சிவய.திருக்கூட்டம்
sivaya.org
Please set your language preference
by clicking below languages link
Search this site with
words in any language e.g. पोऱ्‌ऱि
song/pathigam/paasuram numbers: e.g. 7.039

This page in Tamil   Hindi/Sanskrit   Telugu   Malayalam   Bengali   Kannada   English   ITRANS    Marati  Gujarathi   Oriya   Singala   Tibetian   Thai   Japanese   Urdu   Cyrillic/Russian   Spanish   Hebrew  
Selected thirumurai      thirumurai Thalangal      All thirumurai Songs     

Thirumurai   1   2   3   4   5   6   7   8   9   10   11   12

Pathigam first Letter :                                          
Paadal first letter:     (  .                                                
Search: Filter By: Order By:
திருமுறை 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12 இருந்து பாடல் சொல் ஏற
ஏறு     ஏறும்     ஏறில்     ஏற     ஏறுதல்     ஏற்றி     ஏறிய     ஏறுடை     ஏறலால்     ஏற்றின்     ஏறேய     ஏறுகாற்     ஏறுதற்குச்     ஏறுயர்த்     ஏறுயர்த்தார்     ஏறணிந்த     ஏற்ற     ஏறனார்,     ஏறினர்,     ஏற்று     ஏறினார்     ஏற்றானை,     ஏற்றார்    
1.013   1 st/nd Thirumurai   Song # 2   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
ஏறு ஆர்தரும் ஒருவன், பல உருவன், நிலை ஆனான்,
ஆறு ஆர்தரு சடையன், அனல் உருவன், புரிவு உடையான்,
மாறார் புரம் எரியச் சிலை வளைவித்தவன், மடவாள்
வீறு ஆர்தர நின்றான், இடம் விரி நீர் வியலூரே.

1.049   1 st/nd Thirumurai   Song # 5   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
ஏறு தாங்கி, ஊர்தி பேணி, ஏர் கொள் இளமதியம்
ஆறு தாங்கும் சென்னிமேல் ஓர் ஆடு அரவம் சூடி,
நீறு தாங்கி நூல் கிடந்த மார்பில் நிரை கொன்றை
நாறு தாங்கு நம்பெருமான் மேயது நள்ளாறே.

1.077   1 st/nd Thirumurai   Song # 7   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
ஏறும் ஒன்று ஏறி, நீறு மெய் பூசி, இளங்கிளை அரிவையொடு
    ஒருங்கு உடன் ஆகிக்
கூறும் ஒன்று அருளி, கொன்றை அம்தாரும் குளிர் இளமதியமும் கூவிளமலரும்
நாறும் மல்லிகையும் எருக்கொடு முருக்கும் மகிழ் இளவன்னியும் இவை நலம் பகர,
ஆறும் ஓர் சடைமேல் அணிந்த எம் அடிகள் அச்சிறுபாக்கம் அது ஆட்சி கொண்டாரே.

1.086   1 st/nd Thirumurai   Song # 2   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
ஏறில் எருது ஏறும், எழில் ஆயிழையோடும்
வேறும் உடனுமாம், விகிர்தர் அவர் என்ன,
நாறும் மலர்ப் பொய்கை நல்லூர்ப் பெருமானைக்
கூறும் அடியார்கட்கு அடையா, குற்றமே.

2.079   2 st/nd Thirumurai   Song # 7   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
ஏறு மால்யானையே, சிவிகை, அந்தளகம், ஈச்சோப்பி,
வட்டின்
மாறி வாழ் உடம்பினார் படுவது ஓர் நடலைக்கு
மயங்கினாயே?
மாறு இலா வனமுலை மங்கை ஓர் பங்கினர், மதியம்
வைத்த
ஆறன், ஆரூர் தொழுது உய்யல் ஆம்; மையல் கொண்டு
அஞ்சல், நெஞ்சே!

