சிவய.திருக்கூட்டம்
sivaya.org
Please set your language preference
by clicking below languages link
Search this site with
words in any language e.g. पोऱ्‌ऱि
song/pathigam/paasuram numbers: e.g. 7.039

This page in Tamil   Hindi/Sanskrit   Telugu   Malayalam   Bengali   Kannada   English   ITRANS    Marati  Gujarathi   Oriya   Singala   Tibetian   Thai   Japanese   Urdu   Cyrillic/Russian   Spanish   Hebrew  
Selected thirumurai      thirumurai Thalangal      All thirumurai Songs     

Thirumurai   1   2   3   4   5   6   7   8   9   10   11   12

Pathigam first Letter :                                          
Paadal first letter:     (  .                                                
Search: Filter By: Order By:
திருமுறை 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12 இருந்து பாடல் சொல் கண்ண
கண்ணு     கண்ணின்     கண்ணன்,     கண்ணுத     கண்ணனுங்     கண்ணுதல்     கண்ணாக்கு     கண்ணில்     கண்ணன்     கண்ணுடை     கண்ணாரக்     கண்ணார்     கண்ணாடி     கண்ணென்னும்     கண்ணும்     கண்ணிடந்த     கண்ணி     கண்ணென்றும்     கண்ணிடை     கண்ணீலக்     கண்ணாரும்     கண்ண     கண்ணார்ந்த     கண்ணினுக்     கண்ணுதலார்     கண்ணுதலிற்     கண்ணனும்,     கண்ணனும்     கண்ணினால்     கண்ணவனாய்     கண்ணுதலான்,     கண்ணப்பன்     கண்ணுழை     கண்ணியல்    
1.047   1 st/nd Thirumurai   Song # 6   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
கண்ணு மூன்றும் உடையது அன்றி, கையினில் வெண்மழுவும்
பண்ணு மூன்று வீணையோடு பாம்பு உடன் வைத்தல் என்னே
எண்ணும் மூன்று கனலும் ஓம்பி, எழுமையும் விழுமியர் ஆய்,
திண்ணம் மூன்று வேள்வியாளர் சிரபுரம் மேயவனே?

1.082   1 st/nd Thirumurai   Song # 5   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
கண்ணின் கனலாலே காமன் பொடி ஆக,
பெண்ணுக்கு அருள்செய்த பெருமான் உறை கோயில்
மண்ணில் பெரு வேள்வி வளர் தீப்புகை நாளும்
விண்ணில் புயல் காட்டும் வீழி மிழலையே.

1.088   1 st/nd Thirumurai   Song # 9   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
கண்ணன், கடிக் கமல மலர் மேல் இனிது உறையும்
அண்ணற்கு அளப்பு அரிது ஆய் நின்று, அங்கு அடியார்மேல்
எண் இல் வினை களைவான், எழில் ஆப்பனூரானைப்
பண்ணின் இசை பகர்வார் வினை பற்று அறுப்பாரே.

2.005   2 st/nd Thirumurai   Song # 9   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
கண்ணன் வண்ண மலரானொடும் கூடியோர்க்கு ஐயம் ஆய்
எண்ணும் வண்ணம், அறியாமை எழுந்தது ஓர் ஆர் அழல்
அண்ணல் நண்ணும் அணி சாரல் அனேகதங்காவதம்
நண்ணும் வண்ணம் உடையார் வினைஆயின நாசமே.

2.017   2 st/nd Thirumurai   Song # 9   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
கண்ணன், கடிமாமலரில் திகழும்
அண்ணல், இருவர் அறியா இறை ஊர்
வண்ணச் சுதை மாளிகைமேல் கொடிகள்
விண்ணில் திகழும் வேணுபுரமே.

2.060   2 st/nd Thirumurai   Song # 7   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
கண்ணின் அயலே கண் ஒன்று உடையார், கழல் உன்னி
எண்ணும் தனையும் அடியார் ஏத்த அருள் செய்வார்,
உள் நின்று உருக உவகை தருவார், ஊர்போலும்
பண்ணின் மொழியார் பாடல் ஓவாப் பாசூரே.

2.075   2 st/nd Thirumurai   Song # 11   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
கண்ணு மூன்றும் உடை ஆதி வாழ் கலிக் காழியு
அண்ணல் அம் தண் அருள் பேணி ஞானசம்பந்தன்
சொல்,
வண்ணம் ஊன்றும் தமிழில் தெரிந்து இசை பாடுவார்,
விண்ணும் மண்ணும் விரிகின்ற தொல்புகழாளரே.

