சிவய.திருக்கூட்டம்
sivaya.org
Please set your language preference
by clicking below languages link
Search this site with
words in any language e.g. पोऱ्‌ऱि
song/pathigam/paasuram numbers: e.g. 7.039

This page in Tamil   Hindi/Sanskrit   Telugu   Malayalam   Bengali   Kannada   English   ITRANS    Marati  Gujarathi   Oriya   Singala   Tibetian   Thai   Japanese   Urdu   Cyrillic/Russian   Spanish   Hebrew  
Selected thirumurai      thirumurai Thalangal      All thirumurai Songs     

Thirumurai   1   2   3   4   5   6   7   8   9   10   11   12

Pathigam first Letter :                                          
Paadal first letter:     (  .                                                
Search: Filter By: Order By:
திருமுறை 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12 இருந்து பாடல் சொல் என்று
என்றும்     என்று     என்றுரைசெ     என்றுபகைத்     என்றுமெய்த்     என்றுரைக்க     என்றுமுன்     என்றுவாது     என்றுரைத்த     என்றுதம்    
3.079   3 st/nd Thirumurai   Song # 1   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
என்றும் அரியான், அயலவர்க்கு; இயல் இசைப்பொருள்கள் ஆகி எனது உள்
நன்றும் ஒளியான்; ஒளி சிறந்த பொன் முடிக் கடவுள்;
நண்ணும் இடம் ஆம்
ஒன்றிய மனத்து அடியர் கூடி, இமையோர் பரவும் நீடு அரவம் ஆர்
குன்றுகள் நெருங்கி, விரி தண்டலை மிடைந்து, வளர் கோகரணமே.

3.092   3 st/nd Thirumurai   Song # 2   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
என்றும் ஓர் இயல்பினர் என நினைவு அரியவர்; ஏறு அது ஏறிச்
சென்று தாம், செடிச்சியர் மனைதொறும், பலிகொளும்
இயல்பு அதுவே
துன்று தண்பொழில் நுழைந்து எழுவிய கேதகைப்போது அளைந்து
தென்றல் வந்து உலவிய திரு நெல்வேலி உறை செல்வர்
தாமே.

6.098   6 st/nd Thirumurai   Song # 5   திருநாவுக்கரசர்   தேவாரம்  
என்றும் நாம் யாவர்க்கும் இடைவோம் அல்லோம்; இரு நிலத்தில் எமக்கு எதிர் ஆவாரும் இல்லை;
சென்று நாம் சிறு தெய்வம் சேர்வோம் அல்லோம்; சிவபெருமான் திருவடியே சேரப் பெற்றோம்;
ஒன்றினால் குறை உடையோம் அல்லோம் அன்றே;
உறு பிணியார் செறல் ஒழிந்திட்டு ஓடிப் போனார்;
பொன்றினார் தலை மாலை அணிந்த சென்னிப் புண்ணியனை நண்ணிய புண்ணியத்து உளோமே.

8.115   8 st/nd Thirumurai   Song # 2   மாணிக்க வாசகர்    திருவாசகம்  
என்றும் பிறந்து, இறந்து, ஆழாமே, ஆண்டுகொண்டான்;
கன்றால் விளவு எறிந்தான், பிரமன், காண்பு அரிய
குன்றாத சீர்த் தில்லை அம்பலவன்; குணம் பரவி,
துன்று ஆர் குழலினீர்! தோள் நோக்கம் ஆடாமோ!

10.408   10 st/nd Thirumurai   Song # 82   திருமூலர்   திருமந்திரம்  
என்றும் எழுகின்ற ஏரினை எய்தினோர்
தன்றது வாகுவர் தாழ்குழ லாளொடு
மன்றரு கங்கை மதியொடு மாதவர்
துன்றிய தாரகை சோதிநின் றாளே.

11.023   11 st/nd Thirumurai   Song # 5   பரணதேவ நாயனார்   சிவபெருமான் திருவந்தாதி  
என்றும் மலர்தூவி ஈசன் திருநாமம்
என்றும் அலர்தூற்றி யேயிருந்தும் என்றும்
இப்பாடல் கிடைக்கவில்லை.
புகலூரா புண்ணியனே என்.

