சிவய.திருக்கூட்டம்
sivaya.org
Please set your language preference
by clicking below languages link
Search this site with
words in any language e.g. पोऱ्‌ऱि
song/pathigam/paasuram numbers: e.g. 7.039

This page in Tamil   Hindi/Sanskrit   Telugu   Malayalam   Bengali   Kannada   English   ITRANS    Marati  Gujarathi   Oriya   Singala   Tibetian   Thai   Japanese   Urdu   Cyrillic/Russian   Spanish   Hebrew  
Selected thirumurai      thirumurai Thalangal      All thirumurai Songs     

Thirumurai   1   2   3   4   5   6   7   8   9   10   11   12

Pathigam first Letter :                                          
Paadal first letter:     (  .                                                
Search: Filter By: Order By:
திருமுறை 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12 இருந்து பாடல் சொல் ஒரு
ஒருமை     ஒருங்கு     ஒருக்கிய     ஒருவன்     ஒருவனு     ஒருங்கிய     ஒருக்கால்     ஒருபொழு     ஒருவனை     ஒருபால்     ஒருகண்     ஒருங்கா     ஒருகணையும்     ஒருடம்     ஒருநெடுங்     ஒருமுன்கைத்     ஒருமகள்     ஒருவாறு     ஒருகுன்ற     ஒருபிறப்பும்     ஒருவர்     ஒருகுடைக்கீழ்     ஒருதனித்     ஒருத்திஉமையோடும்     ஒருக்கும்     ஒருவரால்     ஒருவரையும்     ஒருக்க     ஒரு     ஒருத்தி     ஒருவரும்     ஒருவரைத்     ஒருத்தனார்,     ஒருத்தன்     ஒருத்தியை     ஒருவராய்     ஒருத்தனாய்     ஒருத்தனை,     ஒருவனாய்     ஒருமையே     ஒருவர்க்கு     ஒருத்தரும்     ஒருவனே     ஒருங்கட     ஒருங்கிரு    
1.001   1 st/nd Thirumurai   Song # 5   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
ஒருமை பெண்மை உடையன்! சடையன்! விடை ஊரும் இவன்! என்ன
அருமை ஆக உரை செய்ய அமர்ந்து, எனது உள்ளம் கவர் கள்வன்-
கருமை பெற்ற கடல் கொள்ள, மிதந்தது ஒர் காலம் இது என்னப்
பெருமை பெற்ற பிரமாபுரம் மேவிய பெம்மான்-இவன் அன்றே!

1.043   1 st/nd Thirumurai   Song # 4   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
ஒருங்கு அளி, நீ இறைவா! என்று உம்பர்கள் ஓலம் இடக் கண்டு,
இருங்களம் ஆர விடத்தை இன் அமுது உன்னிய ஈசர்
மருங்கு அளி ஆர் பிடி வாயில் வாழ் வெதிரின் முளை வாரி,
கருங்களியானை கொடுக்கும் கற்குடி மா மலையாரே.

1.124   1 st/nd Thirumurai   Song # 8   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
ஒருக்கிய உணர்வினொடு ஒளிநெறி செலுமவர்
அரக்கன் நல்மணி முடி ஒருபதும் இருபது-
கரக்கனம் நெரிதர, மலர் அடிவிரல் கொடு
நெருக்கினன் மிழலையை நினைய வல்லவரே.

2.031   2 st/nd Thirumurai   Song # 5   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
ஒருத்திஉமையோடும் ஒருபாகம் அதுஆய
நிருத்தன் அவன், நீதி அவன், நித்தன், நெறிஆய
விருத்தன் அவன், வேதம் என அங்கம் அவை ஓதும்
கருத்தவன், இருப்பது கருப்பறியலூரே.

2.036   2 st/nd Thirumurai   Song # 8   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
ஒருக்கும் மனத்து அன்பர் உள்ளீர்! இது சொல்லீர்
பருக் கை மதவேழம் உரித்து, உமையோடும்
இருக்கை இரும்பூளை இடம்கொண்ட ஈசன்
அரக்கன் உரம் தீர்த்து அருள் ஆக்கியஆறே?

2.106   2 st/nd Thirumurai   Song # 6   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
ஒருவரால் உவமிப்பதை அரியது ஓர் மேனியர்; மடமாதர்
இருவர் ஆதரிப்பார்; பலபூதமும் பேய்களும் அடையாளம்;
அருவராதது ஒர் வெண்தலை கைப் பிடித்து, அகம்தொறும்
பலிக்கு என்று
வருவரேல், அவர் வலஞ்சுழி அடிகளே; வரி வளை
கவர்ந்தாரே!