3.073   3 st/nd Thirumurai   Song # 4   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
கண்ணின் மிசை நண்ணி இழிவிப்ப, முகம் ஏத்து கமழ் செஞ்சடையினான்,
பண்ணின்மிசை நின்று பல பாணி பட ஆட வல பால் மதியினான்,
மண்ணின் மிசை நேர் இல் மழபாடி மலி பட்டிசுரமே மருவுவார்
விண்ணின் மிசை வாழும் இமையோரொடு உடன் ஆதல் அது மேவல் எளிதே.

3.109   3 st/nd Thirumurai   Song # 7   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
கண்ணனும், நான்முகன், காண்பு அரியார்
வெண் நாவல் விரும்பு மயேந்திரரும்,
கண்ணப்பர்க்கு அருள் செய்த கயிலை எங்கள்
அண்ணல், ஆரூர் ஆதி ஆனைக்காவே.

4.036   4 st/nd Thirumurai   Song # 9   திருநாவுக்கரசர்   தேவாரம்  
கண்ணனும் பிரமனோடு காண்கிலர் ஆகி வந்தே
எண்ணியும் துதித்தும் ஏத்த, எரி உரு ஆகி நின்று,
வண்ண நல் மலர்கள் தூவி வாழ்த்துவார் வாழ்த்தி ஏத்தப்
பண் உலாம் பாடல் கேட்டார்-பழனத்து எம் பரமனாரே.

4.068   4 st/nd Thirumurai   Song # 3   திருநாவுக்கரசர்   தேவாரம்  
கண்ணினால் காமவேளைக் கனல் எழ விழிப்பர் போலும்;
எண் இலார் புரங்கள் மூன்றும் எரியுணச் சிரிப்பர் போலும்;
பண்ணின் ஆர் முழவம் ஓவாப் பைம்பொழில் பழனை மேய
அண்ணலார்-எம்மை ஆளும் ஆலங்காட்டு அடிகளாரே.

5.013   5 st/nd Thirumurai   Song # 2   திருநாவுக்கரசர்   தேவாரம்  
கண்ணினால் களி கூரக் கையால்-தொழுது
எண்ணும் ஆறு அறியாது இளைப்பேன் தனை,-
விண் உளார் தொழும் வீழிமிழலையுள்
அண்ணலே!-அடியேனைக் குறிக்கொளே!

6.044   6 st/nd Thirumurai   Song # 4   திருநாவுக்கரசர்   தேவாரம்  
கண்ணவனாய் உலகு எல்லாம் காக்கின்றானே! காலங்கள் ஊழி கண்டு இருக்கின்றானே!
விண்ணவனாய் விண்ணவர்க்கும் அருள் செய்வானே! வேதனாய் வேதம் விரித்திட்டானே!
எண்ணவனே! எண்ணார் புரங்கள் மூன்றும் இமையாமுன் எரி கொளுவ நோக்கி நக்க
திண்ணவனே! திருச் சோற்றுத்துறை உளானே! திகழ்   ஒளியே! சிவனே! உன் அபயம், நானே.

8.101   8 st/nd Thirumurai   Song # 5   மாணிக்க வாசகர்    திருவாசகம்  
கண்ணுதலான், தன் கருணைக் கண் காட்ட, வந்து எய்தி,
எண்ணுதற்கு எட்டா எழில் ஆர் கழல் இறைஞ்சி;
விண் நிறைந்து, மண் நிறைந்து, மிக்காய், விளங்கு ஒளியாய்!
எண் இறந்து, எல்லை இலாதானே! நின் பெரும் சீர்,
பொல்லா வினையேன், புகழும் ஆறு ஒன்று அறியேன்;

8.110   8 st/nd Thirumurai   Song # 4   மாணிக்க வாசகர்    திருவாசகம்  
கண்ணப்பன் ஒப்பது ஓர் அன்பு இன்மை கண்டபின்,
என் அப்பன், என் ஒப்பு இல் என்னையும் ஆட்கொண்டருளி,
வண்ணப் பணித்து, என்னை வா' என்ற வான் கருணைச்
சுண்ணப் பொன் நீற்றற்கே சென்று ஊதாய்; கோத்தும்பீ!