2.095   2 st/nd Thirumurai   Song # 2   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
ஏறு பேணி அது ஏறி; இள மதக்களிற்றினை எற்றி,
வேறு செய்து, அதன் உரிவை வெம்புலால் கலக்க மெய்
போர்த்த
ஊறு தேன் அவன்; உம்பர்க்கு ஒருவன்; நல் ஒளி கொள்
ஒண் சுடர் ஆம்;
ஆறு சேர்தரு சென்னி அடிகளுக்கு இடம் அரசிலியே.

3.034   3 st/nd Thirumurai   Song # 3   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
ஏறனார், விடைமிசை; இமையவர் தொழ உமை-
கூறனார்; கொல் புலித் தோலினார்; மேனிமேல்
நீறனார்; நிறைபுனல் சடையனார்; நிகழ்வு இடம்
தேறல் ஆர் பொழில் அணி திரு முதுகுன்றமே.

3.083   3 st/nd Thirumurai   Song # 8   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
ஏறு புகழ் பெற்ற தென் இலங்கையவர் கோனை அரு வரையில்
சீறி, அவனுக்கு அருளும் எங்கள் சிவலோகன் இடம் ஆகும்
கூறும் அடியார்கள் இசை பாடி, வலம் வந்து, அயரும் அருவிச்
சேறு கமர் ஆன அழியத் திகழ்தரும் திரு நலூரே.

3.125   3 st/nd Thirumurai   Song # 5   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
ஏறு உகந்தீர்; இடுகாட்டு எரி ஆடி, வெண்-
நீறு உகந்தீர்; நிரை ஆர் விரி தேன் கொன்றை
நாறு உகந்தீர் திரு நல்லூர்ப்பெருமணம்
வேறு உகந்தீர்! உமை கூறு உகந்தீரே!

4.010   4 st/nd Thirumurai   Song # 2   திருநாவுக்கரசர்   தேவாரம்  
ஏறினர், ஏறினை; ஏழை தன் ஒரு-
கூறினர்; கூறினர், வேதம்; அங்கமும்
ஆறினர்; ஆறு இடு சடையர்; பக்கமும்
கீறின உடையினர்-கெடில வாணரே.

4.019   4 st/nd Thirumurai   Song # 4   திருநாவுக்கரசர்   தேவாரம்  
ஏறு ஏற்றமா ஏறி, எண் கணமும் பின் படர,
மாறு ஏற்றார் வல் அரணம் சீறி, மயானத்தின்
நீறு ஏற்ற மேனியனாய், நீள் சடை மேல் நீர் ததும்ப
ஆறு ஏற்ற அந்தணனை-நான் கண்டது ஆரூரே.

4.022   4 st/nd Thirumurai   Song # 2   திருநாவுக்கரசர்   தேவாரம்  
ஏறனார், ஏறு; தம்பால் இளநிலா எறிக்கும் சென்னி
ஆறனார்; ஆறு சூடி; ஆயிழையாள், ஓர் பாகம்;
நாறு பூஞ்சோலைத் தில்லை நவின்ற சிற்றம்பலத்தே!
நீறு மெய் பூசி நின்று நீண்டு எரி ஆடும் ஆறே!

4.038   4 st/nd Thirumurai   Song # 8   திருநாவுக்கரசர்   தேவாரம்  
ஏறு உகந்து ஏற வைத்தார்; இடை மருது இடமும் வைத்தார்
நாறு பூங்கொன்றை வைத்தார்; நாகமும் அரையில் வைத்தார்
கூறு உமை ஆகம் வைத்தார்; கொல் புலித் தோலும் வைத்தார்
ஆறும் ஓர் சடையில் வைத்தார்- ஐயன் ஐயாறனாரே.

4.049   4 st/nd Thirumurai   Song # 5   திருநாவுக்கரசர்   தேவாரம்  
ஏறு உடன் ஏழ் அடர்த்தான், எண்ணி ஆயிரம் பூக் கொண்டு(வ்)
ஆறு உடைச் சடையினானை அர்ச்சித்தான் அடி இணைக் கீழ்;
வேறும் ஓர் பூக் குறைய மெய்ம் மலர்க்கண்ணை மிண்ட;
கூறும் ஓர் ஆழி ஈந்தார்-குறுக்கை வீரட்டனாரே.