11.033   11 st/nd Thirumurai   Song # 63   நம்பியாண்டார் நம்பி   திருத்தொண்டர் திருவந்தாதி  
என்று விளம்புவர் நீடூ
ரதிபன் முனையடுவோன்
என்று மமரு ளழிந்தவர்க்
காக்கூலி யேற்றெறிந்து
வென்று பெருஞ்செல்வ மெல்லாங்
கனகநன் மேருவென்னுங்
குன்று வளைத்த சிலையான்
தமர்க்குக் கொடுத்தனனே.

11.036   11 st/nd Thirumurai   Song # 3   நம்பியாண்டார் நம்பி   ஆளுடையபிள்ளையார் திருமும்மணிக்கோவை  
என்று மடியவ ருள்ளத்
திருப்பன விவ்வுலகோர்
நன்று மலர்கொடு தூவித்
துதிப்பன நல்லசங்கத்
தொன்றும் புலவர்கள் யாப்புக்
குரியன வொண்கலியைப்
பொன்றுங் கவுணியன் சைவ
சிகாமணி பொன்னடியே.

12.000   12 st/nd Thirumurai   Song # 21   சேக்கிழார்   திருமலைச் சருக்கம்  
என்று கூற இறைஞ்சி இயம்புவார்
வென்ற பேரொளி யார்செய் விழுத்தவம்
நன்று கேட்க விரும்பு நசையினோம்
இன்றெ மக்குரை செய்தருள் என்றலும்.
12.000   12 st/nd Thirumurai   Song # 38   சேக்கிழார்   திருமலைச் சருக்கம்  
என்று மாமுனி வன்றொண்டர் செய்கையை
அன்று சொன்ன படியால் அடியவர்
துன்று சீர்த்திருத் தொண்டத் தொகைவிரி
இன்றெ னாதர வாலிங் கியம்புகேன்.
12.000   12 st/nd Thirumurai   Song # 169   சேக்கிழார்   திருமலைச் சருக்கம்  
என்றுரைசெ யந்தணனை எண்ணில்மறை யோரும்
மன்றல்வினை மங்கல மடங்கலனை யானும்
நன்றுமது நல்வரவு நங்கள்தவ மென்றே
நின்றதிவண் நீர்மொழிமின் நீர்மொழிவ தென்றார்.
12.000   12 st/nd Thirumurai   Song # 262   சேக்கிழார்   திருமலைச் சருக்கம்  
என்று பலமுறை யால்வணங்கி
எய்திய உள்ளக் களிப்பி னோடும்
வென்றி யடல்விடை போல்நடந்து
வீதி விடங்கப் பெருமான் முன்பு
சென்று தொழுது துதித்துவாழ்ந்து
திருமா ளிகைவலஞ் செய்து போந்தார்
அன்று முதலடி யார்களெல்லாம்
தம்பிரான் தோழ ரென்றே யறைந்தார்.
12.000   12 st/nd Thirumurai   Song # 288   சேக்கிழார்   திருமலைச் சருக்கம்  
என்று சாலவு மாற்றல ரென்னுயிர்
நின்ற தெங்கென நித்திலப் பூண்முலை
மன்றல் வார்குழல் வஞ்சியைத் தேடுவான்
சென்று தேவா சிரியனைச் சேர்ந்தபின்.
12.030   12 st/nd Thirumurai   Song # 6   சேக்கிழார்   தில்லை வாழ் அந்தணர் சருக்கம்  
என்று கூறிய இயற்பகை யார்முன்
எய்தி நின்றவக் கைதவ மறையோர்
கொன்றை வார்சடை யாரடி யார்கள்
குறித்து வேண்டின குணமெனக் கொண்டே
ஒன்று நீரெதிர் மறாதுவந் தளிக்கும்
உண்மை கேட்டுநும் பாலொன்று வேண்டி
இன்று நானிங்கு வந்தனன் அதனுக்கு
இசைய லாமெனில் இயம்பலா மென்றார்.
