சிவய.திருக்கூட்டம்
sivaya.org
Please set your language preference
by clicking below languages link
Search this site with
words in any language e.g. पोऱ्‌ऱि
song/pathigam/paasuram numbers: e.g. 7.039

This page in Tamil   Hindi/Sanskrit   Telugu   Malayalam   Bengali   Kannada   English   ITRANS    Marati  Gujarathi   Oriya   Singala   Tibetian   Thai   Japanese   Urdu   Cyrillic/Russian   Spanish   Hebrew  
Selected thirumurai      thirumurai Thalangal      All thirumurai Songs     

Thirumurai   1   2   3   4   5   6   7   8   9   10   11   12

Pathigam first Letter :                                          
Paadal first letter:     (  .                                                
Search: Filter By: Order By:
திருமுறை 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12 இருந்து பாடல் சொல் ஏய
ஏயங்     ஏயிரு     ஏய்ந்த     ஏயெனின்     ஏயும்     ஏய்ந்து     ஏயு     ஏய     ஏய்ந்தகடல்     ஏயவன்     ஏயிவரே    
2.015   2 st/nd Thirumurai   Song # 11   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
ஏய்ந்த சீர் எழில் திகழும் திருக்காறாயில்
ஆய்ந்த சீரான் அடி ஏத்தி அருள் பெற்ற
பாய்ந்த நீர்க் காழியுள் ஞானசம்பந்தன் சொல்
வாய்ந்தஆறு ஏத்துவார் வான் உலகு ஆள்வாரே.

4.087   4 st/nd Thirumurai   Song # 6   திருநாவுக்கரசர்   தேவாரம்  
ஏய்ந்து அறுத்தாய், இன்பனாய் இருந்தே படைத்தான் தலையை;
காய்ந்து அறுத்தாய், கண்ணினால் அன்று காமனை; காலனையும்
பாய்ந்து அறுத்தாய்;-பழனத்து அரசே!-என் பழவினை நோய்
ஆய்ந்து அறுத்தாய்; அடியேனைக் குறிக்கொண்டு அருளுவதே!

6.036   6 st/nd Thirumurai   Song # 7   திருநாவுக்கரசர்   தேவாரம்  
ஏய்ந்த உமை நங்கை பங்கர் தாமே; ஏழ் ஊழிக்கு   அப் புறம் ஆய் நின்றார் தாமே;
ஆய்ந்து மலர் தூவ நின்றார் தாமே; அளவு இல் பெருமை உடையார் தாமே;
தேய்ந்த பிறை சடைமேல் வைத்தார் தாமே; தீ வாய் அரவு அதனை ஆர்த்தார் தாமே;
பாய்ந்த படர் கங்கை ஏற்றார் தாமே பழனநகர் எம்பிரானார் தாமே.

6.048   6 st/nd Thirumurai   Song # 3   திருநாவுக்கரசர்   தேவாரம்  
ஏயவன் காண்; எல்லார்க்கும் இயல்பு ஆனான் காண்; இன்பன்   காண்; துன்பங்கள் இல்லாதான் காண்;
தாய் அவன் காண், உலகுக்கு ஓர்; தன் ஒப்பு இல்லாத் தத்துவன் காண்; உத்தமன் காண்; தானே எங்கும்
ஆயவன் காண்; அண்டத்துக்கு அப்பாலான் காண்; அகம் குழைந்து, மெய் அரும்பி, அழுவார் தங்கள்
வாயவன் காண் வானவர்கள் வணங்கி ஏத்தும் வலி வலத்தான்   காண்; அவன் என் மனத்து உளானே.

8.141   8 st/nd Thirumurai   Song # 2   மாணிக்க வாசகர்    திருவாசகம்  
ஏய்ந்த மா மலர் இட்டு, முட்டாதது ஓர் இயல்பொடும் வணங்காதே,
சாந்தம் ஆர் முலைத் தையல் நல்லாரொடும் தலை தடுமாறு ஆகி,
போந்து, யான் துயர் புகாவணம் அருள்செய்து, பொன் கழல் இணை காட்டி,
வேந்தன் ஆய், வெளியே, என் முன் நின்றது ஓர் அற்புதம் விளம்பனே!

9.027   9 st/nd Thirumurai   Song # 6   புருடோத்தம நம்பி   திருவிசைப்பா  
ஏயிவரே வானவர்க்கும்
   வானவரே என்பாரால்
தாயிவரே எல்லார்க்கும்
   தந்தையுமாம் என்பாரால்
தேய்மதியஞ் சூடிய
   தில்லைச்சிற் றம்பலவர்
வாயின கேட்டறிவார்
   வையகத்தா ராவாரே. 

9.028   9 st/nd Thirumurai   Song # 10   சேதிராயர்   திருவிசைப்பா  
ஏயு மாறெழிற் சேதிபர் கோன்தில்லை
நாய னாரை நயந்துரை செய்தன
தூய வாறுரைப் பார்துறக் கத்திடை
ஆய இன்பம் எய்தி யிருப்பரே. 

10.214   10 st/nd Thirumurai   Song # 9   திருமூலர்   திருமந்திரம்  
ஏயங் கலந்த இருவர்தஞ் சாயற்றுப்
பாயுங் கருவும் உருவா மெனப்பல
காயங் கலந்தது காணப் பதிந்தபின்
மாயங் கலந்த மனோலய மானதே.