4.051   4 st/nd Thirumurai   Song # 9   திருநாவுக்கரசர்   தேவாரம்  
ஏற்ற நீர்க் கங்கையானே! இரு நிலம் தாவினானும்,
நாற்ற மா மலர் மேல் ஏறும் நான்முகன், இவர்கள் கூடி
ஆற்றலால் அளக்கல் உற்றார்க்கு அழல் உரு ஆயினானே!
கூற்றுக்கும் கூற்று அது ஆனாய்! கோடிகா உடைய கோவே!

5.003   5 st/nd Thirumurai   Song # 3   திருநாவுக்கரசர்   தேவாரம்  
ஏறு ஒப்பானை, எல்லா உயிர்க்கும்(ம்) இறை
வேறு ஒப்பானை, விண்ணோரும் அறிகிலா
ஆறு ஒப்பானை, அரத்துறை மேவிய
ஊறு ஒப்பானை,-கண்டீர்-நாம் தொழுவதே.

5.012   5 st/nd Thirumurai   Song # 2   திருநாவுக்கரசர்   தேவாரம்  
ஏற்று வெல் கொடி ஈசன், தன் ஆதிரை,
நாற்றம் சூடுவர்; நன்நறும் திங்களார்
நீற்றுச் சந்தன வெள்ளை விரவலார்,
வேற்றுக் கோலம் கொள் வீழிமிழலையே.

5.014   5 st/nd Thirumurai   Song # 6   திருநாவுக்கரசர்   தேவாரம்  
ஏறு அது ஏறும் இடைமருது ஈசனார்,
கூறுவார் வினை தீர்க்கும் குழகனார்,
ஆறு செஞ்சடை வைத்த அழகனார்க்கு
ஊறி ஊறி உருகும், என் உள்ளமே.

5.035   5 st/nd Thirumurai   Song # 8   திருநாவுக்கரசர்   தேவாரம்  
ஏறினார் இமையோர்கள் பணி கண்டு
தேறுவார் அலர், தீவினையாளர்கள்;
பாறினார் பணி வேண்டும் பழனத்தான்
கூறினான், உமையாளொடும் கூடவே.

6.004   6 st/nd Thirumurai   Song # 2   திருநாவுக்கரசர்   தேவாரம்  
ஏறு ஏறி ஏழ் உலகம் உழிதர்வானே; இமையவர்கள் தொழுது ஏத்த இருக்கின்றானே;
பாறு ஏறு படுதலையில் பலி கொள்வானே; பட அரவம் தடமார்பில் பயில்வித்தானே;
நீறு ஏறு செழும் பவளக்குன்று ஒப்பானே; நெற்றிமேல் ஒற்றைக்கண் நிறைவித்தானே;
ஆறு ஏறு சடைமுடி மேல் பிறை வைத்தானே;-அவன் ஆகில் அதிகைவீரட்டன் ஆமே.

6.010   6 st/nd Thirumurai   Song # 9   திருநாவுக்கரசர்   தேவாரம்  
ஏறு ஏறி ஏழ் உலகும் ஏத்த நின்றார்;
   இமையவர்கள் எப்பொழுதும் இறைஞ்ச நின்றார்;
நீறு ஏறு மேனியார்; நீலம் உண்டார்; நெருப்பு  உண்டார்; அங்கை அனலும் உண்டார்;
ஆறு ஏறு சென்னியார்; ஆன் அஞ்சு ஆடி; அனல்
உமிழும் ஐவாய் அரவும் ஆர்த்தார்;
பாறு ஏறு வெண்தலையார், பைங்கண் ஏற்றார்;
பலி ஏற்றார்-பந்தணைநல்லூராரே.

6.029   6 st/nd Thirumurai   Song # 3   திருநாவுக்கரசர்   தேவாரம்  
ஏற்றானை, ஏழ் உலகும் ஆனான்தன்னை, ஏழ்கடலும் ஏழ்மலையும் ஆனான்தன்னை,
கூற்றானை, கூற்றம் உதைத்தான்தன்னை,
கொடுமழுவாள் கொண்டது ஓர் கையான்தன்னை,
காற்றானை, தீயானை, நீரும் ஆகி, கடி கமழும்   புன்சடைமேல் கங்கைவெள்ள-
ஆற்றானை, ஆரூரில் அம்மான்தன்னை,- அறியாது அடிநாயேன் அயர்த்த ஆறே!.

