சிவய.திருக்கூட்டம்
sivaya.org
Please set your language preference
by clicking below languages link
Search this site with
words in any language e.g. पोऱ्‌ऱि
song/pathigam/paasuram numbers: e.g. 7.039

This page in Tamil   Hindi/Sanskrit   Telugu   Malayalam   Bengali   Kannada   English   ITRANS    Marati  Gujarathi   Oriya   Singala   Tibetian   Thai   Japanese   Urdu   Cyrillic/Russian   Spanish   Hebrew  
Selected thirumurai      thirumurai Thalangal      All thirumurai Songs     

Thirumurai   1   2   3   4   5   6   7   8   9   10   11   12

Pathigam first Letter :                                          
Paadal first letter:     (  .                                                
Search: Filter By: Order By:
திருமுறை 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12 இருந்து பாடல் சொல் எரி
எரி     எரித்தவன்,     எரிகதிர்     எரிகின்ற     எரியாடி     எரிவிடம்     எரியிடை     எரியவிழ்     எரித்த     எரிதரு     எரிசரம்     எரிதர     எரிப்பிறைக்கண்ணியினானை     எரித்து     எரியும்     எரியினார்;     எரித்தானை,    
1.063   1 st/nd Thirumurai   Song # 1   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
எரி ஆர் மழு ஒன்று ஏந்தி, அங்கை இடுதலையே கலனா,
வரி ஆர் வளையார் ஐயம் வவ்வாய், மா நலம் வவ்வுதியே?
சரியா நாவின் வேதகீதன், தாமரை நான்முகத்தன்,
பெரியான், பிரமன் பேணி ஆண்ட பிரமபுரத்தானே!

1.079   1 st/nd Thirumurai   Song # 4   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
எரி ஒரு கரத்தினர்; இமையவர்க்கு இறைவர்; ஏறு உகந்து ஏறுவர்;
நீறு மெய் பூசித்
திரிதரும் இயல்பினர்; அயலவர் புரங்கள் தீ எழ விழித்தனர்;
வேய் புரை தோளி,
வரி தரு கண் இணை மடவரல், அஞ்ச, மஞ்சு உற நிமிர்ந்தது ஓர்
வடிவொடும் வந்த
கரி உரி மருவிய அடிகளுக்கு இடம் ஆம் கழுமலம் நினைய, நம்
வினை கரிசு அறுமே.

1.113   1 st/nd Thirumurai   Song # 1   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
எரித்தவன், முப்புரம் எரியில் மூழ்க;
தரித்தவன், கங்கையைத் தாழ்சடைமேல்;
விரித்தவன் வேதங்கள்; வேறுவேறு
தெரித்தவன், உறைவு இடம் திரு வல்லமே.

2.018   2 st/nd Thirumurai   Song # 9   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
எரி ஆர் சடையும், அடியும், இருவர்
தெரியாதது ஒர் தீத்திரள் ஆயவனே!
மரியார் பிரியா மருகல் பெருமான்!
அரியாள் இவளை அயர்வு ஆக்கினையே?

2.021   2 st/nd Thirumurai   Song # 8   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
எரி ஆர் கணையால் எயில் எய்தவனே!
விரி ஆர்தரு வீழ்சடையாய்! இரவில்
கரி காடலினாய்! கழிப்பாலை உளாய்!
உரிதுஆகி வணங்குவன், உன் அடியே.

2.040   2 st/nd Thirumurai   Song # 8   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
எரித்த மயிர் வாள் அரக்கன் வெற்பு எடுக்க, தோளொடு
தாள
நெரித்து அருளும் சிவமூர்த்தி, நீறு அணிந்த மேனியினான்,
உரித்த வரித்தோல் உடையான், உறை பிரமபுரம் தன்னைத்
தரித்த மனம் எப்போதும் பெறுவார் தாம் தக்காரே.

2.086   2 st/nd Thirumurai   Song # 11   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
எரி ஒரு வண்ணம் ஆய உருவானை எந்தை பெருமானை
உள்கி நினையார்,
திரிபுரம் அன்று செற்ற சிவன் மேய செல்வத் திரு
நாரையூர் கைதொழுவான்,
பொரு புனல் சூழ்ந்த காழி மறை ஞானசம்பந்தன் உரை
மாலைபத்தும் மொழிவார்,
திரு வளர் செம்மை ஆகி அருள் பேறு மிக்கது உளது
என்பர், செம்மையினரே.