3.082   3 st/nd Thirumurai   Song # 8   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
ஒருவரையும் மேல் வலி கொடேன் என எழுந்த விறலோன், இப்
பெருவரையின் மேல் ஒர் பெருமானும் உளனோ? என வெகுண்ட
கருவரையும் ஆழ்கடலும் அன்ன திறல் கைகள் உடையோனை,
அரு வரையில் ஊன்றி அடர்த்தான் உறைவது அவளிவணலூரே.

3.118   3 st/nd Thirumurai   Song # 8   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
ஒருக்க முன் நினையாத் தக்கன்தன் வேள்வி உடைதர
உழறிய படையர்
அரக்கனை வரையால் ஆற்றல் அன்று அழித்த அழகனார்,
அமர்ந்து உறை கோயில்
பரக்கும் வண்புகழார் பழி அவை பார்த்துப் பலபல
அறங்களே பயிற்றி,
கரக்கும் ஆறு அறியா வண்மையால் வாழும் கழுமலநகர்
எனல் ஆமே.

4.044   4 st/nd Thirumurai   Song # 2   திருநாவுக்கரசர்   தேவாரம்  
ஒரு முழம் உள்ள குட்டம், ஒன்பது துளை உடைத்து ஆய்;
அரை முழம் அதன் அக(ல்)லம்; அதனில் வாழ் முதலை ஐந்து;
பெரு முழை வாய் தல் பற்றிக் கிடந்து நான் பிதற்றுகின்றேன்
கருமுகில் தவழும் மாடக் கச்சி ஏகம்பனீரே!

4.045   4 st/nd Thirumurai   Song # 6   திருநாவுக்கரசர்   தேவாரம்  
ஒருத்தி தன் தலைச் சென்றாளைக் கரந்திட்டான்; உலகம் ஏத்த
ஒருத்திக்கு நல்லன் ஆகி, மறுப் படுத்து ஒளித்தும், ஈண்டே
ஒருத்தியைப் பாகம் வைத்தான்; உணர்வினால் ஐயம் உண்ணி;
ஒருத்திக்கும் நல்லன் அல்லன் ஒற்றியூர் உடைய கோவே.

4.062   4 st/nd Thirumurai   Song # 3   திருநாவுக்கரசர்   தேவாரம்  
ஒரு மருந்து ஆகி உள்ளாய், உம்பரோடு உலகுக்கு எல்லாம்;
பெரு மருந்து ஆகி நின்றாய்; பேர் அமுதின் சுவை ஆய்க்
கரு மருந்து ஆகி உள்ளாய்;-ஆளும் வல்வினைகள் தீர்க்கும்
அரு மருந்து! ஆலவாயில் அப்பனே!-அருள் செயாயே!

4.073   4 st/nd Thirumurai   Song # 9   திருநாவுக்கரசர்   தேவாரம்  
ஒருவரும் நிகர் இலாத ஒண் திறல் அரக்கன் ஓடி,
பெரு வரை எடுத்த திண் தோள் பிறங்கிய முடிகள் இற்று,
மருவி, எம்பெருமான்! என்ன, மலர் அடி மெள்ள வாங்கித்
திரு அருள் செய்தார்-சேறைச் செந்நெறிச் செல்வனாரே.

4.101   4 st/nd Thirumurai   Song # 3   திருநாவுக்கரசர்   தேவாரம்  
ஒரு வடிவு இன்றி நின்று உண் குண்டர்முன் நமக்கு உண்டுகொலோ-
செரு வடி வெஞ்சிலையால் புரம் அட்டவன், சென்று அடையாத்
திரு உடையான், திரு ஆரூர்த் திருமூலட்டானன், செங்கண்
பொரு விடையான், அடித்தொண்டர்க்குத் தொண்டர் ஆம் புண்ணியமே?

4.110   4 st/nd Thirumurai   Song # 4   திருநாவுக்கரசர்   தேவாரம்  
ஒருவரைத் தஞ்சம் என்று எண்ணாது உன் பாதம் இறைஞ்சுகின்றார்
அருவினைச் சுற்றம் அகல்வி கண்டாய்-அண்டமே அளவும்
பெருவரைக்குன்றம் பிளிறப் பிளந்து, வேய்த்தோளி அஞ்சப்
பருவரைத் தோல் உரித்தாய்! எம்மை ஆளும் பசுபதியே!

5.001   5 st/nd Thirumurai   Song # 7   திருநாவுக்கரசர்   தேவாரம்  
ஒருத்தனார், உலகங்கட்கு ஒரு சுடர்,
திருத்தனார், தில்லைச் சிற்றம்பலவனார்,
விருத்தனார், இளையார், விடம் உண்ட எம்
அருத்தனார், அடியாரை அறிவரே.

