சிவய.திருக்கூட்டம்
sivaya.org
Please set your language preference
by clicking below languages link
Search this site with
words in any language e.g. पोऱ्‌ऱि
song/pathigam/paasuram numbers: e.g. 7.039

This page in Tamil   Hindi/Sanskrit   Telugu   Malayalam   Bengali   Kannada   English   ITRANS    Marati  Gujarathi   Oriya   Singala   Tibetian   Thai   Japanese   Urdu   Cyrillic/Russian   Spanish   Hebrew  
Selected thirumurai      thirumurai Thalangal      All thirumurai Songs     

Thirumurai   1   2   3   4   5   6   7   8   9   10   11   12

Pathigam first Letter :                                          
Paadal first letter:     (  .                                                
Search: Filter By: Order By:
திருமுறை 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12 இருந்து பாடல் சொல் ஓதி
ஓதி     ஓதிய     ஓதிடு     ஓதின்     ஓதி,     ஓதினார்,     ஓதியே     ஓதிற்று    
1.041   1 st/nd Thirumurai   Song # 6   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
ஓதி நன்கு உணர்வார்க்கு உணர்வு உடை ஒருவர்; ஒளி திகழ் உருவம் சேர் ஒருவர்;
மாதினை இடமா வைத்த எம் வள்ளல்; மான்மறி ஏந்திய மைந்தர்;
ஆதி, நீ அருள்! என்று அமரர்கள் பணிய, அலைகடல் கடைய, அன்று எழுந்த
பாதி வெண்பிறை சடை வைத்த எம் பரமர் பாம்புர நன்நகராரே.

2.006   2 st/nd Thirumurai   Song # 7   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
ஓதி யாரும் அறிவார் இலை; ஓதி உலகுஎலாம்
சோதிஆய் நிறைந்தான்; சுடர்ச்சோதியுள் சோதியான்;
வேதிஆகி, விண் ஆகி, மண்ணோடு எரி காற்றும் ஆய்,
ஆதிஆகி, நின்றானும் ஐயாறு உடை ஐயனே.

2.050   2 st/nd Thirumurai   Song # 6   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
ஓதி, ஆரணம் ஆய நுண்பொருள், அன்று நால்வர் முன் கேட்க நன்நெறி
நீதி ஆலநீழல் உரைக்கின்ற நீர்மையது என்?
சோதியே! சுடரே! சுரும்பு அமர் கொன்றையாய்! திரு நின்றியூர் உறை
ஆதியே! அரனே! ஆமாத்தூர் அம்மானே!

2.076   2 st/nd Thirumurai   Song # 7   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
ஓதி, எல்லாம்! உலகுக்கு ஒர் ஒண் பொருள் ஆகி! மெய்ச்
சோதி! என்று தொழுவார் அவர் துயர் தீர்த்திடும்
ஆதி, எங்கள் பெருமான், அகத்தியான் பள்ளியை
நீதியால் தொழுவார் அவர் வினை நீங்குமே.

2.082   2 st/nd Thirumurai   Song # 2   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
ஓதி மண் தலத்தோர் முழுது உய்ய, வெற்பு ஏறு
சோதி வானவன் துதிசெய, மகிழ்ந்தவன் தூ நீர்த்
தீது இல் பங்கயம் தெரிவையர் முகம்மலர் தேவூர்
ஆதி; சேவடி அடைந்தனம், அல்லல் ஒன்று இலமே.

3.047   3 st/nd Thirumurai   Song # 4   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
ஓதி ஓத்து அறியா அமண் ஆதரை
வாதில் வென்று அழிக்கத் திரு உள்ளமே?
ஆதியே! திரு ஆலவாய் அண்ணல்!
நீதி ஆக நினைந்து, அருள்செய்திடே!

3.116   3 st/nd Thirumurai   Song # 2   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
ஓதி வாயதும் மறைகளே; உரைப்பதும் பலமறைகளே
பாதி கொண்டதும் மாதையே; பணிகின்றேன், மிகும் மாதையே;
காது சேர் கனம் குழையரே; காதலார் கனம் குழையரே;
வீதிவாய் மிகும் வேதியா; மிழலை மேவிய வேதியா!

4.022   4 st/nd Thirumurai   Song # 5   திருநாவுக்கரசர்   தேவாரம்  
ஓதினார், வேதம் வாயால்; ஒளி நிலா எறிக்கும் சென்னிப்
பூதனார்; பூதம் சூழப் புலி உரி-அதளனார், தாம்;
நாதனார்; தில்லை தன்னுள் நவின்ற சிற்றம்பலத்தே
காதில் வெண் குழைகள் தாழக் கனல்-எரி ஆடும் ஆறே!

