சிவய.திருக்கூட்டம்
sivaya.org
Please set your language preference
by clicking below languages link
Search this site with
words in any language e.g. पोऱ्‌ऱि
song/pathigam/paasuram numbers: e.g. 7.039

This page in Tamil   Hindi/Sanskrit   Telugu   Malayalam   Bengali   Kannada   English   ITRANS    Marati  Gujarathi   Oriya   Singala   Tibetian   Thai   Japanese   Urdu   Cyrillic/Russian   Spanish   Hebrew  
Selected thirumurai      thirumurai Thalangal      All thirumurai Songs     

Thirumurai   1   2   3   4   5   6   7   8   9   10   11   12

Pathigam first Letter :                                          
Paadal first letter:     (  .                                                
Search: Filter By: Order By:
திருமுறை 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12 இருந்து பாடல் சொல் ஐய
ஐயன்,     ஐயன்     ஐயைந்து     ஐயைந்தும்     ஐயைந்     ஐயென்னும்     ஐயர்நீ     ஐயர்     ஐயரே     ஐயவி     ஐயர்நீர்     ஐயர்அங்     ஐயா     ஐய     ஐயன்;     ஐயனே!     ஐயன்காண்,     ஐயினால்     ஐயனை,     ஐயுற     ஐயபொட்    
1.003   1 st/nd Thirumurai   Song # 3   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
ஐயன், நொய்யன், அணியன், பிணி இல்லவர் என்றும் தொழுது ஏத்த,
செய்யன், வெய்ய படை ஏந்த வல்லான், திருமாதோடு உறை கோயில்
வையம் வந்து பணிய, பிணி தீர்த்து உயர்கின்ற வலி தாயம்
உய்யும் வண்ணம் நினைமின்! நினைந்தால், வினை தீரும்; நலம் ஆமே.

1.093   1 st/nd Thirumurai   Song # 3   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
ஐயன் முதுகுன்றை, பொய்கள் கெட நின்று,
கைகள் கூப்புவீர்! வையம் உமது ஆமே.

3.023   3 st/nd Thirumurai   Song # 3   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
ஐயன்; நல் அதிசயன்; அயன் விண்ணோர் தொழும்
மை அணி கண்டன்; ஆர் வண்ணம், வண்ணவான்;
பை அரவு அல்குலாள் பாகம் ஆகவும்,
செய்யவன்; உறைவு இடம் திரு விற்கோலமே.

5.040   5 st/nd Thirumurai   Song # 7   திருநாவுக்கரசர்   தேவாரம்  
ஐயனே! அழகே! அனல் ஏந்திய
கையனே! கறை சேர்தரு கண்டனே!
மை உலாம் பொழில் சூழ் கழிப்பாலை எம்
ஐயனே, விதியே, அருள்! என்னுமே.

5.060   5 st/nd Thirumurai   Song # 7   திருநாவுக்கரசர்   தேவாரம்  
ஐயனே! அரனே! என்று அரற்றினால்,
உய்யல் ஆம்; உலகத்தவர் பேணுவர்;
செய்ய பாதம் இரண்டும் நினையவே,
வையம் ஆளவும் வைப்பர், மாற்பேறரே.

5.097   5 st/nd Thirumurai   Song # 10   திருநாவுக்கரசர்   தேவாரம்  
ஐயன், அந்தணன், ஆணொடு பெண்ணும் ஆம்
மெய்யன், மேதகு வெண்பொடிப் பூசிய
மை கொள் கண்டத்தன், மான்மறிக் கையினான்
பை கொள் பாம்பு அரை ஆர்த்த பரமனே.

6.024   6 st/nd Thirumurai   Song # 8   திருநாவுக்கரசர்   தேவாரம்  
ஐயன்காண், குமரன்காண், ஆதியான்காண்; அடல் மழுவாள் தான் ஒன்று பியில்மேல் ஏந்து
கையன்காண்; கடல் பூதப் படையினான்காண்; கண் எரியால் ஐங்கணையோன் உடல் காய்ந்தான்காண்;
வெய்யன்காண்; தண்புனல் சூழ் செஞ்சடையான்காண்;
வெண் நீற்றான்காண்; விசயற்கு அருள் செய்தான்காண்;
செய்யன்காண்; கரியன்காண்; வெளியோன் தான்காண்-திரு ஆரூரான்காண், என் சிந்தையானே.