5.013   5 st/nd Thirumurai   Song # 10   திருநாவுக்கரசர்   தேவாரம்  
ஒருத்தன் ஓங்கலைத் தாங்கல் உற்றான் உரம்
வருத்தினாய்! வஞ்சனேன் மனம் மன்னிய
திருத்தனே! திரு வீழிமிழலையுள்
அருத்தனே!-அடியேனைக் குறிக்கொளே!

5.017   5 st/nd Thirumurai   Song # 7   திருநாவுக்கரசர்   தேவாரம்  
ஒருத்தியை ஒருபாகத்து அடக்கியும்
பொருத்திய(ப்) புனிதன், புரிபுன்சடைக்
கருத்தனை, கறைக்கண்டனை, கண் நுதல்
நிருத்தனை,-நெருநல் கண்ட வெண்ணியே.

5.020   5 st/nd Thirumurai   Song # 1   திருநாவுக்கரசர்   தேவாரம்  
ஒருவராய் இரு மூவரும் ஆயவன்,
குரு அது ஆய குழகன், உறைவு இடம்-
பரு வரால் குதிகொள்ளும் பழனம் சூழ்
கரு அது ஆம் கடம்பூர்க் கரக்கோயிலே.

5.032   5 st/nd Thirumurai   Song # 7   திருநாவுக்கரசர்   தேவாரம்  
ஒருத்தனாய் உலகு ஏழும் தொழ நின்று
பருத்த பாம்பொடு பால்மதி கங்கையும்
பொருத்தன் ஆகிலும், பூந்துருத்தி(ந்) நகர்த்
திருத்தன் சேவடிக் கீழ் நாம் இருப்பதே!

5.062   5 st/nd Thirumurai   Song # 1   திருநாவுக்கரசர்   தேவாரம்  
ஒருத்தனை, மூ உலகொடு தேவர்க்கும்
அருத்தனை, அடியேன் மனத்துள்(ள்) அமர்
கருத்தனை, கடுவாய்ப் புனல் ஆடிய
திருத்தனை, புத்தூர் சென்று கண்டு உய்ந்தெனே.

5.097   5 st/nd Thirumurai   Song # 11   திருநாவுக்கரசர்   தேவாரம்  
ஒருவன் ஆகி நின்றான், இவ் உலகுஎலாம்;
இருவர் ஆகி நின்றார்கட்கு அறிகிலான்;
அரு அரா அரை ஆர்த்தவன்; ஆர் கழல்
பரவுவார் அவர் பாவம் பறையுமே.

6.003   6 st/nd Thirumurai   Song # 5   திருநாவுக்கரசர்   தேவாரம்  
ஒரு பிறப்பு இல் அரன் அடியை உணர்ந்தும் காணார்; உயர்கதிக்கு வழி தேடிப் போகமாட்டார்;
வரு பிறப்பு ஒன்று உணராது, மாசு பூசி, வழி   காணாதவர் போல்வார் மனத்தன் ஆகி,
அரு பிறப்பை அறுப்பிக்கும் அதிகை ஊரன் அம்மான் தன் அடி இணையே அணைந்து வாழாது,
இருபிறப்பும் வெறுவியராய் இருந்தார் சொல்கேட்டு- ஏழையேன் நான் பண்டு இகழ்ந்த ஆறே!

6.006   6 st/nd Thirumurai   Song # 5   திருநாவுக்கரசர்   தேவாரம்  
ஒரு காலத்து ஒன்று ஆகி நின்ற(வ்) அடி;
 ஊழிதோறுஊழி உயர்ந்த(வ்) அடி;
பொரு கழலும் பல்சிலம்பும் ஆர்க்கும்(ம்) அடி;
புகழ்வார் புகழ் தகைய வல்ல(வ்) அடி;
இரு நிலத்தார் இன்பு உற்று அங்கு ஏத்தும்(ம்) அடி;
இன்பு உற்றார் இட்ட பூ ஏறும்(ம்) அடி;
திரு அதிகைத் தென்கெடில நாடன்(ன்) அடி-திரு
 வீரட்டானத்து எம் செல்வன்(ன்) அடி.

6.026   6 st/nd Thirumurai   Song # 3   திருநாவுக்கரசர்   தேவாரம்  
ஒரு காலத்து ஒரு தேவர் கண் கொண்டானை, ஊழிதோறு ஊழி உயர்ந்தான் தன்னை,
வருகாலம் செல்காலம் ஆயினானை, வன்   கருப்புச்சிலைக் காமன் உடல் அட்டானை,
பொரு வேழக்-களிற்று உரிவைப் போர்வையானை, புள் அரையன் உடல் தன்னைப் பொடி செய்தானை,
அரு வேள்வி தகர்த்து எச்சன் தலை கொண்டானை,- ஆரூரில் கண்டு அடியேன் அயர்த்த ஆறே!.

