சிவய.திருக்கூட்டம்
sivaya.org
Please set your language preference
by clicking below languages link
Search this site with
words in any language e.g. पोऱ्‌ऱि
song/pathigam/paasuram numbers: e.g. 7.039

This page in Tamil   Hindi/Sanskrit   Telugu   Malayalam   Bengali   Kannada   English   ITRANS    Marati  Gujarathi   Oriya   Singala   Tibetian   Thai   Japanese   Urdu   Cyrillic/Russian   Spanish   Hebrew  
Selected thirumurai      thirumurai Thalangal      All thirumurai Songs     

Thirumurai   1   2   3   4   5   6   7   8   9   10   11   12

Pathigam first Letter :                                          
Paadal first letter:     (  .                                                
Search: Filter By: Order By:
திருமுறை 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12 இருந்து பாடல் சொல் எம்
எம்பெரு     எம்மா     எம்மிறை     எம்மையும்     எம்மனை     எம்பி     எம்பிரான்     எம்மருங்கும்     எம்பெருமான்     எம்பிரான்,     எம்மான்     எம்     எம்பிரான்;     எம்பெருமான்!     எம்மான்,     எம்மான்!     எம்பந்த    
2.040   2 st/nd Thirumurai   Song # 1   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
எம்பிரான், எனக்கு அமுதம் ஆவானும், தன் அடைந்தார்
தம்பிரான் ஆவானும், தழல் ஏந்து கையானும்,
கம்ப மா கரி உரித்த காபாலி, கறைக்கண்டன்
வம்பு உலாம் பொழில் பிரமபுரத்து உறையும் வானவனே.

2.074   2 st/nd Thirumurai   Song # 10   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
எம்மான் சேர் வெங்குரு, சீர்ச் சிலம்பன் ஊர், கழுமலம்,
நல் புகலி, என்றும்
பொய்ம்மாண்பு இலோர் புறவம், கொச்சை, புரந்தரன் ஊர்,
நல் தோணிபுரம், போர்க்
கைம்மாவை உரிசெய்தோன் காழி, அயன் ஊர், தராய்,
சண்பை காரின்
மெய்ம் மால், பூ மகன், உணரா வகை தழல் ஆய்
விளங்கிய எம் இறைவன் ஊரே.

3.075   3 st/nd Thirumurai   Song # 1   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
எம் தமது சிந்தை பிரியாத பெருமான்! என இறைஞ்சி, இமையோா
வந்து துதிசெய்ய, வளர் தூபமொடு தீபம் மலி வாய்மை அதனால்,
அந்தி அமர் சந்தி பல அர்ச்சனைகள் செய்ய அமர்கின்ற அழகன்,
சந்தம் மலி குந்தளம் நல் மாதினொடு, மேவு பதி சண்பைநகரே.

4.019   4 st/nd Thirumurai   Song # 6   திருநாவுக்கரசர்   தேவாரம்  
எம் பட்டம் பட்டம் உடையானை, ஏர் மதியின்
நும் பட்டம் சேர்ந்த நுதலானை, அந்திவாய்ச்
செம்பட்டு உடுத்துச் சிறு மான் உரி ஆடை
அம் பட்டு அசைத்தானை,-நான் கண்டது ஆரூரே.

4.053   4 st/nd Thirumurai   Song # 5   திருநாவுக்கரசர்   தேவாரம்  
எம் தளிர் நீர்மை கோல மேனி என்று இமையோர் ஏத்த,
பைந்தளிர்க் கொம்பர் அன்ன படர்கொடி பயிலப் பட்டு,
தம் சடைத் தொத்தினாலும் த(ம்)மது ஓர் நீர்மையாலும்
அம் தளிர் ஆகம் போலும் வடிவர் ஆரூரனாரே.

4.076   4 st/nd Thirumurai   Song # 3   திருநாவுக்கரசர்   தேவாரம்  
எம்பிரான் என்றதே கொண்டு என் உளே புகுந்து நின்று, இங்கு
எம்பிரான் ஆட்ட, ஆடி, என் உளே உழிதர் வேனை
எம்பிரான் என்னைப் பின்னைத் தன்னுளே கரக்கும் என்றால்,
எம்பிரான் என்னின் அல்லால், என் செய்கேன், ஏழையேனே?

5.007   5 st/nd Thirumurai   Song # 6   திருநாவுக்கரசர்   தேவாரம்  
எம் ஐயார் இலை; யானும் உளேன் அலேன்;
எம்மை யாரும் இது செய வல்லரே?
அம்மை யார், எனக்கு? என்று என்று அரற்றினேற்கு
அம்மை ஆரத் தந்தார், ஆரூர் ஐயரே.