10.315   10 st/nd Thirumurai   Song # 9   திருமூலர்   திருமந்திரம்  
ஏயிரு நாளும் இயல்புற ஓடிடிற்
பாயிரு நாலும் பகையற நின்றிடும்
தேய்வுற மூன்றுந் திகழவே நின்றிடில்
ஆயுரு வாறென் றளக்கலு மாமே.

10.319   10 st/nd Thirumurai   Song # 9   திருமூலர்   திருமந்திரம்  
ஏய்ந்த பிராயம் இருபதும் முப்பதும்
வாய்ந்த குழலிக்கும் மன்னற்கும் ஆனந்தம்
ஆய்ந்த குழலியோ டைந்தும் மலர்ந்திடச்
சோர்ந்தனன் சித்தமும் சோர்வில்லை வெள்ளிக்கே. 

10.402   10 st/nd Thirumurai   Song # 88   திருமூலர்   திருமந்திரம்  
ஏய்ந்த அரிதாரம் ஏட்டின்மே லேபூசிஏய்ந்த அகார உகார எழுத்திட்டுவாய்ந்ததோர் வில்லம் பலகை வசியத்துக்கேய்ந்தவைத் தெண்பதி னாயிரம் வேண்டிலே.

10.413   10 st/nd Thirumurai   Song # 48   திருமூலர்   திருமந்திரம்  
ஏய்ந்த மரவுரி தன்னில் எழுதிய
வாய்ந்தஇப் பெண்எண்பத் தொன்றில் நிரைத்தபின்
காய்ந்தவி நெய்யுட் கலந்துடன் ஓமமும்
ஆய்ந்தவி ஆயிரம் ஆகுதி பண்ணுமே.

10.613   10 st/nd Thirumurai   Song # 3   திருமூலர்   திருமந்திரம்  
ஏயெனின் என்என மாட்டார் பிரசைகள்
வாய்முலை பெய்ய மதுரம்நின் றூறிடுந்
தாய்முலை யாவ தறியார் தமருளோர்
ஊனிலை செய்யும் உருவிலி தானே.

10.929   10 st/nd Thirumurai   Song # 1   திருமூலர்   திருமந்திரம்  
ஏயும் சிவபோகம் ஈதன்றி ஓர் ஒளி
ஆயும் அறிவையும் மாயா உபாதியால்
ஏய பரிய புரியுந் தனைஎய்தும்
சாயும் தனது வியாபகந் தானே.

11.008   11 st/nd Thirumurai   Song # 180   சேரமான் பெருமாள் நாயனார்   திருக்கயிலாய ஞான உலா  
ஏய்ந்து குவிந்து திரண்டு மறிந்திருபால்
தேய்ந்து துடித்தச் செழும்பவளம் காய்ந்திலங்கு

11.033   11 st/nd Thirumurai   Song # 13   நம்பியாண்டார் நம்பி   திருத்தொண்டர் திருவந்தாதி  
ஏய்ந்த கயிறுதன் கண்டத்திற்
பூட்டி எழிற்பனந்தாள்
சாய்ந்த சிவன்நிலைத் தானென்பர்
காதலி தாலிகொடுத்
தாய்ந்தநற் குங்குலி யங்கொண்
டனற்புகை காலனைமுன்
காய்ந்த அரற்கிட்ட தென்கட
வூரிர் கலயனையே.

12.190   12 st/nd Thirumurai   Song # 1   சேக்கிழார்   மும்மையால் உலகாண்ட சருக்கம்  
ஏயு மாறுபல் உயிர்களுக் கெல்லையில் கருணைத்
தாய னாள்தனி யாயின தலைவரைத் தழுவ
ஆயு நான்மறை போற்றநின் றருந்தவம் புரியத்
தூய மாதவஞ் செய்தது தொண்டைநன் னாடு.
12.280   12 st/nd Thirumurai   Song # 780   சேக்கிழார்   வம்பறா வரிவண்டுச் சருக்கம்  
ஏய மாந்தரும் இந்தனங்
குறைத்துடன் அடுக்கித்
தீய மைத்தலும் சிகைவிடு
புகைஒழிந்து எழுந்து
காயும் வெவ்வழற் கடவுளும்
படரொளி காட்ட
ஆயும் முத்தமிழ் விரகரும்
அணையவந் தருளி.
12.310   12 st/nd Thirumurai   Song # 19   சேக்கிழார்   வம்பறா வரிவண்டுச் சருக்கம்  
ஏய்ந்த வடிமை சிவனுக்கியான்
என்னில் இன்றென் கண்பெற்று
வேந்த னெதிரே திருவாரூர்
விரவுஞ் சமணர் கண்ணிழப்பார்
ஆய்ந்த பொருளுஞ் சிவபதமே
யாவ தென்றே அஞ்செழுத்தை
வாய்ந்த தொண்டர் எடுத்தோதி
மணிநீர் வாவி மூழ்கினார்.
12.490   12 st/nd Thirumurai   Song # 4   சேக்கிழார்   கறைக் கண்டன் சருக்கம்  
ஏய்ந்தகடல் சூழுலகில்
எங்குந்தம் இசைநிறுத்தி
ஆய்ந்தவுணர்வு இடையறா
அன்பினராய் அணிகங்கை
தோய்ந்தநெடுஞ் சடையார்தம்
அருள்பெற்ற தொடர்பினால்
வாய்ந்தமனம் போல்உடம்பும்
வடகயிலை மலைசேர்ந்தார்.

This page was last modified on Thu, 09 May 2024 05:33:06 +0000
          send corrections and suggestions to admin-at-sivaya.org

thirumurai all list