சிவய.திருக்கூட்டம்
sivaya.org
Please set your language preference
by clicking below languages link
Search this site with
words in any language e.g. पोऱ्‌ऱि
song/pathigam/paasuram numbers: e.g. 7.039

This page in Tamil   Hindi/Sanskrit   Telugu   Malayalam   Bengali   Kannada   English   ITRANS    Marati  Gujarathi   Oriya   Singala   Tibetian   Thai   Japanese   Urdu   Cyrillic/Russian   Spanish   Hebrew  
Selected thirumurai      thirumurai Thalangal      All thirumurai Songs     

Thirumurai   1   2   3   4   5   6   7   8   9   10   11   12

Pathigam first Letter :                                          
Paadal first letter:     (  .                                                
Search: Filter By: Order By:
திருமுறை 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12 இருந்து பாடல் சொல் உறு
உறுதுணை     உறுவ     உறுமா     உறுதியி     உறுமுந்த     உறுகின்ற     உறுதி     உறுகவின்மெய்ப்     உறு     உறுங்கண்ணி    
4.026   4 st/nd Thirumurai   Song # 6   திருநாவுக்கரசர்   தேவாரம்  
உறு கயிறு ஊசல் போல ஒன்று விட்டு ஒன்று பற்றி,
மறு கயிறு ஊசல் போல வந்துவந்து உலவும், நெஞ்சம்;
பெறு கயிறு ஊசல் போலப் பிறை புல்கு சடையாய்! பாதத்து
அறு கயிறு ஊசல் ஆனேன் அதிகைவீரட்டனீரே!

8.212   8 st/nd Thirumurai   Song # 6   மாணிக்க வாசகர்    திருச்சிற்றம்பலக் கோவையார்  
உறுங்கண்ணி வந்த கணையுர
   வோன்பொடி யாயொடுங்கத்
தெறுங்கண்ணி வந்தசிற் றம்பல
   வன்மலைச் சிற்றிலின்வாய்
நறுங்கண்ணி சூட்டினும் நாணுமென்
   வாணுதல் நாகத்தொண்பூங்
குறுங்கண்ணி வேய்ந்திள மந்திகள்
   நாணுமிக் குன்றிடத்தே.

10.124   10 st/nd Thirumurai   Song # 8   திருமூலர்   திருமந்திரம்  
உறுதுணை யாவ துயிரும் உடம்பும்
உறுதுணை யாவ துலகுறு கேள்வி
செறிதுணை யாவ சிவனடிச் சிந்தை
பெறுதுணை கேட்கிற் பிறப்பில்லை தானே. 

10.203   10 st/nd Thirumurai   Song # 5   திருமூலர்   திருமந்திரம்  
உறுவ தறிதண்டி ஒண்மணல் கூட்டி
அறுவகை ஆன்ஐந்தும் ஆட்டத்தன் தாதை
செறுவகை செய்து சிதைப்ப முனிந்து
மறுமழு வால்வெட்டி மாலைபெற் றானே. 

10.517   10 st/nd Thirumurai   Song # 18   திருமூலர்   திருமந்திரம்  
உறுமா றறிவதும் உள்நின்ற சோதி
பெறுமா றறியிற் பிணக்கொன்றும் இல்லை
அறுமா றதுவான அங்கியுள் ஆங்கே
இறுமா றறிகிலர் ஏழைகள் தாமே.

10.841   10 st/nd Thirumurai   Song # 8   திருமூலர்   திருமந்திரம்  
உறுதுணை நந்தியை உம்பர் பிரானைப்
பெறுதுணை செய்து பிறப்பறுத் துய்மின்
செறுதுணை செய்து சிவனடி சிந்தித்(து)
உறுதுணை யாய் அங்கி யாகிநின் றானே.

10.929   10 st/nd Thirumurai   Song # 5   திருமூலர்   திருமந்திரம்  
உறுதியி னுள்வந்த உன்வினைப் பட்டும்
இறுதியின் வீழ்ந்தார் இரணம தாகும்
சிறுதியின் உள்ளொளி திப்பிய மூர்த்தி
பெறுதியின் மேலோர் பெருஞ்சுடர் ராமே.

11.023   11 st/nd Thirumurai   Song # 100   பரணதேவ நாயனார்   சிவபெருமான் திருவந்தாதி  
உறுமுந்த முன்னே உடையாமல் இன்னம்
உறுமுந்த முன்னே யுடையா உறுமும்தம்
ஒரைந் துரைத்துஉற்று உணர்வோ டிருந்தொன்றை
ஒரைந் துரக்கவல்லார்க் கொன்று.

தனி வெண்பா
ஒன்றைப் பரணர் உரைத்தஅந் தாதிபல
ஒன்றைப் பகரில் ஒருகோடி ஒன்றைத்
தவிராது உரைப்பார் தளரா உலகில்
தவிரார் சிவலோகந் தான்.

11.029   11 st/nd Thirumurai   Song # 67   பட்டினத்துப் பிள்ளையார்   திருஏகம்பமுடையார் திருவந்தாதி  
உறுகின்ற வெவ்வழல் அக்கடம்
இக்கொடிக் குன்பின்வரப்
பெறுகின்ற வண்மையி னாலைய
பேரருள் ஏகம்பனார்
துறுகின்ற மென்மலர்த் தண்பொழிற்
கச்சியைச் சூழ்ந்திளையோர்
குறுகின்ற பூங்குவ ளைக்குறுந்
தண்பணை என்றுகொளே.

11.034   11 st/nd Thirumurai   Song # 34   நம்பியாண்டார் நம்பி   ஆளுடையபிள்ளையார் திருவந்தாதி  
உறுகின்ற வன்பினோ(டு) ஒத்திய
தாளமு முள்ளுருகிப்
பெறுகின்ற வின்பும், பிறைநுதல்
முண்டமுங் கண்டவரைத்
தெறுகின்ற வாறென்ன செய்தவ
மோ!வந்தென் சிந்தையுள்ளே
துறுகின்ற பாதன் கழுமலம்
போலுந் துடியிடைக்கே.

11.038   11 st/nd Thirumurai   Song # 65   நம்பியாண்டார் நம்பி   ஆளுடையபிள்ளையார் திருக்கலம்பகம்  
உறுதி முலைதாழ
  எனையி கழுநீதி
உனது மனமார
  முழுவ துமதாக
அறுதி பெறுமாதர்
  பெயல்த ருதறானும்
அழகி தினியானுன்
  அருள்பு னைவதாகப்
பெறுதி இவைநீயென்
  அடிப ணிதல்மேவு
பெருமை கெடநீடு
  படிறொ ழிபொன்மாட
நறைக மழுவாச
  வளர்பொ ழில்சுலாவும்
நனிபு கலிநாத
  தமிழ்வி ரகநீயே. 39
  பதிக வகை: ஆசிரியத் துறை

12.120   12 st/nd Thirumurai   Song # 15   சேக்கிழார்   இலை மலிந்த சருக்கம்  
உறுகவின்மெய்ப் புறம்பொலிய
ஒளிநுசுப்பை முலைவருத்த
முறுவல்புறம் அலராத
முகிண்முத்த நகையென்னும்
நறுமுகைமென் கொடிமருங்குல்
நளிர்ச்சுருள்அம் தளிர்ச்செங்கை
மறுவில்குலக் கொழுந்தினுக்கு
மணப்பருவம் வந்தணைய.

This page was last modified on Thu, 09 May 2024 05:33:06 +0000
          send corrections and suggestions to admin-at-sivaya.org

thirumurai all list