6.046   6 st/nd Thirumurai   Song # 6   திருநாவுக்கரசர்   தேவாரம்  
ஏற்றானை, எண்தோள் உடையான் தன்னை, எல்லில் நடம் ஆட வல்லான் தன்னை,
கூற்றானை, கூற்றம் உதைத்தான் தன்னை, குரை கடல்வாய் நஞ்சு உண்ட கண்டன் தன்னை,
நீற்றானை, நீள் அரவு ஒன்று ஆர்த்தான் தன்னை, நீண்ட சடைமுடிமேல் நீர் ஆர் கங்கை
ஆற்றானை, ஆவடுதண் துறையுள் மேய அரன் அடியே அடி நாயேன் அடைந்து உய்ந்தேனே!.

7.001   7 st/nd Thirumurai   Song # 8   சுந்தரமூர்த்தி சுவாமிகள்   திருப்பாட்டு  
ஏற்றார் புரம் மூன்றும் எரியுண்ணச் சிலை தொட்டாய்!
தேற்றாதன சொல்லித் திரிவேனோ? செக்கர் வான் நீர்
ஏற்றாய்! பெண்ணைத் தென்பால் வெண்ணெய் நல்லூர் அருள்-துறையுள்
ஆற்றாய்! உனக்கு ஆள் ஆய் இனி அல்லேன் எனல் ஆமே? .

8.212   8 st/nd Thirumurai   Song # 24   மாணிக்க வாசகர்    திருச்சிற்றம்பலக் கோவையார்  
ஏறும் பழிதழை யேற்பின்மற்
   றேலா விடின்மடன்மா
ஏறு மவனிட பங்கொடி
   யேற்றிவந் தம்பலத்துள்
ஏறு மரன்மன்னும் ஈங்கோய்
   மலைநம் மிரும்புனம் காய்ந்
தேறு மலைதொலைத் தாற்கென்னை
   யாஞ்செய்வ தேந்திழையே.

10.214   10 st/nd Thirumurai   Song # 8   திருமூலர்   திருமந்திரம்  
ஏற எதிர்க்கில் இறையவன் றானாகும்
மாற எதிர்க்கில் அரியவன் றானாகும்
நேரொக்க வைக்கின் நிகர்போதத் தானாகும்
பேரொத்த மைந்தனும் பேரரசாளுமே. 

10.305   10 st/nd Thirumurai   Song # 5   திருமூலர்   திருமந்திரம்  
ஏறுதல் பூரகம் ஈரெட்டு வாமத்தால்
ஆறுதல் கும்பகம் அறுபத்து நால்அதில்
ஊறுதல் முப்பத் திரண்ட திரேசகம்
மாறுதல் ஒன்றின்கண் வஞ்சக மாமே.

10.305   10 st/nd Thirumurai   Song # 8   திருமூலர்   திருமந்திரம்  
ஏற்றி இறக்கி இருகாலும் பூரிக்கும்
காற்றைப் பிடிக்கும் கணக்கறி வாரில்லை
காற்றைப் பிடிக்குங் கணக்கறி வாளர்க்குக்
கூற்றை யுதைக்குங் குறியது வாமே. 

10.315   10 st/nd Thirumurai   Song # 5   திருமூலர்   திருமந்திரம்  
ஏறிய ஆறினில் எண்பது சென்றிடும்
தேறிய ஏழிற் சிறக்கும் வகையெண்ணில்
ஆறொரு பத்தாம் அமர்ந்த இரண்டையுந்
தேறியே நின்று தெளிஇவ் வகையே. 

