சிவய.திருக்கூட்டம்
sivaya.org
Please set your language preference
by clicking below languages link
Search this site with
words in any language e.g. पोऱ्‌ऱि
song/pathigam/paasuram numbers: e.g. 7.039

This page in Tamil   Hindi/Sanskrit   Telugu   Malayalam   Bengali   Kannada   English   ITRANS    Marati  Gujarathi   Oriya   Singala   Tibetian   Thai   Japanese   Urdu   Cyrillic/Russian   Spanish   Hebrew  
Selected thirumurai      thirumurai Thalangal      All thirumurai Songs     

Thirumurai   1   2   3   4   5   6   7   8   9   10   11   12

Pathigam first Letter :                                          
Paadal first letter:     (  .                                                
Search: Filter By: Order By:
திருமுறை 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12 இருந்து பாடல் சொல் எண்ணி
எண்ணில்     எண்ணிலா     எண்ணிலி     எண்ணிய     எண்ணிறந்த     எண்ணியநூற்     எண்ணில்ஆண்     எண்ணில்திரு     எண்ணில்பெரும்     எண்ணி     எண்ணிலேன்    
2.094   2 st/nd Thirumurai   Song # 2   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
எண்ணில் ஈரமும் உடையார்; எத்தனையோ இவர் அறங்கள்
கண்ணும் ஆயிரம் உடையார்; கையும் ஓர் ஆயிரம்
உடையார்;
பெண்ணும் ஆயிரம் உடையார்; பெருமை ஓர் ஆயிரம்
உடையார்;
வண்ணம் ஆயிரம் உடையார் வாழ் கொளிபுத்தூர் உளாரே.

5.077   5 st/nd Thirumurai   Song # 5   திருநாவுக்கரசர்   தேவாரம்  
எண்ணி நாளும், எரி அயில் கூற்றுவன்
துண்ணென்று ஒன்றில்- துரக்கும் வழி கண்டேன்;
திண் நன் சேறைத் திருச் செந்நெறி உறை
அண்ணலார் உளர்: அஞ்சுவது என்னுக்கே?

7.011   7 st/nd Thirumurai   Song # 2   சுந்தரமூர்த்தி சுவாமிகள்   திருப்பாட்டு  
எண்ணி இருந்தும், கிடந்தும், நடந்தும்,
அண்ணல் எனா நினைவார் வினை தீர்ப்பார்;
பண் இசை ஆர் மொழியார் பலர் பாடப்
புண்ணியனார்; உறை பூவணம் ஈதோ! .

8.126   8 st/nd Thirumurai   Song # 6   மாணிக்க வாசகர்    திருவாசகம்  
எண்ணிலேன் திருநாமம் அஞ்சு எழுத்தும்; என் ஏழைமை அதனாலே
நண்ணிலேன் கலை ஞானிகள் தம்மொடு; நல் வினை நயவாதே,
மண்ணிலே பிறந்து, இறந்து, மண் ஆவதற்கு ஒருப்படுகின்றேனை,
அண்ணல், ஆண்டு, தன் அடியரில் கூட்டிய அதிசயம் கண்டாமே!

10.704   10 st/nd Thirumurai   Song # 15   திருமூலர்   திருமந்திரம்  
எண்ணில் இதயம் இறைஞான சத்தியாம்
விண்ணிற் பரைசிரம்மிக்க சிகைஆதி
வண்ணக் கவசம் வனப்புடை இச்சையாம்
பண்ணும் கிரியை பரநேத் திரத்திலே.

10.719   10 st/nd Thirumurai   Song # 2   திருமூலர்   திருமந்திரம்  
எண்ணிலா ஞானி யுடல்எரி தாவிடில்
அண்ணல்தன் கோயில் அழலிட்ட தாங்கொக்கும்
மண்ணில் மழைவிழா வையகம் பஞ்சமாம்
எண்ணரு மன்னர் இழப்பர் அரசே.

10.732   10 st/nd Thirumurai   Song # 7   திருமூலர்   திருமந்திரம்  
எண்ணிலி இல்லி யுடைத்தவ் விருட்டறை
எண்ணிலி இல்லியோ டேகிற் பிழைதரும்
எண்ணிலி இல்லியோ டேகாமை காக்குமேல்
எண்ணிலி இல்லத்தோர் இன்பம தாமே.