12.070   12 st/nd Thirumurai   Song # 12   சேக்கிழார்   தில்லை வாழ் அந்தணர் சருக்கம்  
என்று தம்பிரா னருள்செய இத்திரு மடத்தே
நன்று நான்மறை நற்றவர் அமுதுசெய் தருளத்
துன்று வேதியர் தூய்மையின் அமைப்பதும் உளதால்
இன்று நீருமிங் கமுதுசெய் தருளுமென் றிறைஞ்ச.
12.090   12 st/nd Thirumurai   Song # 14   சேக்கிழார்   இலை மலிந்த சருக்கம்  
என்றுபகைத் தோனுரைப்ப
ஏனாதி நாதரது
நன்றுனக்கு வேண்டுமேல்
நண்ணுவன்என் றுள்மகிழ்ந்து
சென்றவன்முன் சொன்ன
செருக்களத்துப் போர்குறிப்பக்
கன்றி யிருபடையும்
கைவகுத்து நேர்மலைவார்.
12.110   12 st/nd Thirumurai   Song # 31   சேக்கிழார்   இலை மலிந்த சருக்கம்  
என்றுமெய்த் தொண்டர் தம்மை
ஏத்தியங் கெம்பி ரானுக்
கொன்றிய பணிகள் மற்றும்
உள்ளன பலவும் செய்து
நின்றவெண் கவிகை மன்னன்
நீங்கவும் நிகரில் அன்பர்
மன்றிடை யாடல் செய்யும்
மலர்க்கழல் வாழ்த்தி வைகி.
12.190   12 st/nd Thirumurai   Song # 85   சேக்கிழார்   மும்மையால் உலகாண்ட சருக்கம்  
என்றும் உள்ளவிந் நகர்கலி யுகத்தில்
இலங்கு வேற்கரி காற்பெரு வளத்தோன்
வன்றி றற்புலி இமயமால் வரைமேல்
வைக்க ஏகுவோன் தனக்கிதன் வளமை
சென்று வேடன்முன் கண்டுரை செய்யத்
திருந்து காதநான் குட்பட வகுத்துக்
குன்று போலுமா மதில்புடை போக்கிக்
குடியி ருத்தின கொள்கையின் விளங்கும்.
12.210   12 st/nd Thirumurai   Song # 288   சேக்கிழார்   திருநின்ற சருக்கம்  
என்று கூற எல்லையிலா
நீறு போற்றும் இருவரையும்
சென்று காணும் கருத்துடையேன்
அங்குத் தீங்கு புரிஅமணர்
நின்ற நிலைமை அழிவித்துச்
சைவ நெறிபா ரித்தன்றி
ஒன்றுஞ் செய்யேன் ஆணைஉம
தென்றார் உடைய பிள்ளையார்.
12.250   12 st/nd Thirumurai   Song # 8   சேக்கிழார்   திருநின்ற சருக்கம்  
என்றுரைக்க அரசுகேட்
டிதற்கென்னோ கருத்தென்று
நின்றவரை நோக்கிஅவர்
எவ்விடத்தார் எனவினவத்
துன்றியநூல் மார்பரும்இத்
தொல்பதியார் மனையின்கண்
சென்றனர்இப் பொழுததுவும்
சேய்த்தன்று நணித்தென்றார்.
12.280   12 st/nd Thirumurai   Song # 212   சேக்கிழார்   வம்பறா வரிவண்டுச் சருக்கம்  
என்று தங்களுக் கீச ரருள்செய்த
தொன்றும் அங்கொழி யாமை உரைத்துமுன்
நின்று போற்றித் தொழுதிட நேர்ந்தது
மன்று ளார்அருள் என்று வணங்கினார்.
12.280   12 st/nd Thirumurai   Song # 430   சேக்கிழார்   வம்பறா வரிவண்டுச் சருக்கம்  
என்று கூறிஅங் கவர்தமை
விடுத்தபின் அவரும்
நன்றும் இன்புறு மனத்தொடும்
புகலிமேல் நண்ண
வென்றி ஞானசம் பந்தரும்
விருப்பொடு வணங்கி
மன்றல் ஆவடு துறையினில்