5.008   5 st/nd Thirumurai   Song # 5   திருநாவுக்கரசர்   தேவாரம்  
எம்பிரான்; இமையோர்கள் தமக்கு எலாம்
இன்பர் ஆகி இருந்த எம் ஈசனார்;
துன்ப வல்வினை போகத் தொழுமவர்க்கு
அன்பர் ஆகி நின்றார்-அன்னியூரரே.

6.030   6 st/nd Thirumurai   Song # 1   திருநாவுக்கரசர்   தேவாரம்  
எம் பந்த வல்வினைநோய் தீர்த்திட்டான்காண்; ஏழ்கடலும் ஏழ் உலகும் ஆயினான்காண்;
வம்பு உந்து கொன்றை அம்தார்-மாலையான்காண்;
வளர்மதி சேர் கண்ணியன்காண்; வானோர் வேண்ட,
அம்பு ஒன்றால் மூ எயிலும் எரிசெய்தான்காண்; அனல் ஆடி, ஆன் அஞ்சும் ஆடினான்காண்-
செம்பொன் செய் மணி மாடத் திரு ஆரூரில்-திரு மூலட்டானத்து எம் செல்வன் தானே.

7.004   7 st/nd Thirumurai   Song # 10   சுந்தரமூர்த்தி சுவாமிகள்   திருப்பாட்டு  
எம் தம்(ம்) அடிகள், இமையோர் பெருமான், எனக்கு என்றும் அளிக்கும் மணிமிடற்றன்,
அம் தண்கடல் அம் கரை மேல் மகோதை அணி ஆர் பொழில் அஞ்சைக்களத்து  அப்பனை,
மந்தம் முழவும் குழலும் இயம்பும் வளர் நாவலர் கோன்-நம்பி ஊரன்-சொன்ன
சந்தம் மிகு தண் தமிழ் மாலைகள் கொண்டு அடி வீழ வல்லார் தடுமாற்று இலரே .

7.020   7 st/nd Thirumurai   Song # 7   சுந்தரமூர்த்தி சுவாமிகள்   திருப்பாட்டு  
எம்பெருமான்! நுனையே நினைந்து ஏத்துவன், எப்பொழுதும்;
வம்பு அமரும் குழலாள் ஒரு பாகம் அமர்ந்தவனே!
செம்பொனின் மாளிகை சூழ் திருக்கோளிலி எம்பெருமான்!
அன்பு அது(வ்) ஆய் அடியேற்கு அவை அட்டித்தரப் பணியே! .

7.021   7 st/nd Thirumurai   Song # 5   சுந்தரமூர்த்தி சுவாமிகள்   திருப்பாட்டு  
எம்மான், எம் அ(ன்)னை, என்றவர் இட்டு இறந்தொழிந்தார்;
மெய்ம் மால் ஆயின தீர்த்து அருள் செயும் மெய்ப்பொருளே!
கைம்மா ஈர் உரியாய்! கனம் மேற்றளி உறையும்
பெம்மான்! உன்னை அல்லால் பெரிது ஏத்த மாட்டேனே .

7.024   7 st/nd Thirumurai   Song # 3   சுந்தரமூர்த்தி சுவாமிகள்   திருப்பாட்டு  
எம்மான், எம் அ(ன்)னை, என் தனக்கு எள்-தனைச் சார்வு ஆகார்;
இம் மாயப் பிறவி பிறந்தே இறந்து எய்த்தொழிந்தேன்;
மைம் மாம் பூம்பொழில் சூழ் மழபாடியுள் மாணிக்கமே!
அம்மான்! நின்னை அல்லால் இனி யாரை நினைக்கேனே?.

7.052   7 st/nd Thirumurai   Song # 9   சுந்தரமூர்த்தி சுவாமிகள்   திருப்பாட்டு  
எம்மான்! எந்தை! மூத்த(அ)ப்பன்! ஏழ் ஏழ் படிகால் எமை ஆண்ட
பெம்மான்! ஈமப் புறங்காட்டில் பேயோடு ஆடல் புரிவானே!
பல் மா மலர்கள் அவை கொண்டு பலரும் ஏத்தும் பழையனூர்
அம்மா! ஆலங்காடா! உன் அடியார்க்கு அடியேன் ஆவேனே.

