சிவய.திருக்கூட்டம்
sivaya.org
Please set your language preference
by clicking below languages link
Search this site with
words in any language e.g. पोऱ्‌ऱि
song/pathigam/paasuram numbers: e.g. 7.039

This page in Tamil   Hindi/Sanskrit   Telugu   Malayalam   Bengali   Kannada   English   ITRANS    Marati  Gujarathi   Oriya   Singala   Tibetian   Thai   Japanese   Urdu   Cyrillic/Russian   Spanish   Hebrew  
Selected thirumurai      thirumurai Thalangal      All thirumurai Songs     

Thirumurai   1   2   3   4   5   6   7   8   9   10   11   12

Pathigam first Letter :                                          
Paadal first letter:     (  .                                                
Search: Filter By: Order By:
திருமுறை 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12 இருந்து பாடல் சொல் உள்ள
உள்ளம்     உள்ளுண்மை     உள்ளுயிர்ப்     உள்ளத்     உள்ளத்தின்     உள்ளத்தி     உள்ளொளி     உள்ளத்து     உள்ளத்தும்     உள்ள     உள்ளம்உரு     உள்ளத்துள்     உள்ளிடத்தான்     உள்ளுந்     உள்ளத்தில்     உள்ளநிறை     உள்ளும்     உள்ளதன்     உள்ளத்தீரே!     உள்ளமே!     உள்ளனவே     உள்ளப்படாத     உள்ளப்     உள்ளு    
1.105   1 st/nd Thirumurai   Song # 3   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
உள்ளம் ஓர் இச்சையினால் உகந்து ஏத்தித் தொழுமின், தொண்டீர்! மெய்யே
கள்ளம் ஒழிந்திடுமின்! கரவாது இரு பொழுதும்,
வெள்ளம் ஓர் வார் சடை மேல் கரந்திட்ட வெள் ஏற்றான் மேய,
அள்ளல் அகன் கழனி, ஆரூர் அடைவோமே.

2.078   2 st/nd Thirumurai   Song # 10   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
உள்ளதன் தனைக் காண்பன், கீழ் என்ற மா
மணிவண்ணனும்,
உள்ளதன் தனைக் காண்பன், மேல் என்ற மா மலர்
அண்ணலும்,
உள்ளதன் தனைக் கண்டிலார்; ஒளி ஆர்தரும்
சடைமுடியின்மேல்
உள்ளதன் தனைக் கண்டிலா ஒளியார், விளநகர், மேயதே.

2.100   2 st/nd Thirumurai   Song # 3   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
உள்ளத்தீரே! போதுமின்(ன்), உறுதி ஆவது அறிதிரேல்!
அள்ளல் சேற்றில் கால் இட்டு, அங்கு அவலத்துள்
அழுந்தாதே,
கொள்ளப் பாடு கீதத்தான், குழகன், கோவலூர் தனுள்
வெள்ளம் தாங்கு சடையினான் வீரட்டானம் சேர்துமே.

2.114   2 st/nd Thirumurai   Song # 4   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
உள்ளம் மிக்கார், குதிரை(ம்) முகத்தார், ஒரு காலர்கள்
எள்கல் இல்லா இமையோர்கள், சேரும்(ம்) இடம் என்பரால்
பிள்ளை துள்ளிக் கிளை பயில்வ கேட்டு, பிரியாது போய்,
கிள்ளை, ஏனல் கதிர் கொணர்ந்து வாய்ப் பெய்யும்
கேதாரமே.

3.038   3 st/nd Thirumurai   Song # 2   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
உள்ள ஆறு எனக்கு உரை செய்ம்மின்(ன்)! உயர்வு ஆய மா தவம் பேணுவீர்
கள் அவிழ் பொழில் சூழும் கண்டியூர் வீரட்டத்து உறை காதலான்
பிள்ளைவான் பிறை செஞ்சடை(ம்) மிசை வைத்ததும், பெரு நீர் ஒலி-
வெள்ளம் தாங்கியது என்கொலோ, மிகு மங்கையாள் உடன் ஆகவே?

4.048   4 st/nd Thirumurai   Song # 7   திருநாவுக்கரசர்   தேவாரம்  
உள்ளும் ஆய்ப் புறமும் ஆகி, உருவும் ஆய் அருவும் ஆகி,
வெள்ளம் ஆய்க் கரையும் ஆகி, விரி கதிர் ஞாயிறு ஆகி,
கள்ளம் ஆய்க் கள்ளத்து உள்ளார் கருத்தும் ஆய் அருத்தம் ஆகி,
அள்ளுவார்க்கு அள்ளல் செய்திட்டு இருந்த ஆப்பாடியாரே!