8.224   8 st/nd Thirumurai   Song # 16   மாணிக்க வாசகர்    திருச்சிற்றம்பலக் கோவையார்  
கண்ணுழை யாதுவிண் மேகங்
   கலந்து கணமயில்தொக்
கெண்ணுழை யாத்தழை கோலிநின்
   றாலு மினமலர்வாய்
மண்ணுழை யாவும் அறிதில்லை
   மன்னன தின்னருள்போற்
பண்ணுழை யாமொழி யாளென்ன
   ளாங்கொல்மன் பாவியற்கே.

9.014   9 st/nd Thirumurai   Song # 4   கருவூர்த் தேவர்   திருவிசைப்பா  
கண்ணியல் மணியின் சூழல்புக் கங்கே
   கலந்துபுக் கொடுங்கினேற் கங்ஙன்
நுண்ணியை யெனினும் நம்ப நின் பெருமை
   நுண்ணிமை யிறந்தமை அறிவன்
மண்ணியல் மரபின் தங்கிருள் மொழுப்பின்
   வண்டினம் பாடநின் றாடும்
புண்ணிய மகளிர் ஆவண வீதிப்
   பூவணம் கோயில்கொண் டாயே.

10.101   10 st/nd Thirumurai   Song # 7   திருமூலர்   திருமந்திரம்  
கண்ணுத லான்ஒரு காதலின் நிற்கவும்
எண்ணிலி தேவர் இறந்தார் எனப்பலர்
மண்ணுறு வார்களும் வானுறு வார்களும்
அண்ணல் இவன்என் றறியகி லார்களே.

10.107   10 st/nd Thirumurai   Song # 8   திருமூலர்   திருமந்திரம்  
கண்ணனுங் காய்கதி ரோனும் உலகினை
உண்ணின் றளக்கின்ற தொன்றும் அறிகிலார்
விண்ணுறுவா ரையும் வினையுறு வாரையும்
எண்ணுறும் முப்பதில் ஈர்ந்தொழிந் தாரே. 

10.214   10 st/nd Thirumurai   Song # 24   திருமூலர்   திருமந்திரம்  
கண்ணுதல் நாமங் கலந்துடம் பாயிடப்
பண்ணுதல் செய்து பசுபாசம் நீக்கிட
எண்ணிய வேதம் இசைந்த பரப்பினை
மண்முத லாகவகுத்துவைத் தானே. 

10.308   10 st/nd Thirumurai   Song # 2   திருமூலர்   திருமந்திரம்  
கண்ணாக்கு மூக்குச் செவிஞானக் கூட்டத்துட்
பண்ணாக்கி நின்ற பழம்பொருள் ஒன்றுண்டு
அண்ணாக்கின் உள்ளே அகண்ட ஒளிகாட்டிப்
பிண்ணாக்கி நம்மைப் பிழைப்பித்த வாறே. 

10.311   10 st/nd Thirumurai   Song # 17   திருமூலர்   திருமந்திரம்  
கண்ணில் வியாதி உரோகந் தனஞ்செயன்
கண்ணிலிவ் வாணிகள் காச மவனல்லன்
கண்ணினிற் கூர்மன் கலந்தில னாதலாற்
கண்ணினிற் சோதி கலந்ததும் இல்லையே. 

10.314   10 st/nd Thirumurai   Song # 24   திருமூலர்   திருமந்திரம்  
கண்ணன் பிறப்பிலி காண்நந்தி யாய்உள்ளே
எண்ணுந் திசையுடன் ஏகாந்த னாயிடும்
திண்ணென் றிருக்குஞ் சிவகதி யாய்நிற்கும்
நண்ணும் பதமிது நாடவல் லார்கட்கே. 

10.408   10 st/nd Thirumurai   Song # 12   திருமூலர்   திருமந்திரம்  
கண்ணுடை யாளைக் கலந்தங் கிருந்தவர்
மண்ணுடை யாரை மனித்தரிற் கூட்டொணா
பண்ணுடை யார்கள் பதைப்பற் றிருந்தவர்
விண்ணுடை யார்களை மேலுறக் கண்டே.