8.104   8 st/nd Thirumurai   Song # 42   மாணிக்க வாசகர்    திருவாசகம்  
எம் தமை உய்யக் கொள்வாய், போற்றி!
புலி முலை புல்வாய்க்கு அருளினை, போற்றி!
அலை கடல் மீமிசை நடந்தாய், போற்றி!
கருங்குருவிக்கு அன்று அருளினை, போற்றி!
இரும் புலன் புலர இசைந்தனை, போற்றி!

8.105.07   8 st/nd Thirumurai   Song # 67   மாணிக்க வாசகர்    திருவாசகம்  
எம்பிரான், போற்றி! வானத்தவர் அவர் ஏறு, போற்றி!
கொம்பர் ஆர் மருங்குல் மங்கை கூற, வெள் நீற, போற்றி!
செம் பிரான், போற்றி! தில்லைத் திருச்சிற்றம்பலவ, போற்றி!
உம்பராய், போற்றி! என்னை ஆளுடை ஒருவ, போற்றி!

9.019   9 st/nd Thirumurai   Song # 4   பூந்துருத்தி நம்பி காடநம்பி   திருவிசைப்பா  
எம்பந்த வல்வினைநோய் தீர்த்திட்
   டெமையாளும்
சம்பந்தன் காழியர்கோன் றன்னையும்ஆட்
   கொண்டருளி
அம்புந்து கண்ணாளுந் தானும்அணி
   தில்லைச்
செம்பொன்செய் அம்பலமே சேர்ந்திருக்கை
   யாயிற்றே. 
10.220   10 st/nd Thirumurai   Song # 1   திருமூலர்   திருமந்திரம்  
எம்பெரு மான்இறை வாமுறை யோஎன்று
வம்பவிழ் வானோர் அசுரன் வலிசொல்ல
அம்பவழ் மேனி அறுமுகன் போய்அவர்
தம்பகை கொல்லென்ற தற்பரன் தானே.

10.605   10 st/nd Thirumurai   Song # 2   திருமூலர்   திருமந்திரம்  
எம்மா ருயிரும் இருநிலத் தோற்றமும்
செம்மா தவத்துச் செயலின் பெருமையும்
அம்மான் திருவருள் பெற்றவ ரேயல்லால்
இம்மா தவத்தின் இயல்பறி யாரே.

11.006   11 st/nd Thirumurai   Song # 87   சேரமான் பெருமாள் நாயனார்   பொன்வண்ணத்தந்தாதி  
எம்மிறை வன்னிமை யோர்தலை
வன்உமை யாள்கணவன்
மும்முறை யாலும் வணங்கப்
படுகின்ற முக்கண்நக்கற்
கெம்முறை யாளிவள் என்பிழைத்
தாட்கிறை என்பிழைத்தான்
இம்முறை யாலே கவரக்
கருதிற் றெழிற்கலையே.

11.029   11 st/nd Thirumurai   Song # 14   பட்டினத்துப் பிள்ளையார்   திருஏகம்பமுடையார் திருவந்தாதி  
எம்மையும் எம்மைப் பணிகொள்ளும்
கம்பர் எழிற்கயிலை
உம்மையும் மானிடம் இப்புனத்
தேவிட்டு வந்தமைந்தர்
தம்மையும் மானையும் சிந்தையும்
நோக்கம் கவர்கவென்றோ
அம்மையும் அம்மலர்க் கண்ணும்
பெரியீர் அருளுமினே.

11.034   11 st/nd Thirumurai   Song # 30   நம்பியாண்டார் நம்பி   ஆளுடையபிள்ளையார் திருவந்தாதி  
எம்மனை யா,எந்தை யாயென்னை
யாண்டென் துயர்தவிர்த்த
செம்மலர் நீள்முடி ஞானசம்
பந்தன் புறவமன்னீர்!
வெம்முனை வேலென்ன வென்னமிளிர்ந்து
வெளுத்(து) அரியேன்(று)
உம்மன வோவல்ல வோவந்தெ
னுள்ளத் தொளிர்வனவே.