6.028   6 st/nd Thirumurai   Song # 10   திருநாவுக்கரசர்   தேவாரம்  
ஒரு காலத்து ஒன்று ஆகி நின்றார்போலும்; ஊழிபல கண்டு இருந்தார்போலும்;
பெருகாமே வெள்ளம் தவிர்த்தார்போலும்; பிறப்பு, இடும்பை, சாக்காடு, ஒன்று இல்லார்போலும்;
உருகாதார் உள்ளத்து நில்லார்போலும்; உகப்பார்தம் மனத்து என்றும் நீங்கார்போலும்;
அருகு ஆக வந்து என்னை, அஞ்சல்! என்பார்-அணி ஆரூர்த் திரு மூலட்டானனாரே.

6.034   6 st/nd Thirumurai   Song # 1   திருநாவுக்கரசர்   தேவாரம்  
ஒருவனாய் உலகு ஏத்த நின்ற நாளோ? ஓர்   உருவே மூ உருவம் ஆன நாளோ?
கருவனாய்க் காலனை முன் காய்ந்த நாளோ?  காமனையும் கண் அழலால் விழித்த நாளோ?
மருவனாய் மண்ணும் விண்ணும் தெரித்த
 நாளோ? மான்மறி கை ஏந்தி, ஓர் மாது, ஓர்பாகம்
திருவினாள் சேர்வதற்கு முன்னோ? பின்னோ? திரு ஆரூர் கோயிலாக் கொண்ட நாளே.

6.039   6 st/nd Thirumurai   Song # 10   திருநாவுக்கரசர்   தேவாரம்  
ஒரு சுடர் ஆய், உலகு ஏழும் ஆனான் கண்டாய்; ஓங்காரத்து உள் பொருள் ஆய் நின்றான் கண்டாய்;
விரி சுடர் ஆய், விளங்கு ஒளி ஆய், நின்றான் கண்டாய்; விழவு ஒலியும், வேள்வொலியும், ஆனான் கண்டாய்;
இரு சுடர் மீது ஓடா இலங்கைக்கோனை ஈடு அழிய இருபது தோள் இறுத்தான் கண்டாய்;
மரு சுடரின் மாணிக்கக் குன்று கண்டாய் மழபாடி   மன்னும் மணாளன் தானே.

6.046   6 st/nd Thirumurai   Song # 5   திருநாவுக்கரசர்   தேவாரம்  
ஒரு மணியை, உலகுக்கு ஓர் உறுதிதன்னை, உதயத்தின்   உச்சியை, உரும் ஆனானை,
பருமணியை, பாலோடு அஞ்சு ஆடினானை, பவித்திரனை, பசுபதியை, பவளக்குன்றை,
திருமணியை, தித்திப்பை, தேன் அது ஆகி, தீம்கரும்பின் இன்சுவையை, திகழும் சோதி
அருமணியை, ஆவடுதண் துறையுள் மேய அரன் அடியே அடி நாயேன் அடைந்து உய்ந்தேனே!.

6.099   6 st/nd Thirumurai   Song # 10   திருநாவுக்கரசர்   தேவாரம்  
ஒருவரையும் அல்லாது உணராது, உள்ளம்;
உணர்ச்சித் தடுமாற்றத்துள்ளே நின்ற
இருவரையும் மூவரையும் என்மேல் ஏவி,
இல்லாத தரவு அறுத்தாய்க்கு இல்லேன்; ஏலக்
கருவரை சூழ் கானல் இலங்கை வேந்தன்
கடுந் தேர் மீது ஓடாமைக் காலால் செற்ற
பொரு வரையாய்! உன் அடிக்கே போதுகின்றேன்
பூம் புகலூர் மேவிய புண்ணியனே!.

7.014   7 st/nd Thirumurai   Song # 11   சுந்தரமூர்த்தி சுவாமிகள்   திருப்பாட்டு  
ஒருமையே அல்லேன், எழுமையும் அடியேன்; அடியவர்க்கு அடியனும் ஆனேன்;
உரிமையால் உரியேன்; உள்ளமும் உருகும்; ஒண் மலர்ச் சேவடி காட்டாய்;
அருமை ஆம் புகழார்க்கு அருள் செயும் பாச்சிலாச்சிராமத்து எம் அடிகள்,
பெருமைகள் பேசிச் சிறுமைகள் செய்யில், இவர் அலாது இல்லையோ, பிரானார்? .

7.040   7 st/nd Thirumurai   Song # 2   சுந்தரமூர்த்தி சுவாமிகள்   திருப்பாட்டு  
ஒரு மேக-முகில் ஆகி, ஒத்து உலகம் தான் ஆய், ஊர்வனவும் நிற்பனவும் ஊழிகளும் தான் ஆய்,
பொரு மேவு கடல் ஆகி, பூதங்கள் ஐந்து ஆய், புனைந்தவனை, புண்ணியனை,  புரிசடையினானை,
திரு மேவு செல்வத்தார் தீ மூன்றும் வளர்த்த திருத் தக்க அந்தணர்கள் ஓதும் நகர் எங்கும்
கருமேதி செந்தாமரை மேயும் கழனி கானாட்டு முள்ளூரில் கண்டு தொழுதேனே .