5.007   5 st/nd Thirumurai   Song # 10   திருநாவுக்கரசர்   தேவாரம்  
உள்ளமே! ஒன்று உறுதி உரைப்பன், நான்:
வெள்ளம் தாங்கும் விரிசடை வேதியன்,
அள்ளல் நீர் வயல் ஆரூர் அமர்ந்த எம்
வள்ளல், சேவடி வாழ்த்தி வணங்கிடே!

5.079   5 st/nd Thirumurai   Song # 8   திருநாவுக்கரசர்   தேவாரம்  
உள்ளம் உள்கி உகந்து, சிவன் என்று,
மெள்ள உள்க வினை கெடும்; மெய்ம்மையே;
புள்ளினார் பணி புள்ளிருக்குவேளூர்
வள்ளல் பாதம் வணங்கித் தொழுமினே!

5.082   5 st/nd Thirumurai   Song # 4   திருநாவுக்கரசர்   தேவாரம்  
உள்ளம் உள் கலந்து ஏத்த வல்லார்க்கு அலால்
கள்ளம் உள்ளவழிக் கசிவான் அலன்
வெள்ளமும்(ம்) அரவும் விரவும் சடை
வள்ளல் ஆகிய வான்மியூர் ஈசனே.

6.032   6 st/nd Thirumurai   Song # 8   திருநாவுக்கரசர்   தேவாரம்  
உள்ளம் ஆய் உள்ளத்தே நின்றாய், போற்றி!
உகப்பார் மனத்து என்றும் நீங்காய், போற்றி!
வள்ளலே, போற்றி! மணாளா, போற்றி!
வானவர் கோன் தோள் துணித்த மைந்தா, போற்றி!
வெள்ளை ஏறு ஏறும் விகிர்தா, போற்றி!
மேலோர்க்கும் மேலோர்க்கும் மேலாய், போற்றி!
தெள்ளு நீர்க் கங்கைச் சடையாய், போற்றி!
திருமூலட்டானனே, போற்றி போற்றி!.

8.103   8 st/nd Thirumurai   Song # 36   மாணிக்க வாசகர்    திருவாசகம்  
உள்ளம் கொண்டு ஓர் உருச் செய்தாங்கு, எனக்கு
அள்ளூறு ஆக்கை அமைத்தனன்; ஒள்ளிய
கன்னல் கனி தேர் களிறு என, கடைமுறை
என்னையும் இருப்பது ஆக்கினன்; என்னில்
கருணை வான்தேன் கலக்க

8.106   8 st/nd Thirumurai   Song # 24   மாணிக்க வாசகர்    திருவாசகம்  
உள்ளனவே நிற்க, இல்லன செய்யும் மையல் துழனி
வெள்ளனலேனை விடுதி கண்டாய்? வியன் மாத் தடக் கைப்
பொள்ளல் நல் வேழத்து உரியாய், புலன், நின்கண் போதல் ஒட்டா,
மெள்ளெனவே மொய்க்கும் நெய்க் குடம் தன்னை எறும்பு எனவே.

8.110   8 st/nd Thirumurai   Song # 16   மாணிக்க வாசகர்    திருவாசகம்  
உள்ளப்படாத திருஉருவை உள்ளுதலும்,
கள்ளப்படாத களிவந்த வான் கருணை
வெள்ளப் பிரான், எம்பிரான், என்னை வேறே ஆட்
கொள் அப் பிரானுக்கே சென்று ஊதாய்; கோத்தும்பீ!

8.148   8 st/nd Thirumurai   Song # 2   மாணிக்க வாசகர்    திருவாசகம்  
உள்ள மலம் மூன்றும் மாய, உகு பெரும் தேன்
வெள்ளம் தரும், பரியின் மேல் வந்த, வள்ளல்
மருவும் பெருந்துறையை வாழ்த்துமின்கள்; வாழ்த்த,
கருவும் கெடும், பிறவிக் காடு.

8.211   8 st/nd Thirumurai   Song # 6   மாணிக்க வாசகர்    திருச்சிற்றம்பலக் கோவையார்  
உள்ளப் படுவன வுள்ளி
   யுரைத்தக் கவர்க்குரைத்து
மெள்ளப் படிறு துணிதுணி
   யேலிது வேண்டுவல்யான்
கள்ளப் படிறர்க் கருளா
   அரன்தில்லை காணலர்போற்
கொள்ளப் படாது மறப்ப
   தறிவிலென் கூற்றுக்களே.