2.111   2 st/nd Thirumurai   Song # 4   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
எரி கிளர் மதியமொடு எழில் நுதல்மேல், எறி பொறி
அரவினொடு, ஆறு மூழ்க
விரி கிளர் சடையினர்; விடை ஏறி; வெருவ வந்து இடர்
செய்த விகிர்தனார்;
புரி கிளர் பொடி அணி திரு அகலம் பொன் செய்த
வாய்மையர்; பொன்மிளிரும்
வரி அரவு அரைக்கு அசைத்து, இவராணீர் வாய்மூர்
அடிகள் வருவாரே.

3.008   3 st/nd Thirumurai   Song # 2   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
எரிதரு வார்சடையானும்; வெள்ளை எருது ஏறியும்;
புரிதரு மா மலர்க்கொன்றை மாலை புனைந்து, ஏத்தவே,
கரிதரு காலனைச் சாடினானும் கடவூர்தனுள்
விரிதரு தொல்புகழ் வீரட்டானத்து அரன் அல்லனே?

3.018   3 st/nd Thirumurai   Song # 7   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
எரிசரம் வரிசிலை வளைய ஏவி, முன்
திரிபுரம் எரி செய்த செல்வர் சேர்வு இடம்
வரி வளையவர் பயில் வைகல் மேல்-திசை,
வரு முகில் அணவிய மாடக்கோயிலே.

3.019   3 st/nd Thirumurai   Song # 1   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
எரிதர அனல் கையில் ஏந்தி, எல்லியில்,
நரி திரி கான் இடை, நட்டம் ஆடுவர்
அரிசில் அம் பொரு புனல் அம்பர் மா நகர்
குரிசில் செங்கண்ணவன் கோயில் சேர்வரே.

3.019   3 st/nd Thirumurai   Song # 8   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
எரி அன மணி முடி இலங்கைக்கோன் தன
கரி அன தடக்கைகள் அடர்த்த காலினர்,
அரியவர் வள நகர் அம்பர் இன்பொடு
புரியவர், பிரிவு இலாப் பூதம் சூழவே.

3.064   3 st/nd Thirumurai   Song # 8   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
எரி ஆர் வேல் கடல்-தானை இலங்கைக் கோன்தனை வீழ,
முரி ஆர்ந்த தடந்தோள்கள் அடர்த்து, உகந்த முதலாளா
வரி ஆர் வெஞ்சிலை பிடித்து, மடவாளை ஒரு பாகம்
பிரியாத பெருமானார் பெருவேளூர் பிரியாரே.

3.069   3 st/nd Thirumurai   Song # 8   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
எரி அனைய சுரிமயிர் இராவணனை ஈடு அழிய, எழில் கொள் விரலால்,
பெரிய வரை ஊன்றி அருள் செய்த சிவன் மேவும் மலை பெற்றி வினவில்
வரிய சிலை வேடுவர்கள் ஆடவர்கள் நீடு வரை ஊடு வரலால்,
கரியினொடு வரி உழுவை அரி இனமும் வெருவு காளத்திமலையே.

4.003   4 st/nd Thirumurai   Song # 3   திருநாவுக்கரசர்   தேவாரம்  
எரிப்பிறைக்கண்ணியினானை ஏந்திழையாளொடும் பாடி,
முரித்த இலயங்கள் இட்டு, முகம் மலர்ந்து ஆடா வருவேன்,
அரித்து ஒழுகும் வெள் அருவி ஐயாறு அடைகின்றபோது,
வரிக்குயில் பேடையொடு ஆடி வைகி வருவன கண்டேன்;-
கண்டேன், அவர் திருப்பாதம்; கண்டு அறியாதன கண்டேன்!

4.040   4 st/nd Thirumurai   Song # 5   திருநாவுக்கரசர்   தேவாரம்  
எரி அலால் உருவம் இல்லை; ஏறு அலால் ஏறல் இல்லை;
கரி அலால் போர்வை இல்லை; காண் தகு சோதியார்க்கு,
பிரி இலா அமரர் கூடிப் பெருந்தகைப் பிரான் என்று ஏத்தும்-
அரி அலால்-தேவி இல்லை, ஐயன் ஐயாறனார்க்கே.

4.087   4 st/nd Thirumurai   Song # 4   திருநாவுக்கரசர்   தேவாரம்  
எரித்து விட்டாய், அம்பினால் புரம் மூன்றும் முன்னே படவும்;
உரித்து விட்டாய், உமையாள் நடுக்கு எய்த ஓர் குஞ்சரத்தை;
பரித்து விட்டாய்,-பழனத்து அரசே!-கங்கை வார் சடை மேல்-
தரித்து விட்டாய்; அடியேனைக் குறிக்கொண்டு அருளுவதே!