7.101   7 st/nd Thirumurai   Song # 5   சுந்தரமூர்த்தி சுவாமிகள்   திருப்பாட்டு  
ஒருவர்க்கு ஒருவர் அரிது ஆகில், உடை வெண்தலை கொண்டு ஊர் ஊரன்
இருவர்க்கு ஒருவர் இரந்து உண்டால் எளிதே? சொல்லீர்-எத்தனையும்
பரு வன் கனகம் கற்பூரம் பகர்ந்த முகந்து பப்பரவர்
தெருவில் சிந்தும் தென்நாகைத் திருக்காரோணத்து இருப்பீரே!

8.103   8 st/nd Thirumurai   Song # 33   மாணிக்க வாசகர்    திருவாசகம்  
ஒருத்தரும் வழாமை ஒடுக்கினன்;
தடக் கையின் நெல்லிக்கனி எனக்கு ஆயினன்:
சொல்லுவது அறியேன்; வாழி! முறையோ?
தரியேன் நாயேன்; தான் எனைச் செய்தது
தெரியேன்; ஆ! ஆ! செத்தேன்; அடியேற்கு

8.104   8 st/nd Thirumurai   Song # 7   மாணிக்க வாசகர்    திருவாசகம்  
ஒருங்கிய சாயல்; நெருங்கி, உள் மதர்த்து,
கச்சு அற நிமிர்ந்து, கதிர்த்து, முன் பணைத்து,
எய்த்து இடை வருந்த எழுந்து, புடை பரந்து,
ஈர்க்கு இடை போகா இள முலை; மாதர் தம்
கூர்த்த நயனக் கொள்ளையில் பிழைத்தும்:

8.105.07   8 st/nd Thirumurai   Song # 68   மாணிக்க வாசகர்    திருவாசகம்  
ஒருவனே போற்றி! ஒப்பு இல் அப்பனே, போற்றி! வானோர்
குருவனே, போற்றி! எங்கள் கோமளக் கொழுந்து, போற்றி!
வருக' என்று, என்னை நின்பால் வாங்கிட வேண்டும், போற்றி!
தருக நின் பாதம், போற்றி! தமியனேன் தனிமை தீர்த்தே.

8.204   8 st/nd Thirumurai   Song # 6   மாணிக்க வாசகர்    திருச்சிற்றம்பலக் கோவையார்  
ஒருங்கட மூவெயி லொற்றைக்
   கணைகொள்சிற் றம்பலவன்
கருங்கடம் மூன்றுகு நால்வாய்க்
   கரியுரித் தோன்கயிலை
இருங்கடம் மூடும் பொழிலெழிற்
   கொம்பரன் னீர்களின்னே
வருங்கடம் மூர்பகர்ந் தாற்பழி
   யோவிங்கு வாழ்பவர்க்கே.

9.017   9 st/nd Thirumurai   Song # 10   கருவூர்த் தேவர்   திருவிசைப்பா  
ஒருங்கிரு கண்ணின் எண்ணில்புன் மாக்கள்
   உறங்கிருள் நடுநல்யா மத்தோர்
கருங்கண்நின் றிமைக்குஞ் செழுஞ்சுடர் விளக்கங்
   கலந்தெனக் கலந்துணர் கருவூர்
தருங்கரும் பனைய தீந்தமிழ் மாலை
   தடம்பொழில் மருதயாழ் உதிப்ப
வருங்கருங் கண்டத் தண்டவா னவர்கோன்
   மருவிடந் திருவிடை மருதே. 

10.209   10 st/nd Thirumurai   Song # 16   திருமூலர்   திருமந்திரம்  
ஒருவன் ஒருத்தி விளையாடல் உற்றார்
இருவர் விளையாட்டும் எல்லாம் விளைக்கும்
பருவங்கள் தோறும் பயன்பல வான
திருவொன்றிற் செய்கை செகமுற்று மாமே. 

10.209   10 st/nd Thirumurai   Song # 24   திருமூலர்   திருமந்திரம்  
ஒருவனு மேஉல கேழும் படைத்தான்
ஒருவனு மேஉல கேழும் அளித்தான்
ஒருவனு மேஉல கேழும் துடைத்தான்
ஒருவனு மேஉல கோடுயிர் தானே. 

10.212   10 st/nd Thirumurai   Song # 8   திருமூலர்   திருமந்திரம்  
ஒருங்கிய பாசத்துள் உத்தம சித்தன்
இருங்கரை மேலிருந் தின்புற நாடி
வருங்கரை ஓரா வகையினிற் கங்கை
அருங்கரை பேணில் அழுக்கது வாமே. 