10.413   10 st/nd Thirumurai   Song # 66   திருமூலர்   திருமந்திரம்  
கண்ணுடை நாயகி தன்னரு ளாம்வழி
பண்ணுறு நாதம் பகையற நின்றிடில்
விண்ணமர் சோதி விளங்க ஹிரீங்காரம்
மண்ணுடை நாயகி மண்டல மாகுமே.

11.004   11 st/nd Thirumurai   Song # 85   காரைக்கால் அம்மையார்    அற்புதத் திருவந்தாதி  
கண்ணாரக் கண்டுமென் கையாரக் கூப்பியும்
எண்ணார எண்ணத்தால் எண்ணியும் - விண்ணோன்
எரியாடி என்றென்றும் இன்புறுவன் கொல்லோ
பெரியானைக் காணப் பெறின்.

11.007   11 st/nd Thirumurai   Song # 3   சேரமான் பெருமாள் நாயனார்   திருவாரூர் மும்மணிக்கோவை  
கண்ணார் நுதல்எந்தை காமரு
கண்டம் எனவிருண்ட
விண்ணால் உருமொடு மேலது
கீழது கொண்டல்விண்ட
மண்ணார் மலைமேல் இளமயில்
ஆல்மட மான் அனைய
பெண்ணாம் இவள்இனி என்னாய்க்
கழியும் பிரிந்துறைவே.

11.008   11 st/nd Thirumurai   Song # 74   சேரமான் பெருமாள் நாயனார்   திருக்கயிலாய ஞான உலா  
கண்ணாடி மேற்பஞ்சு பெய்வார் கிளியென்று
பண்ணாடிச் சொற்பந்துக் குற்றுரைப்பார் அண்ணல்மேற்

11.008   11 st/nd Thirumurai   Song # 75   சேரமான் பெருமாள் நாயனார்   திருக்கயிலாய ஞான உலா  
கண்ணென்னும் மாசாலங் கோலிக் கருங்குழலார்
திண்ணம் நிறைந்தார் திறந்திட்டார் ஒண்ணிறத்த

11.008   11 st/nd Thirumurai   Song # 154   சேரமான் பெருமாள் நாயனார்   திருக்கயிலாய ஞான உலா  
கண்ணார் பயோதரமும் நுண்ணிடையும் உண்மையால்
தண்ணிளங் காரின் சவிகொண்டாள் வண்ணஞ்சேர்

11.009   11 st/nd Thirumurai   Song # 65   நக்கீரதேவ நாயனார்   கயிலைபாதி காளத்திபாதி அந்தாதி  
கண்ணும் கருத்துங் கயிலாய ரேஎமக்கென்
றெண்ணி யிருப்பவன்யான் எப்பொழுதும் நண்ணும்
பொறியா டரவசைத்த பூதப் படையார்
அறியார்கொல் நெஞ்சே அவர்.

11.016   11 st/nd Thirumurai   Song # 43   நக்கீரதேவ நாயனார்   போற்றித் திருக்கலி வெண்பா  
கண்ணிடந்த கண்ணப்பர் தம்மைமிகக் காதலித்து
விண்ணுலகம் ஈந்த விறல்போற்றி மண்ணின்மேல்

11.021   11 st/nd Thirumurai   Song # 11   கபிலதேவ நாயனார்    சிவபெருமான் திருஇரட்டைமணிமாலை  
கண்ணி இளம்பிறையும் காய்சினத்த மாசுணமும்
நண்ணி இருந்தால் நலம்இல்லை தண்அலங்கல்
பூங்கொன்றை யின்தேன் பொதியுஞ் சடைப்புனிதா
வாங்கொன்றை இன்றே மதித்து.

11.028   11 st/nd Thirumurai   Song # 5   பட்டினத்துப் பிள்ளையார்   திருவிடைமருதூர் மும்மணிக்கோவை  
கண்ணென்றும் நந்தமக்கோர் காப்பென்றும் கற்றிருக்கும்
எண்ணென்றும் மூல எழுத்தென்றும் ஒண்ணை
மருதவப்பா என்றுமுனை வாழ்த்தாரேல் மற்றுக்
கருதவப்பால் உண்டோ கதி.

11.033   11 st/nd Thirumurai   Song # 38   நம்பியாண்டார் நம்பி   திருத்தொண்டர் திருவந்தாதி  
கண்ணார் மணியொன்று மின்றிக்
கயிறு பிடித்தரற்குத்
தண்ணார் புனல்தடம் தொட்டலுந்
தன்னை நகுமமணர்
கண்ணாங் கிழப்ப வமணர்
கலக்கங்கண் டம்மலர்க்கண்
விண்ணா யகனிடைப் பெற்றவ
னாரூர் விறல்தண்டியே.