மகிழ்ந்தினி திருந்தார்.
12.280   12 st/nd Thirumurai   Song # 528   சேக்கிழார்   வம்பறா வரிவண்டுச் சருக்கம்  
என்று பிள்ளையார் மொழிந்தருள்
செய்திட இருந்தவத் திறையோரும்
நன்று நீரருள் செய்ததே
செய்வன்என் றருள்செய்து நயப்புற்ற
அன்றை நாள்முத லுடன்செலு
நாளெலாம் அவ்வியல் பினிற்செல்வார்
சென்று முன்னுறத் திருஅம்பர்
அணைந்தனர் செய்தவக் குழாத்தோடும்.
12.280   12 st/nd Thirumurai   Song # 560   சேக்கிழார்   வம்பறா வரிவண்டுச் சருக்கம்  
என்று கவுணியப் பிள்ளை யார்தாம்
இயம்பப் பணிந்தருள் ஏற்றுக் கொண்டே
ஒன்றிய காதலின் உள்ளம் அங்கண்
ஒழிய ஒருவா றகன்று போந்து
மன்றுள் நடம்புரிந் தார்ம கிழ்ந்த
தானம் பலவும் வணங்கிச் சென்று
நின்ற புகழ்த்தோணி நீடு வாரைப்
பணியும் நியதிய ராய் உறைந்தார்.
12.280   12 st/nd Thirumurai   Song # 684   சேக்கிழார்   வம்பறா வரிவண்டுச் சருக்கம்  
என்று கூறலும் கேட்டுமுட்
டியானும்என் றியம்பி
நன்று நல்லறம் புரிந்தவா
நானென்று நகுவான்
கன்றும் உள்ளத்த னாகிஅக்
கண்ணுதல் அடியார்
இன்றுஇம் மாநகர் அணைந்ததென்
அவர்கள்யார் என்றான்.
12.280   12 st/nd Thirumurai   Song # 686   சேக்கிழார்   வம்பறா வரிவண்டுச் சருக்கம்  
என்று கூறுவார் இத்திற
முன்புதா மறிந்த
தொன்றும் அங்கொழி யாவகை
உரைத்தலும் தென்னன்
மன்ற லம்பொழிற் சண்பையார்
வள்ளலார் நாமம்
சென்று தன்செவி நிறைத்தலும்
செயிர்த்துமுன் சொல்வான்.
12.280   12 st/nd Thirumurai   Song # 723   சேக்கிழார்   வம்பறா வரிவண்டுச் சருக்கம்  
என்றுமுன் கூறிப் பின்னும்
யானுற்ற பிணியைத் தீர்த்து
வென்றவர் பக்கம் சேர்வன்
விரகுண்டேல் அழையும் என்ன
அன்றவர் உவகை பொங்கி
ஆர்வத்தால் அணையை நூக்கிச்
சென்றநீர் வெள்ளம் போலுங்
காதல்வெள் ளத்தில் செல்வார்
12.280   12 st/nd Thirumurai   Song # 776   சேக்கிழார்   வம்பறா வரிவண்டுச் சருக்கம்  
என்றுவாது கூறலும்
இருந்ததென்னர் மன்னனும்
கன்றிஎன் உடம்பொடுங்க
வெப்புநோய் கவர்ந்தபோ
தொன்றும்அங் கொழித்திலீர்கள்
என்னவா துமக்குஎனச்
சென்றுபின்னும் முன்னும்நின்று
சில்லிவாயர் சொல்லுவார்.
12.280   12 st/nd Thirumurai   Song # 916   சேக்கிழார்   வம்பறா வரிவண்டுச் சருக்கம்  
என்றுரைத்த சாரிபுத்தன் எதிர்வந் தேற்ற
இருந்தவத்துப் பெருந்தன்மை அன்பர் தாமும்
நன்றுமது தலைவன்தான் பெற்றா னென்று
நாட்டுகின்ற முத்திதான் யாவ தென்றார்
நின்றவுரு வேதனையே குறிப்புச் செய்கை
நேர்நின்ற ஞானமென நிகழ்ந்து ஐந்தும்
ஒன்றியகந் தத்தழிவே முத்தி யென்ன