8.215   8 st/nd Thirumurai   Song # 5   மாணிக்க வாசகர்    திருச்சிற்றம்பலக் கோவையார்  
உள்ளு முருகி யுரோமஞ்
   சிலிர்ப்ப வுடையவனாட்
கொள்ளு மவரிலொர் கூட்டந்தந்
   தான்குனிக் கும்புலியூர்
விள்ளும் பரிசுசென் றார்வியன்
   தேர்வழி தூரற்கண்டாய்
புள்ளுந் திரையும் பொரச்சங்கம்
   ஆர்க்கும் பொருகடலே.

10.127   10 st/nd Thirumurai   Song # 5   திருமூலர்   திருமந்திரம்  
உள்ளுண்மை ஓரார் உணரார் பசுபாசம்
வள்ளன்மை நாதன் அருளினின் வாழ்வுறார்
தெள்ளுண்மை ஞானச் சிவயோகஞ் சேர்வுறார்
கள்ளுண்ணும் மாந்தர் கருத்தறி யாரே. 

10.210   10 st/nd Thirumurai   Song # 7   திருமூலர்   திருமந்திரம்  
உள்ளுயிர்ப் பாயுட லாகிநின் றான்நந்தி
வெள்ளுயி ராகும் வெளியாய் விளங்கொளி
உள்ளுயிர்க் கும்உணர் வேயுட லுட்பரம்
தள்ளுயி ராம்வண்ணந் தாங்கிநின் றானே.

10.212   10 st/nd Thirumurai   Song # 1   திருமூலர்   திருமந்திரம்  
உள்ளத் தொருவனை உள்ளுறு சோதியை
உள்ளம்விட் டோரடி நீங்கா ஒருவனை
உள்ளமுந் தானும் உடனே இருக்கினும்
உள்ளம் அவனை உருவறி யாதே. 

10.218   10 st/nd Thirumurai   Song # 1   திருமூலர்   திருமந்திரம்  
உள்ளத்தின் உள்ளே உளபல தீர்த்தங்கள்
மெள்ளக் குடைந்துநின் றாடார் வினைகெடப்
பள்ளமும் மேடும் பரந்து திரிவரே
கள்ள மனமுடைக் கல்வியி லோரே.

10.218   10 st/nd Thirumurai   Song # 3   திருமூலர்   திருமந்திரம்  
உள்ளத்தின் உள்ளே உணரும் ஒருவனை
கள்ளத்தின் ஆருங் கலந்தறி வாரில்லை
வெள்ளத்தை நாடி விடும்அவர் தீவினைப்
பள்ளத்தில் இட்டதோர் பத்தல்;உள் ளானே. 

10.406   10 st/nd Thirumurai   Song # 43   திருமூலர்   திருமந்திரம்  
உள்ளத் திதயத்து நெஞ்சத் தொருமூன்றுள்
பிள்ளைத் தடம்உள்ளே பேசப் பிறந்தது
வள்ளற் றிருவின் வயிற்றினுள் மாமாயைக்
கள்ள ஒளியின் கருத்தாகுங் கன்னியே.

10.408   10 st/nd Thirumurai   Song # 29   திருமூலர்   திருமந்திரம்  
உள்ளத்தி னுள்ளே உடனிருந் தைவர்தம்
கள்ளத்தை நீக்கிக் கலந்துட னேபுல்கிக்
கொள்ளத் தவநெறி கூடிய இன்பத்து
வள்ளற் றலைவி மருட்டிப் புரிந்ததே.

10.408   10 st/nd Thirumurai   Song # 42   திருமூலர்   திருமந்திரம்  
உள்ளொளி மூவிரண் டோங்கிய அங்கங்கள்
வெள்ளொளி அங்கியின் மேவி அவரொடும்
கள்ளவிழ் கோதைக் கலந்துட னேநிற்கும்
கொள்ளவி சித்திக் கொடியமு தாமே.

10.517   10 st/nd Thirumurai   Song # 2   திருமூலர்   திருமந்திரம்  
உள்ளத்து ளேதான் உகந்தெங்கும் நின்றவன்
வள்ளற் றலைவன் மலருறை மாதவன்
பொள்ளற் குரம்பைப் புகுந்து புறப்படும்
கள்ளத் தலைவன் கருத்தறி யார்களே.