12.000   12 st/nd Thirumurai   Song # 203   சேக்கிழார்   திருமலைச் சருக்கம்  
எண்ணிய வோசை யைந்தும்
விசும்பிடை நிறைய வெங்கும்
விண்ணவர் பொழிபூ மாரி
மேதினி நிறைந்து விம்ம
மண்ணவர் மகிழ்ச்சி பொங்க
மறைகளும் முழங்கி ஆர்ப்ப
அண்ணலை ஓலை காட்டி
யாண்டவ ரருளிச் செய்வார்.
12.000   12 st/nd Thirumurai   Song # 235   சேக்கிழார்   திருமலைச் சருக்கம்  
எண்ணில் பேருல கனைத்தினு முள்ள
எல்லை யில்லழகு சொல்லிய வெல்லாம்
மண்ணில் இப்பதியில் வந்தன வென்ன
மங்க லம்பொலி வளத்தன வாகிப்
புண்ணி யப்புனித வன்பர்கள் முன்பு
புகழ்ந்து பாடல்புரி பொற்பின் விளங்கும்
அண்ண லாடுதிரு வம்பலஞ் சூழ்ந்த
அம்பொன் வீதியினை நம்பி வணங்கி.
12.100   12 st/nd Thirumurai   Song # 147   சேக்கிழார்   இலை மலிந்த சருக்கம்  
எண்ணிறந்த கடவுளருக்
கிடுமுணவு கொண்டூட்டும்
வண்ணஎரி வாயின்கண்
வைத்ததெனக் காளத்தி
அண்ணலார்க் காம்பரிசு
தாஞ்சோதித் தமைப்பார்போல்
திண்ணனார் திருவாயில்
அமைத்தார்ஊன் திருவமுது.
12.140   12 st/nd Thirumurai   Song # 27   சேக்கிழார்   இலை மலிந்த சருக்கம்  
எண்ணியநூற் பெருவண்ணம்
இடைவண்ணம் வனப்பென்னும்
வண்ணஇசை வகையெல்லாம்
மாதுரிய நாதத்தில்
நண்ணியபா ணியலும்
தூக்குநடை முதற்கதியில்
பண்ணமைய எழுமோசை
எம்மருங்கும் பரப்பினார்.
12.190   12 st/nd Thirumurai   Song # 51   சேக்கிழார்   மும்மையால் உலகாண்ட சருக்கம்  
எண்ணில் ஆகமம் இயம்பிய இறைவர்தாம் விரும்பும்
உண்மை யாவது பூசனை எனவுரைத் தருள
அண்ண லார்தமை அர்ச்சனை புரியஆ தரித்தாள்
பெண்ணில் நல்லவ ளாயின பெருந்தவக் கொழுந்து.
12.280   12 st/nd Thirumurai   Song # 1109   சேக்கிழார்   வம்பறா வரிவண்டுச் சருக்கம்  
எண்ணில்ஆண் டெய்தும் வேதாப்
படைத்தவள் எழிலின் வெள்ளம்
நண்ணுநான் முகத்தால் கண்டான்
அவளினும் நல்லாள் தன்பால்
புண்ணியப் பதினா றாண்டு
பேர்பெறும் புகலி வேந்தர்
கண்ணுதல் கருணை வெள்ளம்
ஆயிர முகத்தாற் கண்டார்.
12.290   12 st/nd Thirumurai   Song # 161   சேக்கிழார்   வம்பறா வரிவண்டுச் சருக்கம்  
எண்ணிறந்த பரிசனங்கள்
எல்லாரும் இனிதருந்தப்
பண்ணியபின் அம்மருங்கு
பசித்தணைந்தார் களும்அருந்த
உண்ணிறைந்த ஆரமுதாய்
ஒருகாலும் உலவாதே
புண்ணியனார் தாமளித்த
பொதிசோறு பொலிந்ததால்.
12.450   12 st/nd Thirumurai   Song # 8   சேக்கிழார்   பொய்யடிமை யில்லாத புலவர் சருக்கம்  
எண்ணில்திரு விளக்குநெடு
நாளெல்லாம் எரித்துவரப்
புண்ணியமெய்த் தொண்டர்செயல்
புலப்படுப்பார் அருளாலே
உண்ணிறையும் பெருஞ்செல்வம்
உயர்த்தும்வினைச் செயல்ஓவி
மண்ணிலவர் இருவினைபோல்
மாண்டதுமாட் சிமைத்தாக.
12.540   12 st/nd Thirumurai   Song # 10   சேக்கிழார்   கடல் சூழ்ந்த சருக்கம்  
எண்ணில்பெரும் பண்டாரம்
ஈசனடி யார்கொள்ள
உண்ணிறைந்த அன்பினால்
உறுகொள்ளை மிகவூட்டித்
தண்ணளியால் நெடுங்காலந்
திருநீற்றின் நெறிதழைப்ப
மண்ணில்அருள் புரிந்திறைவர்
மலரடியின் நிழல்சேர்ந்தார்.

This page was last modified on Thu, 09 May 2024 05:33:06 +0000
          send corrections and suggestions to admin-at-sivaya.org

thirumurai all list