உரைசெய்தான் பிடகத்தின் உணர்வு மிக்கான்.
12.290   12 st/nd Thirumurai   Song # 109   சேக்கிழார்   வம்பறா வரிவண்டுச் சருக்கம்  
என்றுதம் பிரானார் நல்கும்
இன்னருள் பெற்ற பின்னர்
வன்றொண்டர் மச்சம் வெட்டிக்
கைக்கொண்டு மணிமுத் தாற்றில்
பொன்றிரள் எடுத்து நீருள்
புகவிட்டுப் போது கின்றார்
அன்றெனை வலிந்தாட் கொண்ட
அருளிதில் அறிவே னென்று.
12.290   12 st/nd Thirumurai   Song # 213   சேக்கிழார்   வம்பறா வரிவண்டுச் சருக்கம்  
என்று தம்மை ஈன்றெடுத்தார்
வினவ மறைவிட் டியம்புவார்
இன்றென் திறத்து நீர்மொழிந்த
திதுஎன் பரிசுக் கிசையாது
வென்றி விடையா ரருள் செய்தார்
ஒருவர்க் குரியேன் யானினிமேல்
சென்று திருவொற்றி யூரணைந்து
சிவனார் அருளிற் செல்வனென.
12.360   12 st/nd Thirumurai   Song # 44   சேக்கிழார்   வார்கொண்ட வனமுலையாள் சருக்கம்  
என்று மனைவி யார்இயம்ப
எழுந்த விருப்பால் விரைந்தெய்திச்
சென்று கண்டு திருப்பாதம்
பணிந்து நின்றார் சிறுத்தொண்டர்
நின்ற தொண்டர் தமைநோக்கி
நீரோ பெரிய சிறுத்தொண்டர்
என்று திருவாய் மலர்ந்தருள
இறைவர் தம்மைத் தொழுதுரைப்பார்.
12.360   12 st/nd Thirumurai   Song # 57   சேக்கிழார்   வார்கொண்ட வனமுலையாள் சருக்கம்  
என்று கணவர் கூறுதலும்
அதனுக் கிசைந்தெம் பிரான்தொண்டர்
இன்று தாழா தமுதுசெய்யப்
பெற்றிங் கவர்தம் மலர்ந்தமுகம்
நன்று காண்ப தெனநயந்து
நம்மைக் காக்க வருமணியைச்
சென்று பள்ளி யினிற்கொண்டு
வாரும் என்றார் திருவனையார்.
12.430   12 st/nd Thirumurai   Song # 17   சேக்கிழார்   பொய்யடிமை யில்லாத புலவர் சருக்கம்  
என்று மற்றுளோர் இயம்பவும்
ஏறுசீர்த் தொண்டர்
பொன் திரட்சுடர் நவமணி
பொலிந்தமீ னுறுப்பால்
ஒன்று மற்றிது என்னையா
ளுடையவர்க் காகும்
சென்று பொற்கழல் சேர்கெனத்
திரையொடுந் திரித்தார்.
12.720   12 st/nd Thirumurai   Song # 53   சேக்கிழார்   வெள்ளானைச் சருக்கம்  
என்றும் இன்பம் பெருகும் இயல்பினால்
ஒன்று காதலித்து உள்ளமும் ஓங்கிட
மன்று ளார்அடி யாரவர் வான்புகழ்
நின்றது எங்கும் நிலவி உலகெலாம்.
12.720   12 st/nd Thirumurai   Song # 54   சேக்கிழார்   வெள்ளானைச் சருக்கம்  
என்றும் இன்பம் பெருகும் இயல்பினால்
ஒன்று காதலித்து உள்ளமும் ஓங்கிட
மன்று ளார்அடி யாரவர் வான்புகழ்
நின்றது எங்கும் நிலவி உலகெலாம்.

This page was last modified on Thu, 09 May 2024 05:33:06 +0000
          send corrections and suggestions to admin-at-sivaya.org

thirumurai all list