10.713   10 st/nd Thirumurai   Song # 6   திருமூலர்   திருமந்திரம்  
ஏறுடை யாய்இறை வாஎம் பிரான்என்று
நீறிடு வார்அடியார் நிகழ் தேவர்கள்
ஆறணி செஞ்சடை யண்ணல் இவரென்று
வேறணி வார்க்கு வினையில்லை தானே.

அத்தன் நவதீர்த்தம் ஆடும் பரிசுகேள்
ஒத்தமெய்ஞ் ஞானத் துயர்ந்தார் பதத்தைச்
சுத்தம தாக விளங்கித் தெளிக்கவே
முத்தியாம் என்றுநம் மூலன் மொழிந்ததே.

10.735   10 st/nd Thirumurai   Song # 18   திருமூலர்   திருமந்திரம்  
ஏறு நெறியே மலத்தை யிரித்தலால்
ஈறில் உரையால் இருளை அறுத்தலால்
மாறின் பசுபாசம் வாட்டலால் வீடுறக்
கூறு பரனே குருவாம் இயம்பிலே. 36,

10.824   10 st/nd Thirumurai   Song # 1   திருமூலர்   திருமந்திரம்  
ஏறிய வாறே மலம்ஐந் திடைஅடைந்
தாறிய ஞானம் சிவோகம் அடைந்திட்டு
வேறுமென் மேல்முச் சொரூபத்து வீடுற்றங்(கு)
ஈறதில் பண்டைப் பரன்உண்மை எய்துமே.

11.003   11 st/nd Thirumurai   Song # 18   காரைக்கால் அம்மையார்    திரு இரட்டை மணிமாலை  
ஏறலால் ஏறமற் றில்லையே எம்பெருமான்
ஆறெலாம் பாயும் அவிர்சடையார் - வேறோர்
படங்குலவு நாகமுமிழ் பண்டமரர்ச் சூழ்ந்த
தடங்கடல்நஞ் சுண்டார் தமக்கு.

11.009   11 st/nd Thirumurai   Song # 95   நக்கீரதேவ நாயனார்   கயிலைபாதி காளத்திபாதி அந்தாதி  
ஏற்றின் மணியே அமையாதோ ஈர்ஞ்சடைமேல்
வீற்றிருந்த வெண்மதியும் வேண்டுமோ - ஆற்றருவி
கன்மேற்பட் டார்க்கும் கயிலாயத் தெம்பெருமான்
என்மேற் படைவிடுப்பாற் கீங்கு.

11.023   11 st/nd Thirumurai   Song # 57   பரணதேவ நாயனார்   சிவபெருமான் திருவந்தாதி  
ஏறேய வாழ்முதலே ஏகம்பா எம்பெருமான்
ஏறேறி யூரும் எரியாடி ஏறேய
ஆதிவிடங் காகாறை கண்டத்தாய் அம்மானே
ஆதிவிடங் காஉமைதன் மாட்டு.

11.025   11 st/nd Thirumurai   Song # 21   அதிராவடிகள்   மூத்த பிள்ளையார் திருமும்மணிக்கோவை  
ஏறு தழீஇயவெம் புத்தேள் மருகவெங் குந்தவள
நீறு தழீஇயஎண் தோளவன் செல்வவண் டுண்ணநெக்க
ஆறு தழீஇய கரதலத் தையநின் றன்னை அல்லால்
வேறு தழீஇத்தொழு மோவணங் காத வியன்சிரமே.

11.031   11 st/nd Thirumurai   Song # 14   நம்பியாண்டார் நம்பி   திருநாரையூர் விநாயகர் திருஇரட்டைமணிமாலை  
ஏறிய சீர்வீ ரணக்குடி
ஏந்திழைக் கும்இருந்தேன்
நாறிய பூந்தார்க் குமரற்கும்
முன்னினை நண்ணலரைச்
சீறிய வெம்பணைச் சிங்கத்தி
னுக்கிளை யானைவிண்ணோர்
வேறியல் பால்தொழும் நாரைப்
பதியுள் விநாயகனே.