10.306   10 st/nd Thirumurai   Song # 8   திருமூலர்   திருமந்திரம்  
ஒருக்கால் உபாதியை ஒண்சோதி தன்னைப்
பிரித்துணர் வந்த உபாதிப் பிரிவைக்
கரைத்துணர் வுன்னல் கரைதல்உள் நோக்கல்
பிரத்தியா காரப் பெருமைய தாமே.

10.308   10 st/nd Thirumurai   Song # 4   திருமூலர்   திருமந்திரம்  
ஒருபொழு துன்னார் உடலோ டுயிரை
ஒருபொழு துன்னார் உயிருட் சிவனை
ஒருபொழு துன்னார் சிவனுறை சிந்தையை
ஒருபொழு துன்னார் சந்திரப் பூவே. 

10.815   10 st/nd Thirumurai   Song # 21   திருமூலர்   திருமந்திரம்  
ஒருவனை உன்னார் உயிரினை உன்னார்
இருவினை உன்னார் இருமாயை உன்னார்
ஒருவனு மேஉள் ளுணர்த்திநின் றூட்டி
அருவனு மாகிய ஆதரத் தானே

10.831   10 st/nd Thirumurai   Song # 2   திருமூலர்   திருமந்திரம்  
ஒருங்கிய பூவும்ஓர் எட்டித ழாகும்
மருங்கியல் மாயா புரியத னுள்ளே
சுருங்கிய தண்டின் சுழுனையி னூடே
ஒருங்கிய சோதியை ஓர்ந்தெழும் உய்ந்தே.

11.004   11 st/nd Thirumurai   Song # 41   காரைக்கால் அம்மையார்    அற்புதத் திருவந்தாதி  
ஒருபால் உலகளந்த மாலவனாம்; மற்றை
ஒருபால் உமையவளாம் என்றால் - இருபாலும்
நின்னுருவ மாக நிறந்தெரிய மாட்டோமால்
நின்னுருவோ மின்னுருவோ நேர்ந்து.

11.008   11 st/nd Thirumurai   Song # 73   சேரமான் பெருமாள் நாயனார்   திருக்கயிலாய ஞான உலா  
ஒருகண் எழுதிவிட் டொன்றெழுதா தோடித்
தெருவம் புகுவார் திகைப்பார் அருகிருந்த

11.009   11 st/nd Thirumurai   Song # 19   நக்கீரதேவ நாயனார்   கயிலைபாதி காளத்திபாதி அந்தாதி  
ஒருங்கா துடனேநின் றொர்ஐவர் எம்மை
நெருங்காமல் நித்தம் ஒருகால் நெருங்கிக்
கருங்கலோங் கும்பற் கயிலாயம் மேயான்
வருங்கொலோ நம்பால் மதித்து.

11.010   11 st/nd Thirumurai   Song # 16   நக்கீரதேவ நாயனார்   திருஈங்கோய்மலை எழுபது  
ஒருகணையும் கேழல் உயிர்செகுத்துக் கையில்
இருகணையும் ஆனைமேல் எய்ய அருகணையும்
ஆளரிதான் ஓட அரிவெருவும் ஈங்கோயே
கோளரிக்கும் காண்பரியான் குன்று.

11.012   11 st/nd Thirumurai   Song # 1   நக்கீரதேவ நாயனார்   திருஎழு கூற்றிருக்கை  
ஒருடம் பீருரு வாயினை ஒன்றுபுரிந்
தொன்றின் ஈரிதழ்க் கொன்றை சூடினை
மூவிலைச் சூலம் ஏந்தினை
சுடருஞ் சென்னி மீமிசை
இருகோட் டொருமதி எழில்பெற மிலைச்சினை:
ஒருகணை இருதோள் செவியுற வாங்கி
மூவெயில் நாற்றிசை முரணரண் செகுத்தனை
ஆற்ற முன்னெறி பயந்தனை
செறிய இரண்டும் நீக்கி
ஒன்று நினைவார்க் குறுதி ஆயினை
அந்நெறி ஒன்று
மனம்வைத் திரண்டு நினைவிலோர்க்கு
முன்னெறி உலகங் காட்டினை அந்நெறி
நான்கென ஊழிதோற்றினை
சொல்லும் ஐந்தலை அரவசைத் தசைந்தனை

நான்முகன் மேல்முகக் கபாலம் ஏந்தினை
நூன்முக முப்புரி மார்பில்
இருவர் அங்கம் ஒருங்குடன் ஏந்திய
ஒருவநின் ஆதி காணா திருவர்
மூவுல குழன்று நாற்றிசை ஊழிதர

