சிவய.திருக்கூட்டம்
sivaya.org
Please set your language preference
by clicking below languages link
Search this site with
words in any language e.g. पोऱ्‌ऱि
song/pathigam/paasuram numbers: e.g. 7.039

This page in Tamil   Hindi/Sanskrit   Telugu   Malayalam   Bengali   Kannada   English   ITRANS    Marati  Gujarathi   Oriya   Singala   Tibetian   Thai   Japanese   Urdu   Cyrillic/Russian   Spanish   Hebrew  
Selected thirumurai      thirumurai Thalangal      All thirumurai Songs     

Thirumurai   1   2   3   4   5   6   7   8   9   10   11   12

Pathigam first Letter :                                          
Paadal first letter:     (  .                                                
Search: Filter By: Order By:
திருமுறை 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12 இருந்து பாடல் சொல் கடை
கடை     கடைவாச     கடையுடைக்     கடைஞர்மிடை     கடைகாவல்     கடையுகத்தில்     கடையேன்     கடையவனேனைக்    
1.042   1 st/nd Thirumurai   Song # 11   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
கடை ஆர் மாடம் நன்கு எழு வீதிக் கழுமல ஊரன்-கலந்து
நடை ஆர் இன்சொல் ஞானசம்பந்தன்-நல்ல பெருந்துறை மேய
படை ஆர் சூலம் வல்லவன் பாதம் பரவிய பத்து இவை வல்லார்
உடையார் ஆகி, உள்ளமும் ஒன்றி, உலகினில் மன்னுவர்தாமே.

1.063   1 st/nd Thirumurai   Song # 12   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
கடை ஆர் கொடி நல் மாட வீதிக் கழுமல ஊர்க் கவுணி
நடை ஆர் பனுவல் மாலை ஆக ஞானசம்பந்தன்-நல்ல
படை ஆர் மழுவன்மேல் மொழிந்த பல்பெயர்ப்பத்தும் வல்லார்க்கு
அடையா, வினைகள் உலகில் நாளும்; அமருலகு ஆள்பவரே.

1.100   1 st/nd Thirumurai   Song # 6   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
கடை நெடு மாடக் கடி அரண் மூன்றும் கனல் மூழ்கத்
தொடை நவில்கின்ற வில்லினன், அந்திச் சுடுகானில்
புடை நவில் பூதம் பாட, நின்று ஆடும் பொரு சூலப்-
படை நவில்வான்தன் நன்நகர்போலும் பரங்குன்றே.

3.072   3 st/nd Thirumurai   Song # 11   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
கடை கொள் நெடுமாடம் மிக ஓங்கு கமழ் வீதி மலி காழியவர்கோன்-
அடையும் வகையால் பரவி அரனை அடி கூடு சம்பந்தன்-உரையால்,
மடை கொள் புனலோடு வயல் கூடு பொழில் மாகறல் உளான் அடியையே
உடைய தமிழ் பத்தும் உணர்வார் அவர்கள் தொல்வினைகள் ஒல்கும், உடனே.

4.082   4 st/nd Thirumurai   Song # 2   திருநாவுக்கரசர்   தேவாரம்  
கடை ஆர் கொடி நெடுமாடங்கள் எங்கும் கலந்து இலங்க
உடையான், உடை தலை மாலையும் சூடி உகந்து அருளி
விடைதான் உடைய அவ் வேதியன் வாழும் கழுமலத்துள
அடைவார்-வினைகள் அவை என்க!-நாள் தொறும் ஆடுவரே!

8.104   8 st/nd Thirumurai   Song # 23   மாணிக்க வாசகர்    திருவாசகம்  
கடையேன் அடிமை கண்டாய், போற்றி!
ஐயா, போற்றி! அணுவே, போற்றி!
சைவா, போற்றி! தலைவா, போற்றி!
குறியே, போற்றி! குணமே, போற்றி!
நெறியே, போற்றி! நினைவே, போற்றி!