4.090   4 st/nd Thirumurai   Song # 8   திருநாவுக்கரசர்   தேவாரம்  
எரியும் மழுவினன்; எண்ணியும் மற்றொருவன் தலையுள
திரியும் பலியினன்; தேயமும் நாடும் எல்லாம் உடையான்;
விரியும் பொழில் அணி சேறு திகழ் திரு வேதி குடி
அரிய அமுதினை அன்பர்களோடு அடைந்து ஆடுதுமே.

5.008   5 st/nd Thirumurai   Song # 9   திருநாவுக்கரசர்   தேவாரம்  
எரி கொள் மேனியர்; என்பு அணிந்து இன்பராய்த்
திரியும் மூ எயில் தீ எழச் செற்றவர்;
கரிய மாலொடு, நான்முகன், காண்பதற்கு
அரியர் ஆகி நின்றார்-அன்னியூரரே.

5.012   5 st/nd Thirumurai   Song # 8   திருநாவுக்கரசர்   தேவாரம்  
எரியினார்; இறையார்; இடுகாட்டு இடை
நரியினார்; பரியா மகிழ்கின்றது ஓர்
பெரியனார்; தம் பிறப்பொடு சாதலை
விரியினார் தொழும் வீழிமிழலையே!

5.038   5 st/nd Thirumurai   Song # 6   திருநாவுக்கரசர்   தேவாரம்  
எரி கொள் மேனி இளம்பிறை வைத்தவர்,
கரியர்தாம்-கடவூரின் மயானத்தார்;
அரியர், அண்டத்து உளோர் அயன் மாலுக்கும்;
பெரியர்காணும், பெருமான் அடிகளே.

5.100   5 st/nd Thirumurai   Song # 7   திருநாவுக்கரசர்   தேவாரம்  
எரி பெருக்குவர்; அவ் எரி ஈசனது
உரு வருக்கம் அது ஆவது உணர்கிலர்;
அரி அயற்கு அரியானை அயர்த்துப் போய்
நரிவிருத்தம் அது ஆகுவர், நாடரே.

6.043   6 st/nd Thirumurai   Song # 7   திருநாவுக்கரசர்   தேவாரம்  
எரித்தானை, எண்ணார் புரங்கள் மூன்றும் இமைப்பு அளவில் பொடி ஆக; எழில் ஆர் கையால்
உரித்தானை, மதகரியை உற்றுப் பற்றி; உமை அதனைக் கண்டு அஞ்சி நடுங்கக் கண்டு
சிரித்தானை; சீர் ஆர்ந்த பூதம் சூழ, திருச்சடைமேல் -திங்களும் பாம்பும் நீரும்
புரித்தானை; புண்ணியனை, புனிதன் தன்னை; பொய் இலியை; பூந்துருத்திக் கண்டேன், நானே.

6.097   6 st/nd Thirumurai   Song # 2   திருநாவுக்கரசர்   தேவாரம்  
எரிகின்ற இள ஞாயிறு அன்ன மேனி இலங்கிழை ஓர்பால் உண்டோ? வெள் ஏறு உண்டோ?
விரிகின்ற பொறி அரவத் தழலும் உண்டோ?
வேழத்தின் உரி உண்டோ? வெண்நூல் உண்டோ?
வரி நின்ற பொறி அரவச் சடையும் உண்டோ?
அச் சடை மேல் இளமதியம் வைத்தது உண்டோ?
சொரிகின்ற புனல் உண்டோ? சூலம் உண்டோ? சொல்லீர், எம்பிரானாரைக் கண்ட ஆறே!.

7.028   7 st/nd Thirumurai   Song # 7   சுந்தரமூர்த்தி சுவாமிகள்   திருப்பாட்டு  
எரி ஆர் புன்சடை மேல் இள நாகம் அணிந்தவனே!
நரி ஆரும் சுடலை நகு வெண் தலை கொண்டவனே!
கரி ஆர் ஈர் உரியாய்! கடவூர் தனுள் வீரட்டத்து எம்
அரியாய்! என் அமுதே! எனக்கு ஆர் துணை, நீ அலதே? .

7.103   7 st/nd Thirumurai   Song # 7      
எரிகதிர் ஆய் நாயிறு(று) ஆய்த் திங்கள் ஆகி எனப்பல ஆய், யாண்டு(டு) ஊழி தோறும் ஆகி,
கருமமும் ஆய், கருமத்தின் பயனும் ஆகி, காரணம் ஆய், ஆரணமந் திரங்கட்கு(கு) எல்லாம்
தெரிவு(வு) அரிய பொருள் உருவம் ஒன்று(று) ஆய் நின்ற திவாகரனே! ஒருவனே! தேவே! நாளும்
அரு உரு ஆய், உருவம் அது(து) ஆய், எங்கும் நின்ற ஆதித்தா! அடியேன் என் இடர்தீர்ப் பாயே.

