சிவய.திருக்கூட்டம்
sivaya.org



This page in Tamil   Hindi/Sanskrit   Telugu   Malayalam   Bengali   Kannada   English   ITRANS    Marati  Gujarathi   Oriya   Singala   Tibetian   Thai   Japanese   Urdu   Cyrillic/Russian   Spanish   Hebrew   Korean  
Selected thirumurai      thirumurai Thalangal      All thirumurai Songs     

Thirumurai   1   2   3   4   5   6   7   8   9   10   11   12

Pathigam first Letter :                                          
Paadal first letter:       (  .  <                                                
Search: Filter By: Order By:
திருமுறை 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12 இருந்து பாடல் சொல் எறி
எறி     எறிவது     எறிந்த     எறிபுனல்பொன்     எறிகடல்     எறிந்தானே!     எறிக்கும்     எறியது    
1.023   1 st/nd Thirumurai   Song # 8   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
எறி ஆர் கடல் சூழ் இலங்கைக் கோன்தனை
முறை ஆர் தடக்கை அடர்த்த மூர்த்தி தன்
குறி ஆர் பண் செய் கோலக்காவையே
நெறியால் தொழுவார் வினைகள் நீங்குமே.

1.060   1 st/nd Thirumurai   Song # 2   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
எறி சுறவம் கழிக் கானல் இளங் குருகே! என் பயலை
அறிவு உறாது ஒழிவதுவும் அருவினையேன் பயன் அன்றே!
செறி சிறார் பதம் ஓதும் திருத் தோணிபுரத்து உறையும்
வெறி நிற ஆர் மலர்க்கண்ணி வேதியர்க்கு விளம்பாயே!

2.016   2 st/nd Thirumurai   Song # 5   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
எறி ஆர் பூங்கொன்றையினோடும் இள மத்தம்
வெறி ஆரும் செஞ்சடை ஆர மிலைந்தானை,
மறி ஆரும் கை உடையானை, மணஞ்சேரிச்
செறிவானை, செப்ப வல்லார்க்கு இடர் சேராவே.

3.021   3 st/nd Thirumurai   Song # 8   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
எறிகடல் புடை தழுவு இலங்கை மன்னனை
முறிபட வரை இடை அடர்த்த மூர்த்தியார்
கறை படு பொழில் மதி தவழ், கருக்கு
அறிவொடு தொழுமவர் ஆள்வர், நன்மையே.

6.044   6 st/nd Thirumurai   Song # 9   திருநாவுக்கரசர்   தேவாரம்  
எறிந்தானே! எண் திசைக்கும் கண் ஆனானே! ஏழ்   உலகம் எல்லாம் முன் ஆய் நின்றானே!
அறிந்தார் தாம் ஓர் இருவர் அறியா வண்ணம் ஆதியும் அந்தமும் ஆகி அங்கே
பிறிந்தானே! பிறர் ஒருவர் அறியா வண்ணம் பெம்மான்! என்று எப்போதும் ஏத்தும் நெஞ்சில்
செறிந்தானே! திருச் சோற்றுத்துறை உளானே! திகழ் ஒளியே! சிவனே! உன் அபயம், நானே.

7.042   7 st/nd Thirumurai   Song # 1   சுந்தரமூர்த்தி சுவாமிகள்   திருப்பாட்டு  
எறிக்கும் கதிர் வேய் உரி முத்த(ம்)மொடு, ஏலம்(ம்), இலவங்கம், தக்கோலம், இஞ்சி,
செறிக்கும் புனலுள் பெய்து கொண்டு, மண்டி, திளைத்து, எற்று சிற்றாறு அதன் கீழ்க்கரை மேல்
முறிக்கும் தழை மா முடப்புன்னை, ஞாழல், குருக்கத்திகள் மேல் குயில் கூவல் அறா,
வெறிக்கும் கலைமா வெஞ்சமாக்கூடல் விகிர்தா! அடியேனையும் வேண்டுதியே .

7.088   7 st/nd Thirumurai   Song # 6   சுந்தரமூர்த்தி சுவாமிகள்   திருப்பாட்டு  
எறிந்த சண்டி, இடந்த கண்ணப்பன், ஏத்து பத்தர் கட்கு ஏற்றம் நல்கினீர்!
செறிந்த பூம்பொழில்-தேன் துளி வீசும் திரு மிழலை,
நிறைந்த அந்தணர் நித்தம்-நாள்தொறும் நேசத்தால் உமைப் பூசிக்கும்(ம்) இடம்
அறிந்து, வீழி கொண்டீர்!-அடியேற்கும் அருளுதிரே!

8.103   8 st/nd Thirumurai   Song # 3   மாணிக்க வாசகர்    திருவாசகம்  
எறியது வளியின் 2x
கொட்கப் பெயர்க்கும் குழகன்: முழுவதும்
படைப்போன் படைக்கும் பழையோன்; படைத்தவை
காப்போன் காக்கும் கடவுள்; காப்பவை
கரப்போன்; கரப்பவை கருதாக்

10.843   10 st/nd Thirumurai   Song # 10   திருமூலர்   திருமந்திரம்  
எறிவது ஞானத்(து) உறைவாள் உருவி
அறிவத னோடே அவ் ஆண்டகை யானைச்
செறிவது தேவர்க்கும் தேவர் பிரானைப்
பறிவது பல்கணம் பற்றுவிட் டாரே.

12.200   12 st/nd Thirumurai   Song # 52   சேக்கிழார்   மும்மையால் உலகாண்ட சருக்கம்  
எறிந்த அதுவே அர்ச்சனையில்
இடையூ றகற்றும் படையாக
மறிந்த தாதை இருதாளும்
துணித்த மைந்தர் பூசனையில்
அறிந்த இடையூ றகற்றினராய்
முன்போல் அருச்சித் திடப்புகலும்
செறிந்த சடைநீள் முடியாரும்
தேவி யோடும் விடையேறி.
12.210   12 st/nd Thirumurai   Song # 192   சேக்கிழார்   திருநின்ற சருக்கம்  
எறிபுனல்பொன் மணிசிதறுந் திரைநீர்ப் பொன்னி
இடைமருதைச் சென்றெய்தி அன்பி னோடு
மறிவிரவு கரத்தாரை வணங்கி வைகி
வண்டமிழ்ப்பா மாலைபல மகிழச் சாத்திப்
பொறியரவம் புனைந்தாரைத் திருநாகேச் சுரத்துப்
போற்றியருந் தமிழ்மாலை புனைந்து போந்து
செறிவிரைநன் மலர்ச்சோலைப் பழையா றெய்தித்
திருச்சத்தி முற்றத்தைச் சென்று சேர்ந்தார்.

This page was last modified on Fri, 10 Jul 2026 00:17:47 +0000      
send corrections and suggestions to admin-at-sivaya.org