10.517   10 st/nd Thirumurai   Song # 3   திருமூலர்   திருமந்திரம்  
உள்ளத்தும் உள்ளன் புறத்துளன் என்பவர்க்
குள்ளத்தும் உள்ளன் புறத்துளன் எம்மிறை
உள்ளத்தும் இல்லை புறத்தில்லை என்பவர்க்
குள்ளத்தும் இல்லை புறத்தில்லை தானே.

10.711   10 st/nd Thirumurai   Song # 1   திருமூலர்   திருமந்திரம்  
உள்ளம் பெருங்கோயில் ஊனுடம் பாலயம்
வள்ளற் பிரானார்க்கு வாய்கோ புரவாசல்
தெள்ளத் தெளிந்தார்க்குச் சீவன் சிவலிங்கம்
கள்ளப் புலனைந்தும் காளா மணிவிளக்கே.

10.725   10 st/nd Thirumurai   Song # 2   திருமூலர்   திருமந்திரம்  
உள்ள அருணோ தயத்தெழும் ஓசைதான்
தெள்ளும் பரநாதத் தின்செயல் ஆதலால்
வள்ளல் பரவிந்து வைகரி யாதிவாக்(கு)
உள்ளன ஐங்கலைக் கொன்றும் உதயமே.

10.815   10 st/nd Thirumurai   Song # 6   திருமூலர்   திருமந்திரம்  
உள்ள உயிர்ஆறா றாகும் உபாதியைத்
தெள்ளி அகன்றுநா தாந்தத்தைச் செற்றுமேல்
உள்ள இருள்நீங்க ஓர்உணர் வாகுமேல்
எள்ளல்இல் நாதாந்தத்(து) எய்திடும் போதமே.

10.827   10 st/nd Thirumurai   Song # 6   திருமூலர்   திருமந்திரம்  
உள்ளம்உரு என்றும் உருவம் உளம்என்றும்
உள்ளப் பரிசறிந்(து) ஓரு மவர்கட்குப்
பள்ளமும் இல்லை திடர் இல்லை பாழ்இல்லை
உள்ளமும் இல்லை உருவில்லை தானே. 28,

10.916   10 st/nd Thirumurai   Song # 1   திருமூலர்   திருமந்திரம்  
உள்ளத்துள் ஓம்எனும் ஈசன் ஒருவனை
உள்ளத்து ளேஅங்கி யாய ஒருவனை
உள்ளத்து ளேநீதி யாய ஒருவனை
உள்ளத்து ளேஉறல் ஆகாய மாமே.

10.927   10 st/nd Thirumurai   Song # 20   திருமூலர்   திருமந்திரம்  
உள்ளம் சரியாதி ஒட்டியே மீட்டென்பால்
வள்ளல் அருத்தியே வைத்த வளம்பாடிச்
செய்வன எல்லாம் சிவமாகக் காண்டலால்
கைவளமின்றிக் கருக்கடந் தேனே.

11.005   11 st/nd Thirumurai   Song # 19   ஐயடிகள் காடவர்கோன் நாயனார்   திருக்கோயில் திருவெண்பா சேத்திரத்  
உள்ளிடத்தான் வல்லையே நெஞ்சமே ஊழ்வினைகள்
கள்ளிடத்தான் வந்து கலவாமுன் கொள்ளிடத்தின்
தென்திருவாப் பாடியான் தெய்வமறை நான்கினையும்
தன்திருவாய்ப் பாடியான் தாள்.

11.008   11 st/nd Thirumurai   Song # 111   சேரமான் பெருமாள் நாயனார்   திருக்கயிலாய ஞான உலா  
உள்ளம் உருக ஒழியாத வேட்கையாம்
வெள்ளத் திடையழுந்தி வெய்துயிர்த்தாள் ஒள்ளிய

11.029   11 st/nd Thirumurai   Song # 29   பட்டினத்துப் பிள்ளையார்   திருஏகம்பமுடையார் திருவந்தாதி  
உள்ளம் பெரியரல் லாச்சிறு
மானுடர் உற்றசெல்வம்
கள்ளம் பெரிய சிறுமனத்
தார்க்கன்றிக் கங்கையென்னும்
வெள்ளம் பெரிய சடைத்திரு
ஏகம்பர் விண்ணரணம்
தள்ளம் பெரிகொண் டமைத்தார்
அடியவர் சார்வதன்றே.

