்தாதி  
உரையும் பொருளும் உடலும் உயிரும்
விரையும் மலரும்போல் விம்மிப் - புரையின்றிச்
சென்றவா றோங்கும் திருக்கயிலை எம்பெருமான்
நின்றவா றெங்கும் நிறைந்து.

11.021   11 st/nd Thirumurai   Song # 16   கபிலதேவ நாயனார்    சிவபெருமான் திருஇரட்டைமணிமாலை  
உரைவந் துறும்பதத் தேயுரை மின்கள்அன் றாயினிப்பால்
நரைவந் துறும்பின்னை வந்துறுங் காலன்நன் முத்திடறித்
திரைவந் துறுங்கரைக் கேகலம் வந்துறத் திண்கைவன்றாள்
வரைந் துறுங்கடல் மாமறைக் காட்டெம் மணியினையே.

11.023   11 st/nd Thirumurai   Song # 59   பரணதேவ நாயனார்   சிவபெருமான் திருவந்தாதி  
உரையா இருப்பதுவும் உன்னையே ஊனில்
உரையாய் உயிராய்ப் பொலிந்தாய் உரையாய
அம்பொனே சோதி அணியாரூர் சேர்கின்ற
அம்பொனே சோதியே ஆய்ந்து.

11.026   11 st/nd Thirumurai   Song # 4   பட்டினத்துப் பிள்ளையார்   கோயில் நான்மணிமாலை  
உரையின் வரையும் பொருளின் அளவும்
இருவகைப் பட்ட எல்லையும் கடந்து
தம்மை மறந்து நின்னை நினைப்பவர்
செம்மை மனத்தினும் தில்லைமன் றினும்நடம்
ஆடும் அம்பல வாணா நீடு

குன்றக் கோமான் தன்திருப் பாவையை
நீல மேனி மால்திருத் தங்கையைத்
திருமணம் புணர்ந்த ஞான்று பெருமநின்
தாதவிழ் கொன்றைத் தாரும் ஏதமில்
வீர வெள்விடைக் கொடியும் போரில்

தழங்கும் தமருகப் பறையும் முழங்கொலித்
தெய்வக் கங்கை ஆறும்பொய்நீர்
விரையாக் கலியெனும் ஆணையும் நிரைநிரை
ஆயிரம் வகுத்த மாயிரு மருப்பின்
வெண்ணிறச் செங்கண் வேழமும் பண்ணியல்
வைதிகப் புரவியும் வான நாடும்
மையறு கனக மேருமால் வரையும்
செய்வயல் தில்லை யாகிய தொல்பெரும் பதியுமென்று
ஒருபதி னாயிரந் திருநெடு நாமமும்
உரிமையிற் பாடித் திருமணப் பந்தருள்

அமரர் முன்புகுந் தறுகு சாத்திநின்
தமர்பெயர் எழுதிய வரிநெடும் புத்தகத்து
என்னையும் எழுத வேண்டுவன் நின்னருள்
ஆணை வைப்பிற் காணொணா அணுவும்
வானுற நிமிர்ந்து காட்டும்
கானில்வால் நுளம்பும் கருடனா தலினே.

11.037   11 st/nd Thirumurai   Song # 85   நம்பியாண்டார் நம்பி   ஆளுடையபிள்ளையார் திருவுலாமாலை  
உரைப்பமரும் பல்புகழால் ஓங்கஉமை கோனைத்
திருப்பதிகம் பாடவல்ல சேயை விருப்போடு

11.037   11 st/nd Thirumurai   Song # 135   நம்பியாண்டார் நம்பி   ஆளுடையபிள்ளையார் திருவுலாமாலை  
உரைகெழுவு செந்தமிழ்ப்பா ஒன்றினால் வென்றி
நிரை கழுமேல் உய்த்தானை நேர்ந்து விரைமலர்த்தார்

12.100   12 st/nd Thirumurai   Song # 98   சேக்கிழார்   இலை மலிந்த சருக்கம்  
உரைசெய்து விரைந்து செல்ல  
அவர்களும் உடனே போந்து
கரைவளர் கழையின் முத்தும்
காரகில் குறடுஞ் சந்தும்
வரைதரு மணியும் பொன்னும்  
வயிரமும் புளினம் தோறும்
திரைகள்முன் திரட்டி வைத்த  
திருமுக லியினைச் சார்ந்தார்.
12.280   12 st/nd Thirumurai   Song # 730   சேக்கிழார்   வம்பறா வரிவண்டுச் சருக்கம்  
உரைகுழறி மெய்ந்நடுங்கி
ஒன்றும்அறிந் திலராகித்
தரையின்மிசைப் புரண்டயர்ந்து
சரணகம லம்பற்றிக்
கரையில்கவ லைக்கடற்கோர்
கரைபற்றி னார்போன்று
விரைவுறுமெய் அன்பினால்
விடாதொழிவார் தமைக்கண்டு.
12.720   12 st/nd Thirumurai   Song # 11   சேக்கிழார்   வெள்ளானைச் சருக்கம்  
உரைப்பார் உரையென் றெடுத்ததிருப்
பாட்டு முடியா முன்உயர்ந்த
வரைப்பான் மையின்நீள் தடம்புயத்து
மறலி மைந்தன் உயிர்கொணர்ந்து
திரைப்பாய் புனலின் முதலைவயிற்
றுடலிற் சென்ற ஆண்டுகளும்
தரைப்பால் வளர்ந்த தெனநிரம்ப
முதலை வாயில் தருவித்தான்.

This page was last modified on Thu, 09 May 2024 05:33:06 +0000
          send corrections and suggestions to admin-at-sivaya.org

thirumurai all list