12.100   12 st/nd Thirumurai   Song # 133   சேக்கிழார்   இலை மலிந்த சருக்கம்  
ஏறுகாற் பன்றி யோடும்  
இருங்கலை புனமான் மற்றும்
வேறுவே றினங்கள் வேட்டை  
வினைத்தொழில் விரகி னாலே
ஊறுசெய் காலம் சிந்தித்  
துருமிகத் தெரியாப் போதின்
மாறடு சிலையுங் கொண்டு
வள்ளலைத் தொழுது போந்தார்.
12.210   12 st/nd Thirumurai   Song # 370   சேக்கிழார்   திருநின்ற சருக்கம்  
ஏற்றி னார்அருள் தலைமிசைக்
கொண்டெழுந் திறைஞ்சி
வேற்று மாகிவிண் ணாகிநின்
றார்மொழி விரும்பி
ஆற்றல் பெற்றவர் அண்ணலார்
அஞ்செழுத் தோதிப்
பாற்ற டம்புனற் பொய்கையில்
மூழ்கினார் பணியால்.
12.280   12 st/nd Thirumurai   Song # 195   சேக்கிழார்   வம்பறா வரிவண்டுச் சருக்கம்  
ஏறுதற்குச் சிவிகை இடக்குடை
கூறி ஊதக் குலவுபொற் சின்னங்கள்
மாறில் முத்தின் படியினால் மன்னிய
நீறு வந்த நிமலர் அருளுவார்.
12.280   12 st/nd Thirumurai   Song # 348   சேக்கிழார்   வம்பறா வரிவண்டுச் சருக்கம்  
ஏறுயர்த் தார்திருப் பாற்றுறையும்
எறும்பியூர் மாமலை யேமுதலா
வேறுபதி கள்பல வும்போற்றி
விரவுந் திருத்தொண்டர் வந்துசூழ
ஈறில்புகழ்ச் சண்பை ஆளியார்தாம்
எண்திசை யோரும் தொழுதிறைஞ்ச
நீறணிசெம் பவளப் பொருப்பில்
நெடுங்கள மாநகர் சென்றுசேர்ந்தார்.
12.280   12 st/nd Thirumurai   Song # 909   சேக்கிழார்   வம்பறா வரிவண்டுச் சருக்கம்  
ஏறுயர்த்தார் சைவநெறி ஆணை உய்க்க
எதிர்விலக்கும் இடையூற்றை எறிந்து நீக்கும்
மாறில்வலி மந்திரமாம் அசனி போல
வாய்மைஉரைத் திருத்தொண்டர் வாக்கி னாலே
வேறுமொழிப் போர் ஏற்பான் வந்த புத்தன்
மேனியையும் தலையினையும் வெவ்வே றாகக்
கூறுபட நூறியிடப் புத்தர் கூட்டம்
குலைந்தோடி விழுந்துவெருக் கொண்ட தன்றே.
12.280   12 st/nd Thirumurai   Song # 1134   சேக்கிழார்   வம்பறா வரிவண்டுச் சருக்கம்  
ஏறணிந்த வெல்கொடியார்
இனிதமர்ந்த பதிபிறவும்
நீறணிந்த திருத்தொண்டர்
எதிர்கொள்ள நேர்ந்திறைஞ்சி
வேறுபல நதிகானம்
கடந்தருளி விரிசடையில்
ஆறணிந்தார் மகிழ்ந்ததிரு
அரசிலியை வந்தடைந்தார்.
12.720   12 st/nd Thirumurai   Song # 34   சேக்கிழார்   வெள்ளானைச் சருக்கம்  
ஏற்ற தொண்டரை அண்டர்வெள்
ளானையின் எதிர்வலங் கொண்டேற்ற
நாற்ற டங்கடல் முழுக்கென
ஐவகை நாதமீ தொழுந்தார்ப்பப்
போற்றி வானவர் பூமழை
பொழிந்திடப் போதுவார் உயிரெல்லாம்
சாற்று மாற்றங்கள் உணர்பெருந்
துணைவரை மனத்தினிற் கொடுசார்ந்தார்.

This page was last modified on Thu, 09 May 2024 05:33:06 +0000
          send corrections and suggestions to admin-at-sivaya.org

thirumurai all list