8.106   8 st/nd Thirumurai   Song # 1   மாணிக்க வாசகர்    திருவாசகம்  
கடையவனேனைக் கருணையினால் கலந்து, ஆண்டுகொண்ட
விடையவனே, விட்டிடுதி கண்டாய்? விறல் வேங்கையின் தோல்
உடையவனே, மன்னும் உத்தரகோசமங்கைக்கு அரசே,
சடையவனே, தளர்ந்தேன்; எம்பிரான், என்னைத் தாங்கிக்கொள்ளே.

10.307   10 st/nd Thirumurai   Song # 4   திருமூலர்   திருமந்திரம்  
கடைவாச லைக்கட்டிக் காலை எழுப்பி
இடைவாசல் நோக்கி இனிதுள் இருத்தி
மடைவாயிற் கொக்குப் போல் வந்தித் திருப்பார்க்
குடையாமல் ஊழி இருக்கலு மாமே. 

12.050   12 st/nd Thirumurai   Song # 9   சேக்கிழார்   தில்லை வாழ் அந்தணர் சருக்கம்  
கடையுடைக் காவ லாளர்
கைதொழுதேற நின்றே
உடையவர் தாமே வந்தார்
உள்ளெழுந் தருளும் என்னத்
தடைபல புக்க பின்பு 
தனித்தடை நின்ற தத்தன்
இடைதெரிந் தருள வேண்டும்
துயில்கொளும் இறைவ னென்றான்.
12.210   12 st/nd Thirumurai   Song # 5   சேக்கிழார்   திருநின்ற சருக்கம்  
கடைஞர்மிடை வயற்குறைத்த
கரும்புகுறை பொழிகொழுஞ்சா
றிடைதொடுத்த தேன்கிழிய
இழிந்தொழுகு நீத்தமுடன்
புடைபரந்து ஞிமிறொலிப்பப்
புதுப்புனல்போல் மடையுடைப்ப
உடைமடையக் கரும்படுகட்
டியினடைப்ப ஊர்கள்தொறும்.
12.210   12 st/nd Thirumurai   Song # 87   சேக்கிழார்   திருநின்ற சருக்கம்  
கடைகாவல் உடையார்கள்
புகுதவிடக் காவலன்பால்
நடையாடுந் தொழிலுடையார்
நண்ணித்தாம் எண்ணியவா
றுடையாரா கியதரும
சேனர்பிணி யுற்றாராய்ச்
சடையானுக் காளாய்நின்
சமயம்அழித் தாரென்றார்.
12.210   12 st/nd Thirumurai   Song # 177   சேக்கிழார்   திருநின்ற சருக்கம்  
கடையுகத்தில் ஆழியின்மேல் மிதந்ததிருக்
கழுமலத்தின் இருந்த செங்கண்
விடையுகைத்தார் திருவருளால் வெற்பரையன்
பாவைதிரு முலைப்பா லோடும்
அடையநிறை சிவம்பெருக வளர்ஞானங்
குழைத்தூட்ட அமுது செய்த
உடையமறைப் பிள்ளையார் திருவார்த்தை
அடியார்கள் உரைப்பக் கேட்டார்.
12.280   12 st/nd Thirumurai   Song # 58   சேக்கிழார்   வம்பறா வரிவண்டுச் சருக்கம்  
கடையுகத்தில் தனிவெள்ளம்
பலவிரிக்குங் கருப்பம்போல்
இடையறாப் பெருந்தீர்த்தம்
எவற்றினுக்கும் பிறப்பிடமாய்
விடையுயர்த்தார் திருத்தோணிப்
பற்றுவிடா மேன்மையதாம்
தடமதனில் துறையணைந்தார்
தருமத்தின் தலைநின்றார்.

This page was last modified on Thu, 09 May 2024 05:33:06 +0000
          send corrections and suggestions to admin-at-sivaya.org

thirumurai all list