11.034   11 st/nd Thirumurai   Song # 82   நம்பியாண்டார் நம்பி   ஆளுடையபிள்ளையார் திருவந்தாதி  
கண்ணார் திருநுத லோன்கோலக்
காவில் கரநொடியால்
பண்ணார் தரப்பாடு சண்பையர்
கோன்பாணி நொந்திடுமென்(று)
எண்ணா வெழுத்தஞ்சு மிட்டபொன்
தாளங்க ளீயக்கண்டும்
மண்ணார் சிலர்சண்பை நாதனை
யேத்தார் வருந்துவதே.

12.000   12 st/nd Thirumurai   Song # 164   சேக்கிழார்   திருமலைச் சருக்கம்  
கண்ணிடை கரந்தகதிர் வெண்பட மெனச்சூழ்
புண்ணிய நுதற்புனித நீறுபொலி வெய்தத்
தண்மதி முதிர்ந்துகதிர் சாய்வதென மீதே
வெண்ணரை முடித்தது விழுந்திடை சழங்க.
12.000   12 st/nd Thirumurai   Song # 319   சேக்கிழார்   திருமலைச் சருக்கம்  
கண்ணுதல் கோயில் தேவா
சிரியனாங் காவ ணத்துள்
விண்ணவ ரொழிய மண்மேன்
மிக்கசீ ரடியார் கூடி
எண்ணிலார் இருந்த போதில்
இவர்க்கியா னடியான்ஆகப்
பண்ணுநா ளெந்நா ளென்று
பரமர்தாள் பரவிச் சென்றார்.
12.100   12 st/nd Thirumurai   Song # 177   சேக்கிழார்   இலை மலிந்த சருக்கம்  
கண்ணுதல் கண்ணில் தங்கண்  
இடந்தப்பிற் காணும் நேர்பா
டெண்ணுவார் தம்பி ரான்தன்  
திருக்கண்ணில் இடக்கா லூன்றி
உண்ணிறை காத லோடும்  
ஒருதனிப் பகழி கொண்டு
திண்ணனார் கண்ணி லூன்றத்
தரித்திலர் தேவ தேவர்.
12.120   12 st/nd Thirumurai   Song # 2   சேக்கிழார்   இலை மலிந்த சருக்கம்  
கண்ணீலக் கடைசியர்கள்
கடுங்களையிற் பிழைத்தொதுங்கி
உண்ணீர்மைப் புணர்ச்சிக்கண்
உறைத்துமலர்க் கண்சிவக்கும்
தண்ணீர்மென் கழுநீர்க்குத்
தடஞ்சாலி தலைவணங்கும்
மண்ணீர்மை நலஞ்சிறந்த
வளவயல்கள் உளஅயல்கள்.
12.280   12 st/nd Thirumurai   Song # 410   சேக்கிழார்   வம்பறா வரிவண்டுச் சருக்கம்  
கண்ணாரும் அருமணியைக்
காரோணத் தாரமுதை
நண்ணாதார் புரமெரித்த
நான்மறையின் பொருளானைப்
பண்ணார்ந்த திருப்பதிகம்
பணிந்தேத்திப் பிறபதியும்
எண்ணார்ந்த சீரடியா
ருடன்பணிவுற் றெழுந்தருளி.
12.280   12 st/nd Thirumurai   Song # 526   சேக்கிழார்   வம்பறா வரிவண்டுச் சருக்கம்  
கண்ண கன்புக லூரினைத்
தொழுதுபோம் பொழுதினிற் கடற்காழி
அண்ண லார்திரு நாவினுக்
கரசர்தம் அருகுவிட் டகலாதே
வண்ண நித்திலச் சிவிகையும்
பின்வர வழிக்கொள உறுங்காலை
எண்ணில் சீர்த்திரு நாவினுக்
கரசரும் மற்றவர்க் கிசைக்கின்றார்.
12.280   12 st/nd Thirumurai   Song # 623   சேக்கிழார்   வம்பறா வரிவண்டுச் சருக்கம்  
கண்ணார்ந்த திருநுதலார்
மகிழ்ந்தகடிக் குளம்இறைஞ்சி
எண்ணார்ந்த திருவிடும்பா
வனமேத்தி எழுந்தருளி
மண்ணார்ந்த பதிபிறவும்