6.061   6 st/nd Thirumurai   Song # 7   திருநாவுக்கரசர்   தேவாரம்  
ஐயினால் மிடறு அடைப்புண்டு, ஆக்கை விட்டு(வ்) ஆவியார் போவதுமே, அகத்தார் கூடி,
மையினால் கண் எழுதி, மாலை சூட்டி, மயானத்தில் இடுவதன் முன், மதியம் சூடும்
ஐயனார்க்கு ஆள் ஆகி, அன்பு மிக்கு(வ்), அகம் குழைந்து, மெய் அரும்பி, அடிகள் பாதம்
கையினால்-தொழும் அடியார் நெஞ்சினுள்ளே கன்றாப்பூர் நடுதறியைக் காணல் ஆமே!.

7.045   7 st/nd Thirumurai   Song # 11   சுந்தரமூர்த்தி சுவாமிகள்   திருப்பாட்டு  
ஐயனை, அத்தனை, ஆள் உடை ஆமாத்தூர் அண்ணலை,
மெய்யனை, மெய்யர்க்கு மெய்ப்பொருள் ஆன விமலனை,
மையனை, மை அணி கண்டனை, வன் தொண்டன்-ஊரன்-சொல்
பொய் ஒன்றும் இன்றிப் புலம்புவார் பொன் கழல் சேர்வரே.

8.105.08   8 st/nd Thirumurai   Song # 73   மாணிக்க வாசகர்    திருவாசகம்  
ஐய நின்ன தல்ல தில்லை மற்றோர் பற்று வஞ்சனேன்
பொய் கலந்த தல்ல தில்லை பொய்மை யேன்என் எம்பிரான்
மை கலந்த கண்ணி பங்க வந்து நின் கழல் கணே
மெய் கலந்த அன்பர் அன்பெ னக்கும் ஆக வேண்டுமே

8.225   8 st/nd Thirumurai   Song # 48   மாணிக்க வாசகர்    திருச்சிற்றம்பலக் கோவையார்  
ஐயுற வாய்நம் அகன்கடைக்
   கண்டுவண் டேருருட்டும்
மையுறு வாட்கண் மழவைத்
   தழுவமற் றுன்மகனே
மெய்யுற வாம்இதுன் னில்லே
   வருகெனவெள்கிச்சென்றாள்
கையுறு மான்மறி யோன்புலி
   யூரன்ன காரிகையே.

9.013   9 st/nd Thirumurai   Song # 4   கருவூர்த் தேவர்   திருவிசைப்பா  
ஐயபொட் டிட்ட அழகுவாள் நுதலும்
அழகிய விழியும்வெண்ணீறும்
சைவம்விட் டிட்ட சடைகளும் சடைமேல்
தரங்கமும் சதங்கையும் சிலம்பும்
மொய்கொள்எண் திக்கும் கண்டநின் தொண்டர்
முகமலர்ந்து இருகணீர் அரும்பக்
கைகள்மொட் டிக்கும் என்கொலோ கங்கை
கொண்டசோ ளேச்சரத் தானே !

10.803   10 st/nd Thirumurai   Song # 1   திருமூலர்   திருமந்திரம்  
ஐயைந்து மத்திமை ஆனது சாக்கிரம்
கய்கண்ட பன்னான்கில் கண்டங் கனாஎன்பர்
பொய்கண் டிலாதபுரு டன்னித யஞ்சுழுனை
மெய்கண் டவனுந்தி ஆகும் துரியமே.