12.000   12 st/nd Thirumurai   Song # 35   சேக்கிழார்   திருமலைச் சருக்கம்  
எம்பி ராட்டிஇவ் வேழுல கீன்றவள்
தம்பி ரானைத் தனித்தவத் தால்எய்திக்
கம்பை யாற்றில் வழிபடு காஞ்சியென்று
உம்பர் போற்றும் பதியும் உடையது.
12.000   12 st/nd Thirumurai   Song # 200   சேக்கிழார்   திருமலைச் சருக்கம்  
எம்பிரான் கோயில் நண்ண
இலங்குநூன் மார்பர் எங்கள்
நம்பர்தங் கோயில் புக்க
தென்காலோ வென்று நம்பி
தம்பெரு விருப்பி னோடு
தனித்தொடர்ந் தழைப்ப மாதோ
டும்பரின் விடைமேல் தோன்றி
அவர்தமக் குணர்த்த லுற்றார்.
12.020   12 st/nd Thirumurai   Song # 15   சேக்கிழார்   தில்லை வாழ் அந்தணர் சருக்கம்  
எம்பிரான் யான்செயும் பணிஎது என்றனர்
வம்புலா மலர்ச்சடை வள்ளல் தொண்டனார்
உம்பர்நா யகனும்இவ் வோடுன் பால்வைத்து
நம்பிநீ தருகநாம் வேண்டும் போதென்று.
12.140   12 st/nd Thirumurai   Song # 19   சேக்கிழார்   இலை மலிந்த சருக்கம்  
எம்மருங்கும் நிரைபரப்ப
எடுத்தகோல் உடைப்பொதுவர்
தம்மருங்கு தொழுதணையத்
தண்புறவில் வருந்தலைவர்
அம்மருங்கு தாழ்ந்தசினை
அலர்மருங்கு மதுவுண்டு
செம்மருந்தண் சுரும்புசுழல்
செழுங்கொன்றை மருங்கணைந்தார்.
12.280   12 st/nd Thirumurai   Song # 847   சேக்கிழார்   வம்பறா வரிவண்டுச் சருக்கம்  
எம்பிரான் சிவனே எல்லாப்
பொருளும்என் றெழுதும் ஏட்டில்
தம்பிரா னருளால் வேந்தன்
தன்னைமுன் ஓங்கப் பாட
அம்புய மலராள் மார்பன்
அநபாயன் என்னுஞ் சீர்த்திச்
செம்பியன் செங்கோ லென்னத்
தென்னன்கூன்நிமிர்ந்த தன்றே.
12.290   12 st/nd Thirumurai   Song # 241   சேக்கிழார்   வம்பறா வரிவண்டுச் சருக்கம்  
எம்பி ரானே நீரருளிச்
செய்தார்க் குரியேன் யான்இமையோர்
தம்பி ரானே அருள்தலைமேற்
கொண்டேன் தக்க விதிமணத்தால்
நம்பி யாரூ ரருக்கென்னை
நல்கி யருளும் பொழுதிமயக்
கொம்பி னாகங் கொண்டீர்க்குக்
கூறுந் திறமொன் றுளதென்பார்.
12.290   12 st/nd Thirumurai   Song # 258   சேக்கிழார்   வம்பறா வரிவண்டுச் சருக்கம்  
எம்பெருமான் இதற்காக
எழுந்தருளி யிமையவர்கள்
தம்பெருமான் திருமுன்பு
சாற்றுவது தகாதென்ன
நம்பெருமான் வன்தொண்டர்
நாதர்செயல் அறியாதே
கொம்பனையீர் யான்செய்வ
தெங்கென்று கூறுதலும்.
12.290   12 st/nd Thirumurai   Song # 372   சேக்கிழார்   வம்பறா வரிவண்டுச் சருக்கம்  
எம்பெரு மானீர் என்னுயிர்
காவா திடர்செய்யும்
கொம்பனை யாள்பால் என்கொடு
வந்தீர் குறையென்னத்
தம்பெரு மானும் தாழ்குழல்
12.290   12 st/nd Thirumurai   Song # 392   சேக்கிழார்   வம்பறா வரிவண்டுச் சருக்கம்  
எம்பிரான் எந்தை தந்தை
தந்தைஎங் கூட்ட மெல்லாம்
தம்பிரான் நீரே யென்று
வழிவழி சார்ந்து வாழும்
இம்பரின் மிக்க வாழ்க்கை
யென்னைநின் றீருஞ் சூலை
வம்பென ஆண்டு கொண்டான்
ஒருவனோ தீர்ப்பான் வந்து.
12.680   12 st/nd Thirumurai   Song # 5   சேக்கிழார்   மன்னிய சீர்ச் சருக்கம்  
எம்பி ரான்தன் மேனியின்மேல்
சருகு விழாமை யானவருந்தி
உம்பர் இழைத்த நூல்வலயம்
அழிப்ப தேஎன்று உருத்தெழுந்து
வெம்பிச் சிலம்பி துதிக்கையினில்
புக்குக் கடிப்ப வேகத்தால்
கும்ப யானை கைநிலத்தின்
மோதிக் குலைந்து வீழ்ந்ததால்.

This page was last modified on Thu, 09 May 2024 05:33:06 +0000
          send corrections and suggestions to admin-at-sivaya.org

thirumurai all list