மகிழ்தரும்அன் பால்வணங்கிப்
பண்ணார்ந்த தமிழ்பாடிப்
பரவியே செல்கின்றார்.
12.280   12 st/nd Thirumurai   Song # 744   சேக்கிழார்   வம்பறா வரிவண்டுச் சருக்கம்  
கண்ணினுக் கணியாய் உள்ளார்
எழுச்சியிற் காட்சி பெற்றார்
நண்ணிய சமயம் வேறு
நம்பினர் எனினும் முன்பு
பண்ணிய தவங்கள் என்கொல்
பஞ்சவன் தஞ்சம் மேவிப்
புண்ணிய மூர்த்தி வந்து
மதுரையில் புகுத என்றார்.
12.280   12 st/nd Thirumurai   Song # 1254   சேக்கிழார்   வம்பறா வரிவண்டுச் சருக்கம்  
கண்ணுதலார் திருமேனி
உடன்கூடக் கவுணியனார்
நண்ணியது தூரத்தே
கண்டுநணு கப்பெறா
விண்ணவரும் முனிவர்களும்
விரிஞ்சனே முதலானார்
எண்ணிலவர் ஏசறவு
தீரஎடுத் தேத்தினார்.
12.290   12 st/nd Thirumurai   Song # 118   சேக்கிழார்   வம்பறா வரிவண்டுச் சருக்கம்  
கண்ணுதலார் விரும்புகருப் பறிய லூரைக்
கைதொழுது நீங்கிப் போய்க் கயல்கள் பாயும்
மண்ணிவளம் படிக்கரையை நண்ணி யங்கு
மாதொருபா கத்தவர்தாள் வணங்கிப் போற்றி
எண்ணில்புகழ்ப் பதிகமுமுன் னவன்என் றேத்தி
யேகுவார் வாழ்கொளிபுத் தூரெய் தாது
புண்ணியனார் போம்பொழுது நினைந்து மீண்டு
புகுகின்றார் தலைக்கலன்என் றெடுத்துப்போற்றி.
12.290   12 st/nd Thirumurai   Song # 165   சேக்கிழார்   வம்பறா வரிவண்டுச் சருக்கம்  
கண்ணார்ந்த இன்னமுதைக்
கையாரத் தொழுதிறைஞ்சிப்
பண்ணார்ந்த திருப்பதிகம்
பாடியே பணிந்தேத்தி
உள்நாடும் பெருங்காதல்
உடையவர்தாம் புறத்தெய்தி
நண்ணார்வத் தொண்டருடன்
அங்கினிது நயந்திருந்தார்.
12.310   12 st/nd Thirumurai   Song # 26   சேக்கிழார்   வம்பறா வரிவண்டுச் சருக்கம்  
கண்ணின் மணிக ளவையின்றிக்
கயிறு தடவிக் குளந்தொட்ட
எண்ணில் பெருமைத் திருத்தொண்டர்
12.360   12 st/nd Thirumurai   Song # 16   சேக்கிழார்   வார்கொண்ட வனமுலையாள் சருக்கம்  
கண்ணுதலார் கணபதீச்
சரத்தின்கண் கருத்தமர
உண்ணிறைஅன் பினிற்பணிசெய்
தொழுகுவார் வழுவின்றி
எண்ணில்பெருஞ் சீரடியார்
இடைவிடா தமுதுசெய
நண்ணியபே ருவகையுடன்
நயந்துறையும் நாளின்கண்.
12.360   12 st/nd Thirumurai   Song # 41   சேக்கிழார்   வார்கொண்ட வனமுலையாள் சருக்கம்  
கண்ணுதலிற் காட்டாதார்
கணபதீச் சரத்தின்கண்
வண்ணமலர் ஆத்தியின்கீழ்
இருக்கின்றோம் மற்றவர் தாம்
நண்ணினால் நாமிருந்த
பரிசுரைப்பீர் என்றருளி
அண்ணலார் திருவாத்தி
யணைந்தருளி அமர்ந்திருந்தார்.

This page was last modified on Thu, 09 May 2024 05:33:06 +0000
          send corrections and suggestions to admin-at-sivaya.org

thirumurai all list