11.037   11 st/nd Thirumurai   Song # 126   நம்பியாண்டார் நம்பி   ஆளுடையபிள்ளையார் திருவுலாமாலை  
உள்ளம் நிலைதளர்ந்த ஒண்ணுதலார் வெல்களிற்றை
மெள்ள நட என்று வேண்டுவார் கள்ளலங்கல்

12.000   12 st/nd Thirumurai   Song # 22   சேக்கிழார்   திருமலைச் சருக்கம்  
உள்ள வண்ணம் முனிவன் உரைசெய்வான்
வெள்ள நீர்ச்சடை மெய்ப்பொரு ளாகிய
வள்ளல் சாத்தும் மதுமலர் மாலையும்
அள்ளும் நீறும் எடுத்தணை வானுளன்.
12.040   12 st/nd Thirumurai   Song # 17   சேக்கிழார்   தில்லை வாழ் அந்தணர் சருக்கம்  
உள்ள மன்புகொண் டூக்கவோர் பேரிடாக்
கொள்ள முன்கவித் துக்குறி யின்வழிப்
புள்ளு றங்கும் வயல்புகப் போயினார்
வள்ள லார்இளை யான்குடி மாறனார்.
12.200   12 st/nd Thirumurai   Song # 22   சேக்கிழார்   மும்மையால் உலகாண்ட சருக்கம்  
உள்ளுந் தகைமை இனிப்பிறவே
றுளவே உழைமான் மறிக்கன்று
துள்ளுங் கரத்தார் அணிபணியின்
சுடர்சூழ் மணிகள் சுரநதிநீர்
தெள்ளுஞ் சடையார் தேவர்கள்தம்
பிராட்டி யுடனே சேரமிசைக்
கொள்ளுஞ் சினமால் விடைத்தேவர்
குலமன் றோஇச் சுரபிகுலம்.
12.280   12 st/nd Thirumurai   Song # 439   சேக்கிழார்   வம்பறா வரிவண்டுச் சருக்கம்  
உள்ளம் இன்புற உணர்வுறும்
பரிவுகொண் டுருகி
வெள்ளந் தாங்கிய சடையரை
விளங்குசொற் பதிகத்
தெள்ளும் இன்னிசைத் திளைப்பொடும்
புறத்தணைந் தருளி
வள்ள லார்மற்ற வளம்பதி
மருவுதல் மகிழ்ந்தார்.
12.280   12 st/nd Thirumurai   Song # 1023   சேக்கிழார்   வம்பறா வரிவண்டுச் சருக்கம்  
உள்ளத்தில் தெளிகின்ற அன்பின் மெய்ம்மை
யுருவினையும் அவ்வன்பி னுள்ளே மன்னும்
வெள்ளச்செஞ் சடைக்கற்றை நெற்றிச் செங்கண்
விமலரையும் உடன்கண்ட விருப்பும் பொங்கிப்
பள்ளத்தில் இழிபுனல்போல் பரந்து செல்லப்
பைம்பொன்மலை வல்லிபரிந் தளித்த செம்பொன்
வள்ளத்தில் ஞானஆ ரமுத முண்டார்
மகிழ்ந்தெழுந்து பலமுறையும் வணங்கு கின்றார்.
12.360   12 st/nd Thirumurai   Song # 4   சேக்கிழார்   வார்கொண்ட வனமுலையாள் சருக்கம்  
உள்ளநிறை கலைத்துறைகள்
ஒழிவின்றிப் பயின்றவற்றால்
தெள்ளிவடித் தறிந்தபொருள்
சிவன்கழலிற் செறிவென்றே
கொள்ளும்உணர் வினின்முன்னே
கூற்றுதைத்த கழற்கன்பு
பள்ளமடை யாய்என்றும்
பயின்றுவரும் பண்புடையார்.
12.550   12 st/nd Thirumurai   Song # 1   சேக்கிழார்   கடல் சூழ்ந்த சருக்கம்  
உள்ளும் புறம்பும் குலமரபின்
ஒழுக்கம் வழுவா ஒருமைநெறி
கொள்ளும் இயல்பிற் குடிமுதலோர்
மலிந்த செல்வக் குலப்பதியாம்
தெள்ளுந் திரைகள் மதகுதொறும்
சேலும் கயலும் செழுமணியும்
தள்ளும் பொன்னி நீர்நாட்டு
மருகல் நாட்டுத் தஞ்சாவூர்.

This page was last modified on Thu, 09 May 2024 05:33:06 +0000
          send corrections and suggestions to admin-at-sivaya.org

thirumurai all list