10.806   10 st/nd Thirumurai   Song # 14   திருமூலர்   திருமந்திரம்  
ஐயைந்து பத்துடன் ஆனது சாக்கிரம்
கைகண்ட ஐயைந்தில் கண்டம் கனாஎன்பர்
பொய்கண்ட மூவர் புருடன் சுழுனையில்
மெய்கண் டவன்உந்தி மேவில் துரியமே.

10.806   10 st/nd Thirumurai   Song # 22   திருமூலர்   திருமந்திரம்  
ஐயைந்தும் ஆறும்ஓர் ஐந்தும் நனாவினில்
எய்யும் நனவு கனவு சுழுத்திஆம்
எய்தும்பின் சூக்குமம் எய்பகுதி மாயை
ஐயமுந் தானவன் அத்துரி யத்தனே.

10.807   10 st/nd Thirumurai   Song # 12   திருமூலர்   திருமந்திரம்  
ஐயைந் தொடுங்குமவ் வான்மாவில் ஆன்மாவும்
மெய்கண்டு சுத்தஅவ் வித்தையில் வீடாகும்
துய்யஅவ் வித்தை முதல் மூன்றுந் தொல்சத்தி
ஐயை சிவம் சித்தி ஆம் தோற்றம் அவ்வாறே.

10.807   10 st/nd Thirumurai   Song # 13   திருமூலர்   திருமந்திரம்  
ஐயைந்தும் ஆன்மாவில் ஆறோ டடங்கிடும்
மெய்கண்ட மேல்மூன்றும் மேவும்மெய் யோகத்தில்
கைகண்ட சத்தி சிவபரத் தேகாண
எய்யும் படிஅடங் கும்நாலேழ் எய்தியே.

10.808   10 st/nd Thirumurai   Song # 25   திருமூலர்   திருமந்திரம்  
ஐயைந்து மட்டுப் பகுதியும் மாயையாம்
பொய்கண்ட மாயேயந் தானும் புருடன்கண்(டு)
எய்யும் படியாய் எவற்றுமாய் அன்றாகி
உய்யும் பராவத்தை யுள்உறல் சுத்தமே.

10.924   10 st/nd Thirumurai   Song # 5   திருமூலர்   திருமந்திரம்  
ஐயென்னும் வித்தினில் ஆனை விளைப்பதோர்
செய்யுண்டு செய்யின் தெளிவறி வார்இல்லை
மையணி கண்டன் மனம்பெறின் அந்நிலம்
பொய்யொன் றுமின்றிப் புகல்எளி தாமே.

12.020   12 st/nd Thirumurai   Song # 28   சேக்கிழார்   தில்லை வாழ் அந்தணர் சருக்கம்  
ஐயர்நீ ரருளிச் செய்த
வண்ணம்யான் செய்வ தற்குப்
பொய்யில்சீர்ப் புதல்வ னில்லை
என்செய்கேன் புகலு மென்ன
மையறு சிறப்பின் மிக்க
மனையவள் தன்னைப் பற்றி
மொய்யலர் வாவி புக்கு 
மூழ்குவாய் எனமொ ழிந்தார்.
12.070   12 st/nd Thirumurai   Song # 20   சேக்கிழார்   தில்லை வாழ் அந்தணர் சருக்கம்  
ஐயர் கைதவம் அறிவுறா தவர்கடி தணுகி
எய்தி நோக்குறக் கோவணம் இருந்தவே றிடத்தின்
மையில் சிந்தையர் கண்டிலர் வைத்தகோ வணமுன்
செய்த தென்னென்று திகைத்தனர் தேடுவா ரானார்.
12.180   12 st/nd Thirumurai   Song # 30   சேக்கிழார்   மும்மையால் உலகாண்ட சருக்கம்  
ஐயரே அம்பலவர்
அருளால்இப் பொழுதணைந்தோம்
வெய்யஅழல் அமைத்துமக்குத்
தரவேண்டி எனவிளம்ப
நையுமனத் திருத்தொண்டர்
நானுய்ந்தேன் எனத்தொழுதார்
தெய்வமறை முனிவர்களும்
தீயமைத்த படிமொழிந்தார்.
12.210   12 st/nd Thirumurai   Song # 383   சேக்கிழார்   திருநின்ற சருக்கம்  
ஐயர் கோலம்அங் களித்தகன்
றிடஅடித் தொண்டர்
மையல் கொண்டுளம் மகிழ்ந்திட
வருந்திமற் றிங்குச்
செய்ய வேணியர் அருளிது
வோஎனத் தெளிந்து
வையம் உய்ந்திடக் கண்டமை
பாடுவார் மகிழ்ந்து.