ஐம்பெருங் குன்றத் தழலாய்த் தோன்றினை
ஆறுநின் சடையது ஐந்துநின் நிலையது
நான்குநின் வாய்மொழி மூன்றுநின் கண்ணே
இரண்டுநின் குழையே ஒன்றுநின் ஏறே
ஒன்றிய காட்சி உமையவள் நடுங்க

இருங்களிற் றுரிவை போர்த்தனை நெருங்கி
முத்தீ நான்மறை ஐம்புலன் அடக்கிய
அறுதொழி லாளர்க் குறுதி பயந்தனை
ஏழில் இன்னரம் பிசைத்தனை
ஆறில் அமுதம் பயந்தனை ஐந்தில்
விறலியர்கொட்டும் அழுத்த ஏந்தினை
ஆல நீழல் அன்றிருந் தறநெறி
நால்வர் கேட்க நன்கினி துரைத்தனை
நன்றி இல்லா முந்நீர்ச் சூர்மாக்
கொன்றங் கிருவரை எறிந்த ஒருவன்

தாதை ஒருடல் திருவடி வாயினை
தருமம் மூவகை உலகம் உணரக்
கூறுவை நால்வகை
இலக்கண இலக்கியம் நலத்தக மொழிந்தனை
ஐங்கணை யவனொடு காலனை அடர்த்தனை அறுவகைச் சமயமும் நெறிமையில் வகுத்தனை
ஏழின் ஓசை இராவணன் பாடத்
தாழ்வாய்க் கேட்டவன் தலையளி பொருந்தினை
ஆறிய சிந்தை யாகி ஐங்கதித்
தேரொடு திசைசெல விடுத்தோன்
நாற்றோள் நலனே நந்திபிங் கிருடியென்
றேற்ற பூதம் மூன்றுடன் பாட
இருகண் மொந்தை ஒருகணம் கொட்ட
மட்டுவிரி அலங்கல் மலைமகள் காண
நட்டம் ஆடிய நம்ப அதனால்

சிறியேன் சொன்ன அறிவில் வாசகம்
வறிதெனக் கொள்ளா யாகல் வேண்டும்
வெறிகமழ் கொன்றையொடு வெண்ணில வணிந்து
கீதம் பாடிய அண்ணல்
பாதம் சென்னியிற் பரவுவன் பணிந்தே.

பணிந்தேன்நின் பாதம் பரமேட்டீ பால்நீ
றணிந்தால வாயில் அமர்ந்தாய் தணிந்தென்மேல்
மெய்யெரிவு தீரப் பணித்தருளு வேதியனே
ஐயுறவொன் றின்றி அமர்ந்து.

11.025   11 st/nd Thirumurai   Song # 1   அதிராவடிகள்   மூத்த பிள்ளையார் திருமும்மணிக்கோவை  
ஒருநெடுங் கங்கை இருங்குறும் பைம்புகர்
மும்முகச் செந்நுதி நாலிணர் வெள்நிணக்
குடற்புலவு கமழும் அடற்கழுப் படையவன்
மதலை மாமதந் துவன்றிய கதனுடைக்
கடதடக் கபோலத் தோரிட மருப்பின்
கரண்டக உதரத்து முரண்தரு குழவிதன்
சேவடி யுகளம் அல்லது
யாவையும் இலம்இனி இருநிலத் திடையே.