4.041   4 st/nd Thirumurai   Song # 9   திருநாவுக்கரசர்   தேவாரம்  
ஓதியே கழிக்கின்றீர்கள்; -உலகத்தீர்!-ஒருவன் தன்னை
நீதியால் நினைக்க மாட்டீர்; நின்மலன் என்று சொல்லீர்
சாதியா நான் முக(ன்)னும் சக்கரத்தானும் காணாச்
சோதி ஆய்ச் சுடர் அது ஆனார்-திருச் சோற்றுத் துறையனாரே.

4.063   4 st/nd Thirumurai   Song # 1   திருநாவுக்கரசர்   தேவாரம்  
ஓதி மா மலர்கள் தூவி-உமையவள் பங்கா! மிக்க
சோதியே! துளங்கும் எண் தோள் சுடர் மழுப்படையினானே!
ஆதியே! அமரர்கோவே! அணி அணாமலை உளானே!
நீதியால் நின்னை அல்லால் நினையுமா நினைவு இலேனே.

4.092   4 st/nd Thirumurai   Song # 17   திருநாவுக்கரசர்   தேவாரம்  
ஓதிய ஞானமும், ஞானப்பொருளும், ஒலி சிறந்த
வேதியர் வேதமும், வேள்வியும், ஆவன; விண்ணும் மண்ணும்
சோதி அம் செஞ்சுடர் ஞாயிறும் ஒப்பன, தீ, மதியோடு;
ஆதியும் அந்தமும் ஆன-ஐயாறன் அடித்தலமே.

6.021   6 st/nd Thirumurai   Song # 2   திருநாவுக்கரசர்   தேவாரம்  
ஓதிற்று ஒரு நூலும் இல்லை போலும்; உணரப்படாதது ஒன்று இல்லை போலும்;
காதில் குழை இலங்கப் பெய்தார் போலும்; கவலை, பிறப்பு, இடும்பை, காப்பார் போலும்;
வேதத்தோடு ஆறு அங்கம் சொன்னார் போலும்; விடம் சூழ்ந்து இருண்ட மிடற்றார் போலும்;
ஆதிக்கு அளவு ஆகி நின்றார்
போலும்-ஆக்கூரில்-தான் தோன்றி அப்பனாரே.

10.406   10 st/nd Thirumurai   Song # 6   திருமூலர்   திருமந்திரம்  
ஓதிய நந்தி உணருந் திருவருள்
நீதியில் வேத நெறிவந் துரைசெயும்
போதம் இருபத் தெழுநாள் புணர்மதிச்
சோதி வயிரவி சூலம்வந் தாளுமே.

10.406   10 st/nd Thirumurai   Song # 47   திருமூலர்   திருமந்திரம்  
ஓதிய வண்ணம் கலையின் உயர்கலை
ஆதிஇல் வேதமே யாம்என் றறிகிலர்
சாதியும் பேதமும் தத்துவ மாய்நிற்பள்
ஆதிஎன் றோதினள் ஆவின் கிழத்தியே.

10.719   10 st/nd Thirumurai   Song # 10   திருமூலர்   திருமந்திரம்  
ஓதிடு வெண்ணீற்றால் உத்தூளம் குப்பாயம்
மீதினில் இட்டா சனத்தினின் மேல்வைத்துப்
போதுறு சுண்ணமும் நீறும் பொலிவித்து
மீதி லிருத்தி விரித்திடு வீரே.

10.907   10 st/nd Thirumurai   Song # 1   திருமூலர்   திருமந்திரம்  
ஓதிய நம்மலம் எல்லாம் ஒழிந்தட்(டு)அவ்
ஆதி தனைவிட் டிறைவன் அருட்சத்தி
தீதில் சிவஞான யோகமே சித்தக்கும்
ஓதும் சிவாய மலம்அற்ற உண்மையே.

10.922   10 st/nd Thirumurai   Song # 1   திருமூலர்   திருமந்திரம்  
ஓதின் மயிர்க்கால் தொறும்அமு தூறிய
பேதம் அபேதம் பிறழாத ஆனந்தம்
ஆதி சொரூபங்கள் மூன்றகன் றப்பாலை
வேதம தோதும் சொரூபிதன் மேன்மையே.

10.923   10 st/nd Thirumurai   Song # 1   திருமூலர்   திருமந்திரம்  
ஓதிய முத்தி அடைவே உயிர்ப்பர
பேதமி லாச் சிவம் எய்தும் துரியம்அ
நாதி சொரூபம் சொரூபத்த தாகவே
ஏத மிலாநிரு வாணம் பிறந்தததே.


This page was last modified on Thu, 09 May 2024 05:33:06 +0000
          send corrections and suggestions to admin-at-sivaya.org

thirumurai all list