12.280   12 st/nd Thirumurai   Song # 39   சேக்கிழார்   வம்பறா வரிவண்டுச் சருக்கம்  
ஐயவி யுடன்பல அமைத்தபுகை யாலும்
நெய்யகில் நறுங்குறை நிறைத்தபுகை யாலும்
வெய்யதழல் ஆகுதி விழுப்புகையி னாலும்
தெய்வமணம் நாறவரு செய்தொழில் விளைப்பார்.
12.280   12 st/nd Thirumurai   Song # 179   சேக்கிழார்   வம்பறா வரிவண்டுச் சருக்கம்  
ஐயர் நீரவ தரித்திட
இப்பதி அளவில்மா தவமுன்பு
செய்த வாறெனச் சிறப்புரைத்
தருளிஅச் செழும்பதி இடங்கொண்ட
மைகொள் கண்டர்தங் கோயிலி
னுட்புக்கு வலங்கொண்டு வணங்கிப்பார்
உய்ய வந்தவர் செழுந்தமிழ்ப்
பதிகம்அங் கிசையுடன் உரைசெய்தார்.
12.280   12 st/nd Thirumurai   Song # 451   சேக்கிழார்   வம்பறா வரிவண்டுச் சருக்கம்  
ஐயர்நீர் யாழ்இதனை முரிக்கும தென்
ஆளுடையா ளுடனே கூடச்
செய்யசடை யார்அளித்த திருவருளின்
பெருமையெலாம் தெரிய நம்பால்
எய்தியஇக் கருவியினில் அளவுபடு
மோநந்தம் இயல்புக் கேற்ப
வையகத்தோர் அறிவுறஇக் கருவிஅள
வையின்இயற்றல் வழக்கே என்றார்.
12.290   12 st/nd Thirumurai   Song # 363   சேக்கிழார்   வம்பறா வரிவண்டுச் சருக்கம்  
ஐயர்அங் கணைந்த போதில்
அகிலலோ கத்துள் ளாரும்
எய்தியே செறிந்து சூழ
எதிர்கொண்ட பரவை யார்தாம்
மெய்யுறு நடுக்கத் தோடு
மிக்கெழும் மகிழ்ச்சி பொங்கச்
செய்யதா ளிணைமுன் சேர
விரைவினாற் சென்று வீழ்ந்தார்.
12.370   12 st/nd Thirumurai   Song # 132   சேக்கிழார்   வார்கொண்ட வனமுலையாள் சருக்கம்  
ஐயா றதனைக் கண்டுதொழு
தருளா ரூரர் தமைநோக்கிச்
செய்யாள் பிரியாச் சேரமான்
பெருமாள் அருளிச் செய்கின்றார்
மையார் கண்டர் மருவுதிரு
வையா றிறைஞ்ச மனமுருகி
நையா நின்ற திவ்வாறு
கடந்து பணிவோம் நாமென்ன.
12.460   12 st/nd Thirumurai   Song # 6   சேக்கிழார்   பொய்யடிமை யில்லாத புலவர் சருக்கம்  
ஐய மின்றி யரிய திருப்பணி
மெய்யி னாற்செய்த வீரத் திருத்தொண்டர்
வைய்யம் உய்ய மணிமன்று ளாடுவார்
செய்ய பாதத் திருநிழல் சேர்ந்தனர்.

This page was last modified on Thu, 09 May 2024 05:33:06 +0000
          send corrections and suggestions to admin-at-sivaya.org

thirumurai all list