12.120   12 st/nd Thirumurai   Song # 24   சேக்கிழார்   இலை மலிந்த சருக்கம்  
ஒருமுன்கைத் தனிமணிகோத்
தணிந்தவொளிர் சூத்திரமும்
அருமறைநூற் கோவணத்தின்
மிசையசையும் திருவுடையும்
இருநிலத்தின் மிசைதோய்ந்த
எழுதரிய திருவடியும்
திருவடியில் திருப்பஞ்ச
முத்திரையுந் திகழ்ந்திலங்க.
12.120   12 st/nd Thirumurai   Song # 37   சேக்கிழார்   இலை மலிந்த சருக்கம்  
ஒருமகள் கூந்தல் தன்னை
வதுவைநாள் ஒருவர்க் கீந்த
பெருமையார் தன்மை போற்றும்
பெருமைஎன் அளவிற் றாமே
மருவிய கமரிற் புக்க
மாவடு விடேலென் னோசை
உரிமையால் கேட்க வல்லார்
திறமினி யுரைக்க லுற்றேன்.
12.210   12 st/nd Thirumurai   Song # 30   சேக்கிழார்   திருநின்ற சருக்கம்  
ஒருவாறு பெருங்கிளைஞர்
மனந்தேற்றத் துயரொழிந்து
பெருவானம் அடைந்தவர்க்குச்
செய்கடன்கள் பெருக்கினார்
மருவார்மேல் மன்னவற்கா
மலையப்போங் கலிப்பகையார்
பொருவாரும் போர்க்களத்தில்
உயிர்கொடுத்துப் புகழ்கொண்டார்.
12.250   12 st/nd Thirumurai   Song # 11   சேக்கிழார்   திருநின்ற சருக்கம்  
ஒருகுன்ற வில்லாரைத்
திருப்பழனத் துள்ளிறைஞ்சி
வருகின்றோம் வழிக்கரையில்
நீர்வைத்த வாய்ந்தவளம்
தருகின்ற நிழல்தண்ணீர்ப்
பந்தருங்கண் டத்தகைமை
புரிகின்ற அறம்பிறவும்
கேட்டணைந்தோம் எனப்புகல்வார்.
12.280   12 st/nd Thirumurai   Song # 264   சேக்கிழார்   வம்பறா வரிவண்டுச் சருக்கம்  
ஒருபிறப்பும் எய்தாமை உடையார் தம்மை
உலகியல்பின் உபநயன முறைமை யாகும்
இருபிறப்பின் நிலைமையினைச் சடங்கு காட்டி
எய்துவிக்கும் மறைமுனிவ ரெதிரே நின்று
வருதிறத்தின் மறைநான்குந் தந்தோம் என்று
மந்திரங்கள் மொழிந்தவர்க்கு மதுர வாக்கால்
பொருவிறப்ப ஓதினார் புகலி வந்த
புண்ணியனார் எண்ணிறந்த புனித வேதம்.
12.280   12 st/nd Thirumurai   Song # 1080   சேக்கிழார்   வம்பறா வரிவண்டுச் சருக்கம்  
ஒருமை உய்த்தநல் லுணர்வி
னீர்உல கவர்அறிய
அருமை யால்பெறும் மகள்என்பு
நிறைத்தஅக் குடத்தைப்
பெரும யானத்து நடம்புரி
வார்பெருங் கோயில்
திரும திற்புற வாய்தலில்
கொணர்கென்று செப்ப.
12.370   12 st/nd Thirumurai   Song # 67   சேக்கிழார்   வார்கொண்ட வனமுலையாள் சருக்கம்  
ஒருவர் ஒருவ ரிற்கலந்த
வுணர்வால் இன்ப மொழியுரைத்து
மருவ இனியார் பாற்செய்வ
தென்னா மென்னு மகிழ்ச்சியினால்
பருவ மழைச்செங் கைபற்றிக்
கொண்டு பரமர் தாள்பணியத்
தெருவு நீங்கிக் கோயிலினுள்
புகுந்தார் சேர மான்தோழர்.
12.390   12 st/nd Thirumurai   Song # 5   சேக்கிழார்   வார்கொண்ட வனமுலையாள் சருக்கம்  
ஒருமை யுரிமைத் தில்லைவாழந்
தணர்கள் தம்மில் ஒருகுடியைப்
பெருமை முடியை யருமைபுரி
காவல் பேணும் படியிருத்தி
இருமை மரபுந் தூயவர்தாம்
சேரர் நாட்டில் எய்தியபின்
வரும்ஐ யுறவால் மனந்தளர்ந்து
மன்று ளாடுங் கழல்பணிவார்.
12.410   12 st/nd Thirumurai   Song # 9   சேக்கிழார்   பொய்யடிமை யில்லாத புலவர் சருக்கம்  
ஒருகுடைக்கீழ் மண்மகளை
உரிமையினில் மணம்புணர்ந்து
பருவரைத்தோள் வென்றியினால்
பார்மன்னர் பணிகேட்ப
திருமலர்த்தும் பேருலகும்
12.530   12 st/nd Thirumurai   Song # 11   சேக்கிழார்   கடல் சூழ்ந்த சருக்கம்  
ஒருதனித் தேவி செங்கை
உடைவாளால் துணித்த போது
பெருகிய தொண்டர் ஆர்ப்பின்
பிறங்கொலி புவிமேற் பொங்க
இருவிசும் படைய ஓங்கும்
இமையவர் ஆர்ப்பும் விம்மி
மருவிய தெய்வ வாச
மலர்மழை பொழிந்த தன்றே.
12.720   12 st/nd Thirumurai   Song # 21   சேக்கிழார்   வெள்ளானைச் சருக்கம்  
ஒருவர் ஒருவ ரில்கலந்து
குறைபா டின்றி உயர்காதல்
இருவர் நண்பின் செயல்கண்ட
இரண்டு திறத்து மாந்தர்களும்
பெருகு மகிழ்ச்சி கலந்தார்த்தார்
பெருமாள் தமிழின் பெருமாளை
வருகை வரையின் மிசையேற்றித்
தாம்பின் மதிவெண் குடைகவித்தார்.

This page was last modified on Thu, 09 May 2024 05:33:06 +0000
          send corrections and suggestions to admin-at-sivaya.org

thirumurai all list