8.113   8 st/nd Thirumurai   Song # 6   மாணிக்க வாசகர்    திருவாசகம்  
எரி மூன்று தேவர்க்கு இரங்கி, அருள்செய்தருளி,
சிரம் மூன்று அற, தன் திருப் புருவம் நெரித்தருளி,
உரு மூன்றும் ஆகி, உணர்வு அரிது ஆம் ஒருவனுமே
புரம் மூன்று எரித்தவா பூவல்லி கொய்யாமோ!

9.017   9 st/nd Thirumurai   Song # 6   கருவூர்த் தேவர்   திருவிசைப்பா  
எரிதரு கரிகாட் டிடுபிண நிணமுண்
   டேப்பமிட் டிலங்கெயிற் றழல்வாய்த்
துருகழல் நெடும்பேய்க் கணமெழுந் தாடுந்
   தூங்கிருள் நடுநல்யா மத்தே
அருள்புரி முறுவல் முகிழ்நிலா எறிப்ப
   அந்திபோன் றொளிர்திரு மேனி
வரியர வாட ஆடும்எம் பெருமான்
   மருவிடந் திருவிடை மருதே.

10.724   10 st/nd Thirumurai   Song # 1   திருமூலர்   திருமந்திரம்  
எரிகதிர் ஞாயிறும் இன்பனி சோரும்,
எறிகதிர் சோமன் எதிர்நின் றெறிப்ப;
விரிகதி ருள்ளே விளங்கும்என் ஆவி
ஒருகதி ராகில் உவாவது தானே.

11.006   11 st/nd Thirumurai   Song # 67   சேரமான் பெருமாள் நாயனார்   பொன்வண்ணத்தந்தாதி  
எரிகின்ற தீயொத் துளசடை
ஈசற்கத் தீக்கிமையோர்
சொரிகின்ற பாற்கடல் போன்றது
சூழ்புனல் அப்புனலிற்
சரிகின்ற திங்களோர் தோணியொக்
கின்றகத் தோணியுய்ப்பான்
தெரிகின்ற திண்கழை போன்றுள
தாலத் திறலரவே.

11.023   11 st/nd Thirumurai   Song # 22   பரணதேவ நாயனார்   சிவபெருமான் திருவந்தாதி  
எரியாடி ஏகம்பம் என்னாதார் மேனி
எரியாடி யேகம்ப மாகும் எரியாடி
ஈமத் திடுங்காடு தேரும் இறைபணிப்ப
ஈமத் திடுங்காடு தான்.

12.250   12 st/nd Thirumurai   Song # 27   சேக்கிழார்   திருநின்ற சருக்கம்  
எரிவிடம் முறையே ஏறித்
தலைக்கொண்ட ஏழாம் வேகம்
தெரிவுற எயிறும் கண்ணும்
மேனியும் கருகித் தீந்து
விரியுரை குழறி ஆவி
விடக்கொண்டு மயங்கி வீழ்வான்
பரிகலக் குருத்தைத் தாயார்
பால்வைத்துப் படிமேல் வீழ்ந்தான்.
12.280   12 st/nd Thirumurai   Song # 803   சேக்கிழார்   வம்பறா வரிவண்டுச் சருக்கம்  
எரியிடை வாதில் தோற்ற
திவர்க்குநம் அருகர் என்பார்
புரிசடை அண்ணல் நீறே
பொருளெனக் கண்டோம் என்பார்
பெருகொளி முத்தின் பைம்பொற்
12.280   12 st/nd Thirumurai   Song # 1102   சேக்கிழார்   வம்பறா வரிவண்டுச் சருக்கம்  
எரியவிழ் காந்தள் மென்பூத்
தலைதொடுத் திசைய வைத்துத்
திரள்பெறச் சுருக்குஞ் செச்சை
மாலையோ தெரியின் வேறு
கருநெடுங் கயற்கண் மங்கை
கைகளால் காந்தி வெள்ளம்
அருகிழிந் தனவோ என்னும்
அதிசயம் வடிவில் தோன்ற.

This page was last modified on Thu, 09 May 2024 05:33:06 +0000
          send corrections and suggestions to admin-at-sivaya.org

thirumurai all list